Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொடர் கவிதை
#41
பெறுகின்ற தமிழீழம் உயர்வடைய
உயர்ந்துள்ள எம்மவரும் கரம்கொடுப்பார்
கொடுத்திடும் கரங்களை அணைத்து
அணையாத தமிழீழம் அடைந்திடுவோம்

அடைய முடியாது என்றிருந்த தமிழீழம்
தமிழீழ மக்களின் கரம்வரும்
கரம்தனை தரவிரும்பும் இளையவர்கள்
இளமையான தம் அறிவுதனை வழங்கிடுவர்
<b>
...</b>
Reply
#42
<b>அடையமுடியாது
என்று சிலர் சொன்ன தமிழீழம்
அருகில் -மிக அருகில் வந்ததுவே!

குருதி கொண்டொரு
வேள்வி நடத்தினோம்
கொள்கைவீரர் ஈந்த
ஆவியில் வாழ்வு கொண்டோம்..........

நெஞ்சுக் கூட்டுக்குள்
பயந்து - பயந்து....
நித்தம் செத்தழியும்
வாழ்வு தொலைத்து....
ஆலமரமாய் எழுந்து நிற்கிறோம்!

ஆணிவேராம்
அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்! Arrow </b>
-!
!
Reply
#43
ஆணிவேராம் அண்ணன் புகழ் என்றும் பாடுவோம்.
தம்பியாகி அண்ணண் ஆகி இன்று மாமாவாகி நிற்கும் எம் தலைவர் புகழ் பாட
விண்ணும் மகிழ்ந்து மழைத்தூறலால் புகழ
மண்ணும் மகிழ்ந்து அறுவடைகளை தந்திட
பஞ்சம் இன்றி பசி இன்றி
தணைத்தலைவர் காலத்தில் வாழ்கின்ற மகத்தான அனுபவத்தை எண்ணி
கூடி பாடி மகிழ்ந்து விடுவோம்.

Reply
#44
விடுவோம் பானங்கள்
மலரே மதுவே மதுரசமேஎன
கோடைகாலத்துக் கொழுகொழும்பை காண்பதற்று
விடுவோம் கோடிக் கதைகள் விடுவோம்
காதல் என்ற கவலையை விடுவோம்
சாதல் என்ற சுமைகளை விடுவோம்
காலம் என்ற ஆழ்கடல் நீரில்
களிப்பு என்ற படகுகள் விடுவோம்!! 8)
.
Reply
#45
வேண்டா கதைகள் விடுவோம்
வேண்டும் விதைகள் இடுவோம்
காதலை நெஞ்சில் விதைப்போம்
கனவினை மண்ணில் புதைப்போம்
சாதலையும் மகிழ்வாய் ஏற்ப்போம்
காலம் என்ற பெயரில்...காலம்
கடத்துவதை தவிர்ப்போம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
தவிர்ப்போம் என்று மேடையில் குளறி
கவிழ்ப்போம் எனவே வாழ்க்கையை கிளறி
முகிழ்ப்போம் என்ற சிந்தனை கருகி
அழிழ்ப்போம் எனவே பலரும் அருகி.

உணர்வின் பகுதிக் காதலைப் பெருக்கி
வில்லைக்கண்ணால் உருவை பெருக்கி
மனதை அழித்து வாழ்வைத் தொலைத்து
பிறவிப்பயனை கொல்லும் மனிதா! சிந்தி!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#47
காலம் கடத்துவதை தவிர்ப்போம்
கடந்துவந்த பாதைகளை மறவோம்.

களிப்பு என்ற படகுகள் விடுவோம்
கடந்தகால நினைவுகளைத் தொடுவோம்.

காலைக் கதிரவன் வரவும்
கலைந்திடும் இரவுப் பனியும்

புள்ளினம் எழுப்பும் ஒலியும்
புூக்களின் நிசப்த விரிவும்

வண்டினம் எழுப்பும் இசையும்
வீசிடும் வாடைக் காற்றும்

கண்டுநாம் களித்த காலை
என்றுதான் மீண்டும் வருமோ?

Reply
#48
[size=18]
வருமோ....வருமோ....
அவள்- கடிதமென்று
போஸ்மனை....
-எதிர் பார்த்து
நானிருந்த ...காலங்கள் !

மணி -அடிக்கும்
போதெல்லாம்
அவள் போனென்று...
-எதிர் பார்த்து
நானெடுத்த...நேரங்கள் !

கண்- மூடும்
போதெல்லாம்
எதிரில் அவளிருந்து
என் - மனதில்...
போட்டுவைத்த....கோலங்கள் !
<img src='http://img131.imageshack.us/img131/4353/heartthingy8cu.gif' border='0' alt='user posted image'>
Arrow
Reply
#49
வருமே வருமே
வசந்த காலங்கள் வருமே!
வண்ண நிலாக்காலங்களும் வருமே!
போஸ்மனும் வருவார்..
கடிதமும் வரும்..-ஆனால்
காதல் கடிதத்தில் வருமோ!

போன் அடிக்கும்
கையேடுக்கும்..-வாய்
மெளனமாய் பதிலளிக்கும்
அதனால் என்றாலும்
காதல் வருமோ!

தூக்கம் வருமோ!
கனவு வருமே
காதல் நினைவு எழுமே
காலை வருமே
விடியே வேலையும் வருமே
பேசமல் தூங்கிடு
வேலையாவது மிஞ்சட்டும்
வேண்டாத நினைவை
தலாட்டி தூங்க வை..
வந்து சேரும் நீ வருமோ!?
என்றவை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
வருமோ என்றவை
என்று வரும்...?

போனெடுக்கும்
நேரமெல்லாம்...
யுனிற் ஓடும்-<span style='font-size:25pt;line-height:100%'>ஆனாலும்
அவள் குரல் இனிக்கும்!
எங்கள் இதழ் சிரிக்கும்...
அந்தநேரம் பிடிக்கும்!


போஸ்மன் வரும்
போதெல்லாம்...
பில்லு வரும்-ஆனாலும்

அவள் ஓலை வரும்....
நாளைப் போல
எந்த நாள் வரும்...?


இன்றுவரும்-நாளைவரும்..
காலை வரும்..பின்
வேலை வரும்....
கையில் காசு...எப்பவரும்....?

இது போல- நாளை
-என்றும் வரும்!! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </span>

<img src='http://img327.imageshack.us/img327/5598/1370943rv5rw.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
வந்து வந்து மறையும் கனவுகளும்
சொந்தமாக உள்ள நினைவுகளும்
சொந்த மண்ணில் வாழ்ந்த எண்ணங்களும்
வந்த மண்ணில் அவலமும்
மனக் கண்ணதில் என்றும் வரும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

முதலில் ஏதோ பிழை நடந்து விட்டது அதனால் கவிதை பதியப்பட வில்லை. சுட்டிக காட்டிய கெளரி பாலனுக்கு நன்றிகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
<b>மனக் கண்ணதில் என்றும் வரும்...........</b>

இனத்தின் முகமதில்
எதிரிகள் போடும் எச்சம்
முழுதாய் கழுவ............
என்றொரு நாள் ......
முடிவாய் வரும்?

பயிர் வளர்ந்து போச்சு...
கதிரும் ...கனம் கொண்டதாய் ஆச்சு...........
அரிவாள் கையில் இருந்தும் ...........
அறுவடைக்கு திகதி இன்னும் காணோம்.......
எதனாலோ? Arrow
-!
!
Reply
#53
<span style='font-size:25pt;line-height:100%'>
எதனாலோ..?
தமிழன்னை
தவிக்கின்றாள்...

களத்தில்
போட்ட விதை
கதிராகிப் போனதுவே!

கதிரறுக்கும்
வாள்- என்ன
துருப்பிடித்து
போனதுவோ...?

புலம் பேர்ந்து
வந்ததினால்...
நாம்-இங்கு
புலம்புகின்றோம்...


தமிழன்னை
தவிக்கின்றாள் Arrow
</span>
Reply
#54
தமிழன்னை தவிக்கின்றாள் ஆனால்
தமிழ்மறவர் சலித்துவிடவில்லை.
ஏதிலிகளின் கோழைத்தனத்தை
ஏழைகளுக்கு இழைத்த கொடூரங்களை
எண்ணிஎண்ணிக் குமுறுகின்றார்.
வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று
போர்தர்மத்தை மீறமுடியாமல் தவிக்கின்றார்.
புலம் பெயர்ந்தோர்களும்
தினம்தினம் கலங்குகின்றோம்.
நிலத்தில் நடப்பவைகண்டு
நெஞ்சு கொதிக்கின்றோம்.
கோர தாண்டவங்கள் தலைவிரித்தாடுகையில்
நீதி நியாயங்கள் ஓடி ஒளிந்தனவா?

Reply
#55
நீதி நியாயங்களை - இனியும்
தேடி பயனிருக்கா?
அழகாய் வாழ்ந்தாய்...

உன் தோப்பில் சிங்களன்
மூட்டிய தீ -
பாத நகம் வரை வந்தாச்சு
இனியும் பார்த்துக்கொண்டா இருப்பாய்?

காலம் வருமென்று காத்திரு.........
காலனின் கையிடை - உன்
கனவுகள் - சரணடைகிறது கவனி - !
ஏதும் செய் - இனியாவது! Arrow
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)