11-10-2005, 04:02 PM
இன்றைய குடியரசுக் கூட்டமைப்பு ஜெர்மனி உலகின் முன்னணி தொழில்துறை நாடுகளில் ஒன்று. வடக்கில் டென்மார்க், பால்டிக் கடல், கிழக்கில் போலந்து, செக் குடியரசு, தெற்கில் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மேற்கில் பிரான்ஸ், லக்சம்பர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் சூழ்ந்துள்ளன. 16 மாநிலங்களின் கூட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் நடைபெறுகிறது. ஐ.நா.சபை, நேட்டோ, ஜி8, ஜி4 அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
பரப்பளவு -3 லட்சத்து 57 ஆயிரம் (3,57,026) சதுர கிலோமீட்டர்; மக்கள்தொகை -8.24 கோடி (8,24,43,000); நாணயம் -யூரோ (1999-க்கு முன்னர் டாயிஷ்மார்க்); எழுத்தறிவு -99 சதவீதம்; தனிநபர் வருமானம் -30,150 டாலர்; மொழி -ஜெர்மன் (டேனிஷ், சோர்பியன், ரோமனி, ஃபிரீசியன் போன்றவை சிறுபான்மை மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன); முக்கிய ஆறுகள் -ரைன், எல்ப், ஓடர்.
எந்த மதத்தையும் சாராதவர்கள் (28.5 சதவீதம்) அதிகம் வசிக்கும் நாடு ஜெர்மனி. ஐரோப்பாவில் யூதர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகப் போர்களின்போது அனைத்து நாடுகளும் இரு பகை முகாம்களாக பிரிந்து போரிட்டன. இதில் ஒரு முகாமுக்கு தலைமை தாங்கிய ஜெர்மனி இரண்டு உலகப்போர்களிலுமே தோல்வியைத்தான் தழுவியது. இருப்பினும் இதன் வளர்ச்சி முடங்கிடவில்லை. இன்றைக்கு அமெரிக்கா, ஜப்பானை அடுத்த மூன்றாவது பொருளாதார வல்லரசு (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்) ஜெர்மனிதான்.
உலக வர்த்தகக் கழகத்தின்படி, ஜெர்மனிதான் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது; அமெரிக்காவும், சீனாவும் இதற்கடுத்த இடங்களில்தான் உள்ளன. முக்கியமாக எந்திரங்கள், வாகனங்கள், வேதிப்பொருள்கள், உலோகங்கள் மற்றும் உலோகத் தயாரிப்புகள், உணவுப் பொருள்கள், நுகர்வோர் மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) தயாரிப்புகள், ஜவுளி மற்றும் மின் பொருள்கள் ஏற்றுமதியாகின்றன.
கப்பல் கட்டும் தொழிலில் முன்னணியில் உள்ளது ஜெர்மனி. இரும்பு, உருக்கு, சிமெண்ட், வேதிப்பொருள்கள், எந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், எந்திரக் கருவிகள், எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறைகளிலும் முன்னணியில் உள்ளது. பிஎம்டபிள்யூ, டெய்ம்லர்கிரிஸ்லர், ஒபெல், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவையே.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களும் உண்டு. உருளைக் கிழங்கு, பார்லி, சர்க்கரைக் கிழங்கு, கோதுமை ஆகியவை முக்கிய விளைபொருள்கள். பால், பால்பொருள்கள், இறைச்சி உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. மிதவெப்ப மண்டல காலநிலை கொண்ட நாடு. தெற்கிலும், கிழக்குப் பகுதியிலும் கடுங்குளிர், கடுங்கோடை நிலவுகிறது.
ஹிட்லர் மற்றும் நாஜிக் கொள்கைகள் ஜெர்மானிய வரலாற்றில் பாதகமான அம்சம். ஜெர்மனியின் வரலாற்றில் சாதகமான அம்சங்களும் உண்டு. தத்துவஞானத் துறைக்கு மாபெரும் பங்களிப்பு செய்துள்ளது ஜெர்மனி. ஹெகல், லுத்விக் ஃபயர்பாக், காரல் மார்க்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்றோர் ஜெர்மானியர்களே.
Thanks
inmanai...

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

:?