Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாவா (JAVA) கற்போம்
#41
ஐயோ தப்பா நினைக்கிறதா...
சோபனாவிற்கு எவையெவை தெரியும்.
அவற்றை நீங்கள் தொடங்குங்கள். நான் உங்களோடு இணைந்து உதவுகிறேன். சரியா. நீங்கள் பிளாஸ் தொடங்கினால் நான் யாவா தொடரலாம். என்ன நீங்கள் தயாரா?


Reply
#42
அப்படியில்லை எனது அண்ணாவினுடைய இணையத்தில் ( அண்ணாவும் தமிழ் மூலம் கணனி கற்கோம் என ஒரு இணையம் வைத்துள்ளார்) அங்கு நான் Flash கற்பது பற்றிய விளக்கம் தான் கூறிக்கொண்டு இருக்கிறேன் அதனால் தான் கேட்டேன் தமிழினி அக்காவிற்கு Flash MX வேண்டுமாம் அதற்கு சிறிது காலம் வேண்டும் ஏன் என்றால் இப்போது வேலை செய்யும் இடத்திலும் பொறுப்புக்கள் சிறிது அதிகம்... அதனால் தான் சிறிது காலத்துக்குள் ஆனால் கட்டாயமாக விளக்கங்கள் தருகிறேன் இளைஞன் அண்ணா Java பற்றிய சிறு வினாக்கள் சிறு (எளிய) விளக்கங்களுடன் இருக்கின்றன... நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன் ஏன் என்றால் எனது வேவை 50%Java + 50% Asp developpement தான்
நன்றி
Reply
#43
நன்றி சோபனா. தமிழ் மூலம் கணினி கற்போம் என்பது பற்றிய உங்கள் அண்ணாவின் இணையத்தள முகவரியை இங்கு எழுதலாம் தானே?

உங்கள் வேலை யாவா + asp யா. மிக நல்லது. அப்படியென்றால் உங்களிடம் நாங்கள் கற்பதற்கு நிறைய இருக்கிறது. முடீந்தால் நீங்கள் கற்ற கல்வி, தற்போது வேலை பார்ப்பது பற்றி "அங்கத்துவர்க்கு மட்டும்" பகுதியில் "என்ன படிக்கிறீர்கள்?" தலைப்பின் கீழ் உங்கள் விபரத்தையும் எழுதுங்களேன். அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி


Reply
#44
வணக்கம் இளைஞன் நீங்கள் கூறியது போல் என்ன படிக்கிறீர்கள் என்ற பகுதியில் எழுத முயற்சிக்கிறேன்
நன்றி
Reply
#45
நல்லது இளைஞன் சோபனா அக்கா .. நானும் இப்படியாவது கொஞ்சம் முன்னேறுவம்,..... ரீம்வாவர் , பிளாஸ் , யாவா மூன்றும் மிக முக்கியமானது ... யார் என்றாலும் எப்படி என்றாலும் எழுதுங்க நாங்க மாணவர்கள் .. சோபனாக்க இதெல்லாம் தெரியும் என்று சொல்லவே இல்லை இனி அக்க இல்லை ரீச்சர்.. இளைஞன் என்று இனியும் கூப்பிடேலாது குருவே எப்ப ஆரம்பம் ..? வீட்டுப்பாடம் தரமாட்டீர்கள் தானே..? Cry
[b][size=18]
Reply
#46
வணக்கம் நண்பர்களே...

யாவா கற்போம் பகுதியை மீண்டும் தூசி தட்டுகிறேன். எத்தனை நாட்களுக்குத் தொடரமுடியும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் இன்று யாழ் கருத்துக்களத்தில் இத்துறைசார்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். நான் இடையில் விட்டாலும், மிகுதியை அவர்கள் தொடர்வார்கள் என நம்புகிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஏற்கனவே முன்னைய பகுதிகளில் எழுதியது போன்று யாவா கற்பதற்கு வசதியாக "JAVA" மென்பொருளை(யாவாவை) கணினியில் நிறுவுங்கள் (Installation). அல்லது சுருக்கமாக கீழெ எழுதுகிறேன். அதன் அடிப்படையில் நிறுவுங்கள் (Installation). விளங்காதவற்றைக் கேளுங்கள். சோபனாவும் இத்துறையில் பணிபுரிபவர், எனவே அவரும் விளக்கம் தருவார்.

<b>யாவா நிறுவுதல்</b>

1. நான் ஏற்கனவே முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டது போன்று உங்கள் கணினியின் செயற்திறன் போதுமானதாக இருக்கவேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

2. http://java.sun.com/j2se/1.4.2/download.html என்னும் முகவரிக்கு சென்று netBeans (J2SE v 1.4.2_07 SDK with NetBeans 4.0 Bundle) மென்பொருளைத் தரவிறக்குங்கள்.

3. முன்னைய தொடரில் குறிப்பிட்டது போல் தனித்தனியே எதையும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. எனவே இப்பொழுது நீங்கள் தரவிறக்கியதை நிறுவுங்கள். (நிறுவும் போது அது எங்கு நிறுவவேண்டும் எனபதைத் தானாகவே தெரிவுசெய்து காட்டும், அதில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடருங்கள்.) நிறுவிய பின் உங்கள் வன்தட்டின் C: பரிவில் "<b>C:\j2sdk1.4.2_07</b>" இப்படியொரு கோப்பு (FOLDER) இருக்கும்.

4. அடுத்து அதற்கான Documentation ஐயும் தரவிறக்குங்கள். அது ZIP கோப்பாக இருக்கும். எனவே அதனைப் பிரித்து <b>C:\j2sdk1.4.2_07\</b> இற்குள் சேமித்து வையுங்கள்.

அனைத்தையும் சரியாக செய்திருந்தால், பின்வருமாறு உங்கள் <b>C:\j2sdk1.4.2_07</b> பிரிவு இருக்கும்:

<img src='http://www.yarl.com/forum/files/java1.jpg' border='0' alt='user posted image'>

5. சரி இனி யாவா மொழியில் எழுதிப் பயில்வதற்கு எமக்கு ஒரு செயலி வேண்டுமல்லவா. நமது ஆரம்பப் பயிற்சிக்கு இருக்கவே இருக்கிறது <b>Notepad</b> அல்லது <b>Editor</b>. அல்லது இதற்கென்று உள்ள சிறப்பான, இலவசமான செயலி ஒன்றை இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

http://www.jcreator.com/download.htm என்னும் முகவரிக்கு சென்று <b>JCreator LE version (build 3.50.011)</b> என்னும் செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்.

தொடரும்...[/b]


Reply
#47
நான் குறிப்பிட்டது போல அனைத்தையும் நிறுவிவிட்டீர்களா?

பரீட்சித்துப் பார்ப்போமா?

பின்வரும் DOS கட்டளை மூலம் பரீட்சித்துப் பாருங்கள்.

1. உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள DOS window வைத் திறவுங்கள்.

2. அதில் <b>cd C:\j2sdk1.4.2\bin</b> என்னும் கட்டளையை மேற்கொள்ளுங்கள். (cd C:\j2sdk1.4.2\bin என்று எழுதிவிட்டு Enter button ஐ அழுத்துங்கள்)

3. அது பின்வரும் தோற்றத்தை காண்பிக்கும்: C:\j2sdk1.4.2\bin> | அதற்கு அருகில் javac என்னும் கட்டளையை எழுதி Enter button ஐ அழுத்துங்கள்.

C:\j2sdk1.4.2\bin>javac

சரியாக செய்திருந்தால், எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கிட்டத்தட்ட 15 வரிகளில் சிறு அறிமுகத்தைக் காண்பிக்கும்.


<img src='http://www.yarl.com/forum/files/java2.jpg' border='0' alt='user posted image'>

தொடரும்...


Reply
#48
நன்றியண்ணா.. கள உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. பலருக்கு பயன் உடையதாய் இருக்கும் என்று நம்புறேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
<b>PATH Variable</b>

Path Variable உங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் System என்கிற இடத்தில் ஒரு பகுதியில் எழுதப்பட்டிருக்கும். இதில் யாவாவினுய முகவரியும் இருந்தால் நல்லது. javac.exe, java.exe, javadoc.exe போன்றவற்றை வேறு வேறு கோப்புகளில் இருந்தாலும் முழு முகவரியையும் எழுதாமல் இயக்க முடியும்.

அப்படி இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. உங்கள் அனைத்து பயிற்சிகளையும் C:\j2sdk1.4.2_07\bin என்கிற கோப்புக்குள் (Folder) சேமித்து, தொகுத்து, இயக்கலாம்.

Path Variable இல் யாவாவின் முகவரி உள்ளதா என்பதைப் பார்க்க:

1. DOS window ஐத் திறவுங்கள்.
2. அதில் cd C:\j2sdk1.4.2\bin என்கிற கட்டளையைக் கொடுங்கள்.
3. பின்னர் அதில் path என்கிற கட்டளையைக் கொடுங்கள்.
C:\j2sdk1.4.2\bin>path

<img src='http://www.yarl.com/forum/files/java3.jpg' border='0' alt='user posted image'>

மேலே சிவப்பு நிறத்தால் கோடிடப்பட்டதைப் போன்று ஏதேனும் உள்ளதா? இருந்தால் சரி. இல்லாவிட்டால் மிகுதியைத் தொடருங்கள்.

4. Start > Settings > Control Panel > System என்பதைத் திறவுங்கள்.
அங்கு Environment அல்லது Advanced (யேர்மன் மொழியில் Erweitert) என்று ஒரு பிரிவு இருக்கும் அதனை அழுத்துங்கள்.

5. அங்கே Environment Variables (யேர்மன் மொழியில்: Umgebungsvariablen) என்று இருக்கும். அதனை அழுத்தித் திறவுங்கள்.

6. அங்கே இரண்டாவது பிரிவில் (Systemvariable) Path என்பதைத் தெரிவு செய்துவிட்டு Edit என்பதை அழுத்துங்கள்.

7. அங்கே இடப்பட்டிருக்கும் முகவரிகளின் முடிவில் இதனையும் இணையுங்கள் <b>;C:\j2sdk1.4.2_07\bin</b> | (" ; " இந்த குறியீட்டை மறக்கவேண்டாம்.) OK என்பதை அழுத்தி சேமித்துக்கொள்ளுங்கள்.

விளக்கப்படம்:

<img src='http://www.yarl.com/forum/files/java4.jpg' border='0' alt='user posted image'>

இனி மீண்டும் 1 இலிருந்து 3 வரை சொன்னவற்றை மீண்டும் செய்து பாருங்கள். இப்பொழுது முதற்படத்தில் உள்ளது போன்று முகவரியைக் காட்டுகிறதா?

தொடரும்...


Reply
#50
மேலதிக உதவிகள் | விளக்கங்கள் | யாவா பயிற்சி:

JavaTM 2 SDK, Standard Edition Documentation

B. Eckel: "Thinking in Java", Prentice Hall, 2003

H.-P. Gumm, M. Sommer: Einführung in die Informatik, Oldenbourg, 2002

S. Middendorf, R. Singer, J. Heid: "Java Programmierhandbuch und Referenz für die Java-2-Plattform, Standard Edition, dpunkt.verlag, 2003

The Java Tutorial, Third Edition. A Short Course on the Basics. M. Campione et al., 2001, Addison-Wesley


Reply
#51
நன்றி இளைஞன் ..
[b][size=18]
Reply
#52
இளைஞன் அண்ணா, சேமித்து வைத்துக் கொண்டேன். பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய அற்புத படைப்பு இது. இனிவரும் இளைய சமுதாயத்துக்கு நல்ல கல்விப்பாடம் இது. இதேபோல HTML, EJB, C, C++, C# என ஒவ்வொன்றாக நேரம் ஒத்துழைக்கையில் தாருங்கள் அண்ணா.
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
Reply
#53
வணக்கம் மூர்த்தி அண்ணா இவ்விணையத்தில் ஏற்கனவே HTML பகுதி ஆரம்பிக்கப்பட்டு இலகுவான விளக்கங்களுடன் தொடர்கள் உள்ளன.. அதை பார்த்து பயனடையுங்கள்...
மற்றும் C# , EJB (Enterprise JavaBeans Technology) கேட்டு இருந்தீர்கள் எனக்குத்தெரியவில்லை அவற்றை எத்தேவைக்காக கேட்டீர்கள் என்பதை... மற்றும் அங்கத்தவர்களுக்கு மட்டும் எனும் பகுதியில் என்ன படிக்கிறீர்கள்?? எனும் பகுதியில் விரும்பின் உங்களைப்பற்றி எழுதிவிடுங்கள்... உங்களது வதிவிடம் சிங்கப்பூர் என இருந்தது அப்படியாயின் விளக்கங்கள் தமிழ் ஆங்கிலம் கலந்து தானே தரப்படவேண்டும்... என்னிடம் C# தமிழ் ஆங்கிலமற்ற வேறு ஒரு ஐரோப்பா மொழியில் உள்ளது.... :-(
நன்றி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)