10-09-2005, 08:08 AM
ஜே.வி.பி பல துண்டுகளாக உடைய உள்ளது. இதற்கான பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள,; வெளிநாட்டு அமைப்பு ஒன்றினால் நடாத்தப்பட்டுள்ளது. மிகவிரைவில் இதனை நடைமுறைப்படுத்துமாறும், அதன் பின்பு உடன்படிக்கைக்கையில் உறுதியளிக்கபட்ட தொகையினை பரிமாறமுடியும் என்று வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனம் கோரியுள்ளது. ஜே.வி.பியின் முன்னைநாள் சிறந்த பேச்சாளரும,; கிராமிய அபிவிருத்தி தொழில்துறை அமைச்சரும் வர்த்தகர் சங்க தலைவருமான லால் கந்தவுடனான உடன்படிக்கை ஒன்றினை வெளிநாட்ட அமைப்பு கைச்சாத்திட்டுள்ளது. ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க மிகவிரைவில் கைதாக உள்ளார். ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் சிறீசேன குறே ஜக்கியதேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தமைக்கும், குறித்த அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறியமுடிகிறது. சிறிசேன குறே விமல் வீரவன்சவின் மிகவும் நெருங்கிய இரத்த உறவுச் சொந்தகாரன். இவர்கள் இருவரும் களுத்துறையினை புூர்வீகமாக கொண்டவர்கள். இதுவரைகாலமும் விமல் வீரவன்சவுக்கு இருந்து வந்த களுத்துறை மாவட்ட செல்வாக்கு, கடந்த 2 தினங்களில் மாறியுள்ளது. இதேநேரம் சோமவன்ச இலங்கையை விட்டு தப்பி போகாத விதத்தில் செயற்படுமாறு ஜ.தே.க முக்கியஸ்தர்கள் தமக்கு ஆதரவான குடிவரவு குடியகள்வு ஊழியர்களிடம் உத்தரவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. விமல் வீரவன்சவின் கை தொலைபேசி செயலற்றுள்ளதாகவும் வீரவன்ச தொடர்பற்று இருப்பதாகவும் அறியமுடிகிறது.
www.nitharsanam.com
www.nitharsanam.com

