06-09-2004, 12:46 PM
<b>வெட்கித் தலைகுனிய வைக்கும்
சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல்</b>
புதிய பாராளுமன்றம் இன்று நான்காவது தடவையாகக் கூடுகிறது. தேர்தல் நடைபெற்ற பின்னர், அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியை, ஆளுநர், ஆட்சியமைக்கும்படி அழைத்து, கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேல் சென்றுவிட்ட நிலையில், இதுவரை ஆளும்கட்சி பரிதாபமாக அத்தனை குட்டிக் கட்சிகளிடமும் கையேந்தும் நிலையேற்பட்டுள்ளது.
எந்தெந்த அமைச்சுக்களில் என்னென்ன பொறுப்புக்களைத் தந்தால் யார் யார் கட்சி மாறத் தயாராக இருக்கிறார்கள் என்பதை பச்சையாக-பகிரங்கமாக பேரம்பேசி, அதற்கும் மசியாதவர்களை, அடித்து மிரட்டியோ, பண ஆசை காட்டியோ, அல்லது கேவலமான கட்டுக்கதைகளைப் பரப்பி பெயரையும் செல்வாக்கையும் பாழடிப்பதன் மூலமோ, மிகக் கேவலமான சாக்கடை ஜனநாயகத்தை ஒரு நாட்டின் ஜனாதிபதியே முன்னின்று முன்னெடுக்கும் அவலநிலை சிறீலங்காவிற்கு உருவாகியுள்ளது.
முன்னரெல்லாம் இத்தகைய இழுக்குகளும் கேவலங்களும் நிகழ்ந்தபோது, தட்டிக்கேட்க பெரும்பான்மைச் சமூகத்தில் பௌத்த பீடங்கள் இருந்தன. ஆனால் இம்முறை பௌத்த பிக்குகளும் அரசியலுக்குள் நுழைந்து, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் எடுத்துள்ள நிலையில், பௌத்த பீடங்களும் அரசியல் சாயம் புூசப்பட்டு, நாட்டின் அரசியல் அநீதிகளைத் தட்டிக் கேட்க யாருமற்ற துயரநிலை தோன்றியுள்ளது.
113 என்ற மந்திர இலக்கத்தை எப்படியாவது இம்முறை நாடாளுமன்றத்தில் காட்டிவிடுவது என்று எத்தனையோ வழிகளில் சந்திரிகா கட்சியினர் முயன்றாலும், இறுதிவரை முக்கால்வழி து}ரமே அவர்களால் செல்ல முடிந்திருக்கிறது.
பகிரங்கமாக இந்தப் பதவி தந்தால் வருகிறேன் என்று கேட்டுப் பெற்றே ஒருசிலர் சொந்த நலனுக்காகக் கட்சி தாவினார்கள். முதலில் தேர்தலுக்குப் பின்னர் 105 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 106 ஆசனங்களை வைத்துக்கொண்டு, 113 ஆசனங்களை எப்படியும் காட்டுகிறோம் என்று நாடாளுமன்றம் நுழைந்தார்கள் மஹிந்தவும் மைந்தர்களும்.
என்ன திருகுதாளங்கள் செய்தும் இந்த 113ஐ நிரூபித்தே விடுவது என்ற ஒழுக்கங்கெட்ட அரசியலில், ஜனநாயகம் என்ற அழகான பெயரைச் சொல்லிக்கொண்டே செயலில் இறங்கினார்கள் சந்திரிகா கூட்டத்தினர்.
இறுதியாகப் பாராளுமன்றம் கூடியபோது அரசாங்கத் தரப்புக்குப் பகிரங்கமாகக் கட்சி மாறிய முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பைலாவைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் ஏனைய மூன்று 'நீக்கப்பட்ட" எம்பிக்களும் கட்சி பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அந்த 3 எம்.பி.க்களும் கட்சி தாவும் பட்சத்தில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 112 ஆசனங்களோடு இன்னுமொரு ஆசனத்திற்காகத் தவமிருக்கும் நிலை உருவாகும்.
இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பணம், பதவி, கொலை மிரட்டல், கடத்தல், பெயரையும் செல்வாக்கையும் மழுங்கடிக்க கேவலமான பரப்புரைகள் என்று எத்தனை வழிவகைகளைப் பாவித்தும், 113 என்ற மந்திர இலக்கத்தை இன்னும் இவர்களால் அடைய முடியவில்லை.
இன்றோ நாளையோ இணைவது உறுதி என்று ஆளும் கட்சி குஷியாக இருக்க, விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆறுமுகம் தொண்டமான், ஆளும் கட்சியுடன் எந்தத் தொடுசலுமில்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார். அந்த எட்டு ஆசனங்களும் அரோகரா.
முஸ்லிம் காங்கிரஸ் பணிந்து வராது என்பதால், பலவித முயற்சிகள். அமைச்சுப் பதவி ஆசைகள், பணத்தொகை, மிரட்டல் எதுவும் சரிவரவில்லை என்பதால், கட்சிக்குள்ளேயே குழப்பத்தை உருவாக்கி, யார் மூலம் தேசிய ஆசனத்தைப் பெற்று நாடாளுமன்றம் நுழைந்தார்களோ அவருக்கெதிராகவே அவர்களைக் கிளர்ந்தெழ வைத்ததால், நால்வர் இப்போது முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறியுள்ளார்கள். இருந்தும் என்ன, மந்திர இலக்கம் மதித்து நடக்க மறுக்கிறது.
ஒரு பலமற்ற ஆளும் கட்சியும், மிகப் பலமான எதிர்க்கட்சியும் கொண்ட பாராளுமன்றம் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இன்று கூடுகிறது. எதிர்க்கட்சியில் தோன்றிய பல உட்கட்சிக் குழப்பங்கள் தீர்ந்து, மிகவும் தெளிவான நிலைப்பாட்டோடு இன்று அவர்கள் பாராளுமன்றம் நுழைகிறார்கள்.
எக்காரணம் கொண்டாவது, டிரோன் பெர்னான்டோ வழியில் யாராவது ஒருவர் எதிர்க்கட்சியிலிருந்து தாவிவர மாட்டாரா என்று ஆளும் கட்சி அவரவர் பாணியில் கனவு காண்கிறது.
ஹெல உறுமயவிலிருந்து ஒருவர் கட்சி தாவினாலும் என்ற பகற்கனவும் இருக்கிறது.
இந்த இரண்டு சந்தர்ப்பவாதங்களையும் வெறும் கற்பனையாக மட்டும் ஆளும் கட்சி பார்க்கவில்லை. தனித்தனியாக அக்கட்சி அங்கத்தவர்களை அணுகி, இரகசிய ஆசை வார்த்தைகளும் உறுதிமொழிகளும் கவர்ச்சித் திட்டங்களும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டே வருகிறது.
எங்கே ஒருவர் தாவுவதற்கான வாய்ப்பு உருவாகிறதோ, அப்போது தமது மந்திர இலக்கத்தை எட்டிப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடனும், அப்படி மந்திர இலக்கத்தை எட்டிப் பிடிக்காதவிடத்து, அடுத்த அமர்வு வரை தனது சர்வவல்லமை பொருந்திய அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களது ஐனாதிபதி தங்களைப் பாதுகாத்து வேலியாக நிற்பார் என்ற இறுமாப்புடனும் நாளைய அமர்வுக்குத் தயாராகிறது பெரும்பான்மையற்ற ஆளும் கட்சி.
சிறீலங்கா வரலாற்றில் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் நிகழ்வுகள் இடம்பெறுவது இதுவே முதற்தடவை. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மிகக் கோரமான போர், மிகக் கேவலமான சாக்கடை அரசியல், மிகக் கீழ்த்தரமான பதவிப் பேரங்கள், பகிரங்கமாக அமைச்சுப் பதவிகளுக்கான சண்டைகள், மிக அதிகமான அரசியல் திருப்பங்கள், மிக அதிகமான மாற்றங்கள் அனைத்தையும், இந்தக் குட்டித் தீவான சிறீலங்கா சந்தித்திருப்பது சந்திரிகாவின் ஆட்சியில் மட்டுமே நடந்தேறியிருக்கிறது.
மொத்தத்தில், சிறீலங்காவைக் களேபரம் பண்ணிய சந்திரிகா என்ற வல்லூறு, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஜனநாயக விரோதி என்பதே உண்மை.
நன்றி
குயின்ரஸ் துரைசிங்கம்- கனடா

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->