Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாபக் காதலி
#1
காற்றெழும்
கடற்கரையோரம்
கால் நனைத்த
கன்னியவள் சுடிதாரோ
வானவில்லின் வர்ணம் காட்ட
சீறிவரும் அலைகளை
ரசித்தபடி
தேவதையாக நின்ற
அவள் அழகை
ரகசியக் கண்களால்
ஆராதனை செய்தேன்

ஓப்பனையில்லா
துருதுருத்த விழிகளுடன்
கன்னத்தில் வியர்வை
éத்திருந்த நிலவு முகமாக
ஒளி தந்தாள்

முதல் பார்வையிலேயே
அந்த வசீகர முகம்
இதயத்துள் புகுந்துவிட்டது
வெந்து துடித்து
வேதனையில் மடிந்து
திருடிய முகத்தை
ஓராயிரமுறை
பார்க்கத் தூண்டியது

அவஸ்தையைக் கொடுத்து
உள்ளத்துள் புயலாகப்
புகுந்தவள் நினைவோ
என்னை தென்றலாகத்
தாலாட்ட
என் உள்ளம் நினைத்ததை
சொல்லத் துணிகிறேன்

இதயத்துள் புரளும்
ஆசையது திரளும்போதில்
மனமோ வரைகிறது
உன்மீது என் உள்ளம் கொண்ட
காதலை

கலாபக் காதலியே
பிக்காசோ வரைந்த
ஓவியம் போலிருந்தே
ஒரு பேச்சும் பேசாத கண்ணே
நெஞ்சின் உணர்வுக்குள்
ஒன்றிவிட்ட காவியப்பெண்ணே
கண் வீச்சைக் காட்டிவிட்டாய்
என் மூச்சில் உயிரில்லையடி
விழியசைவால் விடை பகரும்வரை
துடிக்கிறேன் துவள்கிறேன்

வெண்ணிலவு மங்கையின்
தங்கையே
முல்லைப்é மணமெடுத்து
என் மனதிற்குள் மணக்கின்ற
தித்திப்பு இனிப்éற
சித்தத்தில் இனிக்கின்ற
சுகச் சொல்லொன்று
கூறாயோ கண்ணே
www.autham.com
Reply
#2
ஒரு முதல் சந்திப்பை வர்ணிக்கும் கவிதை நல்லாயிருக்கு. நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)