03-21-2005, 08:11 AM
சென்னையில் இன்று நடக்கும் முரளீதரன், யுவன்சங்கர் ராஜா திருமணங்கள்
சென்னை:
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) இரண்டு நட்சத்திர ஜோடிகளின் திருமணங்கள் நடைபெறவுள்ளன.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையின் பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் இளையமகள் மதிமலர் ஜோடிக்கும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா சுஜயா சந்திரன் ஜோடிக்கும்இன்று திருமணங்கள் நடைபெறுகின்றன.
முரளிதரன், மதிமலர் திருமணம் முற்றிலும் தமிழ்முறைப்படி, எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெறவுள்ளது.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/muralidharan-250.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/mathimalar-250.jpg' border='0' alt='user posted image'>
செவ்வாய்க்கிழமை திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அதில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முரளி மதிமலர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர் நடிகர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜா சுஜயா சந்திரன் திருமணம் ராஜா அண்ணாமலைபுரம் ராமநாதன் மண்டபத்தில் நடைபெறுகிறது. இது காதல் திருமணமாகும்.
சுஜயா சந்திரனின் பெற்றோர்கள் லண்டனில் வசிக்கிறார்கள். அவரது தந்தை இலங்கையைச் சேர்ந்தவர், தாயார் மலையாளி. யுவன் சுஜயா காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.
யுவன்ஷங்கர் ராஜாவின் திருமணத்தையொட்டி இன்று காலை மாண்டலின் சீனிவாஸின் இசைக் கச்சேரியும், மாலையில் ஹரிஹரனின் கஜல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தட்ஸ்தமிழ்