Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தென்றலின் குறும்பு
#1
தென்றலின் குறும்பு

உயிரை மெதுவாய்
உரசிப் பார்க்கும்
மலரின் மணத்தைத்
திருடப் பார்க்கும்
இலையின் பேச்சை
ஒட்டுக் கேட்கும்
இறகை சிறகை
கோதிவிடும்
திரையை மெள்ள
விலக்கிப் பார்க்கும்
கவிதைத் தாளைத்
தள்ளி விடும்
காதலர் நடுவில்
நுழையப் பார்க்கும்
காதலின் வாசம்
முகரப் பார்க்கும்
களைத்த அனைத்தையும்
தாலாட்டும்
தொட்டிலின் மணியை
ஆட்டிப் பார்க்கும்
குழந்தையின் போர்வையை
விலக்கப் பார்க்கும்
பண்ணிய பணியில்
களைத்துப் போய்
தூங்கும் இமைமேல்
தூங்கிப் போகும்.
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
வணக்கம் தமிழரசன்...
"அழகான" கவிதை
"மெல்லென" வருடிச் செல்லும்
தென்றல் போல
உங்கள கவிதையும் வருடியது!

தொடருங்கள்!....

குறிப்பாக:

"திரையைக் கொஞ்சம்
விலக்கிப் பார்க்கும்"

என்ற வரிகளை வாசித்ததும்

நீங்கள் இன்னொரு வரியினை மனதில் நினைத்துவிட்டு
அது தேவையில்லை என்று விட்டிருப்பீர்கள் என்று
எண்ணினேன்! சரிதானா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#3
சோலையில்...
கீற்றுக்கள் புகுந்து
கீதம் பாடும்
அதுவே...
செவிக்குள் புகுந்து
மனதை வருடும்
மனதும் மகிழ
மலரை நோக்கும் - அது
சுகந்தம் தந்து
சுவாசம் காக்கும்
தென்றலின் குறும்பில்
தெம்பு பிறக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே??
; ;
Reply
#5
[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
KULAKADDAN Wrote:[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:
:roll: :roll: :roll:
. .
.
Reply
#7
Niththila Wrote:
KULAKADDAN Wrote:[quote=shiyam]தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் [size=18]புலத்திலிருந்து எழுதுபவர்களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே
எங்கயொ உதைக்கிற மாதிரி கிடக்கு............ :wink:
:roll: :roll: :roll:

காதல் வாழ்க்கை இல்லச் சரி...கனவாச்சே பலருக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:காதல் வாழ்க்கை இல்லச் சரி...கனவாச்சே பலருக்கு...!
தூக்கம் கலைஞ்சால் அதுவும் கலைஞ்சிட்டு போகப்போது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அழகான மிதமான . இதமானா கவிதை தமிழரசன்... வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)