08-06-2004, 12:24 PM
[b]<span style='color:red'>மறுமலர்ச்சிப் பயணத்தை ஆரம்பித்தார் வைகோ
[size=15]தமிழகம் முழவதும் வாழும் மக்களைச் சந்தித்து உரையாடி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மறுமலர்ச்சிப் பயணத்தை மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலர் வைகோ நேற்று ஆரம்பித்தார்.
மாநிலம் முழவதும் சுமார் 1,025 கி.மீ. பாதயாத்திரையாகச் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள வைகோ, அதற்கான ஆரம்பமாக திருநெல்வேலி காந்தி சிலை முன்பாகக் கூடி, அங்கிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அவருடன் ம.தி.மு.க.வைச் சேர்ந்த சீருடை அணிந்த தொண்டர்களும் இந்தப் பயணத்தில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் இந்தப் பாதயாத்திரை செப்டம்பர் 15ம் திகதி அண்ணா பிறந்த தினமன்று நிறைவடையும். இந்தப் பயணத்தின்போது நதிகளை இணைப்பதன் முக்கியத்துவம், திராவிட இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் கொள்கைகள், மதவாதத்தை வேரறுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பொதுவாழ்வில் ஊழல் தடுப்பு போன்றவை பற்றி வைகோ மக்களுக்குப் பரப்புரை செய்யவுள்ளார்.
இதுதவிர, தமிழ் மொழியின் பெருமை, தமிழ் மண்ணின் மேல் மக்களுக்கு இருக்க வேண்டிய பற்றும் உறுதியும் போன்ற தமிழ் மாண்பை வளர்த்தெடுக்கும் பணியையும் இப் பயணத்தில் வைகோ முன்னெடுப்பார் என்று தெரியவருகிறது.
அ.இ.அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான பிரச்சாரமாகவும் இந்தப் பயணத்தைப் பயன்படுத்த வைகோ திட்டமிட்டுள்ளார் என்று ம.தி.மு.க.வின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
</span>puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>