Yarl Forum
முரளிதரனின் திருமணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: முரளிதரனின் திருமணம் (/showthread.php?tid=4709)



முரளிதரனின் திருமணம் - hari - 03-21-2005

சென்னையில் இன்று நடக்கும் முரளீதரன், யுவன்சங்கர் ராஜா திருமணங்கள்

சென்னை:

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) இரண்டு நட்சத்திர ஜோடிகளின் திருமணங்கள் நடைபெறவுள்ளன.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையின் பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் இளையமகள் மதிமலர் ஜோடிக்கும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா சுஜயா சந்திரன் ஜோடிக்கும்இன்று திருமணங்கள் நடைபெறுகின்றன.

முரளிதரன், மதிமலர் திருமணம் முற்றிலும் தமிழ்முறைப்படி, எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெறவுள்ளது.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/muralidharan-250.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/mathimalar-250.jpg' border='0' alt='user posted image'>
செவ்வாய்க்கிழமை திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அதில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

முரளி மதிமலர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர் நடிகர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜா சுஜயா சந்திரன் திருமணம் ராஜா அண்ணாமலைபுரம் ராமநாதன் மண்டபத்தில் நடைபெறுகிறது. இது காதல் திருமணமாகும்.

சுஜயா சந்திரனின் பெற்றோர்கள் லண்டனில் வசிக்கிறார்கள். அவரது தந்தை இலங்கையைச் சேர்ந்தவர், தாயார் மலையாளி. யுவன் சுஜயா காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.

யுவன்ஷங்கர் ராஜாவின் திருமணத்தையொட்டி இன்று காலை மாண்டலின் சீனிவாஸின் இசைக் கச்சேரியும், மாலையில் ஹரிஹரனின் கஜல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தட்ஸ்தமிழ்


- AJeevan - 03-21-2005

திருமண வாழ்த்துக்கள் புது மணத் தம்பதியினருக்கு.........


- vasisutha - 03-21-2005

<b>இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திருமணம் சென்னையில் நடந்தது </b>


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் திருமணம் இன்று(மார்ச் 21) சென்னையில் நடைபெற்றது. எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

<img src='http://img162.exs.cx/img162/2206/murali7qv.jpg' border='0' alt='user posted image'>


வைதீக முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகள் மதிமலருக்கு காலை 10.15 மணிக்கு முரளிதரன் தாலி கட்டினார். தமிழக அரசின் சார்பில் அரசுத் துறை சார்பு செயலாளர் பரமேசுவரன் மணமக்களை வாழ்த்தினார்.

இலங்கை அமைச்சர்கள் பெலிக்ஸ் பெரைரா, சரத் அமுமங்காவா ஆகியோரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க,ஜெயசூர்யா, சமிந்தா வாஸ், ஜெயந்த ஆகியோரும் முரளிதரன்&மதிமலர் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர்கள் பிரபு, சந்திரசேகர்,பாக்யராஜ், ரஜினியின் மகளும், நடிகர் தனுஷன் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.




நன்றி: விகடன்


- vasisutha - 03-21-2005

<img src='http://img40.exs.cx/img40/4575/m174dr.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img40.exs.cx/img40/3802/m202fk.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img40.exs.cx/img40/2301/m259wf.jpg' border='0' alt='user posted image'>


- tamilini - 03-21-2005

தம்பதிகளிற்கு எமது திருமணநல்வாழ்த்துக்கள். :wink:


- yalie - 03-22-2005

என்றும் இனிமையான இல்லறத்தில் இணைந்து மகிழ்ந்திட இரண்டு ஜோடிகளுக்கும் எனது திருமண நல்வாழ்த்துக்கள்.


- thamizh.nila - 03-22-2005

அழகான ஜோடி தான்.


- Nitharsan - 03-22-2005

புதுமணத்தம்பதிகளை வாழ்த்துகின்றேன்..


- MUGATHTHAR - 03-22-2005

தம்பி முரளி அடுத்த மாதம் இந்தியாவுக்கும் சிறீலங்காக்கும் 1டே மச் இருக்குதாம் அப்பு...நீ எந்த டீமுக்கு விளையாட போறய்?????


- kavithan - 03-22-2005

வாழ்த்துக்கள்


- thivakar - 03-22-2005

மணமக்களை வாழ்த்துகிறேன்


- Mathan - 03-24-2005

<img src='http://www.indiavarta.com/gallery/images/2005/mar/21/mm2.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்டன் எஸ். வெங்கட்ராகவன்

<img src='http://www.indiavarta.com/gallery/images/2005/mar/21/mm1.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் காப்டன் அட்டப்பட்டு.

படங்கள் நன்றி - தினமணி