Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அறியாமையும் சில மூடநம்பிக்கைகளுமே இப்படியான செய்கைக்கு காரணம்....இது கிராம மக்களுக்குப் பொருந்தும்,... ஆனா நகர மக்களுக்கு? நகரத்திலையும் தானே இப்படி நடக்குது அதுக்கென்ன காரணம்? :|
" "
" "
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
தமிழினி சதுர்வேதசாமியின் லீலைகளில் மாட்டுப்பட்டவர்கள் பெரியபெரிய பணக்கார பெண்கள் அவர்களுடைய மகள்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஆதலால் நீங்கள் குறிப்பிட்டதுபோல படிக்காதவர்கள் என்ற வாதம் அடிபட்டுபோய்விடுகிறது.
அடிப்படையில் எங்கோ குழப்பம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பாக்கிற தூய்மையான கலாச்சாரம் இல்லை. அவர்களால் பேசப்படுகிற அளவுக்கு பெண்மைக்கு கௌரவம் இல்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேற்குவாசல் கோபுரத்தின் கீழ் நின்று பட்டப்பகலில் ஒரு ஆண் (மாமா) போய்வருகின்ற ஆண்களிடம் சார் அழகான பெண் இருக்கின்றது வாங்க சார் என்று அழைக்கும்போது அந்தக் கோவிலை பற்றிய எங்கள் எண்ணங்கள் மணல்வீடு போல சரிந்துவிடுகிறது.
எங்கள் நாட்டில் இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் இவ்வளவு வெளிப்படையாக ஒரு கோவிலுக்கு அருகில் பட்டப்பகலில் அழைக்கமாட்டார்கள்.
இங்கு இலண்டனில் ஐயரிடம் அறிவுகுறைந்த பெண்ணா மாட்டுப்பட்டார்.?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]