தலைவன் தந்த சொத்தென்று
நஞ்சு மாலை கொண்டீர்
அவன் வழிகாத்து நின்று
போராட்ட இலட்சியம் எட்ட...!
அங்கு ஆணென்றும் பெண்ணென்றும்
வேறுபாடு காட்டி நின்றீரோ....!
இல்லை...
நாம் பெண்டிர்
சமத்துவத்துக்கு
எமக்கும் ஒரு தனித்தலைமை
அன்றில் நஞ்சுமாலை அணியோம்-என்று
அடம்பிடித்திருந்தால்
போராட்டம் தானும் நெறிப்பட்டிருக்குமோ....?!
இங்கோ.....
ஆண் தலைவனாக
பெண் தலைவியாக
வாழ்க்கைப் போராட்டம் வழிநடத்தப்பட்டு
வாழ்வில் வெற்றி வாகை சூட
ஆண் தரும் அன்புக் கயிறு
பற்ற மறுப்பதேனோ....???!
வேறுபாடும் வெறுப்புணர்வும்
காட்டி நிற்பதேனோ...!
இயற்கை தந்த சுதந்திரம்
ஆணுக்கும் பெண்ணிற்கும்
சமன்...!
அப்படி இருக்க...
ஆண் ஏன் பறிக்கிறான்
அவன் தலைவி உரிமை....!
அது கொண்டு அவன் சாதிப்பது என்ன...?!
பெண்கள் நீவிர்
உம் உரிமையறியா வாழும் நிலை
எனியும் வேண்டாம்...!
உமதுரிமைகள் ஆணிடமில்லை
அவை கட்டின்றி
சுதந்திரமாய்த்தான் உளது...!
குருட்டுத்தனமாய் சுதந்திரம் என்று
ஏதேதோ கொண்டு சீரழியாதீர்...!
தகுதி கண்டோர் வழிகாட்டுதல் கொண்டு
இருந்தும் எடுக்குத்தவறியதை
தலைவன் வெறுப்பின்றி
பெற்று சீருடன் வாழ முனையுங்கள்...!
எனியாவது....
சிந்தித்து வாழ்வீர் சீருடனே....!
பகைமை கொண்டு
வாழ்வே சீரழிய வேண்டாம்...!
வாழ்வு வாழ்வதற்கே அன்றி
வாடுவதற்கல்ல....!
ஒன்று கொள்ளும் நெஞ்சில்
எதுவும் நிலையில்லை இப்பாரினில்
உடல் கொண்ட
ஆன்மா நிலை மாறும் வரை....!
அதுவரை வாழ்ந்திடும்
வேண்டாத வருத்தங்கள் இன்றி
ஒழுக்கம் என்ற உயர் நெறி காத்து
மனிதராய்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>