06-11-2005, 06:00 PM
nRjgJ;JPUD; Wrote:நீங்கள் உப்பிடி எழுதுறியள் ஆன உந்த ஈழமுரசிலை ரவியண்ணை (இவர் ஒரு பேப்பரிளை எல்லாளன்) புலம் பெயர் சினிமா இருட்டுக்கை போகுது தன்னட்டை இருக்கிற டோச்சை பாவிக்க சொலிலுறார். உவர் தங்க பட்சனே உவரிட்டை ஐடியா எடுக்கேககை நீங்கள் ஏன் விட்டியள். சரி கடைசி பூசைக்காவது கூப்பிட்டிருக்கலாம். வடலியும் முறுகியிருக்கு பாத்து கவனியுங்கோ! பாவம் அவைக்கும் உங்களை விட்டா அக்கள் கிடையாது போல.
ஈழமுரசில இரவி அருணாச்சலம் அவர்கள் எழுதிய கட்டுரையில் இரண்டு பகுதியைப் படித்தேன். மூன்றாவதை இன்னும் படிக்கவில்லை. அவருடைய ஆதங்கத்தில் நியாயமிருப்பதாகவே படுகிறது. அவருடைய எல்லாக் கருத்துக்களுடனும் ஒருமிக்கவில்லையென்றாலும், அவருடைய ஆதங்கம் புரிகிறது. இந்திய சினிமாவைத்தான் எமது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மறுபிரதி செய்ய நிறைக்கிறார்களா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. இருந்தாலும் கனவுகள் நிஜமானால் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளதாக அப்பால் தமிழில் கி.பி. அரவிந்தன் அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. படம் யேர்மனியில் ஓடும்போது திரையில் பார்த்துவிட்டு மிகுதியை எழுதுகிறேன்.

