Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை பானுமதி மரணம்
#21
<img src='http://www.hinduonnet.com/thehindu/gallery/sg/sg011.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.southindia.com/banu.jpg' border='0' alt='user posted image'>


http://www.southindia.com/banu.htm
Reply
#22
<img src='http://www.southindia.com/banu.jpg' border='0' alt='user posted image'>
<b>நடிகர்-நடிகைகள் அஞ்சலி: நடிகை பானுமதி உடல் மாலை தகனம்</b>

தமிழ் திரை உலகில் அபிநய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் பானுமதி. முடிசூடா கதாநாயகியாக திகழ்ந்த அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற முன் னணி நடிகர்களுடன் நடித்து முத்திரை பதித்தவர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழ் பெற்ற பானுமதி சகலகலாவல்லியாக திகழ்ந்தார். சில படங்களை சொந்தமாக தயாரித்து டைரக்டு செய்து உள்ளார்.

நடிகை பானுமதி தியாகராய நகர் வைத்தியராமன் தெரு வில் வசித்து வந்தார். சர்க் கரை நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வந்த அவர் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. டாக் டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நள்ளிரவு 1.30 மணியளவில் பானுமதி மரணம் அடைந் தார். அவருக்கு வயது 80.

பானுமதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பானுமதியின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினார்கள்.

அவரது உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் கலை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இன்று மாலை பானுமதியின் உடல் பெசன்ட்நகரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பானுமதி. 1939ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். தமிழ் திரை உலகுக்கு 1948ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். அவரது முதல் தமிழ் படம் `ராஜமுக்தி' தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்ததால் தமிழிலும் கதாநாயகியாகவே அறிமுகம் ஆனார். இந்த படத்தை தியாகராஜ பாகவதர் டைரக்டு செய்து அவரே கதாநாயகனாக நடித்தார்.

நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், மலைக்கள்ளன், மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி போன்ற படங்கள் மூலம் அவர் தமிழ் திரை உலகில் பிரபலம் ஆனார். கடைசியாக அவர் நடித்த படம் செம்பருத்தி. இதில் பிரசாந்தின் பாட்டியாக நடித்து இருந்தார். மொத்தம் 350 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

பானுமதி நடிக்கும் படங்களில் அவரது குரல் கணி ரென்று இருக்கும். அவர் நடித்த எல்லா படங்களிலும் சொந்த குரலில் பாடி இருக்கிறார்.

"சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதா'', "மாசில்லா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே'', "மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'', "வாங்க மச்சான் வாங்க உங்க வழிய பார்த்து போங்க'', "அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்'', "ஆஹா.... நம் ஆசை நிறைவேறுமா'', "மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு கிளை பாரமா'' போன்ற பாடல்கள் அவரது குரலுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.

நடிப்பு உலகில் முத்திரை பதித்த பானுமதி பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளை பெற்று இருந்தார். 3 முறை தேசிய விருது பெற்றார். தமிழ் நாடு இசைக் கல்லூரி முதல் வராகவும், திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார். இவரது நடிப்பை பாராட்டி ஆந்திர மாநில அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர். சாலிக் கிராமத்தில் அவர் பரணி ஸ்டுடியோவை அமைத்தார். அதன் உள்ளே தற்போது அவரது மகன் பரணி ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். பேரன் வெங்க டேசன், பேத்தி மீரா. இருவரும் அமெரிக்காவில் டாக்டர்களாக உள்ளனர்.

பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணன் ஏற்கனவே அமெரிக்காவில் மரணம் அடைந்து விட்டார்.

-maalaimalar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)