Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
வெற்றியை நோக்கி
வீறுநடை போட ஆரம்பிக்க
தடைக்கற்கள் முன்னிருந்து
தடுக்கி விழுத்தும் போதும் கூட
துவண்டிடாமல் துள்ளி எழுந்து
தொடர்கிறேன் பயணத்தை
காலம் கனியட்டும் என
காத்திருக்கவில்லை நான் - காரணம்
காத்திருக்காது காலம்
எனக்காக - அதனால்
முயற்சி செய்கிறேன்
மீண்டும் மீண்டும்
விழுந்தது எத்தனை தரமென
எண்ணிக்கை தெரியவில்லை
வெற்றியை விட
வீழ்ச்சியே அதிகம்
என தெரியும்
இருந்தாலும் விடா முயற்சியுடன்
தொடர்கிறேன் பயணத்தை
எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
" "
" "
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
அருமை மழலை.......வாழ்த்துக்கள்..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
_________________
அருமையான கவிவரிகள் மழலை. இதை மனதில் கொண்டால் எல்லாம் சுகமே.. நாங்கள் நடக்கபழகும் போது எத்தனை முறை விழுந்து அழுதிருப்பம். சைக்கிள் ஓடப்பழகும் போது விழுந்தெழுந்திருப்பம். விழுகிறமே என்று ஒதுங்கியிருந்தால் நடந்திருக்கலாமா..?? அருமை
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தோல்விக்குத் தோல்வி... தேடிட மனத் தைரியம் மட்டுமல்ல...முயற்சியும் அவசியம்.... தைரியத்தோடு முயலுங்கள் தோல்விகள் தோல்வியைத் தழுவுவது உறுதி...!
நல்ல கவிதை...வாழ்த்துக்கள் மழலைத் தங்கையே...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 91
Threads: 5
Joined: Feb 2005
Reputation:
0
உங்கள் 'வெற்pறியின் முதல் படி தோல்வி' கவிதை மிக நன்றாக இருக்கின்றது. இந்தக் கவிதையை வேறு இடங்களில் அல்லது சஞ்சிகைகளில் பிரசுரிக்க அனுமதியளிப்பீர்களா? எனது மின்னஞ்சல் முகவரி:yalie@hotmail.com நன்றி!
!!
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
[quote="Malalai"] 8) 8) 8)
காலம் கனியட்டும் என
காத்திருக்கவில்லை நான் - காரணம்
காத்திருக்காது காலம்
எனக்காக - அதனால்
முயற்சி செய்கிறேன்
மீண்டும் மீண்டும்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அருமையான கவிவரிகள்
மழலைக்குட்டிக்கு எனது வாழ்த்துக்கள்!
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
சண்முகி அக்கா, சாந்தி அக்கா, குளம் அண்ணா, தமிழினி அக்கா, குருவி அண்ணா, அஜீவன் அண்ணா, யாழி, ஈழப்பிரியன் அண்ணா, அத்துடன் மன்னா( தந்தையே என்னை மகளாக ஏத்துக்கிட்டிங்களா? நீங்க ஏற்றுக் கொள்ளாட்டியும் தொடர்ந்து போராடுவன் தெரியும் தானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) நன்றிகள் வாழ்த்துகளுக்கு
தோல்விகள் இல்லாத வாழ்க்கையே இல்லை...சின்ன சின்ன தோல்விகள் வரும் போது கூட நாம் சலிக்கக் கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொள்வது வழக்கம்....அதனால் தான் எழுந்த கவிதை இது....
என்ன யாழி நீங்க...சும்மா கிறுக்கினது ஒரு நாள் ஏன் என்றால் நான் செய்தது எல்லாமே தப்பு தப்பா வந்திச்சா...அப்பிடியே இதை எழுதினேன் நம்பிக்கை இழக்காம இருப்பதற்கு.....நல்லது என நினைச்சா நாலுபேருக்கு பயன் படட்டுமே...நீங்க பாவிக்கலாம்....
" "
" "
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
மழலை கவிதை அட்டகாசம் வாழ்த்துக்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
நன்றி விசயன் அண்ணா எங்க போனியள் இவ்வளவு நாளா?
" "
" "
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
Malalai Wrote:நன்றி விசயன் அண்ணா எங்க போனியள் இவ்வளவு நாளா?
, மழலை களத்தில் வந்து பார்ப்பென் எழுதவதற்கு நேரம் கிடைப்பதில்லை செல்லத்தின்ரை கவிதையை பார்த்ததும் எழுதுவேண்டும்போல் இருந்தது அதுதான் உடனை எழுதிவிட்டன்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]