10-06-2004, 01:34 PM
சிறுபான்மையினர் பலத்தைச் சிதைக்க!
வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை அவசியம் என்ற சட்ட மூலத்தை அரசாங்கம் விரைவில் அமுலாக்கம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றது. எதிர்வரும் ஏழாம் திகதி இச்சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கத் தரப்பு குறியாக இருப்பதாக அரச தரப்புத் தகவல்களில் இருந்து உணரக்கூடியதாகவுள்ளது.
ஐ.ம.சு முன்னணி அரசாங்கம் இச்சட்ட மூலத்தில் தீவிர அக்கறை காட்டுவதென்பது ஒன்றும் தேர்தலில் மோசடிகள் இடம் பெறாமல் தடுத்து விடுவதற்கோ அன்றி சனநாயக hPதியில் அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அரசாங்கத்தின் ஒரே இலக்கு சிறுபான்மை இனங்களின் அரசியற் பலத்தைச் சிதைவுறச்செய்வதே ஆகும்.
வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை அவசியம் என்பது சிங்களவரைப் பொறுத்து பெரியளவிலான பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் பெரும் பகுதியினர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அவ்வாறு பெற்றுக்கொள்ளாது போனாலும் விரைவில் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.
ஆனால் சிறுபான்மையினரைப் பொறுத்து குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தே இது பாரிய கேடு விளைவிப்பதாகவும், அவர்களின் சனநாயக hPதியான உரிமைகளை மறுப்பதாகவும் அமையத்தக்கதாகும். ஆனால் இது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல இதனால் அடையாள அட்டை அவசியம் என்பது புரிந்து கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல.
மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்து பிரஜாவுரிமை பெறுதலில் இருந்து தேசிய அடையாள அட்டை பெறுதல் வரையில் நெருக்கடி மிக்கதொன்றாகவே உள்ளது. அதாவது இவை தொடர்பான ஆவணங்களை அவர்கள் தேடிக்கொள்வதென்பதும், அதன் மூலம் அடையாள அட்டைகளைப் பெறுதல் என்பதும் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இன்றும் உள்ளது. ஆகையினால் இதனைக் காரணம் காட்டி வாக்களிக்கத் தடைசெய்தல் என்பது அம்மக்களின் சனநாயக உரிமையை மறுப்பதற்குச் சமமானதாகும்.
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தும் இது குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தத்தக்கதாகும். கடந்த இரண்டு தசாப்த காலத்தில் தமிழ் மக்களின் தாயகத்தில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்து விட்ட போரினால் மக்கள் பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வந்தது. பல தடவைகள் இடப்பெயர்வுகளைச் சந்திக்க வேண்டியும் வந்தது. இவற்றின் காரணமாக தேசிய அடையாள அட்டைகள், பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட முக்கிய ஆவணங்களும் தொலைந்து போயும் காணமற் போயும் உள்ளன. இவற்றை மீளப் பெறுதல் என்பதும் இலகுவானதாக இல்லை. இந்நிலையில் தேசிய அடையாள அட்டை கோருவதென்பது அவர்களின் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகும்.
இதேபோன்று வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களும் இச்சட்டத்தின் மூலம் பாதிப்பிற்குள்ளாகும் நிலையியே உள்ளது. இவர்களும் கடந்த இரு தசாப்த காலமாக யுத்த பிரதேசத்திற்குள் வாழ்ந்தமை காரணமாக தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை முழுஅளவில் கொண்டுள்ளவர்களாக இல்லை.
இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கத் தேசிய அடையாள அட்டை அவசியமென்ற அரசின் சட்டமூலமானது நடைமுறையில் சிறுபான்மை மக்களின் வாக்குரிமைகளைப் பறிக்கும் அன்றிக் கட்டுப்படுத்தும் ஒன்றாகவே இருத்தல் முடியும்.
சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பொறுத்து சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிப்பதென்பது என்றும் எரிச்சல் ஊட்டும் விடயமாகவே இருந்து வருகின்றது. ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இத்தகையதொரு சூழ்நிலையை உருவாக்கியதெனினும் இதனை ஒழித்து விடுவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றனர். இதற்கான முதற்படியாகவே வாக்களிப்பிற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்குத் தமிழ் தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும் அரசாங்கம் இதனைக் கருத்திற்கொள்ளப்போவதில்லை. இத்தகையதொரு நிலையே தற்பொழுது இ.தொ.கா விற்கும் ஏற்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்தில் தமது திருத்தம் இடம்பெறவேண்டும் என இ.தொ.கா வலியுறுத்திய போதிலும் அரசாங்கம் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
இ.தொ.கா அரசாங்கத்தில் பங்கேற்பினும் இத்தகையதொரு அவலம் ஏற்பட்டுள்ளமைக்கு இ.தொ.கா நிபந்தனையற்ற விதத்தில் சரணாகதி அடைந்தது போன்று அரசாங்கத்தில் பங்கேற்க முடிவு செய்ததே ஆகும். ஆனால் ஆட்சியில் பங்காளிகள் என்ற hPதியில் இச் சட்டமூலம் நிறைவேற்ற இ.தொ.கா ஆதரவு அளிக்குமேயானால் அது அக்கட்சியைப் பொறுத்து தற்கொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.
----------------------------------------
தேர்தல் வாக்களிப்பின் போது அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்படுவது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அடையாள அட்டைகள் கிடைக்கும் வரை தோட்டப்பகுதி மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தமது ஆள் அடையாளத்தை கிராம சேவகர் மற்றும் தோதல் ஆணையாளரால் நியமிக்கப்படும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரின் பரிந்துரையின் பேரில் வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்தலாம் என்ற திருத்தம் இன்று கட்சி தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கான திருத்தத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பி சந்திரசேகரன் முன்வைத்தார். இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன தமது ஆதரவை வழங்கின. இதற்கு முதலில் ஜே வி பியும் ஜாதிக ஹெல உறுமயவும் எதிர்ப்பை வெளியிட்ட போதும் பின்னர் அதற்கு உடன்பட்டன.
அதேநேரம் தேர்தல் ஆணையாளர் நாட்டில் அனைவருக்கும் அடையாள அடடைகள் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தும் வரை இந்த முறையை பின்பற்றுவது எனவும் அதன் பின்னர் தேசிய அடையாள அட்டையை தேர்தல் வாக்களிப்பின் போது கட்டாயமாக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவது எனவும் இன்றைய கூட்டத்தில் கட்சி தலைவர்கள் தமது இணக்கத்தை வெளியிட்டனர்.
-----------------------------------
ஜே வி பியும், ஜாதிக ஹெல உறுமயவும் ஜனநாயகத்தினுள் வந்துதானே தேர்தலில் போட்டியிட்டார்கள்... ஒருவேளை மறந்துபோனார்களோ என்னவோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->