<b>இடியென செய்தி வருகிறதே!
- தமிழகத்திலிருந்த திராவிடன் -
(தமிழகத்திலிருந்து அண்மைய தாயக நிலைகேட்டு வரைந்தனுப்பிய கவியிது)</b>
கல்முனைகளை
தலையணையாய் வைத்து
விடிபொழுதெல்லாம்
போர்முனைகளை நெஞ்சில்தாங்கி....
களமாடிய கரிகாலா!
உனை
கலங்கவைக்கிறார்களாமே!
திடுமென
இடியென செய்தி வருகிறதே!
ஓலமிடும்
ஓநாய்களின் ஊடகங்களின்
ஒப்பாரிகள் ஓயாமல் அலறுகின்றனவே!
சமுத்திரத்து இடைவெளியால்
சதிராடிகளை
சதிராட முடியாமல் தவிக்கிறேனே!
கதிரைப் பித்தர்கள்
புூமியெங்கும்
களப்புலிகளை காற்றாட விட்ட
கிழப்புலியே!
எவனிடமோ
சறுக்கிக் கொண்டு
கிறுக்குத்தட்டியவன்
எவனய்யா!
பாவிகளே!!
துரோகிகளே!!
அட
காக்கைவன்னியர்களே!
உங்களின்
கரைதல் மொழிகளா
துவக்குகளுக்கே மொழி கற்பித்த
அந்த வல்வைப் பெருமகனின்
பிள்ளைகளை கலங்கவைக்கும்?
தீவகம் முதல் சிங்கள எல்லைவரை
ஆண்டுவரும்
எங்கள் எல்லாள வேந்தனை
எதிர்த்து ஒரு குரலா!
கிட்டண்ணாக்களை பலிகேட்ட
எட்டப்பர்கள் ஒழியவேயில்லையா!
ஏய்ய்...
வால்சுழற்றுதுகளே!
வாள்சுழற்றும் வேங்கையிடம்
வாலாட்டிக் கொண்டதாலேயே
நீங்கள்
வரலாறாகிவிடமாட்டீர்!!
படையணிப் பொடிசுகளுக்குமட்டுமல்ல...
கடைதெரு வணிகன் முதல்
குடிசைமண் சுவாசிக்கும்
கூழ்தமிழன் வரைக்கும்
அவர்
எம் மூச்சு...
அந்த
மீசை மழித்த முகம்பார்த்து
அதற்கொரு இலக்கணம் சொல்வோம்!
அந்த
மீசை வளர்த்த முகம்பார்த்து
அதற்கொரு இலக்கணம் சொல்வோம்!
அந்த
அமைதித் தவம்பார்த்து
அதற்கொரு இலக்கணம் சொல்வோம்!!
அவர்
எங்களின்
நன்னு}ல் அல்லவா!
அவர்
எங்களின்
தொல்காப்பியம் அல்லவா!
அவர்
தமிழனின் புறநானு}ற்றுச்
செயல்வடிவம் அல்லவா?
தமிழ்ப்பெருமகனே!!
உம்
தடந்தோள்தனில்
கிடக்கும் தசைப்பிண்டமய்யா நாம்!
உன்னுள் உறைந்துகிடக்கும்
முறுக்கேறிய நரம்புகளப்பா நாம்!!
நீர்
எம் மூச்சு..
நீர்
எம் தேசம்...
நீர்
எம் மொழி....
நீர்
எம் இனம்...
நீர்
எம்போர் முரசு...
வாழ்தல் உம்மோடுதானய்யா!
யாம் வீழ்ந்தேபோயினும்
உம்திருமுகம் சுடராய் நின்றிட
எதிரி முகாமாயினும்
துரோகி முகமாயினும்
து}ளாக்கித்தான் சாவோமய்யா!
கடல்தாண்டியும்
உன்பொடியன்கள்
களமாடுவோம்!
அரசுகள் மறைக்கலாம்..
சட்டங்கள் சல்லையிடலாம்...
இங்கே ஏகலைவன்கள்
இருக்கிறோம்!
புதியதாய் இன்று
படையணி பல கட்டலாம்...
ஏங்கிக் கிடக்கிறதய்யா
ஏகலவைன் அணி
உமது உத்தரவுக்காய்...
ஏங்கிக் கிடக்கிறதய்யா
ஏகலவைன் அணி
உமது உத்தரவுக்காய்...
_ Dravidan, TamilNadu
www.Tamilwebradio.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>