04-26-2006, 07:34 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>என் முறை வரும்போது...</b></span>
<img src='http://photos1.blogger.com/blogger/3623/589/320/crying%20baby1.jpg' border='0' alt='user posted image'>
கருவுக்குள் என்னைச் சுமந்து
கருச்சிதையாமல் என்னைக் காத்து
பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து
ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா
காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று
வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க
பால் போத்தலுடன் நான் இங்கே...
பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே
அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக
நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே
நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண
அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது
என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்
<img src='http://photos1.blogger.com/blogger/3623/589/320/crying%20baby1.jpg' border='0' alt='user posted image'>
கருவுக்குள் என்னைச் சுமந்து
கருச்சிதையாமல் என்னைக் காத்து
பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து
ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா
காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று
வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க
பால் போத்தலுடன் நான் இங்கே...
பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே
அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக
நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே
நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண
அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது
என் முறை எனக்கும் வரும்போது அங்கே
என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில்
வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல
வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->