| Thread Review (Newest First) |
| Posted by putthan - 03-29-2006, 11:55 PM |
| சாத்திரி உங்கள் நாடகம் அருமை தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள். |
| Posted by RaMa - 03-29-2006, 07:11 AM |
| சாத்திரி உங்கள் தொடர் நாடகம் அருமை. நகைச்சுவையாக இருக்கின்றது. |
| Posted by தூயவன் - 03-28-2006, 12:33 PM |
|
மன்னா!! ஏற்கனவோ பெண்களால் உமக்குப் பல பிரச்சனைகள். அது கண்டு திருந்த மாட்டீரா??? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சாத்திரியண்ணா நன்றாக இருக்கின்றது. தொடருங்கள். பழைய யாழ் மறுபடி கலகலக்கட்டும். |
| Posted by Rasikai - 03-27-2006, 06:25 PM |
| சாத்திரி உங்கள் நகைச்சுவை நாடகம் நன்றாகவுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். |
| Posted by sathiri - 03-27-2006, 05:28 PM |
|
வணக்கம் உறவுகளே அண்மைகாலமாக யாழ்களத்தில் ஒரே அரசியல் விவாதங்களே நடந்து கொண்டிருப்பதால் அரசியல் பற்றி ஆர்வம் இல்லாதவர்கள் களப்பக்கம் வருவது குறைந்த மாதிரி ஒரு உணர்வு இந்த நேரம்பாத்து முகத்தான் வேறை ஊருக்கு போட்டான் அதாலை நான் நகைசுவை எண்ட பெயரிலை எழுதின நாடகத்தை தூசு தட்ட வேண்டி வந்திட்டிது புதிதாக இந்த பக்கத்தை படிப்பவர்கள் இதனை ஆரம்பத்தில் இருந்து படிக்கும்படி கேட்டுக்கொண்டு தொடர்கிறேன் சின்னாவை சங்கிலிகளால் கை மற்றும் கால்கள் பிணைத்தபடி (சேதுபடத்தில் விக்ரத்தை போல)கொண்டு வந்து காவலர்கள் வீதியின் ஒரத்தில் ஒருமரத்தில் கட்டிவிட்டு பக்கத்திலிருந்த பெட்டிகடைக்கு ரீ குடிக்க போய்விட்டசமயம் அந்தவழியால் வந்தநாரதர் சின்னாவின் காதில் மின்னி கொண்டிருந்த வைரகடுக்கனை கண்டுவிட்டு அதை எப்படியாவது சுட்டுவிட எண்ணி ஒரு பாட்டுடன் சின்னாவை நோக்கி வருகிறார். நாரதர். (பாடுகிறார்) உள்ளத்தில் கள்ள உள்ளம் உறங்காதென்பது வள்ளுவன் வகுத்ததடா கறுணா வருவதை எதிர் கொள்ளடா சின்னப்பு.( மெல்லதலையை தூக்கி பாத்து) எவண்டா அவன் நான் நாப்பது தரம் பாத்த கர்ணன் பட பாட்டை பிழையா படிக்கிறது நாரதர். நாராயணா நாராயணா சின்னா. ஏன்டாப்பு யாரவன் ஒருபெயரை உனக்கு இரண்டு தரம் வைச்சது நாரதர். மகனே அது எனது பெயர் அல்ல அது எம்பெருமான் கிருஸ்ணணின் மறுபெயர் சின்னா . நான் உனக்கு மகனா குடும்பத்துக்கை குழப்பத்தை உண்டு பண்ணினா உன்னை தொலை பண்ணிடுவன் அதுசரி நீர்யார் எங்கையிருந்து வாறீர் இப்பிடி கோமாளி மாதிரி வேசத்தோடை நாரதர். அய்யனே கோவம் வேண்டாம் நான் தேவலோகத்திலிருந்து வருகிறேன் இந்திரன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறான் சின்னா (ஆச்சரியமாக) உண்மையாவா? இல்லை வேசம் போட்டுகொண்டு வந்து கதை வுடுறியா? நாரதர். எம்பெருமான் நாராயணன் மேல் ஆணை நம்புங்கள்.நான் இந்த வழியால் வந்துகொண்டிருந்தபோதுதான் தங்களை கட்டி போட்டிருந்ததை கண்டேன்.என்ன நடந்தது என்று எனது ஞானகண்ணால் கண்டு அறிந்துகொண்டேன் அததான் உமக்கு உதவ வந்தேன். சின்னா. ஞானகண்ணால் கண்டீரா? உமக்கு இருக்கிறதே ஒண்டரை கண் இதுக்கை ஞானகண்வேயறயா சரி எப்பிடி எனக்கு உதவபோறீர். நாரதர். நீர் போதையின் பாதையில் போய் பாவங்கள் பல செய்திருக்கிறீர் அதற்கு பரிகாரமாக உமது காதில் இருக்கும் கடுக்கனை என்னிடம் தந்துவிடும் உமது பாவங்கள் போய் உம்மை விடுதலை செய்து விடுவார்கள் சின்னா. அட்ரா அட்ரா அதுதானே பாத்தன் என்னடா எனக்கு உதவ போறாராம் எண்டு .நான் பாவம் எல்லாத்தையும் கடுக்கனா செய்து காதிலை மாட்டி இருக்கிறனா அதை கழட்டின உடைனை பாவம் போறத்திற்கு.அதெல்லாம்கழற்ற ஏலாது என்னை எப்படியும் என்ரை சின்னாச்சி வந்து காப்பாத்துவாள். சரி அதைவிடும் அங்கை தான் ரம்பா ஊர்வசி மேனகா எண்டு நல்ல வடிவான பிகருகள் இருக்காமே பாத்திருக்கிறீரா அவங்களை(எண்டு ஜொள்ளுவடிய கேக்கிறார்) நாரதர் .அடடா லொள்ளைபார் உம்மை கட்டி போட்டிருக்கூடாது வெட்டிபோட்டிருக்கவேணும் சின்னா. நீர் உண்மையாவே தேவலோகத்திலிருந்ததான் வாறீரா எண்டு பாக்கதான் கேட்டனான் நாரதர் .ஒ அப்படியா அந்தசோகத்தை ஏன் கேக்கிறீர் சின்னா. அங்கையும் சோகமா? நாரதர். சும்மாகுறுக்கை பேசகூடாது நான் சொல்லுறதைகேளும் இந்த அழகிகளின் ஆட்டத்தையே பாத்து பாத்து அலுத்து போன எங்கள் அரசன் இந்திரன் அவர்கைளை சில காலம் பூலோகத்திற்கு போய் அங்கு எம் தமிழர்களிற்கு அவர்களது கலைசேவையை செய்துவரும்படி அனுப்பி விட்டான் சின்னா.அடங்கொக்கா மக்கா எனக்கு தெரியாமல்போச்சே நாரதர். ஆமாம் அவர்கள் இங்கு வந்து தமிழ் சினிமாவில் சேர்ந்து கலைச்சேவை செய்து கொண்டிருந்தபோது ஊர்வசி மார்கட்டு டல்லாகி சான்ஸ் இல்லாமல் கேரளா பக்கம் ஒதுங்கிட்டார் ரம்பாவும் அதுபோல தெளுங்கு பக்கம் போட்டார் ,இந்த மேனகா மட்டும் தனரை பெயர் ராசியில்லையெண்டு மெளனிசா எண்டு பெயரை மாத்தி வைச்சு கொண்டு தொலைகாட்சி தொடரிலை காலத்தை ஓட்டிகொண்டு இருக்கிறா இதையெல்லாம் பாத்து நானும் சோகத்திலை திரும்பவும் தெவலோகம் போக மனமில்லால் இங்கையே சுத்திகொண்டு திரியிறன் சின்னா . அடசெ இவங்கதானா அந்த ரம்பா ஊர்வசி நானும் ஏதோ பெரிசா கற்பனை பண்ணி வைச்சிருந்தன் இவங்களைவிட என்ரை திரிசா எவ்வளவோ ஆயிரம் மடங்கு அழகு ( என்று கூறிகொண்டு கண்களை மூடி திரிசாவை கற்பனை பண்ண அததான் சமயம் என்று நாரதர் பாய்ந்து சின்னாவின் காதிலிருந்த கடுக்கனை கழற்றி கொண்டு ஓடகிறார்) சின்னா . அடபாவிபயலுகளா இந்த உலகிலைதான் களவும் கொள்ளையுமெண்டா தேவலோகத்திலை இருந்து வேறை களவெடுக்க வாறாங்களய்யா என்ன கொடுமை சரி சரி அது ஏதோ ஒறிசினல் வைரம் எண்டு நினைச்சு கழட்டி கொண்டு ஓடுறான் விக்க போற இடத்திலை கட்டிவைச்சு அடிக்கபோறாங்கள் அப்ப தெரியும்.நேரமும் போய்கொண்டிருக்கு இவள் சின்னாச்சி வந்து எப்பிடியும் காப்பாத்துவாள் எண்டு நம்பி கொண்டிருக்கிறன் அவளையும் காணேல்லை கடைசிலை தூக்குதான் போலை கிடக்கு காட்சி மாறுகிறது மன்னரின் அரண்மனை மன்னர். மந்திரியே சாத்திரிவேறு சமத்திலை சமையல்காரன் சின்னாவை தூக்கிலை போட சொல்லிட்டார் அதுவரை நித்திரை வராமல் இருக்க ஏதாவது விழையாட்டு விழையாடலாமா? மந்திரி. நன்று மன்னா அதைதான் நானும் யோசித்தேன் எல்லாரும் சங்கீத கதிரை விழையாட்டு விழையாடுவோமா? அரண்மயனயிலுள்ள கதிரைகள் எல்லாத்தையும் எடுத்து வட்டமாக அடுக்கி ........ மன்னர் . நிறுத்தும் எனக்கு தெரியும் உமக்கு எனது சிம்மாசனத்தில் கன காலமா ஒரு கண் அதில் எப்பிடியும் ஒருக்கா அமர்ந்துவிட துடிக்கிறீர் அது நடக்கது வேறு விழையாட்டு விழையாடலாம் மந்திரி. அய்யொ அப்பிடியெல்லாம் இல்லை மன்னா அப்ப நிங்களே ஒரு நல்ல வழையாட்டா சொல்லங்கள் வழையாடலாம். மன்னர். ம்.......ஆ ஒளித்து பிடித்து விழையாடலாம் நாங்கள் ஓடிப்போய் ஒளிக்கிறோம்மந்திரி நீர் கண்டு பிடியும் வா அல்லி நாங்கள் அரண்மனையின் அடிவளவில் போய் ஒளிக்கலாம்(என்று கூறி அழகி அல்லியின் கையை மன்னர் பிடிக்க) மந்திரி. மன்னா இந்த விழையாட்டில் சட்டப்படி சோடியாக ஒளிக்ககூடாது தனிதனியாக தான் ஒளிக்கவேண்டும் மன்னர். ஆமா இது பெரிய ஒலிம்பிக் விழையாட்டு இதுக்கு சட்ட திட்டம் எல்லாம் பாக்க யோவ் நான் இந்த நாட்டு மன்னன் சொல்லுறன் நான் அல்லியோடைதான் போய் ஒளிப்பன் நீர் கண்ணை மூடி 500 வரை எண்ணிட்டு அதக்கு பிறகு ஒரு அரைமணித்தியாலம் கழிச்சு தேட தொடங்கும் (மன்னர் அல்லியின்கையை மீண்டும் பிடிக்க அரண்மனை ஆராச்சிமணி ஒலிக்கிறது அனைவரும் வாசல் பக்கம் பார்க்க திரை விழுகிறது) |
| Posted by AJeevan - 09-06-2005, 08:00 PM |
| <b>அருமை தொடருங்கள்...........</b> |
| Posted by கீதா - 09-06-2005, 07:32 PM |
| நன்றாக இருக்கு நாடகம் மிண்டும் தெடரவாழ்த்துக்கள் |
| Posted by Rasikai - 08-21-2005, 07:03 AM |
| அண்ணா நாடகம் மிகவும் அருமை தொடருங்கள்...ம்ம் சின்னாவை என்ன செய்வம்? ம்ம்ம் சரி பாவமா இருக்கு காப்பாத்தி விடவும் :wink: |
| Posted by KULAKADDAN - 08-21-2005, 06:55 AM |
|
சாத்திரி இன்று தான் எல்லாம் வசித்தேன்.... நல்லாயிருக் |
| Posted by SUNDHAL - 08-16-2005, 03:48 PM |
| ம்ம்மம் பாவம் காப்பாத்தி விடுங்கள் சாத்றி நாடகம் மிகவும் அருமை தொடருங்கள்... |
| Posted by sathiri - 08-16-2005, 03:36 PM |
|
காட்சி 3 (சமையல்காரன் சின்னா சங்கிலிகளால் பிணைத்தபடி மன்னன் முன் நிறுத்தபடுகிறான்) டண்கன் : மன்னா இதோ சின்னா ஊர் எல்லையில் சோமபானம் அருந்திகொண்டிருந்தார் பிளாவும் கையுமாய் பிடித்து வந்தேன் மன்னன் :ஒ நீர்தான் சமையல் சின்னாவோ சின்னா : ஆ நீர்தான் மங்களாபுரி மக்கு மன்னரோ? மன்னன் : உமக்கு கொழுப்பு அதிகம் சின்னா : என்றுதான் வைத்தியரும் சொன்னார் அதனால் தான் உணவில் நான் எண்ணெய் சேர்ப்பதில்லை மன்னர் : ஆ நான் யார் தெரியுமா? சின்னா : எனக்கென்ன கண்பார்வை குறைவா அதுதான் சொன்னேனெ மக்கு மன்னர் என்று மன்னர் :நக்கல் நளினம் உமக்கு சின்னா அது என் கூட பிறந்த குணம் அதை மாற்ற மனைவி சின்னாச்சியால் கூட முடியாது மன்னர் :என் தோள்கள் துடி துடிக்கிறது கைகள் படபடக்கிறது உம்மை என்ன செய்கிறேன் பாரும் சின்னா : அது விற்றமின் குறைபாடாக இருக்கும் நல்ல வைத்தியராய் பாரும் மன்னர் : யாரங்கே இவன் திருடியது மட்டுமல்லாமல் திமிராக வேறு பேசுகிறான் எனவே இவனை தூக்கிலிடுங்கள் சின்னா : வாழ்வில் புன்னகையை மட்டுமே தெரிந்த எனக்கு பொன்நகை திருடிய குற்றமா யக்கம்மா மந்திரி :மனைவி பெயர் சின்னாச்சியென்றீர் யாரது யக்கம்மா சின்னா : பக்கத்து வீட்டுகாரி யோவ் உம்மடை சகா எனக்கு தூக்க எண்டிட்டார் உமக்கு நக்கலா மந்திரி : உம்மை தூக்கிலை போட்டாலும் திருந்த மாட்டீர். மன்னா எதை செய்தாலும் நாம் நல்ல நேரம் பாத்து தானே செய்வது வழமை எனவே சின்னாவை தூக்கிலிட சுப நேரம் பார்க்க வேண்டுமே மன்னர் :அடடா மறந்து விட்டேன் இதுக்குதான் உம்மை மாதிரி அறிவுள்ள மந்திரி அருகில் வேண்டும் என்ற சொல்வது எங்கே எமது அரண்மனை சாத்திரியாரை அழைத்து வாருங்கள் (சாத்திரியார் கையில் ஒரு வெத்திலை பெட்டி சில ஏடுகள் என்பனவற்றுடன் அரண்மனைக்குள் தாண்டி தாண்டி நுழைகிறார்) சாத்திரி :வணக்கம் மன்னாஅழைத்தீர்களாமே மன்னர் : ஆமாம் சாத்திரியாரே ஏன் தாண்டி தாண்டி நடக்கிறீர்கள் சாத்திரி : ஓ அதுவா வா வாழ்க்கையெண்றால் பல துன்பங்கள் வரும் அதையெல்லாம் தாண்டி நடக்கவேண்டும் என்று எனது தந்தை சொன்னார் அதுதான் மந்திரி : நல்லது இதோ இங்கு நிக்கும் சின்னாவை தூக்கில்போட நீங்கள் ஒரு சுப முகூர்த்தம் குறித்து கொடுங்கள் சர்த்திரி : நல்ல விடயம் (சாத்திரி வெத்திலை பெட்டியை திறந்து ஒரு வெத்திலையை எடுத்து அதில் மையை தடவி உத்து பாக்கிறார்) ஆகா இன்றிரவு சாமம் 12 மணிக்கு ராகுவும் கேதுவும் சந்திக்கின்றனர் நல்ல நேரம் அப்போ தூக்கில் போடலாம். மன்னர் : யாரய்யா அது ராகு கேது அவங்கள் சாமத்திலை சந்திக்கும்வரை நான் நித்திரை முழிக்கேலாது அவன்களை நேரத்திற்கு வரச்:சொல்லும் மந்திரி : மன்னா ராகு கேது என்பது கிரகங்கள் அதை தான் நம் மட சாத்திரியார் வெத்திலையிலை பாத்து செல்லுறார் மன்னன் : ஓ அப்படியா அண்ட வெளியில் உள்ள கிரகங்களை உந்த அழுகின வெத்திலையிலை பாக்கலாமா?? அப்ப ஏன் மொக்குதனமா உந்த உலக நாடுகள் கஸ்ர பட்டு காசு செலவழிச்சு விண்வெளிக்கு போகினம் சாத்திரி : மன்னா எனது தொழிலை கேவலமாக போசாதீர்கள் பின்னர் சாமி குத்தம் வந்து உம்மடை கண்ணை அம்மாளாச்சி நோண்டி போடுவா மன்னர் : அப்படியா மன்னிக்கவும் ( எழுந்து தோப்புகரணம் போட்டு கடவுளிடம் மன்னிப்பு கேக்கிறார்) சாத்திரி : மன்னா உந்த சமையல் சின்னா சரியான கேடி ஒருமுறை எனக்குசாம்பாறில் பேதி மருந்து கலந்து கொடுத்தவன் எனவே மன்னித்து விட்டு விடாதீர்கள். மன்னர் : ஆகட்டும் யாரங்கே இரவு வரும்வரை சின்னாவை வீதியால் போவோர் வருவோர் எல்லோரும் பாக்கும் படியாக வெளியில் கட்டி வையுங்கள். சின்னா உனது கடைசி ஆசை எதும் இருந்தால் கூறலாம் சின்னா : ஆமாம் மன்னா ஒரு அஞ்சு நிமிசம் என்னை அவிட்டு விடுங்கோ உந்த குறுக்காலை போன சாத்திரியை தொண்டையிலை கடிச்சு கொண்டிட்டு நானும் சாகிறன் ( பயத்தில் மன்னர் மந்திரி சாத்திரி எல்லோரும் கதிரையின் பின்னால் ஒளிந்து கொள்ள காவலர்கள் சின்னாவை இழுத்து போகிறார்கள்) திரை................... உறவுகளே சில அலுவல்கள்காரணமாக களத்திற்கு 4 நாட்கள் வர மடியாத காரணத்தால் அவசரமாக் இதனை இணைத்து போகிறேன் அடுத்த தொடரில் சின்னாவை தூக்கில் போடலாமா அல்லது காப்பாத்தி விடலாமா?? என்பதை நீங்களே சொல்லுங்கள் |
| Posted by Thala - 08-13-2005, 10:15 AM |
narathar Wrote:muniyama Wrote:ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by narathar - 08-13-2005, 08:31 AM |
muniyama Wrote:ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான் அதுக்கேன் கவலப் படுகிறியள், அன்சு பெட்டயளப் பெத்த நீங்களே இப்படி வடிவா ஆடுறுயள் எண்டா உங்கட பெட்டயளப் பற்றிச் சொல்லவா வேணும். அதுகள் புளியங் கொம்பாப் பிடிச்சுக் கொண்டு வருங்கள், கவலைப் படாதயிங்கோ. |
| Posted by வெண்ணிலா - 08-13-2005, 08:18 AM |
muniyama Wrote:ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by MUGATHTHAR - 08-13-2005, 07:31 AM |
Quote:டண்கன் : வணக்கம் மன்னா நீங்கள் கூட்டிவரச்சொன்னதாக தளபதி மதன் தும்புதடியுடன் வந்தார் என்னவிடயம் நல்லா காலம் சாத்திரி மன்னர் அள்ளிக் கொண்டு வரச் சொல்லவில்லை அப்பிடி எண்டால் தளபதி கடகத்திலைதான் டண்ணைக் கொண்டு வந்திருப்பார் என்ன.... |
| Posted by muniyama - 08-12-2005, 06:16 AM |
| ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான் |
| Posted by narathar - 08-11-2005, 11:46 PM |
| பாட்டப் போட்டுட்டு முனியம்மான்ட ஆட்டத்தப் பாக்க சரியா உந்தப் பாட்டுக்கு ஆடுற மாதிரி இருக்கு. |
| Posted by sinnakuddy - 08-11-2005, 10:38 PM |
| http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?u...d/chinnamami.rm புறோஸ்ட் என்ஜோய்....... |
| Posted by narathar - 08-11-2005, 09:40 PM |
|
ஏன் கள்ளுக் கடை பக்கம் போகாதே உந்தன் காலைப் பிடிச்சு கென்ச்சுகேறேன் மற்றது, சின்ன மாமியே உந்தன் சின்ன மகளெங்கே பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாளோ, அட வாடா மருமகா எந்தன் அழகு மருமகா எண்டெல்லாம் படிச்சதெல்லாம் மறந்திட்டிங்களோ அம்மான். |
| Posted by sinnakuddy - 08-11-2005, 09:26 PM |
| அந்தகாலத்து பைலா பாட்டுக்கள் ..பம் பம் பம்மெருகை.....டிங்கிரி டிங்கிரி மீனாட்சி பாட்டுகளுக்கு உந்த மியூசிசுக்கள் தொங்கலாயிருக்கும்.. இந்தா வாறன் |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->