<span style='font-size:25pt;line-height:100%'>யோகாசனம்</span>
![[Image: yoga.jpg]](http://images.google.ch/images?q=tbn:nws-Vnz0brgC:galiciaonline.es/salud/yoga.jpg)
யோகா என்றால் என்ன?
"யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது.
யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.
யோகாவின் தந்தை எனக் கூறப்படும் பதஞ்சலி "யோக சூத்திரங்கள் என்ற நுாலில் யோகாவிற்கு 195 வழிகாட்டி நெறிகளை வழங்கியுள்ளார்.
அவை ஒழுக்கம் நிறைந்த உயர் வாழ்வுக்கு அடிப்படையாகும். அத்துடன் யோகாவுக்குள் அறிவியலும் இணைந்துள்ளது.
[size=14]பதஞ்சலி தன்னுடைய யோகா சூத்திரங்களில் 8 பாகங்ளைக் குறிப்பிட்டுள்ளார்.
அவை:-
1.யமம்.
2.நியமம்.
3.ஆசனம்.
4.பிரணாயாமம்.
5.பிரத்தியாஹாரா.
6.தாரணா.
7.தியானம்.
8.சமாதி.
யோகாவின் அடிப்படை இதுதான்.
இது தவிர
ஹத யோகா
ஐயங்கார் யோகா
அஸ்தங்கா யோகா
சிவானந்தா யோகா
குண்டலினி யோகா
பவர் யோகா
கலையம்ச யோகா
என வெவ்வேறு கால கட்டங்களில் விஞ்ஞான ரீதியான மாறுதல்கயோடு மாற்றம் கண்டு வளர்ந்து வருகிறது.
இங்கே தியான முறையிலான யோகா பயிற்சிகளை விட இலகுவாக செய்யக் கூடிய
<img src='http://www.bangalorenet.com/health/fitness/images/yoga.jpg' border='0' alt='user posted image'>
சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சி முறையிலான யோகாசனங்களை முறையான புத்தகங்கள் அல்லது தெளிவான விளக்கத்துடனான கட்டுரைகளை வாசித்து செய்யலாம்.
<img src='http://www.yarl.com/forum/files/sur.ajee.jpeg' border='0' alt='user posted image'>
இவை பத்மாசனம் போன்ற கடின ஆசனங்களை செய்ய முயன்று , அந்தக் கலையையே வெறுக்க வைக்கக் கூடிய ஆசனங்களல்ல.
மிக மிக இலகுவானவை.
எதையும் நாம் பயமுறுத்தி வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டதால்,எதையும் செய்ய அஞ்சுகிறோம்.
எதையாவது தொடங்கு முன்பே எதிர்மறை விளைவுகளையே சொல்கிறோம்.
மனித வாழ்வுக்கு தன்னம்பிக்கை மிக மிக அவசியம்.
அதை யோகாசன பயிற்ச்சி தருகிறது.
எனவே கடினமில்லாத,
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செய்யக் கூடிய இலகுவான ,
எதுவித பாதிப்புகளையும் உருவாக்காத சில யோகாசன உடற் பயிற்சிகளை
யோகாசன குரு: பெங்களுர் சுந்தரம் அவர்களது அனுமதி பெற்று எழுகிறேன்.
இதற்காக பெரிய இடவசதி தேவையில்லை. காலையிலோ - மாலையிலோ 10 - 15 நிமிடங்கள் செலவழிக்க முடிந்தால் அதுவே போதுமானது.
![[Image: karnataka]](http://images.google.ch/images?q=tbn:9aYdX9gcfNgC:www.aimforseva.org/karnataka)
வாழ்க வளமுடன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
![[Image: yoga]](http://images.google.ch/images?q=tbn:ex2LTFDAbcgC:www.holisticescapes.com/yoga)
Before we get to the exercises, let us form an opinion about what it really is we are doing, or trying to do, when we are bending and stretching yoga style
-AJeevan