Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='color:blue'>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 9
_ பெ.கணேஷ் _
தமிழ் போன வாரம் உங்களுக்கு உதவி இயக்குனர்களோட கஷ்டம் தெரிஞ்சது இல்லையா? இந்த வாரம் அசிஸ்டெண்ட் கேமராமேன்களோட கஷ்டத்தைப் பத்தி சொல்றேன்.
தமிழ் : அதோ கேமராவுக்கு பக்கத்துலயே இரண்டுபேர் இருக்காங்களே அவங்கதான் கேமரா அசிஸ்டெண்டா?
<img src='http://www.kumudam.com/cinema/Camera2.jpg' border='0' alt='user posted image'>ஆமா அவங்க கேமரா அசிஸ்டெண்ட் மட்டும்தான். அசிஸ்டெண்ட் கேமராமேன்கள் இல்லை. என்ன குழப்பமா இருக்கா? அவங்க கேமராவோட சூட்டிங்கிற்கு வர்றவங்க. புரியும்படி சொல்லணும்னா கேமராவிற்கு பாதுகாப்பே அவங்கதான் கேமராக்களை வாடகைக்கு விடற அவுட்டோர் யூனிட்ல இவங்க வேலை பார்ப்பாங்க. அந்த அவுட்டோர் யூனிட் எந்த படத்திற்கு, கேமராவை அனுப்பினாலும் இந்த இரண்டு பேர்தான் ஷடை்டிங் ஸ்பாட்டுக்கு கேமராவுடன் செல்வார்கள். ஷடை்டிங் முடிந்து பொறுப்பாக மீண்டும் கேமராவை கொண்டு வந்து அவுட்டோர் யூனிட்டில் ஒப்படைத்துவிட்டுதான் வீட்டுக்குச் செல்வார்கள்.
ஷடை்டிங் ஸ்பாட்டில், ஒரு கேமரா அசிஸ்டெண்ட்.. கேமராவின் அருகே இருந்து பாலோ ஃபோக்ஸ் பார்ப்பார்.
அதாவது ஒரு டேக்கில் லாங் ஷாட்டிலிருந்து குளோசப் செல்வதாக வைத்துக்கொள்வோம். அப்படி குளோசப் போவதென்றால் டேக் எடுப்பதற்கு முன்பாக சூம்மிலிருந்து குளோஸ் சென்று அந்த நடிகரின் கண்களை மையப்படுத்தி லென்ஸை போகஸ் அமைத்து _ அதை கேமராவின் அப்ரச்சர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிக்கு மேலே வெள்ளை நிற பென்சிலால்
குறித்துக்கொள்வார்கள்.
இப்போது காட்சியை படம்பிடிக்கும்போது... கேமராமேன் மெல்ல லாங் ஷாட்டிலிருந்து குளோசப்க்கு போகப் போக... அந்த கேமரா அசிஸ்டெண்ட் போகஸை மாற்றிக்கொண்டே வந்து அவர் பென்சிலில் குறித்து வைத்த இடத்தில் சரியாக நிறுத்துவார். இதனால் அந்த காட்சி தெளிவாக அமையும்.
<img src='http://www.kumudam.com/cinema/lense_anim.gif' border='0' alt='user posted image'>
இப்படி சூம் லென்ஸ் உபயோகிக்கும்போது அவருக்கு இப்படி பாலோ ஃபோகஸ் வேலை இருக்கும். அடுத்து 40_75_100 என நார்மல் லென்ஸ்களை உபயோகிக்கும்போது, கேமராவிற்கு நடிகர் நிற்கும் இடத்திற்குமாக இடைவெளியை டேப்பினால் அளந்து அதற்கு ஏற்றவரை அப்ரச்சரை சரிபடுத்த உதவுவார்கள்.
இதில் இன்னொரு கேமரா அசிஸ்டெண்ட்டின் வேலை என்று பார்த்தால் _ ஷடை்டிங்கின்போது ஒவ்வொரு ஷாட்டிற்கும் கேமரா இடம் மாற அங்கங்கே கொண்டு செல்வது அவர் வேலை. 435 கேமரா எனில் அதோடு மானிட்டரும் சிடி ரிக்கார்டிங் அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அப்படி சிடி மானிட்டர் உபயோகிக்கும்போது ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும் வேலையையும் மானிட்டரையும் அவர் கவனித்துக் கொள்வார்.
தமிழ் : ஓ... இப்ப புரிஞ்சுடுச்சு கேமரா கூடவே வர்றவங்க கேமரா அசிஸ்டெண்ட். அப்படின்னா கேமராமேன்களுக்கு என்ன வேலை?
தமிழ் சினிமாவில் அசிஸ்டெண்ட் கேமராமேன்கள் நிலையும் கடினமானதுதான். இருந்தாலும் உதவி இயக்குனர்களின் வேலையை விட இவர்கள் வேலையை பரவாயில்லை எனலாம்.
எப்படியெனில் உதவி இயக்குனர்கள்கூட சமயங்களில் கேமராமேனின் முகச்சுழிப்புக்கு ஆளாகுவார்கள். ஆனால் கேமரா அசிஸ்டெண்ட்களை இயக்குனர்கூட மரியாதையாகத்தான் நடத்துவார்.
<img src='http://www.kumudam.com/cinema/Camera1.jpg' border='0' alt='user posted image'>
ஒரு படத்திற்கு கேமராமேன் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்து ஐந்து அல்லது ஆறு உதவி கேமராமேன்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த், ஜீவா போன்ற பெரிய கேமராமேன்களிடம் ஐந்து ஆறு பேர் உதவியாளர்களாக வேலை செய்வார்கள்.
உதவி கேமராமேன்களில் முதல் உதவியாளர் இரண்டாவது என பாகுபாடு கிடையாது. ஆனால் சீனியர் என்றால் அவர் ஆபரேடிவ் கேமராவான சில சமயங்களில் வேலை செய்வார்.
அதாவது பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் இரண்டு கேமராக்கள் உபயோகப்படுத்தும்போது கேமராமேன் ஒரு கேமராவையும், முதன்மை கேமரா அசிஸ்ªண்ட் ஒரு கேமராவையும் ஆபரேட் செய்வார்கள்.
அதேபோல் சீனியர் கேமரா அசிஸ்டெண்டுகள் என்கிறபோது ஒரு சில முக்கியமான காட்சிகளின்போது லைட்டிங் போன்றவற்றை கவனித்துக்கொள்வார். அதோடு முதல் கேமரா அசிஸ்டெண்ட் லைட்டோட அளவைச் சொல்கிற ஒளிஅளவுமானி என்கிற மீட்டரில் வெளிச்சம் எவ்வளவு குறைவாக இருக்கிறது? எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதை சொல்ல கேமராமேன் அதற்கு தகுந்த மாதிரி அங்கிருக்கும் வெளிச்சத்திற்கு தகுந்தவாறு அப்ரச்சரை மாற்றியமைப்பார்.
தமிழ் : அப்ரச்சர் என்பது என்ன? கேமராவின் அப்ரச்சரின் உபயோகம் என்ன?
<img src='http://www.kumudam.com/cinema/aperture.jpg' border='0' alt='user posted image'>
‘‘ஒரு கேமரா இயக்கும் செயல் என்பது இரண்டு விஷயங்களில் அடங்கியிருக்கிறது. ஒன்று அப்ரோச்சர் இன்னொன்று கேமரா ஸ்பீடு.’’
இதில் அப்ரச்சர் என்பது ஒளியை கேமராவிற்குள் எடுத்துச் சொல்லும் துளையாகும்.
அதாவது அப்ரோச்சர் பெரிதாக, பெரிதாக அதிகமான ஒளி கேமராவவிற்குள்ளே செல்லும். குறைய குறைய குறைவான ஒளி கேமராவிற்குள்ளே செல்லும்.
இந்த அப்ரச்சரையும், வேகத்தையும் கேமராவில் உபயோகப்படுத்துகிற பிலிமின் ஒளி கிரகிக்கும் தன்மையை பொறுத்து மாற்றியமைக்க வேண்டும்.
<img src='http://www.kumudam.com/cinema/apertureillus.jpg' border='0' alt='user posted image'>
அதாவது ஏஎஸ்ஏ 200 என்கிற பிலிம் என்றால் அந்த பிலிமிற்கு தகுந்தவாறு அதனுடைய ஒளி கிரகிக்கும் தன்மைக்கு தகுந்தவாறு அப்ரச்சரை திறந்து வைக்கவேண்டும். அப்போதுதான் ஒளியின் அடர்த்தி அதாவது டென்சிட்டி சரியாக இருக்கும். அப்படியில்லாமல் ஒளி அதிகமாக கேமராவிற்குள் சென்றால் ஓவர் எக்ஸ்போஸ் ஆகி படம் வெளீர் என ஆகிவிடும். அதேபோல் குறைவான ஒளி கேமராவிற்குள் சென்றால் அந்த பிலிம்க்கு தகுந்த ஒளி கிடைக்காததால் அண்டர் எக்ஸ்போஸ் ஆகி படம் கறுப்பாகிவிடும்.
தமிழ் : கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க?
<img src='http://www.kumudam.com/cinema/Camera4.jpg' border='0' alt='user posted image'>
அதாவது தமிழ். இந்த அப்ரச்சரும், ஸ்பீடுதான் கேமரா இயக்கத்தின் முக்கிய காரணம்னு சொன்னேன் அல்லவா.. ஸ்டில் கேமராக்களில் நாம் ஒளியைப் பற்றி, பிலிமைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பிலிமிற்கு தகுந்தவாறு ஸ்பீடை கூட்டவோ _ குறைக்கவோ முடியும். ஆனால் சினிமாவில் அப்படியில்லை; ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்கிற வேகத்தில்தான் இயக்கவேண்டும். ஏனென்றால் தியேட்டர் புரொஜக்டர்களில் ஒரு நொடிக்கு 24 பிரேம்கள் என்பது நிர்ணயிக்கப்பட்ட வேகம் ஆகும். அதனால் கேமராவில் அதே வேகத்தில்தான் இயக்கவேண்டும்.
வேகம் என்பது மூவி கேமராவில் நிலையானது என்பதால் நாம் ஸ்பீடை மாற்ற முடியாது. அதற்கு பதில் ஒளியின் அளவிற்கு தகுந்தவாறு அப்ரச்சரை மாற்றியமைக்கலாம் என்பதால் ஒளியின் அளவை சொல்லும் மீட்டரின் மூலம் அங்கே இருக்கும் ஒளியை அறிந்து, அந்த ஒளிக்கு தகுந்தவாறு அப்ரச்சரை மாற்றுவார்கள்.
தமிழ் : டெப்த் ஆப் பீல்டுனு சொல்றாங்களே அது என்ன?
<img src='http://www.kumudam.com/cinema/mission.gif' border='0' alt='user posted image'>
கேமராவின் அருகிலோ, தூரத்திலோ பிரேமில் துள்ளியமா தெரிகிற பகுதியைத்தான் டெப்த் ஆப் பீல்டு என்பார்கள்.
இந்த தூரம் அதிகம், குறைவு என்பது எப்படி மாறுபடும் தெரியுமா? அப்ரச்சரை குறைக்க குறைக்க அதாவது துளையின் அளவை சிறிதாக்க, சிறிதாக்க டெப்த் ஆப் பீல்டு என்பது அதிகமாகும். அதாவது துள்ளியம் அதிகமாகும். அப்ரச்சரின் அளவு பெரிதாக, பெரிதாக அதாவது துளையின் அளவு பெரிதாக, பெரிதாக, டெப்த் குறையும்.
அப்ரச்சரில் 1.4, 2, 2.8, 4, 5. 6, 8, 11, 16, 22 என பல்வேறு எண்களை குறிக்கப்பட்டிருக்கும். அப்ரச்சரின் அதிகபட்ச பெரிய துளையாக 1.4ம் குறைந்தபட்ச துளையாக 22ம் இருக்கும். அதேபோல் கேமராவின் அப்ரச்சரின் அளவை பொறுத்துதான் கேமராவின் வேகம் நிர்ணயிக்கப்படும். அப்ரச்சர் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி கேமரா வேகமும் அதிகமாகும்.
தமிழ் : சரி கேமரா ஸ்பீடுங்கிறது என்ன?
<img src='http://www.kumudam.com/cinema/Camera3.jpg' border='0' alt='user posted image'>
கேமரா இயக்கும் வேகம் என்பது கேமராவில் பிலிம் பதிவாகும் வேகத்தை குறிப்பதாகும். உதாரணத்துக்கு பிலிம் கேமராவில் 1/48 ஃப்ரேம் என்கிற வேகத்தில் அதாவது ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம்கள் என்கிற வேகத்தில் படம் பதிவாகிறது.
இது நிலையான வேகம் ஆனால் ஸ்டில் கேமராவில் அப்படியல்ல அங்கே நாம் வேகம் கூட்டவோ குறைக்கவோ முடியும். உதாரணத்திற்கு நிலையான ஒரு பொருளை படம்பிடிக்க 1/60 ஸ்பீடு போதுமானது அதே நடந்துபோகும் ஒரு நபரை படம்பிடிக்க 1/125 ஸ்பீடு தேவைப்படுகிறது. சைக்கிள் ஓட்டும் நபரை படம்பிடிக்க 1/250 ஸ்பீடும், காரில் போகிறவரை படம்பிடிக்க 1/500 ஸ்பீடும் தேவைப்படுகிறது.
ஆனால் சினிமா கேமராவிற்கு எல்லாமே 1/48 ஸ்பீடுதான். அதனால் அப்ரோச்சர் மூலமாக மட்டுமே சினிமாவில் டெப்த் ஆல் பீல்டை அதாவது துள்ளியத்தை கொண்டுவர முடியும். அதற்குதான் உதவி கேமராமேன்கள். ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஒளியின் அளவைப் பார்த்து அதற்கு தகுந்த மாதிரி அப்ரச்சரின் அளவை கூட்டியோ, குறைத்தோ படம்பிடிக்கிறார்கள்.
என்ன தமிழ் இப்ப ஓரளவிற்கு கேமராவின் இயக்கமும் உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்தவாரம் எடிட்டிங் பற்றி பார்க்கலாம்.</span>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='color:brown'><b>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 10</b>
_ பெ.கணேஷ் _
<b>எடிட்டிங்</b>
சினிமாவின் முக்கியமான டெக்னிக்கல் பகுதி எடிட்டிங். ஒரு படம் விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எடிட்டிங்.
தமிழ்: கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஒரு எடிட்டரோட வேலைங்கிறது என்ன? எடிட்டிங் எப்படி செய்யப்படுது?
<img src='http://www.kumudam.com/cinema/edit1.jpg' border='0' alt='user posted image'>
அதாவது தமிழ் எடிட்டர்ங்கிறவர் பாதி இயக்குனருக்கு சமம். அதாவது சூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் ஷாட் வச்சி எடுக்கப்படுகிற காட்சியை கோர்வையாக தொகுப்பவர்தான் எடிட்டர். இது முதல் ஷாட் இது இரண்டாவது ஷாட்டுன்னு மிக நேர்த்தியா லேக் வராம... அதாவது தொய்வில்லாம விறுவிறுப்பாக காட்சியை நகர்த்துவது எடிட்டரோட திறமையில இருக்கு.
முதல்ல அவரோட வேலை எப்படி ஆரம்பிக்குன்னு பார்ப்போம். ஷடை்டிங்ல ஒவ்வொரு டேக்கிலும் கிளாப் ஃபோர்டு அடிக்கப்படுது இல்லையா.. அந்த கிளாப் போர்டுல இருக்கிற எண்களை வச்சி முதல்ல நெகடிவ் கட்டிங் நடக்கும். அதாவது சூட்டிங்ல எக்ஸ்போஸ் பண்ணப்பட்ட ஃபிலிம் ஓய்விற்கு சென்று நெகட்டிவ்வாக மாற்றப்பட்டு எடிட்டர்கிட்டே வரும்.
<img src='http://www.kumudam.com/cinema/edit3.jpg' border='0' alt='user posted image'>
அங்கே எடிட்டிங் அசிஸ்டெண்ட்ஸ்_அசிஸ்டெண்ட் டைரக்டர் கொடுத்த ஓ.கே. டேக்ஸ் நோட்சைப் பார்த்து நெகடிவ்வில் உள்ள கிளாப் போர்டு நெம்பரைக் கொண்டு இது ஓ.கே. ஆன டேக் என்று உணர்ந்து அதை தனித்தனியா வெட்டி நெகட்டிவை சுருட்டி வைப்பாரகள். பிறகு வரிசை எண்படி முதல் ஷாட் இரண்டாவது ஷாட் என ஒவ்வொரு நெகட்டிவையும் சலோடேப் உதவியால் ஒட்டி வரிசைப்படுத்துவார்கள்.
இப்படி சீன்கள் வாரியாக வரிசைப்படுத்திவிட்டு பிறகு முதல் சீன், இரண்டாவது சீன் என வரிசைப்படுத்துவார்கள். இப்படி வரிசை படுத்திய நெகட்டிவ் கட்டில் முழுமையான எடிட்டிங் ஆகாது. அதனால் அந்த நெகட்டிவை லேப்பிற்கு அனுப்பி பாஸிடிவ்வாக மாற்றுவார்கள். அந்த பாஸிடிவ் ஃபிலிமை மூவியாலயா என்கிற மெஷினில் ஓடவிட்டு ஷார்ப் கட்டிங் செய்வார்கள். இப்போது இந்த ஷார்ப் கட்டிய எடிட்டிங்கிற்கு டைரக்டர் கண்டிப்பாக தேவைப்படுவார். டைரக்டரின் ஆலோசனைப்படி ஒரு சீனை குறைப்பது. நீட்டுவது என முடிவு செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு சீனில் தேவையில்லாமல் இரண்டு குளோசப் இருக்கிறது என டைரக்டர் நினைத்தால் அதை தூக்கிவிடுவார். அதேபோல் குறிப்பிட்ட இடத்திற்கு குளோசப் வேண்டுமென்றாலும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கிற குளோசப் ஷாட்டை அங்கே கொண்டு வருவார்.
பொதுவாக எடிட்டிங்கில் ஒரு செகண்டுக்கு 24 பிரேம்கள் என்கிற கணக்கிலேயே எடிட்டிங் செய்வார்கள். எடிட்டரோட முக்கிய வேலை என்று பார்த்தால் இந்த ப்ரேம்களின் கணக்கை மனதில் வைத்துக்கொண்டுதான் எடிட் செய்வார்கள். அடுத்து மேட்ச்கூட மிக முக்கியமாக கவனிப்பார்கள். மேட்ச் கட் என்பது ஆக்ஷன் கண்டிஷனுட்டியை பொறுத்தது. அதாவது முதலில் ஒரு லாங்ஷாட் வருகிறது. அதில் ஹீரோ தலைக்கு மேலே கையை தூக்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்தது குளோசப் ஷாட் என்றால் அது லாங்ஷாட்டோடு மேட்ச் ஆகிற வகையில் குளோசப்பில் அந்த கையின் பொஷினைப் பார்த்து மிகச் சரியாக பொறுந்தி வருகிற மாதிரி எடிட்
பண்ணுவார்கள்.
<img src='http://www.kumudam.com/cinema/edit2.jpg' border='0' alt='user posted image'>
இதேபோல் சண்டைக் காட்சிகள் என்றால் வேகம் கூட்டுகிற மாதிரி இருபத்து இரண்டு பிரேம் விகிதத்தில் எடிட் செய்வார்கள். அடுத்து ஒரு முக்கியமான விஷயம். ப்ரொஜெக்டரில் இயக்கப்படுகிற ஃபிலிமிலிருந்து முதலில் ஒளிதான் வெளிப்படும். அடுத்து தான் ஒலி வரும். அதனால் நெகடிவ்வோடு டப்பிங் நெகட்டிவ்னு நினைக்கிறபோது 19.1/2 பிரேம்கள் முன்னிலைப்படுத்தி சவுண்ட் நெகட்டிவை இணைப்பார்கள். அப்போதுதான் உதட்டு அசைவும் வார்த்தையும் சரியாகப் பொருந்தும்.
அதேபோல் சூட்டிங்கின்போது டே மற்றும் நைட் எஃபெக்ட் கண்ட்டினுட்டியும், ஒரு சீன் முடிந்து அடுத்த சீன் முடிகிறபோது ஒரே மாதிரியான ஷாட் வரக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
குளோப் ஷாட் ஏதாவது இடத்தில் தவறாக எடுக்கப்பட்டிருந்தால் அதாவது பார்வை (லுக்) தவறாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் நெகட்டிவை திருப்பி விடுவார்கள். அப்படி நெகடிவ்வை திருப்பிப்போட்டு பாஸிடிவ்வாக மாற்றும் போது தவறான பார்வை சரியாகிவிடும். இது ஆண் நடிகர் என்கிற பட்சத்தில் மட்டுமே சாத்யமாகும். பெண் நடிகர்கள் புடவையை தவிர்த்து வேறு காஸ்ட்யூம் அணிந்திருந்தாலும் சரி வரும். ஆனால் புடவை அணிந்த நடிகையின் Close up ஷாட்டை திருப்பிப் போட்டால் புடவையின் தலைப்பு (முந்தானை) மாறிவிடும். அதனால் புடவை அணிந்த குளோசப் ஷாட்டை மட்டும் மாற்ற முடியாது. இப்போதெல்லாம் நெகடிவ் கட் எடிட்டிங் என்பது ஃபைனல் ஸ்டேஜில்தான் வருகிறது. அதற்கு முன்பு ஷாட்கட்ஸ் எல்லாமே Avid என்கிற கம்ப்யூட்டரில் எடிட் செய்யப்படுகிறது.
<img src='http://www.kumudam.com/cinema/edit4.jpg' border='0' alt='user posted image'>
AVID எடிட்டருக்கு நெகடிவ் கட் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இயக்குனர் சொல்கிறபடி கட் செய்தார். அதாவது இப்போதிருக்கும் பெரிய சினிமா கலர் ஃலேப்களில் இந்த கம்ப்யூட்டர் எடிட்டிங் வசதி இருக்கிறது.
முதலில் நெகட்டிவ்வை கொண்டு வந்து ரீல் வாரியாக கம்ப்யூட்டர் டிசிடைல் (பதிவு) செய்து விடுவார்கள். பிறகு அசிஸ்டெண்ட் டைரக்டரின் உதவியோட ஓ.கே.டேக்ஸ் நோட்ஸை வைத்துக்கொண்டு ஓ.கே ஆன டேக்ஸ்களை மட்டுமே தனியே பிரித்துவிட்டு மிகுதி ஸாட்சை டெலிட் செய்து விடுகிறார்கள். பிறகு ஓகேயான டேக்ஸை 1,2,3 என வரிசைபடுத்தி விடுகிறார்கள். அதேபோல் சீன்களை வரிசைப்படுத்தி விடுவார்கள்.
இது நெகடிவ் ...... விட ஈஸியான ...... இப்போது கம்ப்யூட்டரில் (avid) படத்தை ஓடவிட்டு டைரக்டரின் கற்பனைக்கு ஏற்ப. ஷாட்களை மிகவும் துல்லியமாக, நேர்த்தியாக செதுக்குவதுபோல் இணைப்பார்கள்.
கம்ப்யூட்டர் (avid) மெஷின் என்பதால் அதற்குள்ளாகவே டிசால்வ்.. பேடு-இன், பேடுஅவுட்.. போன்ற அத்யாவசிய எஃடெக்ட்டுகளோடு எடிட் செய்வார்கள்.
<img src='http://www.kumudam.com/cinema/edit5.jpg' border='0' alt='user posted image'>
ஒரு முழு படத்திற்கான எடிட் முடிந்ததும் .. இப்போது படத்திற்கு கம்ப்யூட்டர் பிராபிக்ஸ் எஃபெக்ட் வேண்டுமென்றால் அதற்குறிய நிபுணர்களிடம் சொல்ல கிராபிக்ஸ் எஃபெக்டை உருவாக்குவார்கள்.
உதாரணத்திற்கு கதாநாயகனின் கைகளில் இரத்த ஓட்டம் நரம்புகளில் பாய்ந்து செல்வது போன்ற கிராபிக்ஸ் என வைத்து கொள்வோம். அதற்கு ஒரு செகண்டிற்கு அதாவது 24 பிரேம் கிராபிக்ஸ் செல்ல சுமார் இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை கிராபிக்ஸகே்கு தகுந்த மாதிரி பணம் கேட்பார்கள்.
இதுபோல் எஃபெக்ட் முடிந்ததும் டைட்டில் எழுதுவார்கள் அந்த டைட்டில் வெறுமனே வருவதென்றால் பரவாயில்லை ஒரு பாடல்காட்சியின் மீது சூப்பர் எம்போஸ் முறையில் தெரிவதாக இருந்தால் அதை கம்ப்யூட்டர் ......... செய்துவிட முடியும். ஆனால் அது நெகடிவ் கட் எடிட் நிலைக்கு வருகிற போது ஆப்டிக்கல் ஒர்க் என்கிற முறையில் அதாவது பெயர் எழுதிய நெகடிவ் பிலிம் நெகடிவ்வோடு சேர்த்து தனியா ஒரு நெகடிவ் எடுப்பார்கள் அதில்தான் பெயரும் படமும் இணைந்து வரும். இப்படித்தான் டிசால்வ், சூப்பர்எம்போஸ் எல்லா எஃபெக்ட்டும் பிலிமில் ஆப்டிகல் ஒர்க் மூலமே செய்வார்கள்.
கம்ப்யூட்டர் எடிட் முடித்ததும் அதில் ஒரு நெம்பர் ஷீட் வரும் அதாவது நெகடிவ்வில் உள்ள எண்களின் லிஸ்ட் எங்கே வெட்டப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது என்று எல்லா ஷாட்களின் எண்களும் பிரிண்ட் அவுட்டாக வரும்.
அந்த பிரிண்ட் அவுட்டை வைத்துக் கொண்டுதான் எடிட்டர் நெகடிவ்வை வெட்டி சேர்ப்பார்.
மற்றடி கம்ப்யூட்டர் (avid) எடிட்டிக்கிற்கும் பிலிம் எடிட்டிக்கிற்கும் சம்பந்தமில்லை.
கம்ப்யூட்டர் எடிட் என்பது பிக்சல் அதாவது எலக்டிரானிக் மீடியா, பிலிம் என்பது கெமிகல் மீடியா.
தெளிவாக செல்வதென்றால் வீடியோ எடிட் என்பது மேக்னடிக் டேப்பில் பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்படுவது.
பிலிம் எடிட் என்பது நெகடிவ் பிலிமை கெமிக்கல் மூலம் பாஸிட்டிவ்வாக மாற்றி எடிட் செய்து மீண்டும் கெமிக்கல் உதவியால் பிரிண்ட் எடுப்பது.
வீடியோ எடிட்டில் ஒரு செகண்டுக்கு 25 பிரேம்கள் பிலிம் எடிட்டில் ஒரு செகண்டுக்கு 24 பிரேம்கள்.
தமிழ் ஆமாம் வீடியோவில் ஹை பேண்ட், பீட்டா, டிநி பீட்டா என்று பலவகை இருக்கிறதே அதை எப்படி தரம் பிரிக்கிறார்கள்?
வீடியோ ரெக்கார்டரில் பதிவாகும் தரத்தைப் பொறுத்து அது மாறுபடும். அதாவது கேமராவிற்கும் தரத்திற்கும் வித்யாசம் கிடையாது பதிவாகும் ரெக்கார்டரில் தான் வித்யாசம் உண்டு. அதாவது அந்த தரம் என்பது வெர்டிகல் லைன்களை பொறுத்து மாறுபடும். ஹைபேண்ட் கேமரா என்றால் அதனை இணைந்த ஹைபேண்ட் ரெக்கார்டரில் 400 வெட்டிக்கல் லைன்களில் படம் பதிவாகும். இதே பீட்டா என்றால் எழுநூறு லைன்களில் பதிவாகும் டிநி பீட்டா என்றால் எழுநூற்று எண்பது லைன்களில் பதிவாகும். ஆக.. லைன்களில் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க படம் தெளிவாக பதிவாகும். இதை வைத்துதான் தரம் பிரிக்கிறார்கள். சினிமாவில் மூவாயிரத்து ஐநூறு லைன்களில் படம் பதிவாகிறது. அதனால் பிலிமின் துள்ளியத்தை வீடியோ மீடியா என்பது எட்டமுடியாத தூரம் ஆகும் அதே போல் திரையில் நாம் பார்க்கும் டெப்த் TVயில் கிடைக்காது. அதனால் சினிமாவின் துள்ளியத்தையும் வெற்றியையும் ஜிTV மீடியா நெருங்கவே முடியாது.
அடுத்த வாரம் டப்பிங் ரீ ரிகார்டிங் பற்றி பார்ப்போம்.</span>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா. உங்களை மீண்டும் களத்தில் கண்டது மகிழ்ச்சி
----------
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நன்றி அஜீவன் அண்ணா. உங்களை மீண்டும் களத்தில் கண்டது மகிழ்ச்சி <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='color:red'><b>சினிமாவுக்கு பின்னால்...
சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்
பாகம் - 11</b>
_ பெ.கணேஷ்
<b>டப்பிங், ரீ_ரெக்கார்டிங், மிக்ஸிங்</b>
தமிழ் : சென்ற வாரம் நீங்க சொன்ன எடிட்டிங் விஷயங்கள் ஓரளவுக்கு புரிந்துவிட்டது. ஆனால் எடிட்டிங்கிற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லவில்லையே?
AVID கம்ப்யூட்டரில் எடிட்டிங் செய்வதென்றால் எண்பதாயிரம் முதல் தொண்டிடிணூறு ஆயிரங்கள் வரை செலவாகும். இது மட்டுமில்லாமல் நெகட்டிவ் கட்டிங் எடிட்டிங் ரூம் வாடகை, எடிட்டர் சம்பளம் என பல ஆயிரங்கள் செலவாகும். இதுமட்டுமில்லாமல் ஆப்டிகல் ஒர்க் என்கிற டிசால்வ் _ சூப்பர் எம்போஸ் எஃபெக்டுகக்கள் செய்வதற்கு தனியாக பணம் கட்டவேண்டும். அல்லது AVID-ல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பண்ணுவதென்றாலும் ஒரு நொடிக்கு இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் வரை செலவாகும். இவை மொத்த செலவையும் நாம் லேப்பின் கணக்கின் படியே செய்து கொண்டு பிலிம்.. எடிட்டிங், டப்பிங் மிக்சிங் என எல்லாவற்றிற்கும் மொத்தமாக பணம் செலுத்தும் வசதியும் இருக்கிறது.
<img src='http://www.kumudam.com/cinema/dub1.jpg' border='0' alt='user posted image'>
<b>டப்பிங் :</b>
டப்பிங் என்பது வசனப் பதிவு செய்வது என்று சொல்லலாம் நாம் ஷடை்டிங்கில் உபயோகப்படும் பிலிமிற்கு சப்தத்தை கிரகிக்கும் தன்மை கிடையாது. அதனால், முழுக்க, முழுக்க ஏர்ஃப்ரூப் என்கிற காற்றுப்புக முடியாத அமைதியான டப்பிங் அறைக்குள் நடிகர்கள் பேச அதை ADat என்கிற மேக்னடிக் டேப்பில் பதிவு செய்து பிறகு அதை film நெகடிவ்வோடு இணைத்து டபுள் பாஸிடிவ் என்ற வசனமும், படமும் உள்ள ஃபிலிம் பாஸிடிவ்வை உருவாக்குவார்கள்.
முன்பெல்லாம் டப்பிங் தியேட்டரில் சவுண்ட் நெகட்டிவ்வில் மட்டுமே பதிவு செய்யப்படும் வசதி இருந்தது. அதனால் காட்சிக்கு வசனம் பேசுகிறவர்களுக்கு சிரமம் அதிகமாக இருந்தது, எப்படி, எனில் அப்பொழுது ஒவ்வொரு ரீல் வரிசையில் படத்தை ஓட விடுவார்கள் குறிப்பிட்ட நடிகர் பேச வேண்டிய இடத்தில் அவர் சரியாக சிங் பண்ணவில்லையென்றால் _ அந்த ஒரு ரீலும் ஓடி... முதல் ப்ரேமில் இருந்து திரும்பவும் ரீப்ளே ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.
இப்பொழுது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் உதவியோடு டப்பிங் நடப்பதாலும் ADat என்கிற மேக்னடிக் டேப்பில் பதிவு செய்வதாலும், குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட வசனத்திற்கு மட்டும் பன்ச் கொடுத்து... அந்த வசனக்காட்சி மட்டுமே திரையில் ஓடுகிற மாதிரி செய்து டப்பிங் செய்ய முடியும்.
இது மட்டுமில்லை; முன்பெல்லாம் ஒரு காட்சியில் இரண்டு நடிகர்கள் ஒன்றாக அதாவது ஒரே நேரத்தில் பேசி நடித்திருந்தால் டப்பிங்கின்-போது அந்த இரண்டு நடிகரும் வந்திருந்து ஒன்றாக வசனம் பேசவேண்டும். இப்போது அப்படியில்லை ADatல் 32 ட்ராக் உள்ளதால், ஒரே காட்சியில் 32 பேர் பேசி நடித்திருந்தாலும் அவர்களது குரலைத் தனித் தனியாக டப்பிங் செய்து ஒன்றாக மிக்ஸ் செய்ய முடியும்.
<img src='http://www.kumudam.com/cinema/dub2.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் : டப்பிங் பேசும் விதிமுறை எப்படியிருக்கும்?
டப்பிங் பேசுவதற்கென்று தனியாக எந்த விதிமுறையும் இல்லை. ஆனால் டப்பிங் பேச டப்பிங் யூனியனில் மெம்பராக வேண்டும். அடுத்து டப்பிங் பேசும்போது திரையில் நடிக்கும் நடிகரின் முகபாவத்திற்கும் அந்த காட்சியின் தன்மைக்கும் ஏற்ற வகையில் குரலை மாற்றி பேசவேண்டும் அதாவது அந்த காட்சிகளின் உணர்வுகள் குரலில் வெளிப்படும் விதமாக பேசவேண்டும். அடுத்து, நடிகரின் உதட்டசைவிற்கு ஏற்ற வகையில் வசனத்தை சிங் செய்ய வேண்டும். இதைப்பற்றி தெளிவாகச் சொல்வதென்றால் நடிகரின் உதடு திறக்கும் நேரத்தில் மிகச் சரியான வசனத்தை ஆரம்பித்து இடைஇடையே அவர் உதடுகள் மூடி திறக்கும் நிலைக்கு ஏற்ப நிஜமாகவே நேரில் அவர் பேசுவதை கேட்பதைப் போன்ற உணர்வைத் தரும் விதமாக பேச வேண்டும். அடுத்து குரல் மாடுலேஷன்... ஏற்ற இறக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு நடிகர் ஒரு வசனத்திற்கு எந்த இடத்திற்கு அழுத்தம் கொடுத்து பேசுகிறார். எங்கே இடைவெளி விட்டு ஆரம்பிக்கிறார். குரல் ஃபேஸாக இருக்கிறதா? ஸார்ப்பாக இருக்கிறதா? என்பதை மிகச் சரியாக உணர்ந்து அந்த ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்த மாதிரி குரலை மாற்றி பேச வேண்டும். அப்பொழுதுதான் நடிகரின் முக பாவத்து ஏற்றவாறு குரல் பொருந்தும்.
டப்பிங்கில் சிங், மாடுலேஷன் இந்த இரண்டும் மிக முக்கியமானதாகும். இப்படி எல்லா நடிகர்களும்பேசும் வசனங்களும் டப்பிங் செய்யப்பட்டதும் அந்த குரல்களை பதிவு செய்து Adat என்கிற மேக்னடிக் டேப்பை லேப்பில் கொடுத்து சவுண்ட் நெகட்டிவ்வாக மாற்றுவார்கள். பிறகு அதனை 19-.1/2 பிரேம்கள் முன்னதாக பிக்சர் நெகட்டிவோடு பொருத்தி டபுள் பாஸிட்டிவ் ஃபிலிமை உருவாக்கு-வார்கள். அதை மூவியாலாவில் ஓடவிட்டு அடுத்து ஷார்ப் கட்டிங் என்கிற கடைசி நேர எடிட்டிங் செய்வார்கள்.
<b>ரீ ரிகார்டிங்</b>
இது ஒரு படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலையாகும். அதாவது ஒரு காட்சியின் தன்மைக்கு ஏற்ப நடிகர் நடிகையின் எக்ஸ்பிரஷனுக்கு ஏற்ற வகையில் ஒலியை சேர்ப்பார்கள். இதுவும் இப்போது Adat ல் பதிவு செய்யப்படுகிறது.
ஒரு காட்சியில் எந்த இடத்தில் மியூசிக் ஆரம்பித்து எந்த இடத்தில் முடியவேண்டும் எந்த இடத்திற்கு எந்த மாதிரியான இசைக்கருவியை உபயோகித்து உணர்வுபூர்வமான மியூசிக்கை தரலாம் என இசைய-மைப்-பாளர் உணர்ந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரியான ட்யூனை ராகத்தை வாசிக்க வைப்பார்கள்.
அடுத்து அந்த காட்சியின் இடையே என்னென்ன ராகத்தில், என்னென்ன இசைக்கருவிகளை உபயோகிப்பது என்று முடிவெடுப்பது இசையமைப்பாளரின் வேலையாகும்.
ஒரு படத்திற்க்கு மிக முக்கியமான ஜீவன் என்று ரீரிகார்டிங்கை சொல்லலாம். அந்தளவிற்கு பார்வையானை காட்சியோடு ஒன்றிப் போக செய்வது ரீ ரிகார்டிங்தான்.
பொதுவாக ஒரு படத்திற்கு ஏழிலிருந்து இருபது நாட்கள் வரை ரீ_ரிகார்டிங் நடக்கும். அது படத்தை இசையமைப்பாளரைப் பொறுத்து மாறுபடும். ரீ ரிகார்டிங்கில் இன்னொரு முக்கியமான விஷயம் தீம் மியூசிக். ஹீரோ, ஹீரோயின், வில்லன்களின் கேரக்டரை உணர்த்தும் விதமாக அவர்கள் வரும் காட்சிகளில் தனித்தன்மையாக படம் முழுதும் ஒரு மியூசிக்கை உபயோகிப்பார்கள் அதுதான் தீம் மியூசிக்.
இந்த தீம் மியூசிக்கும் இசையமைப்பாளரின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்... இயக்குனர் அதில் ஏதும் குறையிருக்கும் பட்சத்தில் வேறுவிதமாக மாற்றி தரச் சொல்லலாம்.. அதற்க இயக்குனருக்கு உரிமை இருக்கிறது.
<b>மிக்ஸிங் :</b>
<img src='http://www.kumudam.com/cinema/dub3.jpg' border='0' alt='user posted image'>
மிக்ஸிங் என்பது நேச்சரல் இசை சேர்ப்பாகும். அதாவது ஒரு காட்சியில் கார் நிற்பது _ புறப்படுவது _ சைக்கிள் பெல் சப்தம் _ குருவிகள் கத்தும் சப்தம் _ கண்ணாடி உடையும் சப்தம் என ஒரு காட்சியில் நிகழும் லைவ் சவுண்டை தருவதுதான் மிக்ஸிங்.
மிக்ஸிங் செய்வார்கள் இரண்டு-பேர்-தான் தியேட்டருக்கு வருவார்-கள் அவர்களிடம் மிகப்பெரிய சூட்கேஷ் இருக்கும் அதில் உலகத்தி-லுள்ள எல்லா சப்தங்களையும் பதிவு செய்ய டேப் அல்லது சிடிக்களை வைத்திருப்பார்கள். சாதாரண பேப்பர் கூட அவர்களுக்கு பறவைகள் படபடக்கும் சப்தத்தை தரும் உபகரணமாகிவிடும்.
அதேபோல் கையில் சிறிய ரப்பரை வைத்துக்கொண்டு அந்த ரப்பர் மூலமாக திரையில் ஷவேுடன் நடந்து வருபவருக்கும் ஹை ஹீல்ஸ் செருப்புடன் நடந்து வருபவருக்கும் ஹவாய் செருப்புடன் நடந்து வருபவருக்கும் மிகச்சரியாக சப்தம் தந்து விடுவார்கள்.
அதேபோல் அருவியின் சப்தம், அலைகளின் சப்தம், இடி இடிக்கும் சப்தம், கூட்ட நெரிசல் சப்தம். பிளைட், லாரி, பலவகை கார்களின் சப்தம் என எல்லாமும் இருக்கும். நாய்களில் தெரு நாய்கள் கத்துவது. அல்சேஷன், பொமரேனியன் என எல்லாவகை நாய்கள் கத்தும் சப்தமும் இருக்கும்.
காட்சியில் எந்த லைவ் சவுண்ட் வந்தாலும் அதற்கு இவர்கள் கேசட் மூலம் சப்தத்தை கொடுத்து அசத்திவிடுவார்கள்.
இந்த லைவ் இசைக்குதான் மிக்ஸிங் என்று பெயர். இதை தனியாக ஒரு டிராக்கில் பதிவு செய்து கொள்வார்கள்.
பிறகு லேப்பிற்கு சென்று டப்பிங் டிராக், மியூசிக் (RR) டிராக், மிக்ஸிங் டிராக் மூன்றையும் இணைத்து முடிவாக ஒரு சவுண்ட் டிராக்கை சவுண்ட் நெகட்டிவ்வில் பதிவு செய்வார்கள். அந்த சவுண்ட் டிராக்கோடு ஃபைனல் எடிட் நெகட்டிவை இணைத்து திரையிடும் படத்திற்கான முதல் பிக்சர் பிலிமை கொண்டு வருவார்கள். இதற்கு தான் பர்ஸ்ட் காபி என்று பெயர். இதிலிருந்து பல காப்பிகள் உருவாக்கப்ட்டு தியேட்டர்களுக்கு செல்லும். அடுத்த வாரம் ஒரு படத்திற்கு பட்ஜெட் உருவாக்குவதை பார்ப்போம்.
தொடரும்...</span>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='color:darkblue'><b>சினிமாவுக்கு பின்னால்...
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
பாகம் - 12</b>
பெ.கணேஷ்
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_anju_800.jpg' border='0' alt='user posted image'>
<b>மினிமம் பட்ஜெட் படம்</b>
இதுவரை நீங்கள் சினிமாவுக்குப் பின்னால் தொடரின் மூலம் ஒரு திரைப்படம் எடுப்பதற்கான அத்தனை டெக்னிக்கலான விஷயங்களையும் அறிந்தீர்கள்.
இந்த வாரம் ஒரு மினிமம் பட்ஜெட் படம் எடுப்பதற்கான விபரத்தை அறியப்போகிறீர்கள்.
ஒரு படம் தயாரிப்பது என்பது இன்றைய காலச்சூழலில் மிகவும் சிரமமான வேலை. எந்த தொழிலுக்கும் முதலீடு என்பது ஒரு அசையாத சொத்தாகவோ, அசையும் சொத்தாகவோ இருக்கும். ஆனால் சினிமாவில் நம்பிக்கை என்பதுதான் சொத்து. பதிநான்கு ஆயிரம் அடி ஃபிலிம் மட்டுமே கடைசியில் சினிமாவில் சொத்தாகிறது. ஆனால் படம் அவுட் என்றால் அந்த பதினான்காயிரம் அடி பிலிமை எடைக்கு போட்டால் சில ஆயிரம் ரூபாய் கூட கிடைக்காது.
இப்படி சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை நம்பி பல கோடிகளை முதலீடாக போடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அதற்கு ஒரே காரணம் இந்த படம் ஜெயித்துவிடும்; இந்த ஹீரோவிற்காக ஹீரோயினுக்காக படம் பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கைத்தான். அடுத்து புதிதாக வருகிற தயாரிப்பாளர்களுக்கு இங்கே சினிமாவில் வழக்கமாக படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பு சம்பந்தமான நெளிவு சுழிவுகளை சீக்கிரமே சொல்லித்தரமாட்டார்கள்.
ஒரு படம் எடுத்து அவராக கற்றுத் தேர்ந்தால் மட்டுமே உண்டு.
சினிமா தயாரிப்பு என்பது தொழில் மட்டுமல்ல. அது ஒரு கலையும்கூட. எந்த ஹீரோவிற்கு என்ன மதிப்பு இருக்கிறது. அவரது படம் எஃப்.எம் (பாரின், மலேஷியா) நாடுகளின் ராயல்டியாக எவ்வளவிற்கு விற்கப்படுகிறது. அந்த ஹீரோவிற்கு ஏ, பி என்கிற பெரு நகரம். நகரங்களில் கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்களா? அல்லது சி என்கிற கிராமப்புறம் சார்ந்த சென்டர்களில் அவரது ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களா? என்பதை அறிந்து அந்த ரசிகர்களை கவரும் வகையில் கதைக்களத்தை அமைத்து படம் தயாரிக்க தெரியவேண்டும்.
அதேபோல் மியூசிக் டைரக்டருக்கு என்ன வேல்யூ இருக்கிறது. அவரது மியூசிக்கில் தயாராகும் பாடல்களை ஆடியோ ரைட்ஸ்ஸாக என்ன விலைக்கு விற்கமுடியும் என்பது தெரியவேண்டும் இப்பொழுது நூற்றி ஐம்பது பாடல்கள் அடங்கிய சி.டி. வெறும் முப்பது ரூபாயில் கிடைக்கிறது.
இதனால் ஆறு பாடல்களை மட்டுமே கொண்ட திரைப்பட கேசட் அல்லது சிடியின் விற்பனை இப்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இந்த நிலையில் இசையமைப்பாளருக்கு கொடுக்கும் பணம் என்பது ஆடியோ ரைட்ஸ் மூலம் திரும்ப கிடைப்பது கடினம் என்பதால் அவரது சம்பளம் இப்போது படத்தின் பட்ஜெட்டோடு சேர்ந்துவிடுகிறது. அப்படியெனில் ஒரு மியூசிக் டைரக்டரின் பாப்புலாரிட்டி மற்றும் அவரின் திறமை இரண்டையும் கணித்து அவரை ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த கணிப்பு என்பதை தயாரிப்பாளர் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
அடுத்து இயக்குனர் என்பவர் எந்த பட்ஜெட்டில் படம் பண்ணுவார். அவர் படப்பிடிப்பு நடத்தும் நாட்களின் எண்ணிக்கையும், அவர் செலவழிக்கும் நெகடிவ் ரோல்களின் எண்ணிக்கையும் மற்றும் அவரிடமுள்ள கதையின் கரு. அந்த கரு வெற்றி பெறுமா? என்பதை கணிக்கும் ஆற்றலும் ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கவேண்டும்.
அதற்கடுத்து இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர், டான்ஸ்மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் ஆர்ட் டைரக்டர், மேக்கப்மேன், காஸ்ட்யூமர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்கிறபோது அவர்களின் அனுபவம், அவர்கள் பெறும் சம்பளம், அவர்கள் பிரச்னையில்லாத நபர்களா? என்பது அறிந்து ஒப்பந்தம் செய்யவேண்டும்.
அடுத்து தயாரிப்பு நிர்வாகி, ப்ரொடக்ஷன் அசிஸ்டெண்ட் போன்றவரை ஒப்பந்தம் செய்யும்போது அவர்களின் ஒப்புதலுடன் தனக்கு நம்பகமான நபரை அவர்களிடம் வேலை செய்யவிடவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பெரிய அளவில் எந்த தவறும் செய்யமுடியாமல் தடுக்கமுடியும்.
அடுத்து படம் முடிந்ததும் ஏரியா வாரியாக சொந்தமாக ரிலீஸ் செய்யும் திறமை இருக்கவேண்டும். எம்.ஜி. அடிப்படையில் டிஸ்ட்ரிப்யூஷன் கொடுப்பது எப்படி? அல்லது ட்ஸ்ட்ரிபூஷனுக்கு உரிமை கொடுக்கும்போது எந்தெந்த ஏரியா என்னென்ன விலைக்கு போகிறது, பட்ஜெட் படங்கள் எந்தெந்த தியேட்டரில் ரிலீஸ் செய்தால் ஓடும் என்பது தெரியவேண்டும்.
இந்த விசயங்கள் எல்லாம் தெரியாமல் ஒரு தயாரிப்பாளர் திடீரென படம் தயாரிக்க வருவது தவறு.
இப்போது ஒரு மினிமம் பட்ஜெட்டுக்கான பட்டியலை சொல்லப்போகிறேன். பெரும்பாலான மினிமம் பட்ஜெட் படங்கள் இந்த பட்டியலில்தான் அமையும். இதை நீங்கள் படித்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் ஒரு படத்திற்கு தேவையான ஃபிலிம். அதாவது நெகடிவ் சென்னையின் பெரிய லேப்களில் கிடைக்கும். உதாரணத்திற்கு பிரசாத் லேப்பில் நாம் காண்ட்ராக்ட் போட்டு ஃபிலிம் வாங்க வேண்டுமென்றால் அதற்கு நம் படத்தில் கேமராமேனாக பணியாற்றும் நபரின் உதவி வேண்டும். அவர் நம்முடன் வந்து லேப்பில் பேசினால் போதும். ஒரு அட்வான்ஸ் தொகை (2 லட்சம்) செலுத்தி ஃபிலிமை வாங்கலாம்.
ஒரு மினிமம் படத்திற்கு நாற்பது ஆயிரம் அடிகள் இருந்தால் போதும். அப்படி பார்க்கையில் ஆயிரம் அடிகள் ஈஸ்ட்மென் ஃபிலிம் நாற்பதாயிரம் + நாற்பது = எட்டு லட்சத்து எண்பதாயிரம் ஆகும்.
அடுத்து அவுட்டோர் யூனிட், கேமரா, லைட்ஸ், டிராக் & டிராலி கிரேன் போன்ற எல்லா பொருட்களும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுவதற்குமாக நமக்கு தருகிற வகையில் அவுட்டோர் யூனிட்டில் மொத்தமாக காண்ட்ராக்ட் போடவேண்டும். அது கிட்டதட்ட ஐந்து லட்சம் வரை ஆகும்.
அடுத்து இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடனஇயக்குனர், மேக்கப்மேன், தயாரிப்பு நிர்வாகி, ஸ்டண்ட் மாஸ்டர் என ஒட்டுமொத்த டெக்னீஷியன்களுக்கும் ஆறு லட்சத்தை தாண்டாத வகையில் திறமையுள்ள டெக்னீஷியன்களை அழைத்து பேசி ஒப்பந்தம் செய்யவேண்டும்.
அதற்கடுத்து இசையமைப்பாளர்களை பொறுத்தவரை அவரது சம்பளம் பாடல் ரிகார்டிங் செலவு, ரீ ரெக்கார்டிங் செலவு என எல்லாமும் சேர்ந்து ஆறு லட்சத்திற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என காண்ட்ராக்ட் கணக்கில் ஒப்பந்தம் செய்வது நல்லது.
அடுத்து ஒரு படத்தின் பாடல் காட்சிக்கான உடைகள், சண்டைக்காட்சிக்கான உடைகள் என மொத்தம் ஒன்றரை லட்சத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் பாம்பே, சூரத் போன்ற இடங்களுக்கு தயாரிப்பாளரே நேரில் சென்று துணி எடுத்துக்கொண்டு வர முயல்வது நல்லது.
அடுத்து படப்பிடிப்புக்கான மொத்த நாட்கள் நாற்பது நாளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வசன காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என எல்லா காட்சிகளும் நாற்பது நாட்களில் முடித்துவிடுவது நல்லது.
ஒருநாள் ஷடை்டிங் நடத்துவதற்கு நடிகர், நடிகையருக்கான போக்குவரத்து செலவு துணை நடிகர்கள், துணை டெக்னீஷியன்களுக்கான பேட்டா, போர்டிங். லாட்ஜிங், மூன்று வேளை சாப்பாடு என ஒரு நாளைக்கு குறைத்து ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படும். அப்படி பார்த்தால் நாற்பது நாளுக்கு சூட்டிங் செலவு இருபது லட்சத்திலிருந்து இருபத்தைந்து லட்சம் வரை ஆகும்.
அடுத்து சூட்டிங் முடிந்து எடிட்டிங் செய்யவேண்டும். இப்பொழுது ஏவிட் என்கிற கம்ப்யூட்டர் எடிட்டிங் மிகவும் பயனுள்ளது என்பதால் அதற்கும் எடிட்டிங் முடிந்து டப்பிங், மிக்ஸிங் என்கிற லைவ் இசை சேர்ப்பு அடுத்து டப்பிங் பேசும் வசனத்தை பதிவு செய்ய சவுண்ட் நெகடிவ் மற்றும் தலைப்பு மற்றும் படத்தின் உள்ளே கிராபிக்ஸ் யுக்தியை கொண்டு வருவதற்கான ஆப்டிகல் லேப் ஒர்க் என எல்லாம் சேர்த்து ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இத்துடன் படம் முழுதும் தயாரானதும் முதல் பிரதி எடுக்கவும் பப்ளிசிட்டி கொடுப்பது சென்சார் சர்டிபிகேட் வாங்குவது ஃபோஸ்டர் அடிப்பது... மற்ற மாவட்டங்களுக்கான பிரிண்ட் போடுவது என பத்து லட்சங்கள் வரை செலவாகும்.
ஆகமொத்தம், டெக்னீஷியன்கள் மற்றும் படம் தயாரிப்பு, ரிலீசுக்கு ஆயுத்தமாகும் வரையான செலவு அறுபத்து மூன்றரை லட்சங்கள் ஆகும். இதனுடன் நடிகர்களின் சம்பளம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதாவது புதிய ஹீரோவா அல்லது ஒன்றரை கோடிகள் வாங்கும் பெரிய ஹீரோவா என்பதை பொறுத்து பட்ஜெட் அமையும். ஆக இந்த மினிமம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் வளரும் நடிகரா அல்லது அறிமுக நடிகர் நடிகையோ ஒப்பந்தம் செய்தால் எண்பது லட்சங்களில் ஒரு படத்தை முடித்துவிடலாம்.
ஆக இதுதான் இன்றைய மினிமம் பட்ஜெட். இந்த பட்ஜெட்டுக்குள் மிகவும் அநாவசிய செலவுகளை தவிர்த்து படமெடுத்தால் படம் சரியாக போகவில்லையென்றாலும் நிச்சயமாக முதலீடு செய்த பணத்தையாவது திரும்ப எடுத்துவிடலாம். அதாவது எஃப்.எம். ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ், வீடியோ ரைட்ஸ், சேட்டிலைட் சானலுக்கான உரிமை, வேற்று மாநிலங்களுக்கான உரிமை என ஒரு கணிசமான தொகை திரும்ப கிடைத்துவிடும் அதனோடு படம் ரிலீசாகி சுமாராக ஓடினாலே நாம் போட்ட முதலீடு நஷ்டமில்லாமல் திரும்பவரும்.
இதுவரை நான் சொன்னது எல்லாமே எனது அனுபவத்தின் மூலமாக பெற்ற விஷயங்கள். இந்த அனுபவங்கள் உங்களுக்குள் திரைப்படம் தயாரிப்பதற்கான ஆவலையும், உந்துதலையும் தருமாயின் அதனால் சினிமாவை நம்பியிருக்கிற நூற்றுக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். அப்படி பலருக்கு வேலை தருகிற பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால் அது இந்த 'சினிமாவிற்கு பின்னால்' தொடரின் வெற்றியாகும்.
"நன்றி மீண்டும் சந்திப்போம்."</span>
|