Yarl Forum
தோல்வியே வெற்றியின் முதற்படி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தோல்வியே வெற்றியின் முதற்படி (/showthread.php?tid=4718)



தோல்வியே வெற்றியின் முதற்படி - Malalai - 03-20-2005

வெற்றியை நோக்கி
வீறுநடை போட ஆரம்பிக்க
தடைக்கற்கள் முன்னிருந்து
தடுக்கி விழுத்தும் போதும் கூட
துவண்டிடாமல் துள்ளி எழுந்து
தொடர்கிறேன் பயணத்தை

காலம் கனியட்டும் என
காத்திருக்கவில்லை நான் - காரணம்
காத்திருக்காது காலம்
எனக்காக - அதனால்
முயற்சி செய்கிறேன்
மீண்டும் மீண்டும்

விழுந்தது எத்தனை தரமென
எண்ணிக்கை தெரியவில்லை
வெற்றியை விட
வீழ்ச்சியே அதிகம்
என தெரியும்
இருந்தாலும் விடா முயற்சியுடன்
தொடர்கிறேன் பயணத்தை

எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...


- shanmuhi - 03-20-2005

Quote:எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...

மனதைரியம் தரும் வார்த்தைகள்...
வீழ்வது எல்லாம் எழுவற்காக
தோல்விகள் எல்லாம் வெற்றிக்காகத்தான்...

கவிதை அருமை மழலை. வாழ்த்துக்கள்...


Re: தோல்வியே வெற்றியின் முதற்படி - shanthy - 03-20-2005

Malalai Wrote:எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
மனம் துணிவாக இருக்கும்வரை தோல்விகளையே வெற்றிகளாக்கலாம். வாழ்த்துக்கள் மழலை.


- KULAKADDAN - 03-20-2005

அருமை மழலை.......வாழ்த்துக்கள்..........


- tamilini - 03-20-2005

Quote:எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
_________________

அருமையான கவிவரிகள் மழலை. இதை மனதில் கொண்டால் எல்லாம் சுகமே.. நாங்கள் நடக்கபழகும் போது எத்தனை முறை விழுந்து அழுதிருப்பம். சைக்கிள் ஓடப்பழகும் போது விழுந்தெழுந்திருப்பம். விழுகிறமே என்று ஒதுங்கியிருந்தால் நடந்திருக்கலாமா..?? அருமை
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-20-2005

தோல்விக்குத் தோல்வி... தேடிட மனத் தைரியம் மட்டுமல்ல...முயற்சியும் அவசியம்.... தைரியத்தோடு முயலுங்கள் தோல்விகள் தோல்வியைத் தழுவுவது உறுதி...!

நல்ல கவிதை...வாழ்த்துக்கள் மழலைத் தங்கையே...! :wink: Idea


Re: தோல்வியே வெற்றியின் முதற்படி - AJeevan - 03-20-2005

Malalai Wrote:விழுந்தது எத்தனை தரமென
எண்ணிக்கை தெரியவில்லை
வெற்றியை விட
வீழ்ச்சியே அதிகம்
என தெரியும்
இருந்தாலும் விடா முயற்சியுடன்
தொடர்கிறேன் பயணத்தை

.

அருமையான வரிகள்
வாழ்த்துகள் மழலை


- yalie - 03-20-2005

உங்கள் 'வெற்pறியின் முதல் படி தோல்வி' கவிதை மிக நன்றாக இருக்கின்றது. இந்தக் கவிதையை வேறு இடங்களில் அல்லது சஞ்சிகைகளில் பிரசுரிக்க அனுமதியளிப்பீர்களா? எனது மின்னஞ்சல் முகவரி:yalie@hotmail.com நன்றி!


Re: தோல்வியே வெற்றியின் முதற்படி - eelapirean - 03-20-2005

[quote="Malalai"] 8) 8) 8)

காலம் கனியட்டும் என
காத்திருக்கவில்லை நான் - காரணம்
காத்திருக்காது காலம்
எனக்காக - அதனால்
முயற்சி செய்கிறேன்
மீண்டும் மீண்டும்


- hari - 03-20-2005

அருமையான கவிவரிகள்
மழலைக்குட்டிக்கு எனது வாழ்த்துக்கள்!


- Malalai - 03-20-2005

சண்முகி அக்கா, சாந்தி அக்கா, குளம் அண்ணா, தமிழினி அக்கா, குருவி அண்ணா, அஜீவன் அண்ணா, யாழி, ஈழப்பிரியன் அண்ணா, அத்துடன் மன்னா( தந்தையே என்னை மகளாக ஏத்துக்கிட்டிங்களா? நீங்க ஏற்றுக் கொள்ளாட்டியும் தொடர்ந்து போராடுவன் தெரியும் தானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) நன்றிகள் வாழ்த்துகளுக்கு

தோல்விகள் இல்லாத வாழ்க்கையே இல்லை...சின்ன சின்ன தோல்விகள் வரும் போது கூட நாம் சலிக்கக் கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொள்வது வழக்கம்....அதனால் தான் எழுந்த கவிதை இது....

என்ன யாழி நீங்க...சும்மா கிறுக்கினது ஒரு நாள் ஏன் என்றால் நான் செய்தது எல்லாமே தப்பு தப்பா வந்திச்சா...அப்பிடியே இதை எழுதினேன் நம்பிக்கை இழக்காம இருப்பதற்கு.....நல்லது என நினைச்சா நாலுபேருக்கு பயன் படட்டுமே...நீங்க பாவிக்கலாம்....


- வியாசன் - 03-20-2005

மழலை கவிதை அட்டகாசம் வாழ்த்துக்கள்


- Malalai - 03-21-2005

நன்றி விசயன் அண்ணா எங்க போனியள் இவ்வளவு நாளா?


- kavithan - 03-21-2005

Quote:எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
நல்ல கவிதை மழலை . வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்கள் இது போன்ற கவிதைகள் புனையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மழலை என்றால் நடக்க எத்தனிக்கேக்கை விழுந்து எழும்பி தான் நடக்கும். பல்லும் இருக்காது உடைய, மீசையும் இருக்காது மண்பட... இப்ப அப்பு விழுந்தால் எப்படி எழும்பிறது .. ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- yalie - 03-21-2005

அனுமதிக்கு நன்றி மழலை!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Malalai - 03-21-2005

Quote:மழலை என்றால் நடக்க எத்தனிக்கேக்கை விழுந்து எழும்பி தான் நடக்கும். பல்லும் இருக்காது உடைய, மீசையும் இருக்காது மண்பட... இப்ப அப்பு விழுந்தால் எப்படி எழும்பிறது .. ஆ
வாழ்த்துக்கு நன்றி கவிதன் அண்ணா...என்ன லொள்ளா? பாவம் அப்பு....


- Malalai - 03-21-2005

Quote:அனுமதிக்கு நன்றி மழலை!!!!
பிரச்சனை இல்லை யாழி..அப்படியே எங்க போடுறியள் என்டு போடுங்கவன் என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 03-22-2005

Malalai Wrote:நன்றி விசயன் அண்ணா எங்க போனியள் இவ்வளவு நாளா?

, மழலை களத்தில் வந்து பார்ப்பென் எழுதவதற்கு நேரம் கிடைப்பதில்லை செல்லத்தின்ரை கவிதையை பார்த்ததும் எழுதுவேண்டும்போல் இருந்தது அதுதான் உடனை எழுதிவிட்டன்


- Malalai - 03-22-2005

விசயன் அண்ணா...என்ன நீங்கள்...ஒரு 5 நிமிடம் எடுத்து சொல்ல மாட்டிங்களா என்ன...சரி சரி....நேரம் இருக்கும் போது வாங்க...சரியா விசயன் அண்ணா..... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->