![]() |
|
ஜே.வி.பி. உடைகிறது. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜே.வி.பி. உடைகிறது. (/showthread.php?tid=2966) |
ஜே.வி.பி. உடைகிறது. - mayooran - 10-09-2005 ஜே.வி.பி பல துண்டுகளாக உடைய உள்ளது. இதற்கான பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள,; வெளிநாட்டு அமைப்பு ஒன்றினால் நடாத்தப்பட்டுள்ளது. மிகவிரைவில் இதனை நடைமுறைப்படுத்துமாறும், அதன் பின்பு உடன்படிக்கைக்கையில் உறுதியளிக்கபட்ட தொகையினை பரிமாறமுடியும் என்று வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனம் கோரியுள்ளது. ஜே.வி.பியின் முன்னைநாள் சிறந்த பேச்சாளரும,; கிராமிய அபிவிருத்தி தொழில்துறை அமைச்சரும் வர்த்தகர் சங்க தலைவருமான லால் கந்தவுடனான உடன்படிக்கை ஒன்றினை வெளிநாட்ட அமைப்பு கைச்சாத்திட்டுள்ளது. ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க மிகவிரைவில் கைதாக உள்ளார். ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் சிறீசேன குறே ஜக்கியதேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தமைக்கும், குறித்த அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறியமுடிகிறது. சிறிசேன குறே விமல் வீரவன்சவின் மிகவும் நெருங்கிய இரத்த உறவுச் சொந்தகாரன். இவர்கள் இருவரும் களுத்துறையினை புூர்வீகமாக கொண்டவர்கள். இதுவரைகாலமும் விமல் வீரவன்சவுக்கு இருந்து வந்த களுத்துறை மாவட்ட செல்வாக்கு, கடந்த 2 தினங்களில் மாறியுள்ளது. இதேநேரம் சோமவன்ச இலங்கையை விட்டு தப்பி போகாத விதத்தில் செயற்படுமாறு ஜ.தே.க முக்கியஸ்தர்கள் தமக்கு ஆதரவான குடிவரவு குடியகள்வு ஊழியர்களிடம் உத்தரவிட்டுள்ளதாக அறியமுடிகிறது. விமல் வீரவன்சவின் கை தொலைபேசி செயலற்றுள்ளதாகவும் வீரவன்ச தொடர்பற்று இருப்பதாகவும் அறியமுடிகிறது. www.nitharsanam.com - AJeevan - 10-09-2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பல நிகழ்வுகள் எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்க வாய்ப்புள்ளது. <span style='color:red'>மகிந்தவின் உயிருக்கு ஆபத்து என்பதுதான் முதன்மையானது. அது உள் கட்சிக்குள் இருந்து என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. சந்திரிகா மகிந்தவை ஆதரிக்கவில்லை. ரணில் வந்தாலும் பரவாயில்லை மகிந்த வரக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. மகிந்தவுக்காக கட்டப்படும் கட்டவுட்டுகள் சந்திரிகா ஆதரவாளர்களாலேயே இரவோடு இரவாக தூக்கப்பட்டு ரணிலது கட்டவுட் படங்கள் கொழும்பை அலங்கரிக்கின்றன. ( இது நான் நேரடியாக கடந்த வாரம் அவதானித்தது) ஜே.வீ.பீ மற்றும் மகிந்தவின் ஆதரவாளர்கள் சிலர் ஆயுதத்தோடு சீதுவை போலீசில் கைது செய்யப்பட்ட போது மேலிட உத்தரவு அவர்களைத் தாக்க வேண்டாம் என்ற போதும் அதற்கு உடன் படுவதாக சொன்ன போலீசார் அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி தொடர்ந்து தாக்குவதாக அவர்களது நண்பர்கள் சொல்கிறார்கள். கைது செய்யப்பட்வர்களை போலீசார் இதுவரை உறவினர்களுடன் பேச அனுமதியளிக்கவில்லை. இவர்களுடன் இத்தாலியில் இருந்து விடுமுறைக்காக சென்ற சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்-முஸ்லிம் வாக்குகளே யார் அதிபராகுவது என்பதைத் தீர்மானிக்கும். சிங்கள வாக்குகள் 50க்கு 50காக இருவருக்கும் இருக்கிறது. ஜே.வி.பி பல துண்டுகளாக உடைந்தால் ரணிலின் வெற்றி நிச்சமாகவே இருக்கும். ஜே.வி.பியின் ஆதரவோடு யாராவது ஆட்சியமைத்தால் ஜே.வி.பி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டை ஆளலாம் என்பதான திட்டம் காரணமாக அவர்களை வர விடாமல் பண்ணுவதற்கு முயற்சிகள் நடை பெறுகின்றன. மகிந்தவுக்கு பின்னால் பலம் வாய்ந்த பாதாள உலக குழுக்கள் இருக்கின்றன. மகிந்தவுக்கு துண்டு துளைக்காத வாகனமும் பேச்சு மேடையும் வாங்கப்பட்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்................ </span> |