Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதிதாசன் கவிதைகள்
#61
நன்றி அனிதா

Reply
#62
<span style='font-size:25pt;line-height:100%'>கைம்மைக் கொடுமை</span>


கண்கள் நமக்கும் உண்டு - நமக்குத்
கருதும் வன்மையுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத - புதுமை
எதரிற் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குத்
காதிருந்தென்ன பயன்?

வானிடை ஏறுகின்றார் - கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
வேஎக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவை போல் - இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை

புழுதி குப்பை உமி இவற்றின்
பழரசம் போலே - அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டா - நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக் கூறி - அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
நடுவிற் பாய்ச்சுகின்றோம்
செம்மை நிலையறியோம் பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்
இம்மை இன்பம் வேண்டல் - உயிரின்
இயற்கை என்றறியோம்

கூண்டிற் கிளி வளர்ப்பர் - இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவர் - அவற்றின்
விருப்பத்தையறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை ஐயகோ
அடிமைப் பெண்கதியே!

Reply
#63
ரமா கவிதை நன்று. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#64
ரமா கவிதை அச்சா... மேலும் எதிர்பார்க்கிறோம்..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
கவிதை சூப்பர் ரமாஅண்ணா

Reply
#66
உண்மை சுடுகிறது... பாததிதாசனின் கைம்(பெண்)மை கவிதை அருமையானது.. நண்றி ரமா..
::
Reply
#67
பாரதிதாசனின் கவிதைகள் அருமை. தொடர்ந்து தாருங்கள் ... நன்றி தங்கையே...
Reply
#68
தெரியாத கவிதைகளை அறிய தந்தமைக்கு நன்றி ரமா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#69
கைம்மைத் துயர்

பெண்கள் துயர் காண்பதற்க்கும் கண்ணிழந்தீரோ!
கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ!

பெண்கொடி தன் துணையிழந்தால்
பின்ப துணை கொள்வதிலே
மண்ணில் உமக் காவதென்ன வாழ்வறிந்தோரோ?
வாழ்வறிந்தோரோ! மங்கை மாரை ஈன்றோரோ?

மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கைநல்லாள் என்ன செய்வாள்? அவளை நீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்!

பெண்டிழந்த குமரன் மனம்
பெண்டு கொள்ளச் செய்யும் எத்தனம்
கண்டிருந்தும் கைம்பெண் என்ற கதை சொல்லலாமோ?
கதை சொல்லலாமோ? பெண்கள் வதை கொள்ளலாமோ?

துணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ?
சுகம் வேண்டா திருப்பதுண்டோ அவர்கள் உள்ளம்?
அணையாத காதலனை அணைக்கச் சொன்னீர்
அணை கடந்தால் உங்கள் தடை எந்த மூலை?

பெண்ணுக்கொரு நீதி கண்டீர்
பேதமெனும் மது வை யுண்டீர்
கண்ணிலொன்றைப் பழுது செய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமி ழாதோ புவி தான் பழியாதோ?

Reply
#70
இறந்தவன் மேற் பழி

அந்நிய காலம் வந்ததடியே! பைந்தொடியே
இளம்பிடியே புங்கொடியே

சிந்தை ஒன்றாகி நாம இன்பத்தின் எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தக் தொல்லை
வந்ததே இனி நான் வாழ்வதற் கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே அதை இன்றே
குணக்குன்றே கேள்நன்றே

குடும்பிணி யாளன் நான் இறந்த பின் மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே பழி என்றன் மீதே
அடஞ் செய்யும் வைதிகம் பொருள் படுத் தாதே
ஆசைக் குரியவனை நாடு மகிழ்வோடு தார் சூடு
நலம் தேடு!

கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால்
கசந்த பெண் ஆவது விந்தை தான் புவி மேல்
சொற்கண்டு மலைக்காதே உன் பகுத் தறிவால்
தோஷம் குணம் அறிந்து நடப்பாய் துயர் கடப்பர்ய
துணை பிடிப்பாய் பயம் விடுப்பாய்

Reply
#71
ம்ம் அழகான கவிதைகள்..ரமாக்கா..நன்றி
..
....
..!
Reply
#72
பெண்ணுக்கொரு நீதி கண்டீர்
பேதமெனும் மது வை யுண்டீர்
கண்ணிலொன்றைப் பழுது செய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமி ழாதோ புவி தான் பழியாதோ?


ம்.ம்.ம். எனக்கு பிடித்த வசனம்.
Reply
#73
கவிதைகள் நல்லாயிருக்கு... நன்றி ரமா அக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#74
உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும் எனது நன்றிகள்

Reply
#75
கைம்மை நீக்கம்

நீ எனக்கும் உனக்கு நானும் - இனி
நேருக்கு நேர் தித்திக்கும் பாலும் தேனும்

தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
நேய மாக அமைவுற உறுதிசொல் அடி
கைம்பெண் என் றெண்ணங் கொண்டே
கலங்கினா யோகற் கண்டே
காடு வேகு வதை ஒரு மொழியினில்
மூடு போட முடியுமோ உரையடி ததி

பைந்தமி ழைச்சீ ராக்கக்
கைம்மை என் னும் சொல் நீக்கப்
பறந்து வாடி அழகிய மயிலே
இறந்த கால நடைமுறை தொலையவே

பகுத்தறிவான மன்று
பாவை நீஏறி நின்று
பாரடீ உன் எதிரினிற் பழஞ் செயல்
கோரமாக அழிந்தொழிகுவதையே

கருத்தொரு மித்த போது
கூட்டுக்கள் எனப தேது
கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
செம்மை யாகும் படி செய் மனதுவை அடி

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)