10-09-2005, 05:17 PM
அருமையான கவிதைகள் சக்தி,முத்துகுமரன் நன்றிகள்.
.
.
.
|
மேத்தாவின் கவிதைகள்
|
|
10-09-2005, 06:11 PM
<b>மனமே கோயில் ! மனிதனே தேவன் !
இந்தியனே ! இந்தியனே ! முதலில் நீ இருக்க ஒரு இடம் தேடு ஆண்டவனுக்கு வேண்டிய இடத்தை அவன் தேடிக் கொள்வான் ! பாவம்! கடவுளைப் பற்றி அதிகம் தான் கவலைப் படுகிறீர்கள்.... கடவுளோ மனிதர்களை எண்ணியன்றோ மனம் வருந்துகிறான்.... பக்தியை காட்டினால் பரமன் மகிழ்வான் ! நீங்களோ உங்கள் சக்தியை காட்டுகிறீர்கள்.... ஆண்டவன் சங்கடப் படுகிறான்... உடலில் ரத்தம் ஓட வேண்டும் என்பதுதான் இறைவன் நமக்கு இட்ட கட்டளை ! தெருவில் அதனை ஓட விடுவது தெய்வ நிந்தனை ! எந்த மதக் கொடியையும் ஏற்றிக் கொள்ளுங்கள் ! ஆனால் அதை ரத்தத்தில் கழுவி அழுக்காக்காதீர்கள் ! அவரவர் மதக் கொடிகள் அசையட்டும் அழகாய்... வெறியுன்னும் நெருப்புக்கு விசிறியாய் அல்ல... களைத்தவர் வாழ்விற்குக் கலங்கரை விளக்காய் ! ஒவ்வொரு மதமும் உபதேசிப்ப தென்ன ? அன்பை அல்லவா ? அந்த அன்பை அடகு வைத்த ஆயுதம் வாங்குவது ? இன்னொரு நவகாளியை இந்தியா தாங்குமா ? அவரவர் விருப்பபடி அனைவருக்கும் உரிமையுண்டு.. கோவில்களில் கும்பிடலாம் தேவாலயங்களில் தியானிக்கலாம் மசூதிகளில் தொழலாம் ஆனால் எவனது விருப்பப்படியும் எவனுக்கும் உரிமையில்லை மதவெறி வாளால் மற்றவரைக் கொல்வதற்கு ! கங்கையும் காவிரியும் கை கலந்து கொள்வதில்லை கடலில் தான் கலக்கின்றன ! மதங்கொண்ட யானைகள் மோதிக் கொண்டன... நடுவில் அகப்பட்டு நசுங்கிப் போனது எளிய மக்களின் வாழ்க்கை யல்லவா ? இந்துவே திரண்டு வா ! என்றோ கிறிஷ்தவனே கிளம்பி வா ! என்றோ இஷ்லாமியனே எழுந்து வா ! என்றோ எழுப்பாதீர்கள் முழக்கம்.... மனிதனே இணைந்து வா ! என்று முழங்கி மானுடத்தை இனியெனும் மகத்துவப் படுத்துங்கள் தீபங்களே ! நீங்கள்... தெரிந்து கொள்ளுங்கள் திரிகள் மட்டுமே கருகிக் கொண்டிருக்கின்றன..... தூண்டு கோல்கள் சுகமாய் தூங்குகின்றன ! இந்தியனே ! இந்தியனே ! முதலில் நீ இருக்க ஒரு இடம் தேடு !</b>
....
10-13-2005, 04:45 AM
தாலாட்டுக் கேட்காத தொட்டில்கள்
கனவுகளின் நூலிழையில் கைராட்டை சுற்றுகிறாள் தங்கத் துகளெடுத்துக் தரைnழுகிப் பாடுகிறாள் ஆசைகளின் வான்வெளியில் ஆயிரமாய்ப் பு மலர ஒசைகளால் வீடு கட்டி உயிர்த்தோட்டம் போடுகிறாள்...... வாலிபத்தின் புங்கொத்தில் வருடல்கள் தாலிகட்டும் முன்பு சில தரிசனங்கள் வேலியிலா இள நிலத்தில் விதைகள் மதிமயக்கும் பளபளப்பில் மனம்மறந்து வேளைகளில் பாய்விரித்த தோணியின் மேல் பருவத்தின் ஊர்வலங்கள்..... பன்னீர் மரக்கிளையில் பாச இலை உதிர்காலம் கண்ணீர் மர வயிற்றில் கர்ப்ப இலை உதயம் தேவ சுகக்கதைகள் சேகரித்துத் தந்த சேவல் சிறகடிப்பு சேயிழையின் எதிர்பார்ப்பு மாதக் கலண்டர் மார்பில் கனம்குறைய மாது மணிவயிற்றில் மடியில் கனம் வளர வாசலிலே கோலம் வரையா திருந்த மகள் ஆசைகளின் கோலம் அழிந்தாள் அதிர்வடைந்தாள் நம்பிக்கை வானில் நட்சத்திரம் உதிர கோபுரத்தின் பொற்கலசம் குடையோடு சாய்ந்து விழ தன்னந் தனிப்பறவை தாய்ப்பறவையாகிவிட ஆலமரத்தடியில் ஆளுயரக் குப்பைத் தொட்டி ஆளுயரக் குப்பைத் தொட்டி அழுகின்ற குரல் கேட்கும் கண்ணில் வளர்த்தெடுத்த கனவுகளில் சிறுகனவு கனவுகளில் சிறுகனவு கலங்குகிற குரல் கேட்கும்! தூக்கி வளர்ப்பதற்குத் தோள் பலத்தை நம்பாமல் தூக்கி எறிந்து விட்ட துயரக் குரல்கேட்கும்! தூக்கி எறிந்து விட்ட துயரக்குரல் கேட்கும் இடம் தொடுவானில் கட்டவிழ்ந்த தொட்டிலோ? புதைகுழியோ?
10-13-2005, 12:57 PM
மேத்தாவின் கவிதைகளை எத்தனை தடவை படித்தாலும் சலிக்காது.
இன்னும் சொல்லப்போனால் பலருள் கவிதைக் கனவுகளை விதைத்தவர் - கவிதை எல்லோருக்கும் பொதுவானது என்று நிரூபித்தவர். இவரும் துவக்கு இலக்கிய இதழ் நடத்தும் போட்டியில் புலம் பெயர்ந்தவர்களின் கவிதைகள் போட்டியின் நடுவர்களில் ஒருவர். எல்லோரும் கலந்து கொள்ளுங்கள் கவிதைப் போட்டியில்......
-----------------
----------------- -----------------
10-13-2005, 05:12 PM
Mathan Wrote:சில சந்தர்பங்களில் ஆண்கள்Thala Wrote:பிரம்மச்சாரி எண்று சொல்பவர்கள் ஆனா அது வடமொழி.. தமிழ் என்ன???? :roll: :roll: வேண்டாம் என்று அவங்களுக்கான அந்த பெயர் வேண்டாம் என்று விட்டுடாங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இப்போ சகி என்கிறதுக்கும் ஆண்பால் இல்லை எல்லோ??? எல்லாதிலையும் சம உரிமை வேண்டுமோ?? கொஞ்சமாவது விட்டு வையுங்கோ மதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
...!
10-13-2005, 05:24 PM
மேத்தாவின் கவிதைகள் எனக்கும் பிடிக்கும். இன்னும் நிறைய கவிதைகழள இணையுங்கள். நானும் இணைக்க முயற்சிக்கிறேன்
! --
10-14-2005, 06:15 PM
நன்றிகள் ரமா, நண்பன் & கவிப்பிரியன். நேரப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து இணைக்க முடியவில்லை. நீங்களும் இணைக்கலாமே..
....
10-26-2005, 02:31 AM
தொட முடியாத தொலைவில்
இருப்பதாக கனவு கானாதே! இந்த பூமியின் விளிம்பையே தீண்டிவிடும் அளவிற்கு என் விரல்கள் நீளமானவை ஏனென்றால் என் கைகள் வெறும் கைகளல்ல கவிதைகள்! |
|
« Next Oldest | Next Newest »
|