Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல்
#21
சிறுபான்மையினர் பலத்தைச் சிதைக்க!


வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை அவசியம் என்ற சட்ட மூலத்தை அரசாங்கம் விரைவில் அமுலாக்கம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றது. எதிர்வரும் ஏழாம் திகதி இச்சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கத் தரப்பு குறியாக இருப்பதாக அரச தரப்புத் தகவல்களில் இருந்து உணரக்கூடியதாகவுள்ளது.

ஐ.ம.சு முன்னணி அரசாங்கம் இச்சட்ட மூலத்தில் தீவிர அக்கறை காட்டுவதென்பது ஒன்றும் தேர்தலில் மோசடிகள் இடம் பெறாமல் தடுத்து விடுவதற்கோ அன்றி சனநாயக hPதியில் அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அரசாங்கத்தின் ஒரே இலக்கு சிறுபான்மை இனங்களின் அரசியற் பலத்தைச் சிதைவுறச்செய்வதே ஆகும்.

வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை அவசியம் என்பது சிங்களவரைப் பொறுத்து பெரியளவிலான பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் பெரும் பகுதியினர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அவ்வாறு பெற்றுக்கொள்ளாது போனாலும் விரைவில் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.

ஆனால் சிறுபான்மையினரைப் பொறுத்து குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தே இது பாரிய கேடு விளைவிப்பதாகவும், அவர்களின் சனநாயக hPதியான உரிமைகளை மறுப்பதாகவும் அமையத்தக்கதாகும். ஆனால் இது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல இதனால் அடையாள அட்டை அவசியம் என்பது புரிந்து கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல.

மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்து பிரஜாவுரிமை பெறுதலில் இருந்து தேசிய அடையாள அட்டை பெறுதல் வரையில் நெருக்கடி மிக்கதொன்றாகவே உள்ளது. அதாவது இவை தொடர்பான ஆவணங்களை அவர்கள் தேடிக்கொள்வதென்பதும், அதன் மூலம் அடையாள அட்டைகளைப் பெறுதல் என்பதும் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இன்றும் உள்ளது. ஆகையினால் இதனைக் காரணம் காட்டி வாக்களிக்கத் தடைசெய்தல் என்பது அம்மக்களின் சனநாயக உரிமையை மறுப்பதற்குச் சமமானதாகும்.

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தும் இது குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தத்தக்கதாகும். கடந்த இரண்டு தசாப்த காலத்தில் தமிழ் மக்களின் தாயகத்தில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்து விட்ட போரினால் மக்கள் பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வந்தது. பல தடவைகள் இடப்பெயர்வுகளைச் சந்திக்க வேண்டியும் வந்தது. இவற்றின் காரணமாக தேசிய அடையாள அட்டைகள், பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட முக்கிய ஆவணங்களும் தொலைந்து போயும் காணமற் போயும் உள்ளன. இவற்றை மீளப் பெறுதல் என்பதும் இலகுவானதாக இல்லை. இந்நிலையில் தேசிய அடையாள அட்டை கோருவதென்பது அவர்களின் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகும்.

இதேபோன்று வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் இச்சட்டத்தின் மூலம் பாதிப்பிற்குள்ளாகும் நிலையியே உள்ளது. இவர்களும் கடந்த இரு தசாப்த காலமாக யுத்த பிரதேசத்திற்குள் வாழ்ந்தமை காரணமாக தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை முழுஅளவில் கொண்டுள்ளவர்களாக இல்லை.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கத் தேசிய அடையாள அட்டை அவசியமென்ற அரசின் சட்டமூலமானது நடைமுறையில் சிறுபான்மை மக்களின் வாக்குரிமைகளைப் பறிக்கும் அன்றிக் கட்டுப்படுத்தும் ஒன்றாகவே இருத்தல் முடியும்.

சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பொறுத்து சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிப்பதென்பது என்றும் எரிச்சல் ஊட்டும் விடயமாகவே இருந்து வருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இத்தகையதொரு சூழ்நிலையை உருவாக்கியதெனினும் இதனை ஒழித்து விடுவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றனர். இதற்கான முதற்படியாகவே வாக்களிப்பிற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

இதற்குத் தமிழ் தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும் அரசாங்கம் இதனைக் கருத்திற்கொள்ளப்போவதில்லை. இத்தகையதொரு நிலையே தற்பொழுது இ.தொ.கா விற்கும் ஏற்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்தில் தமது திருத்தம் இடம்பெறவேண்டும் என இ.தொ.கா வலியுறுத்திய போதிலும் அரசாங்கம் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

இ.தொ.கா அரசாங்கத்தில் பங்கேற்பினும் இத்தகையதொரு அவலம் ஏற்பட்டுள்ளமைக்கு இ.தொ.கா நிபந்தனையற்ற விதத்தில் சரணாகதி அடைந்தது போன்று அரசாங்கத்தில் பங்கேற்க முடிவு செய்ததே ஆகும். ஆனால் ஆட்சியில் பங்காளிகள் என்ற hPதியில் இச் சட்டமூலம் நிறைவேற்ற இ.தொ.கா ஆதரவு அளிக்குமேயானால் அது அக்கட்சியைப் பொறுத்து தற்கொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.

----------------------------------------

தேர்தல் வாக்களிப்பின் போது அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்படுவது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


அடையாள அட்டைகள் கிடைக்கும் வரை தோட்டப்பகுதி மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தமது ஆள் அடையாளத்தை கிராம சேவகர் மற்றும் தோதல் ஆணையாளரால் நியமிக்கப்படும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரின் பரிந்துரையின் பேரில் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்தலாம் என்ற திருத்தம் இன்று கட்சி தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கான திருத்தத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பி சந்திரசேகரன் முன்வைத்தார். இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன தமது ஆதரவை வழங்கின. இதற்கு முதலில் ஜே வி பியும் ஜாதிக ஹெல உறுமயவும் எதிர்ப்பை வெளியிட்ட போதும் பின்னர் அதற்கு உடன்பட்டன.

அதேநேரம் தேர்தல் ஆணையாளர் நாட்டில் அனைவருக்கும் அடையாள அடடைகள் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தும் வரை இந்த முறையை பின்பற்றுவது எனவும் அதன் பின்னர் தேசிய அடையாள அட்டையை தேர்தல் வாக்களிப்பின் போது கட்டாயமாக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவது எனவும் இன்றைய கூட்டத்தில் கட்சி தலைவர்கள் தமது இணக்கத்தை வெளியிட்டனர்.

-----------------------------------

ஜே வி பியும், ஜாதிக ஹெல உறுமயவும் ஜனநாயகத்தினுள் வந்துதானே தேர்தலில் போட்டியிட்டார்கள்... ஒருவேளை மறந்துபோனார்களோ என்னவோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#22
காடையர்களையும் மாபியாக்களையும் உள்ளடக்கியதே சுதந்திரக் கட்சி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார் ஜே.வி.பி. அமைச்சர் கே.டி.லால்கந்த. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தொழிலமைச்சு மற்றும் தொழிலாளர் யூனியனுக்குப் பொறுப்பாகவுள்ள இவ் ஜே.வி.பி. அமைச்சர், சுதந்திரக்கட்சியின் தூண்டுதலில், சிறிலங்கா தொழிலாளர் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதை நிறுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதவிடத்து, கூட்டணியிலிருந்து விலகவும், அரசைக் கவிழ்க்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நாங்களே தொழிலாளர் ஐக்கியத்தைப் பேணுகிறோம், நாமே நாட்டை ஆளுகிறோம், நம்மிடமே ஆளும் கட்சியின் அதிகாரமும் பலமும் இருக்கிறது என்று சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.அமைச்சர், இதுவரை ஜே.வி.பி. முன்னெடுத்த இரு தொழிலாளர் யூனியன் வேலைநிறுத்தங்கள் பெரும் வெற்றிபெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியின் தலைமையும் தங்களது கருத்தை ஏற்றுக்கொள்ளாது செயற்பட்டால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார் ஜே.வி.பி. அமைச்சர்.

---------------------------------

ஜனாதிபதி சந்திரிகாவின் அழைப்பில் அவரது கூட்டணிக் கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட இதற்கான சந்திப்பில் தேசிய நல்லிணக்க சபை முயற்சியை முன்னெடுக்க முயற்சித்தமை ஒரு ஏமாற்றுத் திட்டம் என்று புதிய இடதுசாரிக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

தேசிய நல்லிணக்க சபையை அமைக்கக் கூடியிருந்த சபையில் பேசிய ஜனாதிபதி, இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகின் கீழ் பேச்சுக்களை முன்னெடுக்கத் தான் தயார் என்று குறிப்பிட்டதன் மூலம், தனது முன்னுக்குப் பின் முரணான போலிக் கொள்கையையும் போக்கையுமே வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின்போதும், இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகை முற்றாக மறுதலித்த ஜனாதிபதி, இதற்கு தனது அரசு ஒருபோதும் உடன்படப் போவதில்லை என்றும் தெரிவித்து, அப்போதைய ஆளும் கட்சியான ரணில் அரசை மிக மோசமாகக் கண்டித்திருந்தார்.

இருப்பினும், தேர்தலுக்குப் பின்னர், அவரது கூட்டணியிலுள்ள விமல் வீரவன்ச, இடைக்கால நிர்வாக அலகைத் தொடர்ந்தும் எதிர்க்கையில், ஜனாதிபதி மட்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது வெறும் ஏமாற்று அரசியல் போலி அறிவித்தலே.

நன்றி புதினம் 08-10-04
------------------------------
நகைச்சுவையும் பேரினவாத சதித்திட்டங்களும் அடங்கிய சிறிலங்காப் பாராளுமன்றம் உண்மையிலேயே பேரினவாத காடையர்களையும் மாபியாக்களையும் மட்டுமல்ல சிறந்த கோமாளிகளையும் கொண்டது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#23
நல்லாய் போகுது கதை... தகவலுக்கு நன்றிகள் கணணி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Quote:நகைச்சுவையும் பேரினவாத சதித்திட்டங்களும் அடங்கிய சிறிலங்காப் பாராளுமன்றம் உண்மையிலேயே பேரினவாத காடையர்களையும் மாபியாக்களையும் மட்டுமல்ல சிறந்த கோமாளிகளையும் கொண்டது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
நகைச்சுவையா அல்லது நக்கலா ?
Reply
#25
<b>தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்க தயார்: சந்திரிகா </b>

தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க தமது அரசாங்கம் தயாராகவிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது ஜனாதிபதி இவ்விடயத்தை தெரிவித்திருக்கிறார்.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் குறித்து விடுதலைப் புலிகளுடன் தமது அரசாங்கம் பேச்சு நடத்த தயாராகவிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மிக விரைவில் பேச்சுக்கள் ஆரம்பமாகுமென்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

நன்றி புதினம்
---------------

அம்மணி அடிச்சார் பல்டி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இனி JVP, கேவல உறுமய சந்தித்த பின்னர் திருப்பி பல்டி அடிக்க எவ்வளவு காலமோ? :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#26
அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று தன்னைச் சந்தித்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் சிறிலங்கா சனாதிபதி கூறியிருக்கிறாராம்!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதிலான்றும் குறைச்சலில்லை? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும் சமாதானத்தின் அவசியம் பற்றி தனது புரிந்துணர்வை வெளிப்படுத்த அவர் தவறியதே கிடையாது. அது ஒரு சம்பிராதமாகவே போய்விட்டது.

ஆனால், சமாதானத்தை முன்னெடுக்க அவர் எந்தளவுக்கு தீவிரமான பற்றுறிதியுடன் நகர்வுகளை மேற்கொள்கிறா என்பது குறித்து எவருமே ஆராய்வதுமில்லை கவனத்தில் கொள்வதுமில்லை. :?

அப்படி அவர்கள் ஆழமான அக்கறை கொண்டிருப்பார்களேயானால் சந்திரிக்காவின் சமாதான முயற்சிகளில் அரை அடி தூரமாவது முன்னேறியிருப்பாரே! மாறாக சந்திரிக்காவின் சமாதானக் குதிரை பின்நோக்கிய நகர்வை மேற்கொண்டுவருவதை தமிழ் மக்கள் நன்கு அறிவர் அவர்களுக்குத் தெரியும் சந்திரிகாவின் சமாதானம் தொடர்பான உள்நோக்கங்கள் குறித்து.

ஆனால், ஆமிரேஜ், அகாஷி, மற்றும் சிலசமாதான வலியுத்தலில் தீவிரம் காட்டும் அதிகாரிகளுக்கும், ராஜதந்திரிகளுக்கும் இவையெதுவும் புரிவதுமில்லை, அவர்கள் அதனைப் புரிந்துகொள்ள முயன்றதுமில்லை.

<i>அவர்கள் அடிக்கடி வருவார்கள்,
பார்ப்பார்கள்,
பேசுவார்கள்,
சமாதானத்தை வலியுறுத்துவார்கள்,
தங்கள் விஜயத்தின் சுயநல நோக்கங்களை நிறைவேற்றியதும் பறந்து விடுவார்கள்.
தங்கள் நாடுகளுக்கு திரும்பியதும் ஒரு அறிக்கை விடுவார்கள் அவ்வளவுதான்.
இப்போது அகாஷி வந்தவிட்டு போயுள்ளார், அடுத்து ஆர்மிரேஜ் வரவுள்ளார்.
ஆனால் சமாதானம் எப்போது வரும்?
அது ஒருவருக்கும் தெரியாது!
அகாஷியின் இந்தமுறை விஜயமும் அரச தரப்பிடம் இருந்து நம்பிக்கையூட்டும் வகையில் ஆக்கபூர்வமான புதிய யோசனைகள் எதனையும் சமாதானம் குறித்து பெற முடியாத ஒன்றாகவே போய்விட்டது.</i>

சந்திரிகா புதிய மொந்தையில் பழைய கதைகள்ளையே வண்ணம் கலந்து கொடுக்க முயல்கிறார் அவ்வளவுதான்!

ஆனால், எவ்வளவு காலத்திற்குத்தான் சந்திரிகா இப்படி பேய்க்காட்டப் போகிறாராம்? அவரது ஆட்சிப்பங்காளிகளுக்குள்ளேயான உள் முரண்பாடுகளுக்கு சமாதானத் தீர்வைக் காண்பதே சாத்தியமற்ற விடயமாகப்போய்க்கொண்டிருக்கையில்?

நாட்டில் சமாதானத்தை அவரால் எப்படிக் கொண்டுவர முடியுமாம்?

இது குறித்து அகாஷிகளும் ஆர்மிரேஜ்களும் ஆழமாக யோசிப்பது மிகவும் நல்லது.
Idea


நன்றி சூரியன் இணையம்
Reply
#27
<b>ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் நாட்டை நிர்வகிப்பவர்களே பொறுப்பு: சந்திரிக்கா </b>

உள்நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறைகளில் நிலவும் ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் குறித்த நிறுவனமோ அல்லது ஒரு தனிநபரோ பொறுப்பு அல்ல. நாட்டை நிர்வகிப்பவர்களே :?: :?: பொறுப்பு என சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அவர்,

சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டி நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் குறிப்பிட்ட இரண்டு துறைகளும் சிறப்பாக செயலாற்ற வேண்டும். ஆனால் அப்படி சரியாக செயல்படவில்லை என சர்வதேச நிறுவனமொன்று சுட்டிக்காட்டியிருப்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வுகாண்பதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்குகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கத் தயாராக இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைப்பதை விட எதிர்க்கட்சியை சம்மதிக்க வைப்பது தான் தற்போது மிகவும் கடினமாக உள்ளது ?????என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்

இது புது ஸ்ரைல் பல்டி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இடைக்கால நிர்வாக சபை அதிகாரம் பகிரவில்லையாமோ? :!:
Reply
#28
அப்படியா அநுரா சொன்னதையும் போடுங்க... " நாங்கள் சமாதானத்துக்கும் தயார் சண்டை செய்யவும் தயார்...." என்பதை....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
<b>இடைக்கால நிர்வாக அலகின்கீழ் பேச்சு நடாத்த ஜனாதிபதியோ ஜே.வி.பி.யோ தயாரில்லை:</b> <i>விமல் வீரவன்ச </i>

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே உடன்பாடு இல்லை என்று விடுதலைப் புலிகளினால் தெரிவிக்கப்பட்டுவருவது ஏற்கக் கூடியது அல்ல என்றும் சகல கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் இன்றிரவு சுயாதீனத் தொலைக்காட்சியில் சந்திரிகா உரையாற்றியுள்ள அதேவேளை, அவரது கட்சியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி., லண்டனில் இதற்கு எதிர்மாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தானும் தனது கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவுள்ளன.

தமதுஅரசாங்கத்துக்குள் ஒரே வகையான இணக்கப்பாடு சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை மறுத்தார். ஜே.வி.பி.யும் இந்த இனப்பிரச்சினை பேச்சுவார்த்தையின் மூலம் தீhக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி விரும்பினால் தன்னாட்சி அதிகார சபை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுநடத்தலாம் என அந்தக் கட்சி இன்று தெரிவித்திருப்பதாகவும் குறி;ப்பிட்டார்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாக தமது இறுதி நிலைப்பாட்டை இம் மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் என சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறினார்.

எனினும் ஜனாதிபதி சந்திரிகா கூறியதற்கு முற்றிலும் எதிர்மாறாக, லண்டனில் தற்போது தங்கியிருந்து சிங்கள தேசியப் பற்றாளர் அமைப்பினருடன் இணைந்து, சமாதான முன்னெடுப்புக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் ஜே.வி.பி. உறுப்பினர்களில் ஒருவரான பிரச்சாரச் செயலர் விமல் வீரவன்ச கருத்துக் கூறியுள்ளார்.

அங்கு உரையாற்றிய விமல் வீரவன்ச:

பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜே.வி.பி.யே தடையாக உள்ளது என்ற பிரச்சாரம் பொய்யானது. உண்மையில் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு, இடைக்காலத் தன்னாட்சி அதிகார அலகின் கீழ் பேச்சுக்களை ஆரம்பிக்க எந்தவொரு எண்ணமும் விருப்பமும் இல்லை. Idea

அப்படி சந்திரிகாவுக்கு விருப்பம் இருந்திருந்தால், நோர்வே வெளிநாட்டமைச்சர் எந்தவித உடன்பாட்டையும் எட்டாது வெறுங்கையோடு திரும்பியிருக்க மாட்டார். Idea

ஆகவே, ஜே.வி.பி. மட்டுமல்ல, ஜனாதிபதி சந்திரிகாவிற்கும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதில் உடன்பாடு இல்லை என்று தெளிவாக உரைநிகழ்த்தியுள்ளார். Idea

பி.பி.சி.யின் ஆங்கில சேவைக்கு விமல் வீரவன்ச வழங்கிய செவ்வியின் ஆங்கில வடிவத்தை, தற்போதைய சூழ்நிலை கருதி, கீழே ஆங்கிலத்தில் தருகிறோம்:

JVP's media secretary and parliamentarian Wimal Weervansa told BBC Sandehasya that the president does not have to worry about JVP's objections on ISGA.

"It is the media that selectively reports saying that the president is in favour of having talks based on the ISGA proposals," said Weeravansa.

Wimal Weeravansa along with Elle Gunawansa thero are in London as a part of the European propaganda campaign by the Patriotic National Movement (PNM).

<i>If the president is in favour of having talks based on the ISGA proposals, why did Jan Peterson have to go empty handed?"</i> queried Weeravansa.

Norway Foreign Minister Jan Petersen was in Sri Lanka meeting President Chandrika Bandaranaike Kumaratunge and Tamil Tiger leader Velupillai Prabhakaran in an attempt to revive stalled peace talks.

The position of several parties including the JVP is that any Interim Self Government that excludes a permanent solution to the national question, should not be considered as the basis for peace talks," Said Weeravansa.

நன்றி புதினம்

==========================
இதுக்கு அம்மணி என்ன சாகசம் காட்டப்போறாவோ?....மறுபடியும் பல்டியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#30
யுத்த பீதியால் மக்கள் பீடிக்கப்பட்டுள்ள நெருக்கடிமிக்க இவ்வேளையில் சிறிலங்கா அரசு 56.29 கோடி ருபாவை நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்துக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அரசின் இந்த நிதி ஒதுக்கீடு நேற்று நாடாளுமன்றத்தில் பெருமான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.

140 எம்.பிக்கள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க 22 எம்.பிக்கள் எதிராக வாக்களித்தனர். எஞ்சிய உறுப்பினர்கள் நேற்றைய அமர்வுக்கு வருகை தரவில்லை.

<b>கடந்த ஆண்டு பாதுகாப்புச் செலவீனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 52.08 பில்லியன் ருபாவை விட 8 சதவீதத்தால் இம்முறை அதகரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. </b>

புதினம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)