Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல்
#1
நலமாய் இருப்பாய் என்றே
உள்மனது துடிக்கிறது.

ஆனாலும்
நீ பிரிந்ததைவிட ...
சொல்லாமல் பிரிந்தது
அதிகம் அதிகமாய்
வலிக்கின்றது.

இரக்கமேயில்லாமல்
பூச்சியமென்றே உரைக்கிறது
மின்னஞ்சலின்
உள்ளகம்

இந்த
சைபர் உலகம்
சுனியமாய் தோன்றுகின்றது.

என்நிலை குலைத்து
கவிவரம் தந்து
பிரிந்து போனாய்

எஜமானிழந்த நாய்க்குட்டியாய்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகள் தேடியலைகிறது

நானும்
என் கவிதைகளும்.


-தயா ஜிப்ரான் -
.
.!!
Reply
#2
என்ன தயா பிரிஞ்சிட்டீங்களா.. என்ன நடந்தது.. சோகம் தழுவுது..? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
Quote:இரக்கமேயில்லாமல்
பூச்சியமென்றே உரைக்கிறது
மின்னஞ்சலின்
உள்ளகம்

பூச்சியத்தைப்
பார்க்கும் போது எல்லாம்
பைத்தியம் பிடிப்பதே
மேல் என தோன்ற வைக்கும்
வேதனையை
சிரமமின்றி தரும்
காமதேனுவே காதல்....
பார்த்துக் காதல் செய்யுங்கள்
பைத்தியம் பிடிப்பதைத்
தடுப்பதற்கதகவே..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#4
கவிதை நனறு பாராட்டுகள்



ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
கவிதை அருமை... வாழ்த்துக்கள்.
Reply
#6
Quote:ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........

பூச்சியத்துக்கள் இராச்சியம் அமைக்க முடியாது. வேண்டுமானால் அதற்கு முன் ஒன்றை போட்டு கொள்ளுங்கள். அதன் மதிப்பு கூடும்.
Reply
#7
shanmuhi Wrote:
Quote:ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........

பூச்சியத்துக்கள் இராச்சியம் அமைக்க முடியாது. வேண்டுமானால் அதற்கு முன் ஒன்றை போட்டு கொள்ளுங்கள். அதன் மதிப்பு கூடும்.
அப்ப அதன் பின் அமைக்கலாமோ :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)