வண்ணத் திரை

திரையரங்குகளை நிரப்பும் வேற்றுமொழிப் படங்கள்: தமிழ் சினிமாவின் நிலை குறித்து வருந்தும் திரையுலகம்

1 week 2 days ago
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எனவேதான் சின்ன பட்ஜெட் படங்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது,” என்று கூறுகிறார் திருப்பூர் சுப்ரமணியம். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 18 நிமிடங்களுக்கு முன்னர்

“ஓடிடியின் வருகை தமிழ் ரசிகர்களுக்கு எளிய வழியில் உலக சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இது அவர்களது ரசனையையும், ஒரு கதையைக் கொண்டாடுவதற்கான அளவுகோலையும், எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளது.

எனவே படைப்பாளிகள் தங்களது கதை சொல்லும் திறனை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே மக்களை திரையரங்கை நோக்கி வரவைக்க முடியும்," என்று கூறுகிறார் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார்.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளை கடந்த சில மாதங்களாகவே புதிய தமிழ்ப் படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்களும், பழைய தமிழ்ப் படங்களும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற படங்கள் வருவதில் ஒரு முடக்கம் நிகழ்ந்துள்ளதோ என்ற விமர்சனத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழ் சினிமாவின் வரலாறு
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கருத்துப் படங்களில் தொடங்கி காதல், காமெடி, வாழ்வியல், அறிவியல் எனப் பலதரப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முதல் ஒலியில்லா படமாக 1918இல் வெளிவந்த கீச்சக வதம் கருதப்படுகிறது. அதன் பிறகு 1931இல் வெளியான காளிதாஸ் தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது.

நூறாண்டுகள் கடந்த தமிழ் சினிமாவால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இலக்கியம், கலை மற்றும் பண்பாடு என திரைத்துறை ஆற்றிய பணி அளப்பரியது.

கருத்துப் படங்களில் தொடங்கி காதல், காமெடி, வாழ்வியல், அறிவியல் எனப் பலதரப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன.

இதில் பல்வேறு இயக்குநர்களின் மூலம் உலகளாவிய கலைநுட்பங்கள் முதல் தொழில்நுட்பம் வரை தமிழ் சினிமாவில் முயற்சி செய்யப்பட்டு, பல உலகத்தரம் வாய்ந்த படங்களும் வெளியாகியுள்ளன.

 
தமிழ் திரையரங்குகள் இப்போது எப்படி செயல்படுகின்றன?
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க இணையதளத்தின்படி, தமிழ்நாட்டில் 1104 திரையரங்குகள் உள்ளன.

தமிழ் திரைத்துறையின் முக்கியமான ஆன்மாக்களில் ஒன்று திரையரங்குகள். சினிமாவும், அதன் ரசிகர்களும் உரையாடல் நடத்தும் இடமே திரையரங்கம்தான். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க இணையதளத்தின்படி, தமிழ்நாட்டில் 1104 திரையரங்குகள் உள்ளன.

ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக இந்தத் திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்கள் அரிதாகவே தென்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்தான் அரண்மனை 4 படம் வெளியாகியுள்ளது.

இந்த இடைவெளியில் அடுத்தடுத்து வந்த மலையாளப் படங்களும், தமிழில் வெளியான கில்லி, வேட்டையாடு விளையாடு, தீனா போன்ற படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வசூல் வேட்டை செய்து கொண்டிருந்தன.

ஆனால், இதே காலகட்டத்தில் வெளியான சிறிய பட்ஜெட் தமிழ்ப் படங்கள் சில ஓரிரு நாட்கள்கூட திரையரங்குகளில் நீடிக்கவில்லை.

 
தமிழ் சினிமாவில் படங்களுக்கு பஞ்சமா?
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ் திரைத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகும் வெளியிடப்படாமல் இருப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறுகிறார்.

இதற்குக் காரணம், “வெளியீட்டிற்கான செலவுகளைச் செய்ய பல தயாரிப்பாளர்களிடமும் பணம் இல்லை. முன்பெல்லாம் சிறிய படமாக இருந்தாலும் திரையரங்குகள் முன்பணம் கொடுத்து வாங்கியதால், அந்தப் பணத்தில் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடுவார்கள்."

“இப்போதெல்லாம் யாரும் சிறிய படங்களை வாங்க முன்வருவதில்லை. பணம் வாங்காமல் வெளியிட்டுவிட்டு அந்தப் படம் ஓடினால் பணம் தருகிறோம் என்ற நிலை உருவாகிவிட்டது,” என்கிறார் அவர்.

இதனால் ஒரு படத்தின் முழு பணியும் முடிந்துவிட்டாலும்கூட அதை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதன்மூலம் பல நல்ல படங்கள் தேங்கிப் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

நல்ல படங்கள் வருவதில்லையா?

“மக்கள் வந்தால்தானே திரையரங்குகள் சிறிய பட்ஜெட் படங்களை வாங்க முடியும். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருவதில்லை. அதனால் மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை. எனவேதான் சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

தற்போது வெளியாகியிருக்கும் அரண்மனை 4 படம் இந்த இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், இது தற்காலிக இடைவெளி மட்டுமே என்றும் கூறுகிறார் அவர்.

 
நல்ல கதைகளைத் தேர்வு செய்வதில் என்ன பிரச்னை?
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,ANTHANAN

படக்குறிப்பு,நல்ல கதைகள் வராததே மக்கள் திரையரங்குக்கு வராததற்குக் காரணம் என்கிறார் சினிமா விமர்சகர் அந்தணன்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பல நூறு நாட்களுக்கு ஓட வைத்து மக்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், தற்போது வரும் திரைப்படங்கள் பலவும் மூன்று நாட்களைத் தாண்டுவதே குதிரைக் கொம்பாக இருப்பதாகக் கூறுகிறார் சினிமா விமர்சகர் அந்தணன்.

அதற்கு காரணம், நல்ல கதைகள் வராததே என்பது அவரது கூற்று.

“இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தாலும், தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அந்தக் கதைகளைப் படமாக்கத் துணிவதற்குப் பதிலாக, வழக்கமான கதையையே எடுக்க விரும்புகிறார்கள். இதனால் பல நல்ல இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை,” என்கிறார் அவர்.

அதேபோல், மலையாள சினிமாவில் இருப்பது போல் இயற்கைத்தன்மை இல்லாமல் இருப்பதும் நல்ல படங்கள் வருவதில் தடையாக இருப்பதாகக் கூறுகிறார் கே.ராஜன்.

“மலையாள சினிமாவில் கதைக்காக ஹீரோ நடிக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் ஹீரோவுக்காக பல கதைகள் எழுதப்படுகின்றன. அதுவே அவற்றின் தோல்விக்குக் காரணம்” என்கிறார் அவர்.

 
எது நல்ல படம்?
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,GOPI NAINAR / X

படக்குறிப்பு,வெகுமக்கள் விரும்புகின்ற படங்களை எடுக்காததால்தான் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்கிறார் கோபி நயினார்.

ஒரு திரைப்படம் என்று வரும்போது, அதைப் பார்க்கும் பலதரப்பட்ட மக்களையும் அது திருப்திபடுத்தாது. அப்படியிருக்க ஒரு நல்ல படம் என்றால் என்ன?

இதற்குப் பதிலளித்த இயக்குநர் கோபி நயினார், “ஒருவருக்கு மட்டுமே பிடித்த படம்கூட சிறந்த படமாக இருக்க முடியும். ஆனால், அது வெகுமக்களுக்குப் பிடிக்கிறதா என்பதைப் பொறுத்தே அது அவர்களுக்கான படமா என்பதை அளவிட முடியும்,” என்கிறார்.

அப்படி வெகுமக்கள் விரும்புகின்ற படங்களை எடுக்காததால்தான் மக்கள் திரையரங்குகளை நோக்கி வருவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இதற்கு ஒரு முக்கியக் காரணம், “படத்தின் கதைக்காக நடிகர்கள் நடிப்பதைவிட, நடிகர்களுக்காக படத்தின் கதை எழுதப்படுவது" என்று கூறுகிறார் கோபி நயினார்.

இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர் கே.ராஜன், ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதையை, இயக்குநரை மட்டும் சில தயாரிப்பு நிறுவனங்கள் தேர்வு செய்வதன் விளைவே மக்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் வெளியாவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறுகிறார்.

 
மக்களின் மனநிலை என்ன?
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய படங்களாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருகிறார்கள்," என்கிறார் அந்தணன்.

முன்பெல்லாம் சிறிய படம் என்றாலும் குறைந்தபட்சம் மக்கள் திரையரங்கம் சென்று என்னதான் இருக்கிறது என்றாவது பார்ப்பார்கள். ஆனால், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் வந்த பிறகு அந்த ரசனைத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார் அந்தணன்.

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய படங்களாக இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளை நோக்கி வருகிறார்கள்." சிறிய படங்களில் பெரும்பாலும் சாதாரண படங்களே வெளியாவதாலும், அவற்றை ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்றும் அந்தணன் கூறுகிறார்.

"அதைத் தாண்டி ஏதாவது ஒரு சிறிய பட்ஜெட் படம் நல்ல கதையாக இருந்து கொஞ்சம் பிரபலமடைந்தால் மக்கள் திரையரங்கம் சென்று பார்க்கின்றனர். ஆனால், அது வெளியாகி மக்களைச் சென்று அடைவதற்குள் திரையரங்குகளில் இருந்து அவை வெளியேறி விடுகின்றன."

 
‘மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன’
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,RAVIKUMAR / INSTAGRAM

படக்குறிப்பு,மற்ற எந்த மொழியை விடவும் தமிழ் திரைத்துறை பல புதிய வகை நுட்பங்களை, கதைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறுகிறார் இயக்குநர் ரவிக்குமார்.

சமீப காலமாக மக்களின் சினிமா ரசனையும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதற்கு நுட்பமான காரணம் ஒன்றை முன்வைக்கிறார் அயலான் பட இயக்குநர் ரவிக்குமார்.

“ஓடிடி வந்த பிறகு உலகளாவிய போட்டி உருவாகியுள்ளது. மக்கள் பல மொழிப் படங்களையும் , உலகப் படங்களையும் தங்களது மொழியிலேயே பார்க்கிறார்கள். எனவே, அதற்கு இணையாக இங்கும் படம் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.”

“ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, சில நேரங்களில் ஏமாற்றமடைகிறார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு படங்களை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் படைப்பாளர்களுக்கு உருவாகியுள்ளது,” என்கிறார் ரவிக்குமார்.

மற்ற எந்த மொழியைவிடவும் தமிழ் திரைத்துறை பல புதிய வகை நுட்பங்களை, கதைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறும் அவர், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் படங்களை இயக்குகையில் சிறிய படம், பெரிய படம் எனப் பேதமின்றி அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்கிறார்.

 
ஓடிடியின் போட்டி
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,K RAJAN

படக்குறிப்பு,தயாரிப்பாளர்கள் துணிந்து புதிய சிறந்த இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறார் கே. ராஜன்.

தமிழ்ப் படங்கள் வெளியாவதன் சிக்கல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர், விமர்சகர் என அனைவரும் ஒரு சேர ஒப்புக்கொள்வது, 'ஓடிடியின் வருகை சினிமாவில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது' என்பதாகும்.

அதில் 'சிலருக்கு நல்ல மாற்றங்கள் கிடைத்திருந்தாலும், சிலருக்கு பாதகங்களும் ஏற்பட்டுள்ளன.' அப்படிப்பட்ட ஒன்றாகவே திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவைப் பார்க்கிறார்கள் இவர்கள்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் மிகப் பிரபலமாக உருவெடுத்த ஓடிடி தளங்கள் சினிமா துறையில் ஏற்பட்ட புரட்சியாக பரவலாகப் பார்க்கப்பட்டாலும், திரைத்துறையினர் பலரால் அப்படிப் பார்க்கப்படவில்லை.

 
தமிழ் சினிமா

பட மூலாதாரம்,G DHANANJEYAN / X

படக்குறிப்பு,“பெரிய படங்களை திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம். சிறிய படங்கள் எப்படியும் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமாக வளர்ந்துவிட்டது," என்கிறார் ஜி.தனஞ்செயன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிய படங்களுக்கு மக்கள் திரையரங்கம் வருவது கடுமையான அளவில் குறைந்துள்ளதாகக் கூறுகிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்(TFAPATN) பொருளாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன்.

“பெரிய படங்களை திரையரங்குகளில் பார்த்துக் கொள்ளலாம். சிறிய படங்கள் எப்படியும் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அதில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமாக வளர்ந்துவிட்டது. அதை மாற்றவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறுகிறார் அவர்.

இதே கருத்தை ஒப்புக்கொள்ளும் திருப்பூர் சுப்பிரமணியம், ஓடிடி வருகைக்குப் பிறகு சிறிய படங்களுக்கு மக்களிடம் சுத்தமாக ஆதரவு இல்லை என்று கூறுகிறார்.

ஆனால், அதைத் தாண்டியும் குட் நைட், டாடா, போர்த்தொழில் பழகு, பார்க்கிங், இறுகப்பற்று போன்ற படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெற்றுள்ளன என்கிறார்கள் அந்தணன் மற்றும் கே.ராஜன்.

மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற கதைகள், வேறு யாரும் கொடுக்க முடியாத படைப்பை வெளிக்கொண்டு வரும்போது அது எந்தப் படமாக இருந்தாலும் ஓடிடி போன்ற சவால்களையும் தாண்டி திரையரங்கில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று கூறுகின்றனர் கோபி நயினார் மற்றும் ரவிக்குமார்.

https://www.bbc.com/tamil/articles/c19dr0kpxpzo

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.

2 weeks 3 days ago

சென்னை: திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார்.

கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார்.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1239836-film-playback-singer-uma-ramanan-no-more.html

  திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

ஆயுர்வேத சிகிச்சை: திரை நட்சத்திரங்கள் உடலும் மனமும் புத்துணர்வு பெற கேரளாவில் என்ன செய்கிறார்கள்?

3 weeks 5 days ago
ஆயுர்வேத சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தேஜா லேலே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 21 ஏப்ரல் 2024

ஆயுர்வேதம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது. இந்த பண்டைய மருத்துவ முறையின் மறுமலர்ச்சி மையமாக கேரளா உள்ளது.

கேரளாவிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற ஷில்பா ஐயர், ஆயுர்வேத சிகிச்சைக்கு புகழ் பெற்ற ‘ஆர்ய வைத்யா சாலா’ அமைந்துள்ள கோட்டக்கல் நகரத்திற்குச் செல்ல முடிவு செய்தார். இந்த மையம் 1902ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஏழு நாட்கள் அங்கு தங்கி, உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையான பஞ்சகர்மாவை முடித்த பிறகே அந்த சிகிச்சை மையத்தை விட்டு வெளியேறினார்.

"நான் தொடர்ந்து நவீன வாழ்க்கையின் தேவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தேன், தொடர்ச்சியான உடல் வலிகளும் இருந்தது. அதனால் தான் எனது சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தேன்" என்று ஷில்பா கூறுகிறார்.

பஞ்சகர்மா, நச்சு நீக்கும் செயல்முறைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆயுர்வேத சிகிச்சை. இது மூலிகை மருந்துகள், உடல் சுத்திகரிப்பு சிகிச்சைகள், பிரத்யேகமான உணவுத் திட்டங்கள் மற்றும் ஆரோக்கிய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நோய்க்கான மூல காரணத்தை நீக்கி, உடலை புத்துயிர் பெறச் செய்து, ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் உறுதி செய்கிறது.

முன்பை விட ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் உணர்வதாக ஷில்பா கூறுகிறார்.

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து கொள்வதற்காக பலரும் முன்பதிவு செய்கிறார்கள். கேரளாவின் இந்த கடற்கரை சொர்க்கத்தில் முழுமையான மருத்துவ சிகிச்சை என்பது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. கேரளாவில் உடலும் மனமும் புத்துணர்வு பெற ஆயுர்வேத சிகிச்சையில் என்ன செய்கிறார்கள்?

 
ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம்,AMAL TAMARA

படக்குறிப்பு,கேரளாவில் பலரும் ஆயுர்வேத சிகிச்சைக்காக முன்பதிவு செய்கிறார்கள்.
3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முறை

‘ஆயுர்’ (வாழ்க்கை) மற்றும் ‘வேதம்’ (அறிவியல் அல்லது அறிவு) ஆகிய சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து பெறப்பட்ட ஆயுர்வேதம், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது.

உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் என்பது மனம், உடல், ஆன்மா மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையைச் சார்ந்தது மற்றும் நோய் தீர்க்கும் உத்திகளுக்குப் பதிலாக தடுப்பு உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

பழங்கால மருத்துவ முறையானது, பிரகிருதி (உடலின் அமைப்பு) மற்றும் தோஷங்கள் (உயிர் சக்திகள்) ஆகியவற்றுக்கு இடையேயான உலகளாவிய ஒற்றைத் தொடர்பை மையமாகக் கொண்டது. ஆகாஷ் (ஆகாயம்), ஜல் (நீர்), பிருத்வி (பூமி), அக்னி (நெருப்பு) மற்றும் வாயு (காற்று) ஆகிய ஐந்து கூறுகளின் மாறுபட்ட கலவைகள் மூன்று தோஷங்களை உருவாக்குகின்றன.

ஆயுர்வேத பயிற்சியாளரான டாக்டர் கௌரங் பனேரி, ஒவ்வொரு நபருக்கும் வாத, பித்த மற்றும் கபா ஆகிய மூன்று தோஷங்கள் வெவ்வேறு வலிமை மற்றும் அளவுகளில் உள்ளன என்பதை விளக்குகிறார்.

"முக்கியமான தோஷம் அவற்றின் பிரகிருதியை தீர்மானிக்கிறது. வெளிப்புற அல்லது உள் தூண்டுதலால் (பொதுவாக உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது) தோஷங்கள் பாதிக்கப்படும் போது நோய்கள் எழுகின்றன. மூன்றிற்கும் இடையே நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஆயுர்வேதம் செயல்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

ஆயுர்வேத மருத்துவம், பல தலைமுறைகளாக ஆயுர்வேத பயிற்சியாளர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேதத்திற்கு புகழ் பெற்ற மாநிலம் கேரளா தான். பல நூற்றாண்டுகளாக கேரள மக்கள் ஆயுர்வேத சிகிச்சை முறையின் மிகப்பெரிய விசுவாசிகளாக இருந்து வருகிறார்கள்.

ஆயுர்வேதத்தின் பிரபலத்தைப் பற்றி அறிந்த மாநில அரசு, 1994ஆம் ஆண்டு முதல் கேரளாவை ஆயுர்வேத ஆரோக்கியம் பெறுவதற்கான ஒரு இடமாக நிலைநிறுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

கேரளா சுற்றுலாத் துறை இயக்குநர் பி.பி.நூஹ் கூறுகையில், "ஆயுர்வேதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கேரளாவில் மட்டுமே உள்ளது. இங்குள்ள பெரும்பாலான பயிற்சியாளர்கள் ஆயுர்வேத மருத்துவக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். இந்த அறிவு தலைமுறைதலைமுறையாக கடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் உள்ள ஒவ்வொரு சிறிய நகரத்திலும் கிராமத்திலும் ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இது மாநிலத்தில் அதன் பிரபலத்தை வெளிப்படுத்துகிறது." என்றார்.

 
ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பல ஆண்டுகளுக்கு முன்னரே கேரளாவை ஒரு ஆரோக்கிய ஸ்தலமாக முன்னிறுத்த மாநில அரசு பல முயற்சிகளை எடுத்தது.
கேரளாவின் ‘ஆயுர்வேத பருவம்’

இந்தியாவில் வருடாந்திர பருவமழையைப் பெறும் முதல் இடம் கேரளாவாகும். கேரள மக்கள் இந்த மழைக்காலத்தை ‘ஆயுர்வேதப் பருவம்’ என்று அழைக்கின்றனர்.

"மக்கள் வருடாந்திர புத்துணர்ச்சி சிகிச்சைக்கு செல்லும் நேரம் இது. கேரளாவில் உள்ள யானைகளுக்கு கூட அவற்றின் வேலை அட்டவணையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மருத்துவ உணவும் அளிக்கப்படுகிறது," என்று நூஹ் கூறுகிறார்.

கேரளாவின் காலநிலை மற்றும் வளமான மண், பாரம்பரிய மருத்துவ தாவரங்கள் மற்றும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"கேரளாவின் அடர்ந்த வெப்பமண்டல காடுகளில் ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்பட்ட சாறுகள் மற்றும் அமுதங்கள் தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளன," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்தச் சிறிய மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு நடத்தும் ஆயுர்வேத மருத்துவமனைகள், 800 ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைகள் மற்றும் 800 ஆயுர்வேத மருந்தகங்கள் உள்ளன. 120 ஆயுர்வேத விடுதிகள் மற்றும் தனியார் ஆரோக்கிய மையங்கள் கட்டி வஸ்தி (Kati vasti) போன்ற சிறப்பு சிகிச்சைகளை வழங்குகின்றன.

இது முதுகு வலி மற்றும் வீக்கத்திற்கான எண்ணெய் அடிப்படையிலான சிகிச்சையாகும். இலக்கிழி , உடல் வலிகள் மற்றும் தசைக்கூட்டு காயத்தைச் சரிசெய்வதற்கு சூடான மூலிகைப் பொடிகள் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை. ஞாஞ்சவரா கிழி (Njavara kizhi) கீல்வாதம் அல்லது நாள்பட்ட தசைக்கூட்டு அசௌகரியத்திற்கான மசாஜ் சிகிச்சை.

ஷிரோதாரா, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதற்கான ஒரு மறுசீரமைப்பு சிகிச்சை. இது நெற்றியில் சூடான, மருத்துவ எண்ணெயை தடவுவதன் மூலம் செய்யப்படும் சிகிச்சை.

பெரும்பாலான சிகிச்சை மையங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி, மனநலம், பதட்டம், வலி மேலாண்மை, எடை இழப்பு, தோல் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு, தூக்கப் பிரச்சனைகள், தடிப்புத் தோல் அழற்சி, கண் பராமரிப்பு, கீல்வாதம், பக்கவாதம், சியாட்டிகா, இரைப்பை பிரச்சனைகள் மற்றும் பலவிதமான உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சைகளை வழங்குகின்றன.

"சிகிச்சைகளில் பொதுவாக உணவு மாற்றங்கள், மூலிகை மருந்துகள், மசாஜ் சிகிச்சைகள், பவுல்டிசஸ், தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியவை அடங்கும். தாவரங்கள், மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும் சில மசாலாப் பொருட்கள் அறிகுறிகளை நிர்வகிக்கவும், உடல் மாற்றங்களுக்கு சிகிச்சையளிக்கவும் மற்றும் நோய் எதிர்ப்பை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன" என்று ஆயுர்வேத மருத்துவர் ஷைனி ஹரிஷ் விளக்குகிறார். இவர் கேரள மாநிலம் கோட்டக்கல்லில் மருத்துவராக உள்ளார்.

ஆயுர்வேதம், நோய் தடுப்பு உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் சமநிலையை கவனித்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்குவிக்கிறது. இயந்திரத்தனமான வாழ்க்கை மற்றும் அது கொண்டு வரும் பிரச்னைகளால் சோர்வடைந்த மக்களுக்கு இது பயன்படுகிறது.

கேரளாவில் உள்ள ஒரு சொகுசு ஆயுர்வேத ரிசார்ட்டான அமல் தமராவின் பொது மேலாளரும் மூத்த ஆயுர்வேத ஆலோசகருமான டாக்டர் ரெஜி ராஜ் கருத்துப்படி, “தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆயுர்வேதம் மீதான ஆர்வத்தைத் தூண்டியது கொரோனா தான். ஏனெனில் உடலை மீட்டெடுக்கவும் உடலின் சமநிலையைப் பராமரிக்கவும் அவ்வப்போது உடலைச் சுத்தம் செய்வதிலும் ஆயுர்வேதம் கவனம் செலுத்துகிறது" என்கிறார்.

 
ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடற்கரைகள் மற்றும் உப்பங்கழிகளுக்காக, ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது கேரளா.
‘ஆரோக்கியச் சுற்றுலா’

நவம்பர் 2021 முதல், ஆயுர்வேத சிகிச்சைகளுக்காக கேரளா மாநிலத்திற்கு வருகை தரும் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் 15% அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக கேரளாவில் அதன் கடற்கரைகள், மலைகள், உணவு வகைகளை விரும்பி சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆயுர்வேத மையங்களுக்கு ஆரோக்கிய சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தேவை மிகவும் அதிகமாக உள்ளது, ஆகஸ்ட் 2023இல், இந்திய அரசாங்கம் ஆயுஷ் விசாவை அறிமுகப்படுத்தியது. பாரம்பரிய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான பயணத்தை எளிதாக்கும் ஒரு புதிய வகை விசா அது.

(ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆறு பாரம்பரிய மருத்துவ முறைகளின் சுருக்கமாகும்.)

"கேரளாவில் செழித்தோங்கியுள்ள உள்நாட்டு மற்றும் முழுமையான சுகாதார அமைப்புகளை உள்ளடக்கியது ஆயுஷ். மக்கள் இன்னும் இந்த அமைப்புகளின் அடிப்படையில் மருத்துவத் தீர்வுகளைத் தேடுகின்றனர்," என்று நூஹ் கூறுகிறார்.

இவற்றில், ஆயுர்வேதம் மிகவும் பிரபலமானது. மார்க்கெட் ரிசர்ச் ஃபியூச்சரின் 2024 அறிக்கையின்படி , உலகளாவிய ஆயுர்வேத சந்தை அளவு, 2022இல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2023இல் 9.2 பில்லியன் டாலர்களிலிருந்து 2032இல் 26.16 பில்லியன் டாலர்களாக உயர வாய்ப்புள்ளது.

ஆயுர்வேதத்தின் நன்மைகள் பற்றிய புரிதல், அலோபதியின் குறைகள் பற்றிய விழிப்புணர்வு, எளிதான அணுகல் மற்றும் மக்களின் செலவழிக்கும் திறன் அதிகரிப்பு ஆகியவை ஆயுர்வேதத்தின் தேவையை அதிகரிக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கூடுதலாக, கேரளாவின் அமைதியான உப்பங்கழிகள் (Backwaters), சுத்தமான கடற்கரைகள் மற்றும் பசுமையான மலை வாசஸ்தலங்களுடன் சிகிச்சையை இணைப்பது பயணிகளை ஈர்க்கும் ஒரு அம்சமாகும்.

கேரளாவில் உள்ள நவீன மருத்துவ நிறுவனங்கள் இப்போது விமுறை காலத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும் விதத்தில் சிறப்பு பேக்கேஜ்களை வழங்குகின்றன. இந்த ஆயுர்வேத ஸ்பாக்கள் மற்றும் ரிசார்ட்களில் பெரும்பாலானவை பிரமிக்க வைக்கும், அமைதியான தளங்களில் அமைந்துள்ளன.

ஷில்பாவின் பஞ்சகர்மா சிகிச்சைத் திட்டம் மூலிகை மருந்துகள், நச்சு நீக்க சிகிச்சைகள், ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட உணவுத் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தது.

"செழிப்பான, பசுமையான, அமைதியான சுற்றுப்புறங்கள் எனது எதிர்பாராத ஆரோக்கிய பயணத்திற்கு ஒரு இனிமையான சூழலை உருவாக்கியது. உடல் சுத்திகரிப்பு முறையைத் தொடங்கும்போது நான் அற்புதமான மன அமைதியை அனுபவித்தேன்," என்று அவர் கூறுகிறார்.

இதேபோல், புனேவைச் சேர்ந்த நீதா கேட்கர், தொடர்ச்சியான இருமலுக்கு சிகிச்சை பெற கேரளாவின் ஆலப்புழா நகரின் ஆயுர்வேத மையத்திற்குச் சென்றார். ஆரோக்கிய சிகிச்சை பெற்றதோடு மட்டுமல்லாது, படகு இல்ல பயணங்களுக்குப் பெயர் பெற்ற ஆலப்புழா நகரத்தின் அழகையும் ரசித்தார் நீதா.

ஆயுர்வேதச் சிகிச்சை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆயுர்வேதம், நோய் தீர்க்கும் உத்திகளுக்குப் பதிலாக தடுப்பு உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

நீதாவைப் பொறுத்தவரை, ஆயுர்வேத முறை நோயின் அறிகுறிகளில் கவனம் செலுத்தாமல் நோய்க்கான காரணத்தை மையமாகக் கொண்டு இருப்பது தான் முக்கிய அம்சம்.

"நோயின் தன்மை மற்றும் கட்டமைப்பை ஒருவர் புரிந்து கொள்ளும்போது தான், உடலின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த வேலை செய்ய முடியும் என்று மருத்துவர் கூறுகிறார். இந்த முறை தான் ஆயுர்வேதத்தை ஒரு சிறந்த மருந்தாக மாற்றுகிறது," என்று நீதா கூறுகிறார்.

பாரம்பரிய மருத்துவ முறை இன்றைய உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாக பொருந்துகிறது என ராஜ் ஒப்புக்கொள்கிறார்.

"மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலைக்கு பண்டைய அறிவியல் கொடுக்கும் முக்கியத்துவம், நோய் தடுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வுடன் ஒத்துப்போகிறது. மனநலம், முறையற்ற தூக்கம், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது" என்று கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/ck7le4ypz2mo

இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான காப்புரிமை யாருக்கு? சட்டம் சொல்வது என்ன?

1 month ago
இளையராஜா : பாடல்கள் யாருக்கு சொந்தம்? இசையமைப்பாளருக்கா? தயாரிப்பாளருக்கா?

பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM

7 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமான பாடல்கள் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் ஒட்டுமொத்த உலகத்தின் வாராந்திர சராசரி பாடல் கேட்கும் அளவைவிட, இந்தியர்கள் பாடல் கேட்கும் வாராந்திர சராசரி அளவு அதிகம்.

குறிப்பாக இந்திய பொழுதுபோக்குத் துறையில் அங்கம் வகிக்கும் இசைத் துறையின் வருடாந்திர வருமானமே பல ஆயிரம் கோடிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதே நேரம் இதே இசைத் துறையில் காப்புரிமை என்பது பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காப்புரிமை என்றால் என்ன? அது திரைப்படத் துறையில் எப்படி இயங்குகிறது? அதற்கான சட்டங்கள் என்ன? உண்மையில் இசை யாருக்குச் சொந்தம் என்பது குறித்து இங்கு காணலாம்.

 
இளையராஜா வழக்கு
காப்புரிமை

பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM

படக்குறிப்பு,இளையராஜா தனது நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என்றும்கூட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்திய இசைத்துறையில் முக்கியமான இசையமைப்பாளரான இளையராஜா 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர். இதுவரை பல்வேறு மொழிகளில் 7000த்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தாம் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் முதலில் படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பயன்படுத்தத் தடை இல்லை என்றும், அதேநேரம் அதன் மீது இளையராஜாவுக்கும் தார்மீக உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு இளையராஜா இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, இந்த நிறுவனங்கள் அந்த பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது இருதரப்பின் வழக்கு விசாரணையும் உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

இளையராஜா இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு அவரது நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகர்கள் சித்ரா மற்றும் எஸ்.பி.பி.சரண் ஆகியோர் தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்றும்கூட வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் பிரச்னை அதற்குப் பின் சமரசத்தில் முடிந்து, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ஒன்றிணைந்தனர்.

தற்போது இளையராஜாவுக்கு எதிரான மேல்முறையீட்டில், ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றுவிட்டு இசையமைத்துக் கொடுக்கும் இசையமைப்பாளருக்கு அதற்குப் பின் அந்த இசையின் மீது எந்த உரிமையும் இல்லை என்று எதிர்தரப்பால் வாதிடப்படுகிறது.

இது சட்டபூர்வமாக எந்தளவுக்கு உண்மை? காப்புரிமை சட்ட விதிகள் சொல்வது என்ன?

 
காப்புரிமை சட்டம்
காப்புரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காப்புரிமை சட்டம் தனிநபருக்கு தனது படைப்பின் மீதான உரிமையைப் பாதுகாக்க உதவுகிறது.

காப்புரிமை சட்டம் என்பது 1957ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரின் படைப்பு அல்லது கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீதான அவரது உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

அதேநேரம் “எல்லா படைப்புகளுக்கும் காப்புரிமையைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. குறிப்பாக ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறோம் அல்லது நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்றால் அதைப் பதிவு செய்து அதற்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர்.

ஆனால், இதுவே ஒரு ஓவியம் வரைகிறோம், இசையமைக்கிறோம், கதை எழுதுகிறோம் என்றால் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒருமுறை அது வெளியிடப்பட்டு விட்டாலே அது உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுகிறார் கார்த்திகேயன்.

 
மேற்கத்திய கோட்பாடு
காப்புரிமை

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,காப்புரிமை கோட்பாடு பிறந்த இடத்திற்கும் நம் நாட்டுக்கும் உள்ள ஒரு அடிப்படை வேறுபாடுதான் இந்தக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

ஆனால், இந்தக் 'காப்புரிமை' என்கிற கோட்பாடே மேற்கத்திய உலகிலிருந்து வந்ததுதான். 'காப்புரிமை' என்பது கலைஞர்களுக்கும் அவர்கள் படைப்புகளுக்குமான வணிகப் பாதுகாப்பை உறுதி செய்கிற ஒரு விஷயம் என்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

இந்தக் காப்புரிமை கோட்பாடு பிறந்த இடத்திற்கும் நம் நாட்டுக்கும் உள்ள ஓர் அடிப்படை வேறுபாடுதான் இந்தக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

அங்கு இசை என்பது தனித்து நிற்பது; இங்கு திரைப்படங்களின் ஊடாக இணைந்திருப்பது. அந்த மாறுபாட்டை உணராமல் இயற்றப்பட்ட சட்டம் என்பதாலேயே அது பல முரண்களைக் கொண்டு வந்திருக்கிறது என்கிறார் அவர்.

இசை யாருக்கு சொந்தம்?

சமீப காலமாக தமிழ்திரைத்துறையில் இசையமைப்பாளர் மற்றும் இசை நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் உரசல்களில் அதிகம் எழும் வாதம் இசையமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இசை யாருக்கு சொந்தம் என்பதே!

இதுகுறித்து கார்த்திகேயனிடம் கேட்டபோது, “ஒரு இசையமைப்பாளர் தனி ஆல்பமாக உருவாக்கி இசையமைக்கிறார், அதை வெளியிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்படிச் செய்தால் அது முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்."

ஆனால், ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட படத்தின் தன்மைக்கு ஏற்ப தனக்கு இந்தப் பாடல்கள் வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்காக "ஒரு குறிப்பிட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இசையமைப்பாளரும் இசை அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அந்த இசையின் மீதான மொத்த உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்கே உள்ளது,” என்கிறார் அவர்.

 
காப்புரிமை

பட மூலாதாரம்,KARTHIKEYAN.N

படக்குறிப்பு,"ஒரு குறிப்பிட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இசையமைப்பாளரும் இசை அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அந்த இசையின் மீதான மொத்த உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்கே உள்ளது,” என்கிறார் கார்த்திகேயன்.

மேலும், “ஒரு படத்தில் வரும் பாடல் என்பது குறிப்பிட்ட இசையமைப்பாளரை மட்டும் சார்ந்தது கிடையாது. அதில் சவுண்ட் இன்ஜினியரில் தொடங்கி, பாடலாசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கு செலுத்துகிறார்கள். இதனால், ஒவ்வொருவரிடமும் ஒப்பந்தம் போட்டு அதன் அடிப்படையில்தான் அந்தப் பாடலை ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறார்,” என்று கூறுகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

இதுவே அந்த இசையமைப்பாளர் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்தப் பாடலை இலவசமாக உருவாக்கிக் கொடுக்கிறார் என்றால் அப்போது அவர் சொந்தம் கொண்டாடிக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

இந்தப் பிரச்னையை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அவரது கூற்றுப்படி, “சட்டம் என்பது ஒன்று; தார்மீகம் என்பது ஒன்று. சட்டம், அது இசையமைப்பாளருக்கே சொந்தம் என்று சொல்கிறது. தார்மீகப்படி அது தயாரிப்பாளருக்குத்தானே சொந்தம்?” என்று கூறுகிறார் அவர்.

ஆனால், அதை சட்டரீதியாக வாதிட்டு முடிவு செய்ய வேண்டுமே தவிர, கோயம்பேடு வணிகர்கள் போல வெறும் கடைநிலை விநியோகஸ்தர்களாக இருக்கும் இசை நிறுவனங்கள் ஒரு இசையமைப்பாளருக்கு அவரது பாடல் மீது உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

இளையராஜா : பாடல்கள் யாருக்கு சொந்தம்? இசையமைப்பாளருக்கா? தயாரிப்பாளருக்கா?

பட மூலாதாரம்,ILAIYARAAJA/ FACEBOOK

பாடலின் தன்மையை மாற்றும்போது யாருக்கு சொந்தம்?

இளையராஜா வழக்கில்கூட அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குழு, ஒரு பாடல் படத்திற்காக இசையமைக்கப்பட்டு வீடியோ காட்சிகளோடு இணைக்கப்பட்டு வெளியாகிறது.

அதன் மீது மட்டுமே அந்த தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. அதை ஆடியோ போன்று வேறு எந்த வடிவத்திலும் வெளியிட உரிமை கிடையாது என்று வாதிட்டது. ஆனால், வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் கருத்தோ அதற்கு எதிர்மாறானதாக இருக்கிறது.

அவரது கூற்றுப்படி, “ஒரு படத்தில் பாடல் அமைப்பதற்காக தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இடையே ஒப்பந்தம் போடும்போதே, அதில் ‘All Rights Reserved’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதன் அர்த்தம், குறிப்பிட்ட பாடலை எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. எனவே ஒரு பாடலை ஆடியோ, வீடியோ என எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளவும் அந்த தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு.”

 
எத்தனை ஆண்டுகளுக்கு சொந்தம் கொண்டாட முடியும்?
காப்புரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரு இசையை ஒரு நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திய பிறகு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

ஒரு இசையமைப்பாளர் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டு ஒரு இசையை உருவாக்கித் தருகிறார் என்றால் அடிப்படையில் குறிப்பிட்ட தயாரிப்பாளர் அந்த இசையை தனது வாழ்நாள் வரை மற்றும் அவரது இறப்புக்குப் பிறகு அவரின் வாரிசுகள் 60 ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் கார்த்திகேயன்.

இதே ஒரு நிறுவனமாக இருந்தால் அந்நிறுவனம் அந்த இசையை 60 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பிறகு அந்தப் பாடல்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அது பொதுத்தளத்திற்கு வந்துவிடும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

'குளிர்காயும் இசை நிறுவனங்கள்'

இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் குளிர்காய்வது, கொள்ளையடிப்பது இசை நிறுவனங்கள் மட்டுமே. அவர்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கும் சட்டம் வேண்டும் என்று அழுத்தமாக கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

“ஒரு வணிகத்துக்கு மூன்று நிலைகள் உண்டு. உற்பத்தியாளர், இடைத்தரகர், விற்பனையாளர். இங்கு இடைத்தரகர் என்பது தயாரிப்பாளர். இசை நிறுவனங்கள் மூன்றாவது நிலை. அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற விகிதத்துக்கு சட்டம் மாற்றப்பட வேண்டும்.”

“ஒரு படத்துக்குப் போடப்பட்ட இசையை வேறு படத்திற்கோ, தளத்திற்கோ பயன்படுத்த வேண்டுமென தயாரிப்பாளரோ, இசை நிறுவனமோ நினைத்தால் அதற்குரிய தொகையை அந்த இசையமைப்பாளருக்குக் கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை நிர்ணயிக்கும் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உண்டு” என்று வலியுறுத்துகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

 
சட்டத்தில் மாற்றம் வேண்டுமா?
காப்புரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தக் காப்புரிமை சட்டத்தை திருத்தியமைக்காத வரை இந்த முரண்களும், மோதல்களும் தீரவே தீராது என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

ஜேம்ஸ் வசந்தனை பொறுத்தவரை தற்போது இருக்கும் சட்டத்தை முறையாக வடிவமைத்தால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும். அதற்கு திரைப்பட இசையையும், தனி இசையையும் இரண்டாகப் பிரித்து சட்டத் திருத்தம் செய்யவேண்டும் என்கிறார்.

"தனி இசை உருவாக்கம் பாடகரை மையப்படுத்தியது. திரைப்பட இசை அந்தத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்போரின் அடையாளங்களை மையப்படுத்திய ஒரு புதுமைக் கலவை.

எனவே, இந்தக் காப்புரிமைச் சட்டத்தை இதற்கு ஏற்றாற்போல நாமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத வரை இந்த முரண்களும், மோதல்களும் தீரவே தீராது" என்று கூறுகிறார் அவர்.

ஆனால், தற்போது இருக்கும் சட்டமே போதுமானது. அதன்படி தனியாக ஆல்பமாக ஒரு இசையை வெளியிடும்போது அதற்கான காப்புரிமை வழங்கப்படுகிறது. இதுவே ஒரு படத்தைச் சார்ந்ததாக இசை உருவாகும்போது, அதில் பலதரப்பட்ட பங்குதாரர்களும் உள்ளதால் அதன் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது அவ்வளவுதான் என்கிறார் கார்த்திகேயன்.

எனவே குறிப்பிட்ட இசையமைப்பாளர்தான் ஒப்பந்தம் போடும்போதே அதற்கான தக்க சம்பளம் என்ன என்பதை நிர்ணயித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4n1ppkdyp2o

நீதிமன்றத்தை நாடும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி!

1 month 1 week ago
dhanush-603x375.jpg நீதிமன்றத்தை நாடும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி!

விவாகரத்துக் கோரி நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில் கடந்த 2004ஆம் ஆண்டு  நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்நிலையில் குறித்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 ஆம் திகதி நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்துகெண்டனர்.

பின்னர் இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி அறிவித்தனர்.

இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். இதையடுத்து தனுஷ், ஐஸ்வர்யா கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1377071

   எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்...

1 month 2 weeks ago


                                       எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்...
உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.  
                       காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. 
                                           விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார்.
குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன்
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

அணுகுண்டால் பேரழிவு கண்ட ஜப்பானில் 9 மாதங்களுக்கு பிறகு 'ஓப்பன்ஹெய்மர்' வெளியீடு - மக்கள் கூறுவது என்ன?

1 month 2 weeks ago
ஓப்பன்ஹெய்மர்
53 நிமிடங்களுக்கு முன்னர்

ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானதல்ல.

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பங்கு என்ன என்பதும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள், அணுகுண்டு தயாரிப்பது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல்கள், அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

ஓப்பன்ஹைமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்

ஜப்பானில் ஏன் தாமதம்?

ஜூலை 21, 2023 அன்று வெளியான ஓப்பன்ஹெய்மர் உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஆனால், இந்த படத்தின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஜப்பானில் இப்படத்தின் திரையிடல் குறித்து கடந்த ஆண்டு பேசியிருந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் , ஜப்பானியன் சூழலுக்கு ஏற்ப "கவனமான அணுகுமுறையை" எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

சினிமா ப்ளன்ட் பப்ளிக்கேஷனின் இயக்குனர் இதுகுறித்து பேசுகையில்,” உலகமே இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறது. எனவே ஜப்பானின் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளவர்களும் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்,”என்று கூறியுள்ளார் .

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டன.

இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தது ஜப்பான் வரலாற்றில் பெரும் சோகமான நிகழ்வாக அமைந்தது.

இந்த படத்தை பார்த்த ஜப்பானிய பார்வையாளர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "அவர்கள் கூட்ட அறையில் அமர்ந்து ஹிரோஷிமாவைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர். அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது" என்று கூறினார்.

வேறு சிலரோ கதை சொல்லும் மேற்கத்திய பாணி தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்கள்.

 
ஓப்பன்ஹெய்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார்."

வெளியீடு என்ன ஆனது?

ஓப்பன்ஹெய்மர் படத்தின் தயாரிப்பாளரான யுனிவர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விநியோகஸ்தரான பிட்டர்ஸ் எண்ட் ஆகியோர் டைம்ஸ் இதழிடம், ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவது குறித்து பல மாதங்கள் கருத்து ரீதியான விவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.

“இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதை பார்வையாளர்களே பெரிய திரையில் தங்கள் கண்களால் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

இருப்பினும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவுகளின் உண்மையான காட்சிகளை படத்தில் காட்டாதது குறித்து ஏற்கனவே நோலனை சர்வதேச பத்திரிகைகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நோலன், "சில நேரங்களில் அதிகமான காட்சிகளை வைப்பதை விட, தேவையான சில காட்சிகளை வைப்பது போதுமானது என்று நம்புவதால், படத்தில் உள்ள காட்சிகளே இந்த நிகழ்வு சோகம் நிறைந்தது என்பதை தெளிவுபடுத்துவதாக கருதுகிறேன்" என்றார்.

ஆசிரியர் நவோகோ வேக் தி கன்வெர்ஷனல் போர்ட்டலில் எழுதிய கட்டுரையில், “கிறிஸ்டோபர் நோலன் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை அலட்சியப்படுத்தவில்லை. ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி(ஓப்பன்ஹைமர்) ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு கொண்டாட்ட உரையில் தனது நண்பர்களுடன் பேசும்போது குண்டுவெடிப்பை கற்பனை செய்வதைப் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.

“ஆனால், அந்த கற்பனை காட்சியில் ஓப்பன்ஹெய்மர் ஒரு இளம் வெள்ளைப் பெண்ணின் (நோலனின் மகள் ஃப்ளோரா நடித்திருந்த பாத்திரம்) முகத்தை மட்டுமே பார்க்கிறார். அவர்கள் யாரும் உண்மையில் தாக்கப்படவில்லை இல்லையா? அங்கு ஜப்பானியர்கள், கொரியர்கள் மற்றும் ஆசிய, அமெரிக்கர்கள் மீது தான் குண்டு வீசப்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
ஓப்பன்ஹெய்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

" மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்டபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார்.

படம் பார்த்த மக்கள் கூறியது என்ன?

ஜப்பானில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து பார்வையாளர்கள் சிலர் கலவையான விமர்சனங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.

1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்து சிதறிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் இந்த படத்தை பார்த்த சிலரிடம் பிபிசியின் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல் பேசிக் கொண்டிருந்தார்.

அவர்களிடம் ஓப்பன்ஹெய்மர் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

" மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்ட போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார்.

அணுகுண்டு எதிர்ப்பு ஆர்வலரான மயூ செட்டோ, படத்தை பார்த்து விட்டு தான் அதிர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

“சில காட்சிகள் என்னை கோபமூட்டியது. அங்கு மீண்டும் மீண்டும் ஹிரோஷிமா குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்தவர்களின் உணர்வுகள் குறித்து அவர்கள் சிந்திக்கவே இல்லை,” என்று அவர் கூறினார்.

ஓப்பன்ஹெய்மர்
படக்குறிப்பு,

ஜப்பானில் படம் பார்த்த பெண்

மசாடோ டெய்னாமா என்ற இளைஞர், “இந்த திரைப்படம் ஓப்பன்ஹெய்மரை ஒரு சிறந்த மனிதராக காட்டினாலும், இந்த நிகழ்வு குறித்து அவர் மனதில் இருந்த குற்றவுணர்வை மறைக்க முடியவில்லை என்று காட்டியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

கனேய் குமே என்ற மாணவர் படத்தைப் பார்த்த பிறகு, இந்த சம்பவத்தை வெளி உலகம் எப்படிப் பார்க்கிறது என்று புரிந்துள்ளதாக கூறினார்.

“இந்த படத்தில் அணுகுண்டுகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் வழியாக அமெரிக்கர்களும், உலக மக்களும் இந்த சம்பவத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது எனக்கு புரிந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c6p41e6g2ego

ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?

1 month 3 weeks ago
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? 1222572.jpg  
 

கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது.

“எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது.

படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது.

பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது.

பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும்.

அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'!

ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in

10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை..

1 month 3 weeks ago
10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை..

seshu2632024m21-1711454986.jpg

சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு.

இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்‌ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது.

லொள்ளு சபா

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியில் நடித்து கலக்கியவர். மேலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் இவர் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

ஹார்ட் பேஷன்ட் ஆனாலும்: வாட்டர் பாட்டில் கூட தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு, நான் ஒரு ஹார்ட் பேஷன்ட்.. ஆனாலும், 5 கிலோ அரிசி, 10 கிலோ அரிசி மூட்டையை மாடியிலிருந்து தூக்கிட்டு வந்து கொடுக்கிறேன். நம்மாள முடிந்த உதவியை மத்தவங்களுக்கு பண்ணனும், என கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்து வந்த சேஷு இலவசமாக பல பேருக்கு திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார்.

10 லட்சம் இருந்தா:

காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும் 10 லட்சம் வரை பணம் செலவாகும் என சொல்லப்பட்டது. மேலும், சேஷுவை காப்பாற்ற பணம் கொடுங்க என்றும் சினிமா துறையினரிடம் அவரது உறவினர்கள் கெஞ்சிக் கேட்டனர்.

 யாருமே உதவல:

ஒரு சிலர் சேஷுவிற்கு உதவி செய்ய ஜீபேயில் பணம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், பெரிதாக யாருமே உதவி செய்யாத நிலையில், சேஷுவிற்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுத்தான் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எத்தனை கோடி செலவானாலும் காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், நலிந்த கலைஞர்களுக்கு உதவி பண்ண பெரிய நடிகர்கள் மற்றும் உடன் பல ஆண்டுகள் நடித்து வந்த நடிகர்களும் உதவி செய்ய முன் வருவதில்லை என்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது. நடிகர் சந்தானம், வடிவேலு, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர் சேஷு என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இறுதிச்சடங்கு: பள்ளிக்கரணையில் உள்ள சாய் பாபா நகரில் உள்ள 3வது மெயின் ரோடு, 3வது குறுக்குச் சந்தில் உள்ள சேஷுவின் வீட்டில் அவரது உடல் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.filmibeat.com/news/no-one-helps-lollu-sabha-seshu-for-his-treatment-at-the-last-time-details-shocks-fans-130057.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider

டிஸ்கி :

இப்போது பார்த்தாலும் அந்த  மூதாட்டி வேடத்தில்  கலக்கி இருப்பார்..

இன்றைய திரை நகைச்சுவையாளர்கள் யோகிபாபு, சந்தானம் எல்லாம்  லொள்ளு சபாவின் அங்கத்தினர்களே.. நன்றி கெட்ட உலகமப்பா..

 

ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..!

2 months ago
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..!
March 11, 2024, 1:18 pm IST
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..!

பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவிதம் நாவலை பென்யாமின் எழுதியிருந்தார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் வெளியாகும்வரை பென்யாமின் அறியப்படும் எழுத்தாளராக இருக்கவில்லை.

நாவல் வெளிவந்த ஒரேயிரவில் ஸ்டார் எழுத்தாளராக கொண்டாடப்பட்டார். ஆடு ஜீவிதம் உடனடியாக பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம்பிடித்தது. குறுகிய காலத்தில் ஆடு ஜீவிதம் நாவல் 100 மறுபதிப்புகளை மலையாளத்தில் கண்டது. இதுவொரு சாதனை.
பிறகு தமிழ், தாய், ஒடியா, அரபு, நேபாள, இந்தி, கன்னடா என்று பல மொழிகளில் இந்நாவல் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. இது வெளியான காலகட்டத்தில் நாவலை திரைப்படமாக்கும் தனது விருப்பத்தை இயக்குநர் பிளெஸ்ஸி பென்யாமினிடம் தெரிவித்தார். அதற்கான வேலைகள் தொடங்கின. பிறகு, படத்தின் பட்ஜெட் ஒரு மலையாள சினிமாவுக்கு மிகப்பெரியது என உணர்ந்து, பட முயற்சியை கைவிட்டனர்.  ஆனால், பிளெஸ்ஸியின் மனதிலிருந்து நாவல் மறையவில்லை.

தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2017 ல் பிருத்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் படத்தை எடுப்பதாக அறிவித்தார். 2018 ல் ரஹ்மான் இசையமைப்பாளராக படத்தில் இணைந்தார். கோவிட் காலகட்டத்தில் படப்பிடிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆடு ஜீவிதத்தை படமாக்க வேண்டும் என்ற விதை பிளெஸ்ஸின் மனதில் விழுந்து, சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு வரும் மார்ச் 28 படம் திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படைப்பாளியாக பிளெஸ்ஸியின் காத்திருப்பு பாராட்டப்பட வேண்டியது. 2004 ல் தனது 51 வது வயதில் காழ்ச்சா என்ற தனது முதல் படத்தை பிளெஸ்ஸி இயக்கினார். குஜராத் பூகம்பத்தில் பெற்றோர்களை இழந்து, கேரளா வரும் சிறுவனின் பின்னணியில் உருவான காழ்ச்சா புதியதொரு அனுபவத்தை மலையாள ரசிகர்களுக்கு தந்தது.

அடுத்தப் படம் தன்மாத்ராவில் அல்சைமரால் நினைவுகளை இழக்கும் குடும்பத் தலைவனின் கதையை படமாக்கினார். இரண்டு படங்களும் வசூல், விருதுகள் என இரண்டு திசையிலும் கொடிகட்டிப் பறந்தன. அதன் பிறகு இயக்கிய பளிங்கு, கல்கத்தா நியூஸ், பிரம்மரம் படங்கள் சுமாராகவே போயின. 2011 ல் பிரணயம் படத்தின் மூலம் பிளெஸ்ஸி மீண்டும் ரசிகர்களை ஆச்சரிப்படுத்தினார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஸ்வேதா மேனனின் பிரசவத்தை படம் பிடித்து எடுத்த களிமண்ணு திரைப்படம் வெளியானது.

ஒரு படைப்பாளி சாதாரணமாக யோசிக்காத பகுதிகளில் சிந்தனையை செலுத்துகிறவர் பிளெஸ்ஸி. ஒரு படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மகத்தானது. அவரது திரைவாழ்க்கையின் உச்சமாக கருதப்படும் படம் ஆடு ஜீவிதம். மார்ச் 28 வெளியாகும் இப்படம், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.news18.com/entertainment/cinema-aadu-jeevitham-movie-is-releasing-after-14-years-of-waiting-1374650.html

 

96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024

2 months 1 week ago
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன?
நோலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வென்றுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஓபன்ஹைமர் படம் ஏழு பிரிவுகளிலும், மற்ற படங்கள் ஆறு பிரிவுகளிலும் விருதுகளை வென்றன.

 

ஓபன்ஹைமர் படக்குழுவினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற வந்தபோது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவருக்கு கோப்பையை வழங்கினார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், நோலன் தனது மனைவியும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளருமான எம்மா தாமஸுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்மா தாமஸ், அந்த தருணத்தைப் பற்றி தான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்திலேயே தான் நின்றிருப்பதாகவும் கூறினார்

அவர் தனது கணவரை 'தனித்துவமானவர் என்று வர்ணித்தார். இருப்பினும், ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக அவர் பெருமையடைவதாகக் கூறினார். மேலும் தனது மூன்று குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

ஓபன்ஹைமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன்
எம்மா ஸ்டோன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எம்மா ஸ்டோன் சிறந்த நடிகையாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்தார்.

"நான் அந்த நேரத்தில் அப்படியே சுயநினைவு இழந்துவிட்டேன். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் மேடைக்குப் பின்னால் கூறினார்.

"நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுழல்வது போல் உணர்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை. எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது," என்றார்.

யோர்கோஸ் லாந்திமோஸ் படத்தில் பெல்லா பாக்ஸ்டராக நடித்ததில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

"புதிதாக ஆனால் உருவகமாக நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு... மொழி மற்றும் திறமைகளை வேகமாகப் பெறும் ஒரு நபராக நடிக்கும் வாய்ப்பு... அவள் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையான அன்பும் நிறைந்தவளாக இருந்தாள்," என அந்தக் கதாப்பத்திரத்தைப் பற்றி அவர் பேசினார்.

 

ஓபன்ஹைமர் சிலியன் மர்பிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது
சிலியன் மர்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில்லியன் மர்பி செய்தியாளர் அறைக்குள் வரும்போது அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதைப் போலத் தெரிந்தது. (அவர் வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை என்றாலும்).

"நான் கொஞ்சம் திகைப்புடன் இருக்கிறேன், இன்று இங்கு நிற்கும் ஐரிஷ் நாட்டவராக இருப்பதில் நான் மிகவும் வியப்படைகிறேன், பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

“இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும் கிறிஸுக்கும் (நோலன்) அத்தகைய சிறப்பு உறவு இருக்கிறது. நாங்கள் 20 வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகிறோம், அவர் சரியான இயக்குநர் என்று நினைக்கிறேன்...என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. நான் சிறுவயதில் அவருடன் ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்!"

ஐரிஷ் நாட்டில் பிறந்த, ஆஸ்கார் வாங்கும் முதல் நடிகராக இங்கு நிற்பதில் அவர் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

"நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை (ஏற்புரையில்), ஆனால் அயர்லாந்தில் கலைஞர்களை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் சிறந்தவர்கள். அது தொடர வேண்டும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c51w4gqq9pqo

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

2 months 1 week ago
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28
04:28p0hfjy1b.jpg
காணொளிக் குறிப்பு,

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?

28 பிப்ரவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024

மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.

2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

இந்தியா டுடே விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து பேசுவதாக இந்தியா டுடே தனது திரை விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலில் 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது' எனும் வரியோடு தொடங்குகிறது.

க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த கதையும் மனித உணர்வுகளை பற்றி ஆழமாக பேசுவதாக இந்தியா டுடே கூறுகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

படத்தின் ஆரம்பத்திலேய ஸ்ரீநாத் பாஸி பள்ளத்தில் விழும் காட்சி காட்டப்பட்டு அதற்கு அவரது நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷனோடு படத்தின் தலைப்பு போடப்படுவதில் இருந்தே, பார்வையாளர்களை படத்திற்குள் இயக்குநர் இழுத்து வந்துவிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் கதை 2006ல் நடப்பதாக இருப்பதால், அந்த காலகட்டத்தை இயக்குனர் உறுத்தல் இல்லாமல் இயல்பாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், படம் வேகம் எடுக்கும் இடமே 11 நண்பர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல்லும்போதுதான். அப்போது கலகலப்பாக இருக்கும் திரைப்படம், நண்பர்கள் குணா குகைக்கு சென்றவுடன் த்ரில்லிங்காக மாறுவதாக குறிப்பிட்டுள்ளது

நண்பர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் முதல் ஒரு உயிரை காப்பாற்ற போராடுவது வரை படம் முழுவதும் மனித உணர்வுகளின் இரண்டு எல்லைகளையும் இயக்குனர் சிதம்பரம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனைவராலும் பொதுவாக பாராட்டப்படும் ஒரு அம்சம் நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. தனது நண்பர் ஒருவர் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதும் அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனும் சூழலில் அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படும் நடிப்பு அபாரமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் விமர்சனம்

பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM

'கூஸ்பம்ப்ஸ்' தரும் இளையராஜா

நடிப்பை தாண்டி படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

படத்தில் ஒரெயொரு குறை இருப்பதாக சுட்டிகாட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்ற முயலும் காட்சி குறைந்த நேரமே வருவதால் அது படத்தோடு ஒட்டவில்லை என விமர்சித்துள்ளது

மலையாளத்தில் இந்த வருடம் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களின் வரிசையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

பார்வையாளர்களால் கணிக்க கூடிய வகையில் படத்தின் முடிவு இருந்தாலும், எங்கேயும் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களை படத்திற்குள் கட்டிப்போட்டதுதான் படத்தின் வெற்றி என தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.

தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது என இந்து தமிழ் திசை தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது என இந்து தமிழ் திசை கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cd1wezzrd5jo

The Kerala Story ஐ  இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது

2 months 2 weeks ago

The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.

இந்திப் படமான The Kerala Story ஐ  இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது.

படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக  வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  ஒரு நல்ல முஸ்லீமையும்  படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும்.

மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்திரை தருவது தொட்டு அவர்களை எப்படி சிறீலங்கா ஊடாக சிரியாவுக்கு கடத்துகிறார்கள் என்பதையும்  விளக்கி இருக்கிறார்கள்.

ஒரு உண்மையான கதையை வைத்து படத்தை, எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் உள்ள சம்பவங்களில்  எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

ரமணி vs ரமணி புகழ் தேவதர்சினி இந்தப் படத்தில் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார். நகைச்சுவை நடிப்பில் மட்டுமே அவரைப் பார்த்துப் பழகிய கண்கள், இந்தப் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து ஆச்சரியத்தில் விரிகின்றன.

வன்முறைகள் அதிகம். ஆனாலும் இறுதிவரை பார்க்க வைக்கிறது.

 

வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’

2 months 3 weeks ago
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன்,
Mammootty-in-Bramayugam-Movie-Review-1.j

மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’.  17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும்  நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்;

கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார்.  கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார்.  அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார்.   ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார்.

சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான்.  ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ்.

Bramayugam-is-set-in-17th-century-Kerala
 

இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்.  மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல்.

கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர்.

1500x900_1604349-brahmayugam-06-1.png
 

படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி.  அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்.

பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன.

maxresdefault-2-1.jpg
 

இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான்.  படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார்.

Bramayugam1708223238792.jpg
 

படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள்.  பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள்.  சின்னச் சின்ன பொருட்களில் கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.  ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங்.

படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும்  பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 

 

https://aramonline.in/16772/brahumayugam-cinema-review/

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

3 months 1 week ago
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? 1196502.jpg  
 

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே எலியும் புலியுமாக இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகிவந்த இந்து - முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதை பேசுகிறது ‘லால் சலாம்’.மதங்களை முன்னிறுத்தி விவாதங்கள் தொடர்ந்து எழும் சூழலில் இப்படியொரு கதைக்களத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மனதார பாராட்டலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன் என பிரச்சார நெடியுடன் வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் முக்கியமான கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் - விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் நான்-லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. கலவரத்தைத் தொடர்ந்து சிறைக்கு சென்று வெளியே வரும் விஷ்ணு விஷால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடையில் ஒரு காதல் பாட்டு என சற்றே தொய்வுடன் தொடங்கும் படம், ரஜினியின் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடிக்கிறது.

சமீப வருடங்களில் வெளியான ரஜினி படங்களையே தூக்கி சாப்பிடும்படியாக ரஜினிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி. கூடவே ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் செம விருந்து. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு.

 

 

 

ஷார்ப் ஆன வசனங்கள், வயதுக்கு ஏற்ற பக்குவமான கேரக்டர் என தன்னுடைய திரை ஆளுமையால் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். சிறப்புத் தோற்றம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஏறக்குறைய முழு படத்திலும் ரஜினியின் ஆதிக்கம்தான். மதநல்லிணக்கம் தொடர்பாக ரஜினி பேசும் வசனங்கள் அனைத்துக்கும் அரங்கம் அதிர்கிறது. குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்து பேசுவது, இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் ரஜினி பேசுவது ஆகிய காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் ரகம்.

படத்தின் பிரச்சினையே முதல் பாதி நான்-லீனியரில் சொல்லப்படுவதுதான். நிகழ்காலம், கடந்த காலம் இரண்டுமே ஆறு மாத இடைவெளியில் நடப்பவை என்பதால் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. போரடிக்காத வகையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்தாலும் இலக்கில்லாத வகையில் எங்கெங்கோ செல்வதால் எந்த இடத்திலும் படத்துடன் ஒன்றமுடியாத நிலை ஏற்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் கதைக்களம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படத்தில் மிகச் சிறிய அளவே கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றிலுமே எந்தவித பரபரப்போ, அழுத்தமோ இல்லை. படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா அல்லது கிரிக்கெட்டா என்று தெளிவாக சொல்லமுடியாமல் தடுமாறியுள்ளனர். எடிட்டிங்கில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன.

ரஜினி தவிர்த்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வரும் அனந்திகா சனில்குமார் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் உதவியிருக்கிறார். படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்று சொல்லப்பட்ட தன்யா பாலகிருஷ்ணாவின் காட்சிகள் பெரிதாக இல்லை (வெட்டப்பட்டனவோ?) சமூக வலைதள சர்ச்சை காரணமா என்று தெரியவில்லை. இறுதிக் காட்சியில் ஓரிரு நிமிடங்கள் வந்தாலும் ஈர்க்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதயத்தை உருக வைக்கிறது. தேர்த் திருவிழா பாடல், மறைந்த ஷாஹுல் ஹமீதுவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருக்கும் ஒரு பாடல் ஆகியவை சிறப்பு.

படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன. குறிப்பாக, செந்தில் தனது மகன் குடும்பத்தை பற்றி பேசும் காட்சி, மருத்துவமனையில் இருக்கும் தனது மகனை நினைத்து ரஜினி ‘அல்லாஹ்’ என்று கதறி அழும் காட்சி ஆகியவை நெகிழச் செய்கின்றன.

சமூக வலைதளங்களில் மதங்களை முன்வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசும் வன்மக் கணைகளுக்கு நடுவே ஒரு முக்கிய கருத்தை, ரஜினி என்ற ‘பிராண்ட்’ உடன் சுமந்து வந்திருக்கும் ’லால் சலாம்’ படத்தை தாராளமாக வரவேற்கலாம். திரைக்கதையை மெருகேற்றி, காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? | Rajinikanth starrer Lal Salaam Review - hindutamil.in

சிறந்த இசை அல்பத்திற்கான கிராமி விருதைப் பெற்ற இந்திய இசைக்குழு ‘சக்தி’

3 months 1 week ago

image

 

2024 ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான கிராமி விருதை இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினர் வென்றிருக்கிறார்கள். இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் இசைக்கலைஞர்களுக்கு ஓஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு தெரிவித்திருக்கிறார். 

உலகம் முழுவதிலுமுள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதைப் பெறுவது தான் கனவாக இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸில் பிராம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ‘ஒஸ்கர் நாயகன்’ ஏ ஆ ரஹ்மான் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். 

இதன் போது 2024 ஆம் ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான விருது, ‘திஸ் மொமண்ட்’ (This Moment) எனும் அல்பத்தை உருவாக்கிய சக்தி குழுவினருக்கு வழங்கப்பட்டது- இந்த இசைக்குழுவில் பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், உஸ்தாத் ஜாஹீர் உசேன் மற்றும் கடம் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான செல்வகணேஷ் விநாயக்ராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிராமி விருதை வென்ற இவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, அதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இவர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். இந்திய இசைக்கலைஞர்கள் கிராமி விருதை வென்றிருப்பதால் இசையுலக ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

https://www.virakesari.lk/article/175822

இசைஞானியின் ‘நீனைவெல்லாம் நீயடா ’ படத்தில் 70 : 30

3 months 1 week ago

image

 

நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். 

‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’  ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்திருக்கிறார். 

இவ்விழாவில் இயக்குநர் ஆதிராஜன் பேசுகையில்,“ எம்முடைய நண்பரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன். எழுபது சதம் உண்மை.. முப்பத சதம் கற்பனை.. கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் பாடசாலைப் பருவத்தினைக் கடந்து தான் வந்திருப்பார்கள். அதன் போது ஏற்பட்டிருக்கும் முதல் காதல் எம்முடைய உயிர் மண்ணுக்குள் செல்லும் வரை மறக்க இயலாது. அத்தகைய முதல் காதலை வைத்து தான் இப்படம் உருவாகியிருக்கிறது. இசைஞானியின் இசையுடன் இணைந்து பார்க்கும் போது மறக்க இயலாத அனுபவமாக இருக்கும்.” என்றார். 

https://www.virakesari.lk/article/175826

ப்ளூ ஸ்டார் விமர்சனம்

3 months 2 weeks ago
ப்ளூ ஸ்டார் விமர்சனம்
 
 
 
நடிகர்கள்:
அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன்,சாந்தனு பாக்யராஜ்
இயக்கம்: எஸ் ஜெயகுமார்சினிமா வகை:Comedy, Drama, Sportகால அளவு:2 Hrs 48 
 
அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியாக உள்ளது. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து பேசுகிறார்கள். இந்த ஒரு போட்டியை பற்றி தான் மொத்த படமும் இருக்குமோ என தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை. பெரிதும் பேசப்படும் அந்த கிரிக்கெட் போட்டி படத்தின் முதல் பாதியிலேயே நடந்துவிடுகிறது.
 
 


யார் ஜெயிக்கிறார், தோற்கிறார் என்பதை தாண்டி காட்டியிருப்பது தான் ப்ளூ ஸ்டார் படத்தின் நல்ல விஷயமே. ஒரே ஒரு கோணத்தில் தான் படத்தை எடுக்க வேண்டும் இல்லை என்று காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ். ஜெயகுமார்.
 

படம் முழுக்க ஹீரோ ரஞ்சித்தின்(அசோக் செல்வன்)காதல் டிராக்கை மட்டும் காட்டவில்லை ஜெயகுமார். பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. பகவதி பெருமாளின் பிளாஷ்பேக் தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறது.


ரொம்ப யோசிக்காமல் படம் பார்க்கலாம். எதை சொல்ல வருகிறோம் என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார். தான் சொல்ல வருவதை ரசிகர்களை புரிந்து கொள்ளவும் வைத்திருக்கிறார்.

ஹீரோ படும் அவமானங்களை புரிய வைக்க பலர் அவரை பற்றியும், அவரின் நண்பர்களை பற்றியும் மோசமாக பேசுவதை காட்டியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் வேதனை புரிந்துவிட்டது என்றாலும் ரசிகர்களை இயக்குநர் சும்மா விடுவதாக இல்லை. வேதனையை வெளிப்படுத்தும் வசனங்கள் அதிகமாக உள்ளது. அது படத்திற்கு மைனஸாக அமைந்துவிட்டது.
 

கதாபாத்திர தேர்வை பாராட்டியே ஆக வேண்டும். அசோக் செல்வனின் நடிப்பு அருமை. 30களில் இருக்கும் அசோக் செல்வன் டீனேஜராக அசால்டாக நடித்து அசத்தியிருக்கிறார்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி அற்புதம். எதிரணியின் கேப்டன் ராஜேஷாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாந்தனு பாக்யராஜ். சஜு நவோதயாவுக்கு தனித்து தெரிகிறார்.

ப்ளூ ஸ்டாரின் முக்கிய ஸ்டாரே இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பெரிய பலம்.

ப்ளூ ஸ்டார்- பார்த்து என்ஜாய் பண்ணலாம்
blue star
 

பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்த ரகசியம்

3 months 2 weeks ago
செயற்கை நுண்ணறிவு: பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்ததன் ரகசியம்
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இனிமேல் உங்கள் விருப்பமான பாடகர்களை, அவர்கள் மறைந்த பின்னரும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா?

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தனது சிறப்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது இறந்த பாடகர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உயிர் கொடுப்பதைச் செய்து காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கு எதிராக அமெரிக்காவின் ஹாலிவுட் போர்க் கொடி தூக்கி வரும் நிலையில் இந்திய திரை உலகம் அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமைகளைப் படைத்திருப்பது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

 
'ஊர்வசி ஊர்வசி' என்று பாடிய குரல் மீண்டும் ஒலிக்கிறது
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/X

லால் சலாம் திரைப்படத்தின் ‘திமிறி எழுடா’ என்ற பாடலில் மறைந்த பாடகர்கள் ஷாஹுல் ஹமீது, பம்பா பாக்யாவின் குரல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இருவருமே தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடனும், பிற இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஷாஹுல் ஹமீது 1980கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 1993ஆம் ஆண்டில் "திருடா திருடா" திரைப்படத்தில் அவரது தனித்துவமான குரலை வெளிப்படுத்திய "ராசாத்தி என் உசுரு" பாடல் ஹமீதுக்கு திருப்புமுனையாக இருந்தது.

"வண்டிச்சோலை சின்ராசு" படத்தில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே", "காதலன்" படத்தில் "ஊர்வசி ஊர்வசி" மற்றும் "ஜீன்ஸ்" படத்தில் "வாரயோ தோழி" உள்ளிட்ட 1990களின் மிகவும் பிரபலமான தமிழ்ப் பாடல்களை அவர் பாடினார். அவர் 1998ஆம் ஆண்டு தனது 44வது வயதில் கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/FACEBOOK

பம்பா பாக்யா தமிழ் திரை உலகில் பின்னணிப் பாடகராக வலம் வந்தவர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பொன்னி நதி” பாடல், நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தில் “சிம்டான்காரன் பாடல், நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் “புல்லினங்காள்” பாடல் ஆகியவை அவர் பாடியதில் பிரபலமான பாடல்கள். அவர் 2022ம் ஆண்டு உயிரிழந்தார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,A R RAHMAN/X

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசியிடம் பேசும்போது, "எந்தவொரு தொழில்நுட்பமும் மனித சமுதாயத்திற்கு நன்மை தரவேண்டும். வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்று கருதுகிறேன்.

இந்தப் பாடலை உருவாக்கும்போது நிறைய யோசித்தேன். பாடகர்களின் குடும்பத்தாரையும் சந்தித்தோம். வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எதையும் செய்வதற்கு நான் விரும்புவதில்லை.

இப்போது நாங்கள் இந்தப் பாடலுக்குத் தேவையானதைச் செய்திருக்கிறோம். நாளை இதேபோன்ற முயற்சியை வேறு யாராவது செய்தாலும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாடகரின் குடும்பத்திற்கு, அவர்களின் வாரிசுகளுக்கு உரிய தொகையைச் செலுத்திவிட்டு அந்த முயற்சியை மேற்கொள்வார்கள்," என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,SCREENGRAB

'கடவுளுக்கு பிறகு, ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி' - ஷாஹூல் ஹமீதின் மகள்

ஷாஹூல் ஹமீதின் மகள், ஃபாத்திமா ஷாஹுல் ஹமீது இது முற்றிலும் எதிர்பாராதது என்று தெரிவித்தார். அவர் நம்மிடம் பேசும்போது, “ரஹ்மான் அங்கிள், தனக்கே உரிய பாணியில் மேஜிக் செய்கிறார். அப்பாவின் குரலை மீண்டும் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

என்னால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேறு யாருக்கும் புரியும் என்று நான் நினைக்கவில்லை. என் அம்மாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தாத்தாவின் காலத்தில் அவருடன் இருக்க முடியாமல் தவித்த என் மகள், இப்போது இந்தப் பாடலைக் கேட்டு குதூகலிக்கிறாள்,” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தனது தந்தைக்குமான உறவு நட்பையும் தாண்டியது என்கிறார் ஃபாத்திமா.

“அவர்கள் சகோதரர்களைப் போலவே இருந்தார்கள். இருவரும் அவரவர் துறைகளில் வளர்ந்து வரும் காலத்திலேயே தொடங்கிய நட்பு அது. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக ஜிங்கிள்ஸ் இசைக்கும்போது இருவரும் அறிமுகமானார்கள்.

ரஹ்மான் அங்கிளின் சொந்த ஸ்டூடியோவில் பதிவு செய்யப்பட்ட முதல் ஆல்பமான – 'தீன் இசை மாலை'- இஸ்லாமிய பக்திப் பாடல்கள் கொண்டது. அதில் ரஹ்மான் அங்கிளின் டேக் லைனாக மாறிய 'எல்லாப் புகழும் இறைவனுகே' என்ற பாடலை என் தந்தை பாடியிருந்தார்.

சுற்றி பல திறமைசாலிகள் இருந்தாலும் ரஹ்மான் அங்கிள்தான் திறமையை அடையாளம் கண்டு சரியான தளத்தில் பயன்படுத்தினார். கடவுளுக்கு அடுத்தபடியாக ரஹ்மான் அங்கிளுக்கு தான் நன்றி செலுத்துகிறோம்,” என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

மறைந்தவர்களின் குரலை மீண்டும் பயன்படுத்துவது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, “தொழில்நுட்பத்துடன் நாம் வளர வேண்டும். இதில் எதிர்மறையாக எதுவும் இல்லை. அப்பாவின் குரலைப் பயன்படுத்துவது குறித்து எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது," என்றார் ஃபாத்திமா.

"நான் எப்படி உணர்கிறேன் என்பதை விட, மக்கள் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அவரது ரசிகர்கள் அன்புடனும் மரியாதையுடனும் அதை வரவேற்றதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்."

உண்மையில், பாடல் முதன்முதலில் ஆன்லைனில் வெளியிடப்பட்டபோது, அவரது ரசிகர் ஒருவர்தான் பாடலின் இணைப்பையும் பாடலில் தன் அப்பாவின் குரல் எந்த நிமிடத்தில் ஒலிக்கிறது என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும், “இந்தப் பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் மறப்பது மிகவும் எளிதானது. ஆனால், அவர் இறந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே சினிமாவில் இருந்த ஒருவரை மக்கள் எவ்வாறு அன்புடன் நினைவில் கொள்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்,” என்றார்.

 
இனி பாடகர்களின் குரலே பாடலைப் பாடும்
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலேயே முதல் முறையாக மறைந்த பாடகர்களின் குரலை மீண்டும் ஒலிக்க செய்வது இதுவே முதல் முறை.

இது எப்படி சாத்தியமானது என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இதை உருவாக்கிய டைம்லெஸ் வாய்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண சேத்தன் பிபிசியிடம் பேசினார்.

“நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. ரஹ்மான் சார் ஏதாவது புதிய இசைக் கருவி வாங்கி வந்தால், அது எப்படிச் செயல்படுகிறது என்று முழுமையாகக் கற்றுக் கொள்வேன்.

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், இசையமைப்பாளர்களுக்கான இசை உருவாக்கத் தேவைப்படும் மென்பொருட்களைத் தயாரிக்க நானும் என் குழுவும் தொடங்கினோம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, டைம்லெஸ் வாய்ஸஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்," என்றார் கிருஷ்ண சேத்தன்.

யாருடைய குரலை உருவாக்க நினைக்கிறோமோ, அவரது குரலின் பதிவு தேவை. அது ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

"பதிவு செய்யப்பட்ட குரலைக் கொண்டு ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை பயிற்றுவிக்க வேண்டும். அந்த ஏஐ மாடல் பாடகரின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் கிரகித்துக் கொள்ளும்.

பின்பு, நாம் பதிவு செய்ய நினைக்கும் பாடலை வேறு ஒரு நபரைப் பாடச் சொல்லி பதிவு செய்துகொள்ள வேண்டும். இது பைலட் வாய்ஸ் எனப்படும். பின்பு, நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மாடல் பைலட் வாய்ஸை பாடகரின் குரலாக மாற்றும். இந்தியாவிலேயே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை,” என்று இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கினார்.

ஏன் ஷாஹூல் ஹமீது மற்றும் பம்பா பாக்யாவின் குரல்கள் தேர்ந்தெடுக்கபட்டன என்று கேட்டதற்கு, “ஷாஹுல் ஹமீத், பம்பா பாக்யாவின் குரல்கள் மிகவும் தனித்துவமானவை. செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்குக் கொண்டு வர இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை," என்றார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான்: மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு உயிர் கொடுத்த AI தொழில்நுட்பம் - எப்படி செய்தார்?

பட மூலாதாரம்,KRISHNA CHETAN

மேலும், "பம்பா பக்கியாவின் குரல் ரஹ்மான் சாருக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு மாதிரி குரலை உருவாக்கியபோது, அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஷாஹூல் ஹமீது அவருடன் நெடு நாட்களாகப் பயணம் செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,” என்று கூறினார்.

டைம்லெஸ் வாய்ஸஸ் என்பது பாடர்களின் குரல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி என்று குறிப்பிடுகிறார் கிருஷ்ணன் சேத்தன்.

“இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு பாடகரின் குரலை காலத்துக்கும் பாதுகாக்க முடியும். மறைந்த பாடகரின் குரலைப் பயன்படுத்தும்போது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு உரிய வெகுமதியை முன்கூட்டியே குடும்பத்தினருக்கு அளித்துவிடுகிறோம்,” என்றார்.

இந்தத் தொழில்நுட்பம் இசைத் துறையில் பல மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிருஷ்ண சேத்தன்.

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தங்கள் குரல்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விரும்பும் முன்னணி பாடகர்களுடன் நாங்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளோம். அவர்களின் குரல்களைப் பதிவு செய்து சோதனை செய்து வருகிறோம்.

ஸ்டூடியோவுக்கு நேரில் செல்ல முடியாத ஒரு பாடகரின் ஏஐ குரலைக் கொண்டு, பாடலைப் பதிவு செய்துகொள்ள முடியும். பல்வேறு கால கட்டங்களில் ஒரு பாடகரின் குரல் எப்படி இருந்ததோ அதைப் பதிவு செய்து ஒரே பாடலில் சேர்க்க முடியும்.

மேலும், ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படங்களின் நடிகர்களுக்குத் தங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், ஏஐ மூலம் அவரது குரலிலேயே அனைத்து மொழி ரசிகர்களிடமும் பேச முடியும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cnknq92w234o

32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 months 2 weeks ago
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

article_image1

Poonam pandey

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

article_image2

கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றதால், இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட கோவா சென்றிருந்த பூனம் பாண்டே, அங்கு தன் கணவர் தன்னை அடித்து துன்புறித்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருமணமான இரண்டே வாரத்தில் பூனம் பாண்டேவின் கணவர் சாம் மும்பை போலீசாரான் கைது செய்யப்பட்டார்.

 

article_image3

 

பின்னர் சில தினங்களிலேயே தன்னுடைய கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பூனம் பாண்டே அறிவித்ததை பார்த்த நெட்டிசன்கள் அவர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்துவருவதாக விமர்சித்தனர். இதுதவிர நிர்வாண படங்களிலும் நடித்து வந்த பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

article_image4

 

அவர் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் "இன்று காலை எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். பூனம் பாண்டேவின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

https://tamil.asianetnews.com/gallery/gallery/poonam-pandey-died-at-the-age-of-32-due-to-cervical-cancer-gan-s87u2c#image3

 

Checked
Sun, 05/19/2024 - 00:35
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed