12-26-2005, 05:41 PM
திங்கள் 26-12-2005 13:57 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
கேணல் கிட்டு பூங்கா இராணுவத்தினரால் அடித்துடைப்பு. திருவுருவப்படங்கள் தீக்கிரை.
நல்லூர் முத்திரைச் சந்தையில் உள்ள கிட்டுபூங்கா இராணுவத்தினரால் நள்ளிரவு நேரம் அடித்துடைக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு இந்தப் ப+ங்காவில் வைக்கப்பட்டு இருந்த கேணல் கிட்டுவின் திருவுருவப் படம் உட்பட ஏனைய மாவீரர்களினதும் திருவுருவப் படங்களும் முத்திரைச் சந்தையில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் அடித்துடைக்கப் பட்டுள்ளது.
இந்த இடத்தில் வங்கக் கடலில் காவியமாண கேணல் கிட்டு உட்பட ஏனைய பத்துப் பேரினதும் திருவுருவப் படங்களும் வைக்கப்பட்டு இருந்தன. திட்டமிட்ட முறையில் இதனை அடித்துடைத்த இராணுவத்தினர் படங்களை எடுத்துச் சென்று வேறு இடத்தில் வைத்து தீயிட்டுச் சென்றுள்ளார்கள்.
முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள முகாமில் தங்கியுள்ள இராணுவத்தினர் கிட்டு பூங்காப் பகுதிக்குச் சென்ற பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளார்கள். கிட்டுவின் படங்கள் அடித்துடைக்கப்பட்டு இருப்பதை படம் எடுக்க விடாது அப் பகுதியில் இராணுவத்தினர் சுற்றி வளைத்து காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள்.
இவ் சிறுவர் பூங்கா யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமானதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>