02-06-2006, 09:56 AM
<b>வெலிக்கந்தை கடத்தலை கண்டித்து மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்று முதல் பகிஷ்கரிப்பு</b>
வெலிக்கந்தையில் வைத்து ஆயுத தாரிகளால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் விடுவிக்கப்படாததைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் இன்று திங்கட்கிழமை முதல் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளது.
இது தொடர்பாக இணையம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தம், யுத்தம், வறுமையென பல்வேறு பட்ட அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு வேதனைகளே எஞ்சிய நிலையில் வாடிக் கொண்டிருக்கும் எம் மக்களின் மீட்சிக்காக அரச உதவிகள் மிக மிக தாமதமாகக் கிடைத்து வந்த வேளைகளில் அரச சார்பற்ற மனித நேய அமைப்புகளே காத்திரமான சேவைகளை வழங்கி வந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களே களத்தில் நின்று சேவை புரிந்து வருகின்றனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்காகவும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்காகவும் தங்களை அர்ப்பணித்து சேவை புரிந்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக நடத்தப்பட்டு வரும் இனந்தெரியாத தாக்குதல்களினால் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம், மீதான தாக்குதல்களினால் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணி புரிவதற்கு சேவையாளர்கள் அஞ்சுகின்றனர். இதனால் மாவட்டத்தில் சுய தொழில் அபிவிருத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணிபுரியும் செல்வி தனுஸ்கோடி பிரேமினி, சண்முகநாதன் சுவேந்திரன், த.வசந்தராஜ், கைலாயபிள்ளை ரவீந்திரன், த.பகீரதன் ஆகிய உத்தியோகஸ்தர்கள் வெலிக்கந்தையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டதுடன், மேலும் ஐவர் கடத்தப்பட்டு மூவர் விடுவிக்கப்பட்ட போதும், மொத்தமாக ஏழு பேர் காணாமல் போனமை நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்களைப் பெரிதும் விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளதுடன் இவர்களின் சேவை நாட்டத்தினையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
03.02.2006 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டத் தீர்மானத்தின் படி இந்த நிராயுத பாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கடத்தலில் இருந்து இவர்களை விடுதலை செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும், சர்வதேச சமூகமும், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்புகளும் உடனடியாக இதைக் கருத்திற் கொண்டு இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையினை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்று முதல் மாவட்ட ரீதியான அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் தன்னார்வச் சேவைகளையும் பகிஷ்கரிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளன.
இதற்கமைவாக அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்களின் ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>

"
"
"