Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தூவானம்..........
#1
<span style='color:blue'>
<img src='http://img421.imageshack.us/img421/3633/x1pxoywqu4sjf7jsctlrri7xk9fxky.jpg' border='0' alt='user posted image'>
பயணம்
தொடங்கினேன்...
தூறலும் தொடங்கியது

அம்மா சொன்னவ
''மழையில நனையாதை''
எண்டு!

ஒதுங்க
இடம் தேடி...ஓடி...
கடைசியில் - ஒரு
தாவாரம்..
ஒதுங்கினேன்........



தாவாரம் வழியே
தூவானம் வர
உடல் நனைந்தது....

மனம் அடித்துக் கொண்டது...

அம்மா சொன்னவ...
''மழையில நனையாதை''
எண்டு!
</span>

தலைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
Reply
#2
தூவானம்! பார்க்க, படிக்க அழகாகத்தான் இருக்கிறது.
இன்னும் சில வரிகள் எழுதவேண்டும்போல் உள்ளது.

இது இலண்டனில் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள்?

Reply
#3
தங்கள் பாராட்டுக்கு நன்றி இன்னும் சிலவரிகள் எழுதலாம்...
ஆனால் நான் சொல்லவந்த விடயம் இதற்குள் அடங்கிவிட்டதென நினைத்தேன்....அத்துடன் வரிகள் குறைவாக இருப்பது தான் எனக்குப்பிடிக்கும்,
இது எனது தோழி ஒருத்தி அனுப்பிய மழைக்காட்சி...எனக்குப்பிடித்த காட்சிப்படம்...தங்களுக்கும் பிடித்துள்ளது நன்றி
<img src='http://img137.imageshack.us/img137/9282/x1p27ma0dudhs9poxmm6j6yey45l8r.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
உங்கள் கவிதைகளில் ஒரு மர்மத்தை வைத்து எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.
தூறல் படம் நல்லாய் இருக்கின்றது.

Reply
#5
நன்றி ரமா...மழைக்கென்று ஒதுங்கி தூவானத்தில் நனைந்ததுண்டு...மழை என்பதை புரிந்துகொண்டால் இதில் மர்மம் ஏதும் இல்லை.


<img src='http://img102.imageshack.us/img102/295/x1pbglkvql4bvyyjwpmaxbugquojkp.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
உங்கள் கவிதை நன்றாகவுள்ளது!
வாழ்த்துக்கள் பலகோடி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)