ஊர்ப்புதினம்

சட்டத்தின் பெயரால் சர்வாதிகாரம்

3 months 2 weeks ago

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சபாநாயகர் கையெழுத்திட்டதிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதன் சரத்துகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் அப்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கும் நடைமுறைக்கும் புறம்பாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்தச் சட்டவரைவு தொடர்பில் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை இப்போதிருக்கும் சூழலில் இப்படியொரு சட்டவரைவு தேவையா என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துர்நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாக ஆளும் கட்சியினர் குறிப்பிடுகின்றனர். 'குட்டைப்பாவாடைகளுடன் பெண்கள் நடமாட முடியாத சூழல் இருக்கின்றது. அப்படி அவர்கள் நடமாடுவதை படமெடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்கின்றனர். பெண்கள் குளிப்பதைக்கூட படமெடுத்து சமூகவலைத்தளங்களில் தரவேற்றுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த இந்தச்சட்டம் அவசியம்' என்று நாடாளுமன்றத்தில் இந்தச்சட்டவரைவு மீதான விவாதத்தின் போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந் தானந்த அளுத்கமகே கூட உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிடுவதைப்போன்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரைத் தண்டிக்க எமது நாட்டில் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் ஏற்கனவே உள்ளன. அவற்றை தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்றவாறு சர்வதேச தரத்துக்கு மாற்றியமைத்தாலே போதுமானது. இவ்வாறான சிறப்பான சட்டம் ஒன்று அதற்குத் தேவையில்லை.
நடைமுறையில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் களைவதற்குப் போதுமான சட்டங்கள் அரசமைப்பில் இருக்கத்தக்கதாகவே, இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சிறப்புச் சட்டத்தின் விளைவை 3 தசாப்தங்களாக இந்த நாட்டின் மூவின மக்களும் அனுபவித்திருக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு வழங்கிய கட்டுப்பாடற்ற அதிகாரம், அந்தச் சட்டத்தை வைத்து அவர்கள் ஆள்வோரின் நலனுக்காக எவ்வாறெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை அறிய முடியும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் அவ்வாறானதொன்றே. ஆட்சியாளர்களின் தேவைக்கே அது பயன்படுத்தப்படப் போகின்றது. ஆட்சியாளர்களுக்கு விரும்பத்தகாத சகல பதிவுகளும் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கப்படப் போகின்றன. அவ்வாறான பதிவர்கள் குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் - முற்போக்குவாதிகள் ஊடகர்கள் கைதாகப் போகின்றனர். இந்தச் சட்டத்தின் ஊடாக அரச தலைவரால் 5 பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்படும். அந்த ஆணைக்குழுவே, ஒவ்வொற்று சமூகவலைத்தளப் பதிவுகள் தொடர்பிலும் தீர்மானிக்கும் உரித்தைக்கொண்டிருக்கப்போகின்றது. அரச தலைவரால் நியமிக்கப்படும் ஓர் ஆணைக்குழு எப்படி இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற பெயரில் இயங்கிய ஆணைக்குழுக்கள் ஆட்சியாளர்களின் தாளத்துக்கு ஆடாவிட்டால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது பரகசியமானது. இப்படியான நிலையில் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணையாளர்கள் சமூகஊடகங்களின் பதிவுகளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் அரச தலைவரால் நியமிக்கப்படும் ஆணைக்குழு, சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை சவாலுக்கு உட் படுத்தமுடியாது. அதாவது மேன்முறையீடு செய்யமுடி யாது. நீதிமன்றப் பொறிமுறையை நாடமுடியாது. இது மிகமோசமானதொரு நடைமுறையே. இப்படியான சட்டத்தையே நாடாளுமன்றத்தில் தலைகீழாக நின்று ஆளும் தரப்பு நிறைவேற்றியிருக்கின்றது. மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து வீதிக்கு இறங்காத வரையில் ஆட்சியாளர்கள் இதை விட மோசமாக இன்னும் செயற்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.

https://newuthayan.com/article/சட்டத்தின்_பெயரால்_சர்வாதிகாரம்

பாராளுமன்றில் பாலியல் சேஷ்டை: மூவர் கைது.

3 months 2 weeks ago

இரண்டு அழகான பணிப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் மூன்று இளநிலை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த பணியகத்தின் அதிகாரிகள் அண்மையில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உதவி நிர்வாகி உட்பட இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/பரளமனறல-பலயல-சஷட-மவர-கத/175-332344

image_27fe7b9c47.jpg

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

3 months 2 weeks ago
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
TorontoCanada
 2 மணி நேரம் முன்
 
 
 
Share
  • விளம்பரம்
 

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

 

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. 

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் | Canadian Tamil Congress Toronto Office Fire Attack

 

 

 

இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

 

 

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:

3 months 2 weeks ago

யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:

(மாதவன்)
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா (30)இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்பியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்கால் குதிரையாட்டம்,மயிலாட்டம் என்னும் கிராமிய நடனத்துடன் விருந்தினர்கள் சரஸ்வதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.

இவ் விழாவில், கலை பண்பாட்டில் மிகச்சிறந்த ஆற்றலை  07 வருடகாலமாக வெளிப்படுத்திய 15 பேருக்கு யாழ் முத்து விருதும், கடந்த இரண்டு வருடங்களாக கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த இளம் கலைஞர்கள் விருது 12 நபர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் விருதுகளை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச். எம்.சாள்ஸ் வழங்கி வைத்தார்.

வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் பணிமனை பிரதிப்பணிப்பாளர் லாகினி நிர்பராஜ், சிவபூமி அறக்கட்டளை ஸ்தாபகராம் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவருமான ஆறுதிருமுருகன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், இளங்கலைஞர்கள், யாழ் முத்து விருது பெறும் கலைஞர்கள், சமூக பெரியோர்கள், ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா: (newuthayan.com)

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

3 months 2 weeks ago
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்  
 

Mithuna   / 2024 ஜனவரி 30 , பி.ப. 05:36 - 0      - 59

print sharing button
facebook sharing button
whatsapp sharing button
twitter sharing button

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காரணிகளின் அடிப்படையில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படுகிறது. பூஜ்ய (0) மதிப்பெண் பெறும் நாடு ஊழல் மிகுந்த நாடாக குறிப்பிடப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 180 நாடுகளில் எந்த நாடும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. அதாவது உலகம் முழுவதும் ஊழல் இருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் ஊழல் மிகவும் குறைந்த நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து 2-ம் இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 93-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 40 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதேபோல் கஜகஸ்தான், லெசோத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 மதிப்பெண்களுடன் இந்தியாவுடன் 93-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன.

பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 133-வது இடத்தையும், இலங்கை 115-வது இடத்தையும் சீனா 76-வது இடத்தையும் பிடித்துள்ளன. வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா நாடு கடைசி இடத்தில் உள்ளது.

Tamilmirror Online || ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை

3 months 2 weeks ago

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது.

mullivaikal_new.jpg

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக  கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகபணியாற்றிய வேளை போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு அவர் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச சட்டத்தின் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

இராணுவதளபதியாக இல்லாவிட்டாலும் பாதுகாப்புபடையினர் தொடர்பில் கட்டளையிடுவது குறித்து வலுவான கட்டுப்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள புதிய அறிக்கை அவருக்கு பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை சர்வதேச குற்றவியல் சட்டங்களை   மீறுவது குறித்து நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்ளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தயங்கினார் எனவும் ஐடிஜேபியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர்பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகதன்மைமிக்க விசாரணையை மேற்கொள்வதற்கும் நீதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்   அவருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் போதிய சந்தர்ப்பமிருந்தது எனினும் உண்மை வெளியில் வருவதற்கு அனுமதிப்பதற்கு பதில் கோட்டாபய ராஜபக்சவும் ஏனைய ஆட்சியாளர்களும் உரிமை மீறல்களில் பாதுகாப்பு படையினருக்கு தொடர்புள்ளதை மறுத்துவந்துள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் அவர்களிற்கு பதவிஉயர்வுகளை வழங்கியுள்ளதுடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது.

 

https://itjpsl.com/assets/Tamil_Gotabaya-Rajapaksas-war-time-role-Jan-2024_Final_26.01.2024_compressed.pdf

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை | Virakesari.lk

மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி

3 months 2 weeks ago

Published By: VISHNU

30 JAN, 2024 | 12:23 PM
image
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.

எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார்.

மார்ச் முதல் யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி இயங்கும் - பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி | Virakesari.lk

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய விதிமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை

3 months 2 weeks ago
அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குணவர்தன, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்றார்.

விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

expressway.jpg

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வீதி விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கீழ் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்த அமைச்சர், இந்த கலந்துரையாடலில் பொலிஸார், வீதி பொறியியலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

“கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலையில் பதிவாகும் பல விபத்துக்கள் அதிக வேகத்தினால் ஏற்படுவதாக கலந்துரையாடலில் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முற்படும் வாகனங்களாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது,” என்றார் .

பயணிக்கும் போது சீட் பெல்ட் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, குடிபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி விதிகளை பின்பற்றத் தவறியமை ஆகியன இலங்கையில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்த அமைச்சர் குணவர்தன, சாரதியின் வசதிக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரதிபலிப்பு விளக்குகளே நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவத்தின் வெளிச்சத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கேரவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு அதீத வேகத்தினால் ஏற்பட்ட விபத்து என கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விபத்துக்குப் பின்னர், அதே அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்ட மற்றுமொரு விபத்தும் பதிவாகியுள்ளது.

https://thinakkural.lk/article/289908

கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு போராட்டம் !

3 months 2 weeks ago

Published By: VISHNU

30 JAN, 2024 | 08:36 PM
image
 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (30)  பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.

போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டது.

''மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024'' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் கொழும்பில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

வெட் வரி உள்ளிட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர். 

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி ஆரம்பமாகி முதல் 15 நிமிடங்களுக்குள்ளால் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகையும்,நீர்த்தாரைப் பிரயோகமும் இடம்பெற்றது.

மீண்டும் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுடனும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதமும் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச பேரணி உரையை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதவான் நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. 

கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து,இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு கொழும்பு இலக்கம் 04 நீதவானால் இன்று முற்பகல் தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியனவும் தடை உத்தரவு பிறப்பித்திருந்தன.  

வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாமெனவும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதமேற்படுத்த வேண்டாமெனவும் நீதிமன்ற உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதேவேளை,எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை,நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரணியை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேசமதாச கொழும்பு தேசிய வைத்தியாசலைக்கு சென்று பாதிக்கப்பட்ட கட்சி ஆதரவாளர்களின் நலன் விசாரித்தார்.

 

(படப்பிடிப்பு –ஜே.சுஜீவகுமார்)

WhatsApp_Image_2024-01-30_at_18.37.11_-_

WhatsApp_Image_2024-01-30_at_18.37.14_-_

WhatsApp_Image_2024-01-30_at_18.37.14.jp

WhatsApp_Image_2024-01-30_at_18.37.13_-_

கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு போராட்டம் ! | Virakesari.lk

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

3 months 2 weeks ago
%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0% கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று குழுகூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாட்களில் கட்சியின் யாப்பின் திருத்தம் செய்ததன் பின்னர், நிறைவேற்றுக்குழுவுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று சபைக்கு என்னால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதாவது கதிரையின் அடையாளத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பரந்த அமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம்.

ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
நாங்கள் அரசியலமைப்பை திருத்த வேண்டும்.

அந்த அரசியலமைப்புகளை எமது கட்சி தலைமையகத்தில் திருத்தம் செய்வோம்.

அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு
புதிய நிர்வாகிகள் சபையொன்றை நியமிக்க எதிர்பார்க்கின்றோம்.

வெற்றிலைச் சின்னத்தை பெறமுடியாது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

வழக்குத் தொடுத்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் இராஜினாமா செய்து வெற்றிலையுடன் கூட்டணியில் இணைவார்கள்” என நம்புகிறோம் என மைத்ரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1367602

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

3 months 2 weeks ago
image00002.jpeg?resize=750,375&ssl=1 மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது

அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.

குறித்த சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது .

இதில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1367616

76வது சுதந்திர தினம் கிழக்கில்

3 months 2 weeks ago
76வது சுதந்திர தினம் கிழக்கில்

2024 ஜனவரி 30 


இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

image_e78d6bf1cf.jpg

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி 3மணிக்கு நடைபெறவுள்ள சுதந்திர தின விழா தொடர்பான முன்னோட்ட கூட்டம் ஆளுநர் சுற்றுலா விடுதியில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது.

image_679a3f8ea7.jpg

கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா

image_cf45ac4388.jpg

image_2f0aaef6ab.jpg

image_5d80282828.jpg
 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/76வது-சுதந்திர-தினம்-கிழக்கில்/73-332331

’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ - சுரேன் ராகவன்

3 months 2 weeks ago
’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’

பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

" பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும்.

கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற 80 இற்கும் மேற்பட்ட  முறைப்பாடுகள் பகிடிவதையுடன் தொடர்புடையனவாக கருத முடியாது.

அதேநேரம், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளுக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எதிர்கால நலனை சிந்தித்து செயற்பட வேண்டும்." - என்றார்.  (a)
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/பகிடிவதைக்கு-12-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை/175-332310

ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!

3 months 2 weeks ago
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்!
1765985448.jpeg

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்!

யோகி.

மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். தனது இளமைக்காலம் முழுவதையும்; சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றார். (ச)
 

 

https://newuthayan.com/article/ராஜீவ்_காந்தியின்_கொலைவழக்கில்_விடுதலை_செய்யப்பட்டோரை_இலங்கைக்கு_அனுப்பக்கோரி

வவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   30 JAN, 2024 | 09:46 AM

image

வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது,

வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29 வயதுடைய ஜெனிற்றா என்ற இளம் குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் இந்நிலையில் கணவருடைய குடும்பத்தினருடன் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த பெண் கடந்த வாரமும் தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மரணவிசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகரன் மேற்கொண்டு வருவதுடன் வவுனியா பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/175112

அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்த பரந்தளவிலான கூட்டணி அமைக்க நடவடிக்கை - சம்பிக்க

3 months 2 weeks ago
29 JAN, 2024 | 08:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தரம்மிக்க குழுவினருடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க கலந்துரையாடி வருகிறோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த குழுவில் உள்ள பொருத்தமான ஒருவரையே வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாட்டை வங்குராேத்து அடையச் செய்த குழுவினரை ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகி உள்ளனர்.

அதனால் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தகுதிவாய்ந்தவர்களுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க தற்போது நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

அத்துடன் எமது பரந்துபட்ட கூட்டணியை பாராளுமன்றத்தில் இருப்பவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி ஒன்றை எதிர்வரும் காலத்தில் கட்டியெழுப்புவோம்.

இந்த கூட்டணியில் இருக்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அதேபோன்று பாெருத்தமான வேட்பாளர் குழுவொன்றை பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முன்வைப்போம்.

அத்துடன் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அரசாங்கம் பாரியளவிலான வரி சுமையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது.

எந்தவித தேடிப்பார்ப்பும் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் டின் இலக்கம் ஒன்றின் ஊடாக மக்களை வரி முறைமைக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

மேலும் அரசாங்கம் கடந்த வாரம்  நிகழ்சிலை காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிக சந்தர்ப்பம் இருப்பது  இணையவழி சேவை எனும் டிஜிடல் சேவை மூலமாகும். சமூவலைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்போவதாக தெரிவித்து, அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மரண அடியை வழங்கி இருக்கிறது.

சமூகவலைத்தளம் ஊடாக சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவது உண்மை என்றாலும் அதனை மேற்கொள்ள வழிவகுத்த பிரிவினரே சட்ட திட்டங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் அரசாங்கம் நினைத்த பிரகாரம் சட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளதால் இணையவழி நேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முழு உலகிலும் இணையவழி சேவைகளில் வரி அறவிடப்படுவது 6 நாடுகளிலாகும். அதில் இலங்கையும்  ஒன்றாகும்.

அத்துடன் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கு அரசியல் குண்டர்கள் செயற்பட்ட நிலையில், எதிர்வரும் காலத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டு, அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களை அடக்குவதாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/175083

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் மருத்துவம், சட்ட கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை

3 months 2 weeks ago

Published By: VISHNU  29 JAN, 2024 | 08:33 PM

image

(எம்.மனோசித்ரா)

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த புலமைப்பரிசில் திட்டங்களில் மருத்துவம், சட்டத்துறை, துணை மருத்துவம் (Paramedical), ஆடை வடிவமைப்பு (Fashion Design) ஆகிய கற்கை நெறிகள் உள்ளடக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 

அதற்கமைய 2024 - 2025 காலப்பகுதியில் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பாடநெறிகளுக்கு நேரு நினைவு உதவித்தொகை திட்டத்தின் மூலமும், பொறியியல், அறிவியல் மற்றும் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மௌலானா ஆசாத் திட்டத்தின் ஊடாகவும் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175100

பொருளாதார பயங்கரவாதிகளான ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் - சஜித்

3 months 2 weeks ago
29 JAN, 2024 | 08:47 PM
image

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

dsg.gif

மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது.

நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.

th.gif

இந்நாட்டை வங்குரோத்தடையச்  செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம்  தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

rhf.gif

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.

இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன.

egd.gif

இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/175082

சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது!

3 months 2 weeks ago
சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது!
29 JAN, 2024 | 08:50 PM
image

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (29) கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.

அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/175106

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர்

3 months 2 weeks ago

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இதற்கு 30 வருட குத்தகைக்கு புதிய காணியை  பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 30 வருடத்துக்கான குத்தகை தொகையையும்  வழங்க ஏற்பாடு  செய்துள்ளார்.
 
IMG-20240129-WA0002.jpg
 
கிழக்கு ஆளுநரின் இந்த செயற்பாட்டை வரவேற்றுள்ள பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இப்பாடசாலைக்கு  காணி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாடசாலையில் நீண்டகாலமாக  காணிப்பிரசினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும், பாடசாலைகளுக்கான காணியை உடனடியாக பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன்   ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வினை வழங்கினேன் என செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
Checked
Thu, 05/16/2024 - 11:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr