Aggregator

65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க

3 months 2 weeks ago
31-6.jpg

65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால வரலாற்றில் ஒரு ஆளுநருக்கு 80 வயது இருக்கும் போது, அவருக்கு பணிபுரியும் மன உறுதி உள்ளதா? எனது அரசியல் வாழ்க்கையில் நாங்கள் முன்னுதாரணமாக இருக்கிறோம். 65 ஆண்டுகளுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருக்கிறோம். இங்கே எல்லோரும் அப்படித்தான். அதற்கு முன்னுதாரணமாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

https://thinakkural.lk/article/289950

வவுனியா நகரசபையினால் 80 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

3 months 2 weeks ago
31 JAN, 2024 | 01:35 PM வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்றையதினம் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 80க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு தற்போது சபையின் பாராமரிப்பில் உள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175230

வவுனியா நகரசபையினால் 80 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

3 months 2 weeks ago
31 JAN, 2024 | 01:35 PM
image

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன.

வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. 

இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்  நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம்  நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 80க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு தற்போது சபையின் பாராமரிப்பில் உள்ளது.

எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175230

அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை

3 months 2 weeks ago
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். செவ்வாயன்று அவர் நாட்டின் ரகசியங்களைக் கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள் தண்டனை பெற்றார். புதன்கிழமையன்றும் ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் வழங்கப்பட்டது. தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறியுள்ளார். ரகசியங்களை கசியவிட்ட வழக்கு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மார்ச் 2022இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார். மார்ச் 2022இல் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத் துண்டை வெளியே எடுத்துக் காட்டினார். இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் கூறினார். இதற்குப் பின்னணியில் எந்த நாடு இருக்கிறது என்பதை இம்ரான் கான் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதேநேரம், அவர் அமெரிக்காவை விமர்சிக்கவும் தவறவில்லை. இந்தச் சம்பவம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்பதாக இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்தது. பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிய ரகசிய தூதரக கடிதங்களை பொதுவெளியில் பிரதமரே பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் தெரிவித்தார். Play video, "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - ஏன்?", கால அளவு 3,39 03:39 காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - ஏன்? பத்து ஆண்டு சிறை இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறிபோன பிறகு, ஜூலை 2023இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923இன் படி, முன்னாள் பிரதமர் மீது அரசு ரகசியங்களை பொது வெளியில் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்திலும் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து பதிவிடப்பட்டுள்ளது. காபி குடிப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் வள்ளிக் கும்மி குறிப்பிட்ட சாதிக்கானதா? பத்மஸ்ரீ விருது மூலம் வாக்குகளை கவரப் பார்க்கிறதா பாஜக?5 மணி நேரங்களுக்கு முன்னர் தீர்ப்பு பற்றி இம்ரான் கான் கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES "சைஃபர் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டு முறையும் இந்த வழக்கு அரசமைப்பு மற்றும் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்சகத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் உச்சநீதிமன்றமும் எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியது. இப்போது முக்கிய சாட்சிகளின் வாக்குமூலத்தில் எனக்கும், ஷா மெஹ்மூத்துக்கும் எதிராக எதுவும் வெளிவராததால், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பீதியடைந்துவிட்டனர். மேலும் சட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இதை விரைவாக முடித்துவிட நினைக்கிறார்கள்," என இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியுமா? முன்னதாக, 2023 ஆகஸ்ட் மாதத்தில் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது சைஃபர் வழக்கில் 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானால் அதில் போட்டியிட முடியாது. தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பிடிஐ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cv2w1yjjydko

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்

3 months 2 weeks ago
19 வயதின் கீழ் உலகக் கிண்ண சுப்பர் 6 சுற்றில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா 30 JAN, 2024 | 10:12 PM (நெவில் அன்தனி) புளூம்பொன்டெய்ன் மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் முதலாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை 214 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது. முஷீர் கான் குவித்த அபார சதம் உட்பட அவரது சகலதுறை ஆட்டம், ராஜ் லிம்பினி, சௌமி பாண்டே ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின. இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டுள்ளது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 295 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் முதலாவது விக்கெட் சரிந்தது. ஆனால், அதன் பின்னர் முஷீர் கான் 2ஆவது விக்கெட்டில் ஆதர்ஷ் சிங்குடன் 77 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் உதய் சஹாரனுடன் 87 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டார். ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய முஷீர் கான் 126 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் மேசன் க்ளார்க் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 28.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது. அணித் தலைவர் ஒஸ்கர் ஜெக்சன் (19), ஸக் கமிங் (16), அலெக்ஸ் தொம்சன் (12), ஜேம்ஸ் நெல்சன் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் சௌமி பாண்டே 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஷீர் கான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா தனது அடுத்த சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி எதிர்த்தாடும். ஆட்ட நாயகன்: முஷீர் கான் https://www.virakesari.lk/article/175191

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 2 weeks ago
உண்மை வரலாற்றை நேர்மையுடன் பார்ககும் ஒருவருக்கு இங்கு எல்லோருமே அவரவர் தத்தமது விசுவாசிகளுக்கு வெள்ளை அடிப்பதும் அடுத்தவர் மீது சேறுவாரி தூற்றி தனது விசுவாசிகளின் தவறுகளை/ அக்கிரமங்களை மூடி மறைப்பது தெரியவரும். அது தான் தமிழர் அரசியல். அதன் விளைவை அனுபவித்தவர்களும் கடும் இழப்பை சந்தித்தவர்களும் இனி அனுபவிக்கப் போகின்றவர்களும் தமிழர்கள் தான்.

ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!

3 months 3 weeks ago
இப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது இவற்றை தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 3 weeks ago
முகப்புத்தகச் செய்திதானே .....😏 இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம். கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத கனேடிய டமில்ஸ் வானம் ஏறி வைகுண்டம் போவது என்பது சும்மா பேச்சுக்குத்தான் ....😏

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்

3 months 3 weeks ago
ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது. சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️ நூறு வீதம் உண்மை

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்

3 months 3 weeks ago
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன் மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் எனவும் ஜேர்மனி அரசு எதிர்பார்க்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின்,பிரித்தானியா ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1367758

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்

3 months 3 weeks ago
office.jpg?resize=569,375&ssl=1 வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்.

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன் மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் எனவும் ஜேர்மனி அரசு எதிர்பார்க்கிறது.

உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின்,பிரித்தானியா  ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1367758

கோழி வளர்ப்பு கொலையில் நிறைவேறிய சோகம் - யாழில் சம்பவம்

3 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 31 JAN, 2024 | 10:26 AM யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. இந்நிலையில், நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து, கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார். கைது செய்யப்பட்டவரை சுன்னாக பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/175199