Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுதந்திரமாம் சுதந்திரம்!
#1
<b>எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும்
ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி-
ஏன் ஒரு கவலை-உனக்கு?
புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா!

உன் கண்களில் ஊசி தைத்துபோனதை
கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா?
என்ன நீ?


சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்-
ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து-

கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே
- அது பொய்யா-?

சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்-
இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா!
சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய்
பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே-

ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் கூடுகட்டி இருக்ககூடும்!

பாம்பின் பட நிழலில் பகுத்தறிவுள்ளவன் தூங்கமாட்டான்!
58 என்ன- 580 ஆண்டுகள் ஆனாலும் என்ன-

சிங்களவன் -வந்து சிறுத்தைகள் வீதியில் நடக்க-
கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்-
காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா!</b>
-!
!
Reply
#2
உங்கள் கவி நன்றாக உள்ளது வர்ணன். மேலும் தொடர்க
<b> .. .. !!</b>
Reply
#3
சிங்களவன் -வந்து சிறுத்தைகள் வீதியில் நடக்க-
கடவுச்சீட்டு அவனுக்கு -வேறொன்று வேண்டும்-
காலத்தை நாம் வென்றே ஆவோம்- நீ நம்பு -தோழா!
**************************************

கவி மிகவும் உணர்ச்சிபுர்வமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து தாருங்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)