ஒ நயில் நதியாவா சாத்திரி, வாறன் முனியம்மாட்ட போட்டுக் குடுக்க,அந்த மனிசி பாவம் ஐன்ச்சு பிள்ளயப் பெத்துப் போட்டன் எண்டு ஒப்பாரி வைக்காத குறயா புலம்புது,உமக்கு நதியாவோ கேக்குது.... நல்ல காலம் அந்தக் காலத்தில உந்த சட்டும் ,இன்டெர்னெட்டும் இருக்கேல்ல
இல்லாட்டி நதியாண்ட கணக்கில பல பொம்பிளயள் தமிழ் நாட்டில கரை சேந்திருப்பினம்.
:evil: :evil:
எந்த வலைப் பதிவப் படிச்சாலும் இப்ப இந்தக் கதை தான் ஓடுது ,ஈழத் தமிழரின்ட பேர் தான் நாறுது... :evil: இனி யெண்டாலும் உவளவைக்குப் பின்னால வழியிறத விடுங்கோ.
கீழ போட்டிருக்கிறதுகளுக்குப் போய் படிச்சுப் பாருங்கோ அவனவன் எழுதி வச்சிருக்கிறத...
கனடா கொண்டார் பட்டம்
மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் வெளியாகவில்லை, சுயபுகழ் பேசும் வசனங்கள் இல்லை, தில்லானா தில்லானா பாடல்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, கொடிகள் இல்லை, மன்றங்கள் இல்லை, துதி பாடிகள் இல்லை, இத்தனை இத்தனை இல்லைகள் ஆனால் ஒரே ஒரு புகைப்படம் மொத்த கனடாவையும் கவிழ்த்துவிட்டது.
தங்கத்தலைவி அசினின் ஒரே ஒரு புகைப்படம் கனடாவை பித்து பிடித்து அலையவைத்தது, தலைவியை காண வேண்டுமென்ற ஆவலில் என்ன ஏதென்று விசாரிக்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து அலைகின்றார்கள் என்றால் தலைவியின் புகழ் உலகெங்கும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது எல்லோருக்கும் புலப்படும், வேறெந்த நடிகரும் நடிகையும் ஒரே ஒரு புகைப்படத்தால் மொத்த நாட்டையும் பித்து பிடித்து அலைய வைத்ததில்லை.
ஆனால் எம் தலைவியின் புகழ் பாரெங்கும் பரவுவதை கண்ட சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வயிற்றெரிச்சலில் அசின் செய்த பிராடு என பதிவெழுதி எம் தலைவியின் புகழை குலைக்க பார்க்கின்றனர், ஏற்கனவே கனடா முழுக்க அசின் பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறும் முகமூடியே அவர்களே நீர் எத்தனை பதிவு போட்டாலும் அசின் அசின் தான், ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவனின் ஒளி மறைவதில்லை, எனவே எத்தனை பதிவுகள் முயன்றாலும் அசின் புகழை யாராலும் மறைக்க இயலாது என சவால் விடுக்கின்றேன்.
இது போன்ற ஏமாற்று வேலைகளை யாரும் செய்யக்கூடாது என்றுதான் எங்கள் தலைவி இணையத்தில் அசின்ஆன்லைன் என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அவரின் புகழ் பரப்பிவருகின்றோம்.
இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே ஒரு புகைப்படத்தில் கனடாவை கைப்பற்றிய அசினுக்கு தீவிர ரசிகர்களின் சார்பாக கனடா கொண்டார் என்ற பட்டத்தை தங்கத்தலைவி அசினுக்கு வழங்குகின்றோம்.
எப்படியோ இன்று அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாயிற்று
நன்றி
அசின்ஆன்லைன்.காம்
தினமலர்.காம்
http://kuzhali.blogspot.com/[/color]