Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
உன் ஜாபகம்
காதலை
கவிதையாக்கி
கண்களாலேயே நீ
காதலை
சொன்னதும்
உன்
விரசமில்லா
வார்த்தைகளும்
விரல் படாத
நெருக்கமும்..
உன்
முகத்தைப் போலவே
வெண்மையான
உன் உள்ளமும்..
எனை
காணாத நாட்களில்
நீ
வடிக்கும்
கவிதை வரிகளும்...
குடிகார கணவனின்
உதையிலா
ஜாபகம் வர வேண்டும் ?
....
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
நன்றி சக்தி அருமையான கவிதைகளை இங்கு பகிர்ந்ததற்கு.
<b>ஞானம் </b>
ஞானம்
பெற்றது
நீ -
உன் மண்ணில்
பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்.
நான்
என் மண்ணில்
பள்ளிக் கூடங்கள்
இடிக்கப்பட்டதால்.
காசி.ஆனந்தன்.
<b>சிலை திருட்டு</b>
கோயிலில்
சிலையைக் காணவில்லை !
காவற்துறையில் பதிவு !
அழைப்பு வந்தது
தலைவர் வீட்டில்
சிறப்பு பூசை
மு.தமிழரசன்.
----- -----
Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
<b>சூடு</b>
பாரியைப் பார்த்து
முல்லை சொன்னது :
'முதலில் நிறுத்து
மரம் வெட்டுவதையும்
தேர் கட்டுவதையும்.'
-காசி.ஆனந்தன்-
எழுத
எழுந்து வரமுடியவில்லை,
எல்லையில்
என் துவக்கு
எழுந்து நிற்பதால்......
எழுந்துவர என்னால் முடியவில்லை.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.
-கப்டன் வானதி-
நிலமுமென் வசமானது;
எங்களின் நீல ஆழ்கடல் எம்வசமானது
நிலவு ஏறிடும் வானமும் எம்வசம்
நின்று நடந்திடும் காலம் வந்தானது
பலமு மெம்வச மானது; எம்பிர
பாகரன் வழி வேங்கைகள் பாயுது.
-புதுவை இரத்தினதுரை-
----- -----
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sakthy Wrote:<b>பிரிவுகள்</b>
பிரிவுகள் வேண்டும்
ஜனனத்தில் மனது
சந்தோசப் படுவதற்கும்
மரணத்தில் கொஞ்சம்
அழுவதிற்கும்
பிரிவுகள் வேண்டும்
பிரிவுகள் தரும் வேதனையை தாங்குவது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல, இப்படி வேதனை தரும் பிரிவு பல சமயங்களை உறவுகளின் நெருக்கத்தை அன்பை புரிந்துகொள்ளவும் உதவியிருக்கின்றது. அருகில் இருக்கும் போது நமக்கு உறவுகள் நட்புகளின் அருமை புரிவதில்லை, அவர்களை பிரிந்து வேறிடம் சென்ற பின்பு தான் அவை நமக்கு உறைக்கிறது.
படித்து ரசித்த கவிதைகளை அறிய தந்த அனைவருக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
சக்தி, கரிகாலன் இருவரும் இணைத்த கவிதைகளும் அருமை, கருதுள்ள நல்ல கவிதைகள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>தூக்கம்விற்ற காசுகள்</b>
<b>இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்
" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
- ரசிகவ் ஞானியார், துபாய்</b>
<b> .. .. !!</b>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<b>தைரியம்</b>
ரம்யா
<b>அன்றே சொல்லி இருக்கலாம்
நீயோ அல்லது நானோ
நான் உன் மீதும்
நீ என் மீதும்
வைத்திருந்த காதலை!
இன்று உன் திருமண பத்திரிக்கை
கொடுக்கும்போது உனக்கும்
வாங்கும்போது எனக்கும்
வெளி வந்த ஒரு துளி
கண்ணீருக்கு இருந்த
தைரியம் ஏனோ
அன்று நமக்கு
இல்லால் போனது விந்தைதான் !</b>
நன்றி Thatstamil
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.