Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வாழ்க் ஈழத் தமிழகம்,
வாழ்க இனிது வாழ்கவே
மலை நிகர்த்திவ்வுலகில் என்றும்
தலை நிமிர்ந்து வாழ்கவே
முடிப்புகள்
அமிழ்தை வென்ற மொழியினள்
அருள் கனிந்த விழியினள்
அரிய பண்பு நிதியினள்
அவனி மெச்சும் மதியினள்
மமதை கொண்ட பகைவரும்
வணங்கும் அன்பு விதியினள்
மக்கள் கொண்ட பதியினள்
... வாழ்க
வானம் பாடி போல்மீன்
கானம் பாடும் வாவிகள்
மலர்க் கனி க்ய்லுங்கிடும்
எழில் மிகுந்த சோலைகள்
தேனும் பாலும் பாய்ந்திடச்
செந்நெல் பொலியும் கழனிகள்
உய்வ ளிக்கும் மாநிலம்
... வாழ்க
பட்டிப் பளை, மகாவலி,
பயில் அருவிமுத் தாறுகள்
பல வனங்கள் பொலியவே
எழில் நடஞ்செய் துலவிடும்
மட்ட களப்பு, யாழ்நகர்,
மாந்தை, வன்னி, திருமலை,
மிகிழ்வோடு மலைத் தமிழர்கள்
மலரடி தொழும் இனியவள்
... வாழ்க
நன்றி: ஈழத்தேவதையின் அகம்
Posts: 40
Threads: 1
Joined: Jan 2005
Reputation:
0
போகின்ற ஈழமும் வருகின்ற ஈழமும்
போகின்ற ஈழம்
எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ
ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ
பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ
படையிலாது துஞ்சினாய் போ போ போ
வலி மிகுந்த புலிகளை நம்பாது
வடவர் தன்னை நம்பினாய் போ போ போ
கிலி மிகுந்த மதியினால் மென் மேலும்
கீழ்மையில் உழன்றனை போ போ போ
விதி கெடுத்த மதியினாய் போ போ போ
வீணிலே உறங்கினாய் போ போ போ
சதி நிறைத்த உறவினாய் போ போ போ
சாவிழிம்பில் நின்றனை போ போ போ
பொதி நிறைத்த தீர்வுகள் மேல் ஆர்வம்
போக்கி நின்று தேங்கினாய் போ போ போ
எதிரி தன்னை நம்பினாய் போ போ போ
இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ
பலமிழந்த தோளினாய் போ போ போ
பழமை பேசு தொழிலினாய் போ போ போ
குலமிழந்த நிலையினாய் போ போ போ
குருதி கண்டு அஞ்சினாய் போ போ போ
நிலமிழந்து அகதியாயப் பார் மீதில்
நிலையிலா துழன்றனை போ போ போ
சலமிழிந்து பகைவர்முன் நாய்போலே
சமதை வாழ்வைக் கெஞ்சினாய் போ போ போ
வருகின்ற ஈழம்
புலி பொறித்த கொடியினாய் வா வா வா
புதிய பெண்மை நடையினாய் வா வா வா
ஒளி படைத்த மொழியினாய் வா வா வா
உரிமை கொண்டிலங்குவாய் வா வா வா
வலிமை மிக்க படையினை உன்னோடு
வைத்துயர்ந்து நின்றனை வா வா வா
கலி முடித்துக் கிருதமா யுகம் காணும்
கடமையோடு மோதுவாய் வா வா வா
நிதி நிறைந்த திருவினாய் வா வா வா
நெஞ்சுரத்தில் விஞ்சினாய் வா வா வா
மதியுடைத்த படையினாய் வா வா வா
மனதிலென்றும் தெளிவினாய் வா வா வா
கதியிழந்த தமிழரை ஈடேற்றும்
கடமை கொண்டுயிர்த்தனை வா வா வா
எதிரி வந்து மோதுமுன் முன்னேறி
ஈழ வீரம் காட்டுவாய் வா வா வா
அமைதிபெற்ற நடையினாய் வா வா வா
அவனி தந்த புகழினாய் வா வா வா
சமதை பெற்ற நிலையினாய் வா வா வா
சாவை வென்றுயிர்த்தனை வா வா வா
மமதை கொண்ட பகைவரின் முன்பேகி
மாண்பு காட்டி நின்றனை வா வா வா
உமை மாகாளி சூலியின் கண்ணோக்கால்
உரிமை கொண்டுயர்ந்தனை வா வா வா
S. K. RAJAH
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
ம்ம் மிகவும் நல்லாத்தான் இருக்குது. மனம் திறந்து பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆக்குனரின் எண்ண ஓட்டம் ஆறாய் பாய்ந்தும் ஆப்பப்போ புயாலாய் வீசியும் செல்கிறது. வாழ்த்தும் வயது எனக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. வாழ்த்துகின்றேன்
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் மதுரன்,karu தொடர்ந்து எழுதுங்கள்
[size=14] ' '
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இருவரின் கவிகளும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
இரண்டு நல்ல கவிதைகளையும் இணைத்த மதுரன், மற்றும் கறு, இருவருக்கும் நன்றிகள்.இரண்டாவது கவிதையில் புதுப்புனலெனப்பொங்கிவரும் அழகிய நடை அருமை.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 40
Threads: 1
Joined: Jan 2005
Reputation:
0
வருகின்ற ஈழமும் போகின்ற ஈழமும் என்கின்ற இரண்டாவது கவிதை யுகசாரதியின் ~ஈழத்தாய் சபதம்| நு}லிலுள்ளது என்பதை பணிவுடன் அறியத்தருகின்றேன்
S. K. RAJAH