02-16-2005, 10:35 AM
கடல்கோளின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நிகழும் வியத்தகு சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம்
அம்பாறை மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் அதிசயங்கள் பல ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இதனால் மக்கள் பீதியுடனும், பரபரப்புடனும் காணப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களாக கல்முனை, காரைதீவு பிரதேசங்களில் மாமரங்களில் இருந்து தேன் வடிந்து கொண்டிருக்கின்றது. எஸ்.எம். சுபைர் என்பவரது வீட்டிலும் காரைதீவில் மாணிக்கம் வல்லிபுரம், சாமித்தம்பி வேல்முருகு என்பவர்களது வீட்டிலுள்ள மாமரங்களிலிருந்தே தேன் வடிந்து கொண்டிருக்கின்றது.
இம்மாமரங்களில் மழைத்தூறல்களைப் போல் காலை, பகல் நேரத்தில் தேன் தூறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. பூத்தமரம், பூக்காத மரம் என பல மாமரங்களில் இருந்து இத் தேன் வடியும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனை பார்ப்பதற்கென்றே தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
அத்தோடு, அண்மையில் மருதமுனை, கல்முனைக் குடியேற்ற பகுதிகளில் கிணற்றுநீர் கொதித்துக் கொண்டிருந்தது.
சில இடங்களில் நிலம் வெடித்து அதிலிருந்து நீரும் வெளியேறியது.
இவை தவிர சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த மாபிள் தள ஓடுகள் மூன்று, நான்கு அடி உயரத்துக்கு மேலெழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்களை இரவு நேரத்தில் வெள்ளைச் சேலை கட்டிய நீண்ட தலைமுடி கொண்ட ஒருபெண் மக்களோடு கதைத்து திரிவதாகவும், அவர் பின்னர் மறைந்து வருவதாகவும் அங்குள்ளவர்களில் சிலர் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Thinakural

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>