10-26-2005, 06:54 PM
சயந்தனின் அண்மய பதிவை இங்கே போடுகிறேன்,களம் கொன்ச்சம் இறுக்கமா இருக்கிற படியா இது கொன்சம் ஜாலியான விசயமா இருந்திச்சிது,இங்க கன பேருக்கு உதவும் எண்டு போடுறன் ,என்ன நினைக்கிறியள் உங்கட கருத்தென்ன என்டு சொல்லுங்கோ,பிறகு சயந்தன் வந்து என்ன சொல்லுறார் எண்டு பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு பதிவாப் போடலாம் எண்டு தான் இருந்தன். பிறகு மறந்திட்டன்.
ஆனாலும் இப்பவும் காதலுக்கு அழகும் ஒரு உடனடிக்காரணம் எண்டதில நான் உறுதியாத்தான் இருக்கிறன். வலு சிம்பிளா என்னாலை விளக்க முடியும். யார் யார் எண்டே தெரியாத இருவர் ஒருவரை ஒருவர் நெருங்க வேண்டும் எண்ட ஆசையையும் எதிர்பார்ப்பையும் உடனடியாத் தாறதில அழகுக்கு ஒரு முக்கிய இடமிருக்கு!
இங்கை அழகெண்டதை எப்பிடி வரையறை செய்யலாம் எண்டும் ஒருவருக்கு அழகாத்தெரியறது இன்னொருவருக்கு அழகில்லாமல் தெரியும் எண்ட கேட்டலுத்துப்போன கருத்தக்கு ஒரு பதில் சொல்லுறன். அதாவது ஒருவருக்கு அழகாத்தெரியுதே.. அந்த அழகை பற்றித்தான் நான் கதைக்கிறன்.
வேணுமெண்டால் இப்பிடிச்சொல்லலாம். காதலுக்கு முந்திய ஒரு ஈர்ப்பு இருக்குது தானே.. அதுக்கெண்டாலும் இந்த அழகுதான் காரணமாயிருக்கு. அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்.
அதைவிடுவம். இங்கை ஒஸ்ரேலியாவில காதல் , கல்யாணம் பற்றி ரண்டு தமிழ்ப் பெண்களோடு கதைக்கும் சந்தர்ப்பம் போன முறை சிட்னி போயிருந்த சமயம் கிடைச்சது. அதில ஒருத்தியை கடந்த வருடமே எனக்கு அறிமுகம். கடந்த வருசம் சிட்னியில நடந்த ஒரு நிகழ்வில அவவும் அவவின்ர boyfriend ம் மும்மரமா நிகழ்வு வேலைகளை செய்து கொண்டிருக்க சந்தோசமாய் இருந்தது.
மற்றவவை இந்த முறை தான் தெரியும்.
ஒரு நாள் ரெயினுக்குள்ளை வரும் போது அவையோடு கதைச்சுக் கொண்டு வந்தன். முதலாமவர் தன்னுடைய காதல் உடைந்து விட்டதாக ஒரு கட்டத்தில சொன்னா. அது இங்கெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அது பற்றி எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்ட இல்லை நான். அல்லது காட்டுவது போல நடிக்கவும் இல்லை.
'அவன் எப்ப பாத்தாலும் நீ அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அது பிடிக்கவில்லை.. ' என்றாள் அவள். எனக்கதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத படியாலை எதுவும் சொல்லேல்லை எண்டாலும் பெண்களுக்கு குறிப்பாக காதலிகளுக்கு மன்னிக்கவும் காதலிக்கு பிடிக்காத விடங்களாக அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தன் மனசுக்குள்ளை.
அவ பொதுவா தன்னோடை பல்கலைக்கழக மட்ட அதுவும் தமிழ்ப்பெடியள் பற்றித்தான் கதைச்சா. இவங்கள் எல்லாரும் தங்களாலை எந்தப் பெண்ணையும் காதலிக்க வைக்க முடியும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் எண்டா.
அப்பிடியில்லை எந்தப்பெண்ணையும் என்னாலை காதலிக்க வைக்க முடியாது.. சிலரை மட்டும் தான் என்னாலை முடியும் எண்டு நான் பகிடிக்கு சொன்னன்.
இதுக்கிடையில பக்கத்தில இருந்தவ அம்மா அப்பா எங்களுக்கு ஒரு நாளும் கெட்டது செய்ய மாட்டினம். அவையள் தெரிவு செய்தால் அது சரியாத்தான் இருக்கும். எண்டு சொன்னா.
தனக்கு ஒரு பெடியனைப் பிடிச்சிருந்தால் தான் நேரடியா போய் அப்பாட்டை சொல்லுவாவாம். இதுவரை ஒருத்தரையும் பிடிக்கேல்லையாம்.
பதினெட்டு வயசாகுது.. இன்னும் ஒருத்தன் மேலை கூட மனசுக்குள்ளை ஒரு இது வரேல்லையா எண்டு கேட்டதுக்கு.. அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்..
இதுக்கிடையில நல்ல பெடியளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டு முதலாமவ கேட்டா.. பேசாமல் என்னை மாதிரி இருப்பாங்கள் எண்டு சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரு அண்ணனா.. ?? என்னை மதிச்சு கேட்டவைக்கு ஒரு தரமான பதிலைச் சொல்ல வேணும் எண்டதுக்காக ஒன்று சொன்னன்.
உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.
( அண்மைக்காலமா நான் காதல் பற்றி எழுதுற பதிவெல்லாத்தையும் நானே தூக்க வேண்டியிருக்கிறது. இதுவாவது இருக்குமென்று நம்புவோம்)
posted by சயந்தன் at 4:31 PM | 9 comments
http://sayanthan.blogspot.com/

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->