![]() |
|
இன்றைய ஜெர்மனி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இன்றைய ஜெர்மனி (/showthread.php?tid=2524) |
இன்றைய ஜெர்மனி - SUNDHAL - 11-10-2005 இன்றைய குடியரசுக் கூட்டமைப்பு ஜெர்மனி உலகின் முன்னணி தொழில்துறை நாடுகளில் ஒன்று. வடக்கில் டென்மார்க், பால்டிக் கடல், கிழக்கில் போலந்து, செக் குடியரசு, தெற்கில் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மேற்கில் பிரான்ஸ், லக்சம்பர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் சூழ்ந்துள்ளன. 16 மாநிலங்களின் கூட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் நடைபெறுகிறது. ஐ.நா.சபை, நேட்டோ, ஜி8, ஜி4 அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. பரப்பளவு -3 லட்சத்து 57 ஆயிரம் (3,57,026) சதுர கிலோமீட்டர்; மக்கள்தொகை -8.24 கோடி (8,24,43,000); நாணயம் -யூரோ (1999-க்கு முன்னர் டாயிஷ்மார்க்); எழுத்தறிவு -99 சதவீதம்; தனிநபர் வருமானம் -30,150 டாலர்; மொழி -ஜெர்மன் (டேனிஷ், சோர்பியன், ரோமனி, ஃபிரீசியன் போன்றவை சிறுபான்மை மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன); முக்கிய ஆறுகள் -ரைன், எல்ப், ஓடர். எந்த மதத்தையும் சாராதவர்கள் (28.5 சதவீதம்) அதிகம் வசிக்கும் நாடு ஜெர்மனி. ஐரோப்பாவில் யூதர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகப் போர்களின்போது அனைத்து நாடுகளும் இரு பகை முகாம்களாக பிரிந்து போரிட்டன. இதில் ஒரு முகாமுக்கு தலைமை தாங்கிய ஜெர்மனி இரண்டு உலகப்போர்களிலுமே தோல்வியைத்தான் தழுவியது. இருப்பினும் இதன் வளர்ச்சி முடங்கிடவில்லை. இன்றைக்கு அமெரிக்கா, ஜப்பானை அடுத்த மூன்றாவது பொருளாதார வல்லரசு (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்) ஜெர்மனிதான். உலக வர்த்தகக் கழகத்தின்படி, ஜெர்மனிதான் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது; அமெரிக்காவும், சீனாவும் இதற்கடுத்த இடங்களில்தான் உள்ளன. முக்கியமாக எந்திரங்கள், வாகனங்கள், வேதிப்பொருள்கள், உலோகங்கள் மற்றும் உலோகத் தயாரிப்புகள், உணவுப் பொருள்கள், நுகர்வோர் மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) தயாரிப்புகள், ஜவுளி மற்றும் மின் பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. கப்பல் கட்டும் தொழிலில் முன்னணியில் உள்ளது ஜெர்மனி. இரும்பு, உருக்கு, சிமெண்ட், வேதிப்பொருள்கள், எந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், எந்திரக் கருவிகள், எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறைகளிலும் முன்னணியில் உள்ளது. பிஎம்டபிள்யூ, டெய்ம்லர்கிரிஸ்லர், ஒபெல், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவையே. நிலக்கரி, கச்சா எண்ணெய், இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களும் உண்டு. உருளைக் கிழங்கு, பார்லி, சர்க்கரைக் கிழங்கு, கோதுமை ஆகியவை முக்கிய விளைபொருள்கள். பால், பால்பொருள்கள், இறைச்சி உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. மிதவெப்ப மண்டல காலநிலை கொண்ட நாடு. தெற்கிலும், கிழக்குப் பகுதியிலும் கடுங்குளிர், கடுங்கோடை நிலவுகிறது. ஹிட்லர் மற்றும் நாஜிக் கொள்கைகள் ஜெர்மானிய வரலாற்றில் பாதகமான அம்சம். ஜெர்மனியின் வரலாற்றில் சாதகமான அம்சங்களும் உண்டு. தத்துவஞானத் துறைக்கு மாபெரும் பங்களிப்பு செய்துள்ளது ஜெர்மனி. ஹெகல், லுத்விக் ஃபயர்பாக், காரல் மார்க்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்றோர் ஜெர்மானியர்களே. Thanks inmanai...
- Danklas - 11-10-2005 சுண்டல் சுட்டுப்போட்ட தகவலுக்கு நன்றி... ஜேர்மனியில் இப்பொழுதும் இனத்துவசம் இருக்கு, அதைவிட ஜேர்மனியில் சில வருடங்களுக்குமுன்னர் வெளி நாட்டவர்களை (கூடுதலாக துருக்கி,அல்ஜிரியன், தமிழர்கள் தான் அதிகம் பாவிக்கிறார்கள்) சட்லைட் பூட்ட அனுமதித்த ஜெர்மனியினர் தற்பொழுது அதை பூட்டவேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.இதனால் பல இடங்களில் பிரச்சினைகள் உருவாகி வருகின்றது. பொலிஸ் கூட சட்லைட் பூட்டுவது தடை என அறிவித்திருந்ததாக உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவித்தன,, இதைபற்றி யாருக்கும் தெரிந்தால் அறியத்தாருங்கள்... :?
- SUNDHAL - 11-10-2005 ஏன் அப்பிடி செய்கிறார்கள்? சட்லைட் புூட்டினா என்னவாம்? - Birundan - 11-10-2005 சட்டலைட் வீட்டு முகப்பின் அழகைக்கெடுக்கிறதாம், முறையாக வீட்டின் கூரையில் பூட்ட வேண்டும், அதற்கு காசு, எம்மவர் நாலு ஆணியை வைத்து சிவரில் அடித்து விடுவார்கள். நகரசபையால் கடிதம் போடுவார்கள், உடனே களட்டிவிடுவார்கள், ஏன் என்று கேட்டால் பூட்டகூடாதாம் என்பர், கடிதத்தை விவரமாக படித்தால், முறை அற்று பூட்டுவதால் இடி,மின்னலால் பாதிப்பு ஏற்படலாம், முறையான ஆட்களைவைத்து பூட்டவும் அல்லது சிவரில் பூட்டாமல் பல்கோனில் ஸ்ராண்ட்டில் பூட்டலாம் என்றிருக்கும், அனேகமாக வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும், நாம் விரும்பிய ரீவி சனலை பாக்க எம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் முறையாக பூட்டி பார்க்கவேண்டும், எமது இடத்தில் பிரச்சினை இல்லை, மற்ற இடம்பற்றி தெரியவில்லை, எல்லாஇடமும் ஒரே சட்டம் எண்றுத்தான் நினைக்கிறேன். - sinnappu - 11-10-2005 ம் சுவிசில கூட சில கிராமங்களில் சற்றலைட் பூட்ட தடை ம் நானும் அப்படியான் ஒரு இடத்தில தான் இருக்கிறன் தமிழ் ரீவீ பாத்து 6 5 வருசமாகிது கொஞ்ச நாள் வெக்டோன் ஐ கேபிள் இல விட்டாங்கள் இப்ப அதுக்கும் ஆப்பு ம் சின்னப்பரின்ர தலையில எழுதியிருக்கு பாக்க கூடாது எண்டு ம் என்ன செய்ய ரீ ரீ என் நினைச்சா கேபிள் இல விடலாம் நாங்கள் காட் வாங்கிப்பாப்பம் அதுவும் நடக்கது எங்கை கதைக்கிறதோ தெரியாது ம் ம்
|