11-16-2004, 04:11 PM
ஈழத் தமிழ்த் தேசியத்தின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் திட்டமிட்ட முறையில் பேரினவாதிகளால் அழிக்கப்பட்டு வருகின்றது. இப்படி அருகிவரும் கலைகளில் ஈழத்து பழமை வாய்ந்த வடமோடி நாடகக் கூத்துமொன்றாகும். ஈழத்துக் கிராமியக் கலைகளின் கானகமாக திகழும் தென் தமிழீழத்தில் இன்று அருகி அழிந்துவரும் இவ்வடமோடிக் கூத்தானது போர், பொருளாதாரம் போன்ற பல காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளித் தினத்தன்று ரி.ரி.என் தொலைக்காட்சியில், இன்னும் இந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்று தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ள திருமதி சிவகாமி முருகமூர்த்தி என்ற சகோதரியின் பேட்டி ஒலிபரப்பப்பட்ட்து. தனது கணவரால் ஆடப்பட்டு வந்த இக்கலையை, அவரின் இளப்பிற்குப் பின் தனது இரு மகன்களோடு, தனது சிறு வருமானத்தையுமே இக்கலையை வளர்ப்பதற்காக உழைப்பதானது "நமது மண்ணைக் காக்க கையில் ஆயுதம் ஏந்திய போராளியின் உணர்வுகளுக்கு சமமானது".
புலத்தில் எம்மவர்கள் இந்திய சினிமா மோகத்தில், அவர்களது தரமான படைப்புகள் என்றால் வரவேற்போம், ஊக்குவிப்போம் அதை விடுத்து தரமற்ற குப்பை, கூழாங்களுக்குக் கூட கோடிக்கணக்கில் முதலிட்டு, எம் பணத்தை விரயமாக்குகிறார்கள் என்பதைவிட கலை, கலாச்சார, சமூக சீரளிவுகளையும் ஊக்குவிக்கிறார்கள். ஆனால் எம்மவர்களின் கலைகளை ஊக்குவிக்க இவர்கள் செய்தது என்ன?
70துகளில் கொடிகட்டிப் பறந்த, இன்றும் நம்மவர்களால் வரவேற்கப்படும் ஈழத்துப் பொப்பிசை! எமது பழப்பெரும் நாடகக் கலைகள்(காத்தன் கூத்து, வடமோடிக் கூத்து, ...)! தெருக்கூத்துக்கள்! ....... இல்லை ஈழத்து விடுதலை எழுச்சி கீதங்கள்! ஏதாவது ஒன்றின் வளர்ச்சிக்கேதும் உதவீனீர்களா?
தயவு செய்து இந்திய தமிழ் சீரளிவுக் குப்பைகளுக்கு கொட்டப்படும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியையேனும் திருமதி சிவகாமி முருகமூர்த்தி போன்றோருக்கு கைகொடுத்து உதவுங்கள்.

"
"
"