Aravinthan Wrote:அஜிவன் அண்ணா, சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்கள்,அவர்களின் தமிழ்மொழி பற்று, போன்றவையும் அறியத்தாருங்கள். ரசிகை அக்காவின் கனடாவினைப்பற்றி எழுதிய கட்டுரைகளினைப்படித்தேன். கனடாவில் வரவுசெலவு அறிக்கை தமிழும் வெளியிடப்படுகின்றது,ரொன்றோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது போன்றவற்றினையும் அறியக்கூடியதாக இருந்தது. சுவிஸில் கனடாவினைப்போல தமிழ்மொழியின் நிலையினப்பற்றியும் அறியத்தாருங்கள். சுவிஸ் நாட்டுக்கு வந்தால் சுற்றுலா செல்லக்கூடிய விபரங்களினையும் எழுதுங்கள்.
முதலில் இங்கு வந்தவர்களுக்கு தமிழை வளர்க்க வேண்டுமென்ற ஆதங்கம் மட்டுமல்ல
உணர்வும் அடிப்படையிலேயே இருந்தது.
தமிழ் பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட வந்தன.
கருத்தரங்குகள் - மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் எல்லாமே இருந்தன.
தமிழ் பாடசாலைகள் கூட உருவாயின.
இப்போ மக்கள் மாறி வருகிறார்கள்.
முன்போல் சமூகம் சார்ந்த அக்கறை அருகி வருகிறது.
வேலை - உழைப்பு - தன் குடும்ப மேன்மை அடுத்தவருக்கு ஈடாக தானும் வாழ வேண்டும்.
குழந்தைகளை இந்த நாட்டு மொழியில் படிக்க வைக்க வேண்டும்.
அவர்களும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
இது தொடங்கி விட்டது.
குழந்தைகள் நன்கு கல்வி கற்பது மகிழ்வான விடயம்.
இப்படியான மாற்றங்கள்.............
இங்கு பிறந்து வளர்ந்து பழகிய குழந்தைகள்
சுவிஸை விட்டு வெளியேற மாட்டார்கள்.
ஏனைய நாடுகளைப் பற்றிய
இவர்களது எண்ணக் கருத்துகள்
அந்நாடுகளின் மேல் வெறுப்புடன் பேசுவதையே
காண முடிகிறது.
பழையவர்கள் மனதிலோ குளப்பமான கேள்விகள்?
தொடர்ந்து இங்கு வாழ்வதா?
இல்லை கனடா - லண்டன் - இந்தியா போன்ற நாடுகளுக்கு போவதா?
இல்லை தாயம் போவதா?
இவர்கள் தனக்கு தானே குளம்பிக் கிடக்கிறார்கள்........!
தொடரும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியவில்லை?