10-27-2005, 01:38 PM
<b>சிறந்த வெளிநாட்டுப் படம்
ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் கலந்து கொள்கிறது </b>
லாஸ் ஏஞ்சல்ஸ், அக். 27-
ஆங்கிலப் படங்கள் தவிர, சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்தியா உள்பட 58 நாடுகளைச் சேர்ந்த படங்கள் போட்டியிடுகின்றன.
<b>78-வது விருது வழங்கு விழா</b>
சினிமாப் படங்களுக்கும், கலைஞர்களுக்கும் கிடைக்கும் விருதுகளில் மிக உயர்ந்தது ஆஸ்கார் ஆகும். இந்த விருது பெறுவதை உலக முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்கள் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.
78-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி நடக்க இருக்கிறது.
<b>
58 படங்கள்</b>
ஆலிவுட் படக்கலைஞர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது என்ற போதிலும் வெளிநாடுகளில் தயாரான படங்களில் சிறந்த படத்துக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கான போட்டியில், கலந்து கொள்ளும்படி 91 நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதை ஏற்று 58 நாடுகள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள படங்களை அனுப்பி உள்ளன.
<b>இந்திப்படம்</b>
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட `பஹேலி' என்ற இந்திப்படம் இந்தப்போட்டியில் கலந்து கொள்கிறது. இதை அமோல் பலேகர் இயக்கி இருக்கிறார்.
திருமணம் முடிந்து வீடு திரும்பும்போது மணமகள் ஒரு ஆவியைச் சந்திக்கிறாள். கடைசியில் அந்த ஆவியையே தன் காதலனாக வரித்துக்கொள்கிறாள் என்பது தான் பஹேலி படத்தின் கதை.
<b>ஈராக் படம்</b>
ஈராக் நாட்டில் தயாரான `ரீக்குயியம் ஆப் ஸ்நோ' என்ற குர்திஷ் மொழிப்படமும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறது.
வறட்சிப் பகுதியில் வாழும் குர்து மக்கள் மழைக்காக ஏங்கித் தவிப்பதை இந்தப்படம் சித்தரிக்கிறது.
<b>பிஜித் தீவுப்படம்</b>
பிஜித் தீவில், தயாரிக்கப்பட்ட "தி லாண்ட் ஹேஸ் ஐஸ்'' என்ற படம் போட்டியிடுகிறது. பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்களைப் பற்றிய முதல் பிஜிப்படம் இது.
ஒவ்வொரு நாடும் ஒரு படத்தை மட்டுமே போட்டிக்கு அனுப்ப முடியும் என்பது ஆஸ்கார் விருதுக்கான விதிமுறை ஆகும்.
தினத்தந்தி

