ஊர்ப்புதினம்

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களைக் கூலிப்படைகளில் அமர்த்தும் மனித கடத்தல் செயற்பாடு

1 week 1 day ago
08 MAY, 2024 | 11:55 AM
image
 

முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/182955

இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து செயற்கை கை, கால்கள் தயாரிப்பு

1 week 1 day ago
08 MAY, 2024 | 12:05 PM
image

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும். 

375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை, கால்கள் விநியோகிக்கப்படவுள்ளன. 

மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிலரங்கின்போது 04 இராணுவ உறுப்பினர்களுக்கு செயற்கை கை, கால்கள் அடையாளமாக வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

unnamed__3_.jpg

unnamed.jpg

unnamed__4_.jpg

unnamed__6_.jpg

unnamed__5_.jpg

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 https://www.virakesari.lk/article/182954

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்துக்கு எதிராக மேன்முறையீடு

1 week 1 day ago
08 MAY, 2024 | 11:30 AM
image

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனத்தை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டமை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளை மீறும் செயல் என அடிப்படை உரிமைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தன்னிச்சையானது என்றும், நடைமுறை உத்தரவுக்கு எதிரானது என்றும் மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை நீதிமன்றம் செல்லுபடியற்றது என அறிவிக்க வேண்டும் எனவும் விஜேரத்னவை பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை முடியும் வரை அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள், கூட்டத்தின் நிமிடங்கள், தேர்வுக்கான காரணங்கள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பேரவை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க விஜேரத்னவை நியமித்தமையை எதிர்த்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை (SC FR 110/2024) தாக்கல் செய்துள்ளது.

2020 ஜனவரி முதல் அதன் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய விஜேரத்ன, புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

விஜேரத்னவின் நியமனம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மீறுவதாகவும், நடைமுறை நியாயம்  மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் TISLஇன் மனு வாதிடுகிறது.

இந்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் அல்லது விஜேரத்னவை நீக்கிவிட்டு சட்டத்துக்கு  உட்பட்டு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் TISL உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், விஜேரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாவதற்குரிய அனைத்து சட்ட ரீதியான நிபந்தனைகளையும் தகுதிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் இம்மனு வாதிடுகிறது.

மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், அரசியலமைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர், தலைவர், ஆணையாளர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகம் பதவிக்குப் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பணிப்பாளர் நாயகமாக விஜேரத்ன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு TISL உயர் நீதிமன்றத்திடம் கோருகிறது.

இவ்வாறான முறையற்ற நியமனங்களைத் தொடர அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை TISL நிறுவனமானது சுட்டிக்காட்டியுள்ளது.

நடைமுறைச் சீர்கேடுகள் தடையின்றி நீடிக்க அனுமதிப்பதன் மூலம் சாத்தியமான பொருளாதார மற்றும் நற்பெயர் சார் விளைவுகளை குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கும், தவறுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், திருத்துவதற்கும் தவறினால், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் நம்பகத்தன்மை, பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயரை எதிர்மறையாக பாதிக்கும் என்று மனு வலியுறுத்துகிறது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது சட்டப்பூர்வ தீர்வுகளை தேடுவதோடு, பணிப்பாளர் நாயகம் பதவிக்குரிய எதிர்கால நியமனங்களுக்கான, தெளிவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களை நிறுவுமாறு அரசியலமைப்புப் பேரவை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கோருகிறது.

https://www.virakesari.lk/article/182948

டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது

1 week 1 day ago

டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது

Diana-gamage-300x200.jpg

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

https://thinakkural.lk/article/301111

 

மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு PUCSL அறிவிப்பு

1 week 1 day ago
power-cut-6-300x200.jpg

மின் கட்டண குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் இலங்கை மின்சார சபை அதற்கு கால அவகாசத்தை கோரியிருந்ததாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவுகள் கிடைத்ததன் பின்னர் மின் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி மின் கட்டணங்களை குறைப்பது தொடர்பான விபரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

https://thinakkural.lk/article/301094

பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்

1 week 1 day ago
08 MAY, 2024 | 09:47 AM
image

குலதெய்வமாக வழிபடப்பட்டுவந்த நாகதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் வளத்தாமலையடி பகுதியில் உள்ள நாகதம்பிரான் ஆலயமானது 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் பௌத்த பிக்கு ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், சப்த நாக விகாரையாக மாற்றப்பட்டு திரியாய் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாகதம்பிரான் ஆலயத்தில் திரியாய் மக்கள் பரம்பரை பரம்பரையாக குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று, மீண்டும் 2002ஆம் ஆண்டு அப்பகுதியில் மீளக் குடியேறி, ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில், 2021ஆம் ஆண்டளவில் பௌத்த பிக்கு ஒருவரினால் தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் புதையல் தோண்டியுள்ளதாகவும் திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள திரியாய் மக்கள் நெல் விதைப்பின்போதும், அறுவடையின்போதும் வளத்தாமலையடி நாகதம்பிரானுக்கு நேர்த்தி வைத்து பொங்கிப் படைத்த பின்னரே தமது தொழிலைத் தொடங்குவதாகவும், புல்மோட்டையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் கூட நம்பிக்கை வைத்து நேர்த்தியை நிறைவேற்றி வந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

தற்போது இந்த ஆலயத்துக்கு சென்று வழிபட முடியாத காரணத்தாலும், நேர்த்திக்கடன்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமையினாலும் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புல்மோட்டை பிரதான வீதியில் நின்று, ஆலயத்தை பார்த்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றார்கள். 

எனவே, தங்களுக்கு துன்பங்கள் வரும்போதெல்லாம் உச்சரிக்கப்படுகின்ற வளத்தாமலையானை வழிபடுவதற்கு அனுமதி வழங்குமாறு திரியாய் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/182938

யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிப்பு

1 week 2 days ago

 

நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு!

 

615492857.jpg

 

(மாதவன்)

யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் உள்ள மதஸ்தாபனம் ஒன்றின்  வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியில் பல வருடங்களுக்கு முன்னர்  சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. 

அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள குருவானவர் ஒருவரால், சில மரங்கள் வளாகத்தில் இடையூறாக உள்ளதாக தெரிவித்து கிராம சேவையாளர் ஊடாக அகற்றுவதற்கான அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதி வழங்கப்படாத வேம்பு ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 80,000 ரூபாவிற்கு குறித்த வேம்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த (30.04.2024) அன்று இடம்பெற்றுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் அவதானித்த மற்றுமொரு குருவானவர் புகைப்படங்களை எடுத்ததுடன், ஆதீன பொருளாளர் மற்றும் சொத்து பாதுகாப்பு அலுவலரிடம் வினவியுள்ளார்.

ஆயினும், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியதுடன், பேராயரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குருவானவர், முறையாக அனுமதி பெறப்பட்டே மரம் வெட்டப்பட்டதாகவும், பேராயரும், செயலாளரும் அனுமதித்ததாகவும் கூறுவதுடன், சட்ட ரீதியான அனுமதிகளை காண்பிக்க மறுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, மரம் வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் மரங்களை பார்வையிட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும், வெட்டப்பட்ட குறித்த மரத்துக்கு அனுமதி கோரப்பட நிலையில் தாம்  அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாதப் பொறுப்பானவரிடம் வினா வினவியபோது குறித்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்த நிலையில் உரிய பதில் வழங்கப்படவில்லை.(ப)

நூற்றாண்டு கடந்த வேப்பமரம்:சட்டவிரோதமாக அழிப்பு! (newuthayan.com)

கிளிநொச்சி - கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!!

1 week 2 days ago

 

1475745669.jpg

 

 

கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239 குடும்பங்களைச்சேர்ந்த 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லூர் செட்டியார்குறிச்சி, ஆலங்கேணி,ஞானிமடம், கொல்லக்குறிச்சி, மட்டுவில் நாடு கிழக்கு, பரமன் கிராய் போன்ற கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இவர்களுக்கான குடிநீரை பூநகரி பிரதேச சபை பெளஷர் மூலம் விநியோகித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.(ப).

கடும் வெப்பநிலை : மக்கள் குடிநீருக்காக சிரமம்!! (newuthayan.com)

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த விமானி இலங்கை விமானிகளை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார் ; இனப்பாரபட்சத்தை வெளிப்படுத்தினார் - வெடித்தது புதிய சர்ச்சை

1 week 2 days ago

Published By: RAJEEBAN

07 MAY, 2024 | 01:21 PM
image
 

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியம் விமானியும் விமான பணியாளரும் தங்களை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார்கள், இன பாரபட்சத்தை வெளிப்படுத்தினார்கள் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் பணியாளர்களும் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பாரிய இனவெறி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஏப்பிரல் 30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

Air-Belgium-A330-srilankan-airlines-avia

பலத்த நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தனது விமான சேவையை வலுப்படுத்துவதற்காக டிசம்பரில் பெல்ஜியத்திடமிருந்து இரண்டு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்டது.

இந்த விமானங்கள் கொழும்பிலிருந்து பிராங்பேர்ட், டாக்கா, துபாய், பாரிஸ், சென்னை விமான நிலையங்களிற்கு  பயணிக்கின்றன.

இந்த விமானத்தில் பெல்ஜியம் விமானிகளுடன் இலங்கையை சேர்ந்த விமானிகளும் விமான பணியாளர்களும் காணப்படுவார்கள்.

ஏப்பிரல் 30 திகதி குறிப்பிட்ட விமானம் கொழும்பிலிருந்து பிரான்ஸ் தலைநகருக்கு செல்வதற்காக  கொழும்பு விமான நிலையத்தில் தயாராகயிருந்தவேளை இலங்கையை சேர்ந்த விமானிகளிற்கு பிசினஸ் கிளாசில் ஆசனங்களை ஒதுக்கவில்லை என அறிவித்துள்ளனர். அந்த பிரிவில் ஒரு ஆசனம் மாத்திரம் உள்ளதால் ஆசனங்களை ஒதுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

விமானத்தை மீள செலுத்திவருவதற்காக விமானிகள் வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும் போது விமானிகளுக்கு பிசினஸ் கிளாசில்  ஆசனங்களை ஒதுக்குவதே வழமை .

இதேவேளை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான பணியாளர்களிற்கு அறிவிக்காமல் எயர்பெல்ஜியத்தை சேர்ந்த விமான பணியாளருக்கு  பிசினஸ் கிளாசில் ஆசனத்தை வழங்கியுள்ளனர்.

விமானத்தில் ஏறுவதற்காக விமானத்தை நோக்கி சென்ற  ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் இதனை அறிந்ததும் விமானத்தில் ஏற மறுத்துள்ளனர்.

இலங்கை விமானிகள் விமானத்தில் ஏற மறுத்தவேளை யுஎல் 501 இன் விமானியான கப்டன் பிலிப்பே எனெக்கென் இலங்கை விமானிகளை இனரீதியில் நிந்தித்துள்ளார்.

ஐந்து நிமிடத்திற்குள் அவர்கள் விமானத்தில் ஏறாவிட்டால் அவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

இலங்கை விமானிகளை ஆபாசவார்த்தைகளால் நிந்தித்த எயர்பெல்ஜியம் விமானி விமானத்திற்குள் சென்றுள்ளார்.

பின்னர் அவர் பயணிகளுக்கான அறிவித்தலில் பெரிய பருமனான கப்டன் உட்பட  இலங்கை விமானிகள் ஆசனங்களிற்காக அடம்பிடிப்பதால் விமானத்தின் பயணம் தாமதமாகின்றது என அறிவித்துள்ளார்.

இதனை செவிமடுத்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானிகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட பல அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளனர். 

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த விமானி இலங்கை விமானிகளை உடல்ரீதியாக அவமானப்படுத்தினார் ; இனப்பாரபட்சத்தை வெளிப்படுத்தினார் - வெடித்தது புதிய சர்ச்சை | Virakesari.lk

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

1 week 2 days ago
07 MAY, 2024 | 12:12 PM
image
 

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது.

இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம்.என துறைசார் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த தடங்கல் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறித்துகொண்ட அமைச்சர் சீரமைக்கும் பணிகளை மிக விரைவாக முன்னேடுத்து தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்யுமாறு பணித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குறித்த மின் பிறப்பாக்கிகள் சீர் செய்யப்பட்டு மின்சார சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. 

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் - தற்போது சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் அதி வெப்ப நிலையும் காணப்படுகின்றது. 

இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் ஏது நிலைகள் அதிகளவில் உள்ளன.

அதுமட்டுமல்லாது மக்களின் பல்வேறு வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளும் பிரச்சினைகளை ச்ந்தில்க நேரிடும்.

இதேவேளை நாடு முழுவது இருளில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் கூட இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது கிடையாது.

அந்தவகையில் எதுவித தடைகளும் ஏற்படாது வகையில் சேவையை வழங்குவது துறைசார் தரப்பினரது கடமையாகும். 

இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள்.மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு! | Virakesari.lk

யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம்

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 02:53 PM
image
 

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான இணுவில் குப்பைக் கிடங்கில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இணுவில் காரைக்கால் குப்பைக் கிடங்கில் நேற்று திங்கட்கிழமை (06) தீ பரவியது.

யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய பகுதி பிரதேச சபையினரின் தீயணைப்பு படையினரின் நீண்ட நேர பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இதற்கு முன்பும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பை மேட்டுக்கு விஷமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த குப்பைக் கிடங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னரும் பாரிய தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதியில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

IMG-20240507-WA0022.jpg

IMG-20240507-WA0020.jpg

யாழ். இணுவில் பகுதியில் குப்பைக் கிடங்கில் தீ ; குப்பைகளை அகற்றுமாறு போராட்டம் | Virakesari.lk

மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம்கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 04:25 PM
image
 

கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர்  3 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு அச்சுறுத்தி மிரட்டிவருவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (6) முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

மட்டக்களப்பைச் சேர்ந்த ரங்கன் என அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடை தரகராக  கல்முனையைச் சோந்த ஒருவரிடம் 5 இலச்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி  அதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு எதிராக  இடைதரகர் கல்முனையைச் சேர்ந்த நபரின் சாட்சியுடன் மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.  இதனையடுத்து  வேலைவாய்ப்பு முகவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாம் மேஜர் இடைத்தரகரான ரங்கனிடம்  தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்மனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறும் உடன் 3 இலட்சம் ரூபாவை தனது வங்கி கணக்கிற்கு போடுமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் போதைப் பொருளை வீட்டில் வைத்து மனைவியையும் உன்னையும் தூக்கி கொண்டு சென்று இல்லாமல் செய்வேன், 4ம் மாடிக்கு அனுப்புவேன் நான்  கொழும்பில் பெரிய பின்னணியைச் சேர்ந்தவன் விளையாடக் கூடாது என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இராணுவ மேஜர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு இடை தரகரான ரங்கன் 30 ஆயிரம் ரூபாவை கப்பமாக அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து இராணுவ மேஜர் தொலைபேசி  ஊடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரி வருவதாகவும் எனக்கும் எனது மனிவிக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.  குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராணுவ மேஜருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (7) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 3 இலட்சம் ரூபா கப்பம்கோரி கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு | Virakesari.lk

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன்

1 week 2 days ago
07 MAY, 2024 | 05:02 PM
image
 

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர்  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்கள் . 

அதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆனந்தவர்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகவும், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

தான் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத தவணை எப்போது என்றுகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தனது விடுதலைக்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த  பாராளுமன் உறுப்பினர்கள் ஆனந்தவர்ணன் உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திள்ளார்கள். மேலும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டனர் கஜேந்திரன் -சிறீதரன் | Virakesari.lk

இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல : இலங்கை ஜனநாயக நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 05:15 PM
image
 

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல. இலங்கை ஜனநாயக நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் பேசுகையில்,

 விசா பிரச்சினை குறித்து அண்மையில் விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு  அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு இடையூறு விளைவிக்க முடியாது, அவரை தொந்தரவு படுத்த வேண்டாம்.

சந்தரு குமாரசிங்க அண்மையில் விமான நிலையத்தில் விடயமொன்று தொடர்பில் தனது கருத்தை முன்வைத்ததை சமூக ஊடகங்கள் மூலம் காண முடிந்தது.

இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு பேச்சுச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. இதற்கு இடையூறு ஏற்படுத்த முடியாது.

அவர் அவரது கருத்தை முன்வைத்துள்ளார். அதனால் இந்த விடயத்தை  மேலும்  கொண்டு செல்வதில் அர்த்தமில்லை என்பதால் இந்த விடயத்தை இநத நிலையில் முடிவுக்கு  கொண்டு வருமாறு பிரதமரிடம் கோருகின்றேன் என்றார். 

இலங்கையில் நடப்பது பொலிஸ் இராஜ்ஜியமல்ல : இலங்கை ஜனநாயக நாடு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை | Virakesari.lk

யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 12:57 PM
image
 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர். 

அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182883

யாழில் வெப்பத்தால் 5 பேர் வரை உயிரிழப்பு - வைத்திய நிபுணர்கள்

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 12:49 PM
image

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளது.

வெப்ப பக்கவாதம் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே, வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும். 

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும்.

அதிக நீர் மற்றும் குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். 

கடந்த இரு வாரங்களில் வெப்ப பக்கவாதம் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு தொடக்கம் ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.

இந்த நோய் வராமல் இருப்பதற்கு அதிக நீரை அருந்த வேண்டும்.

வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும். 

தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும்.

வயது போனவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து வெப்ப பக்கவாதம் வாராமல் தடுக்கமுடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/182880

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்

1 week 2 days ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 01:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம்  தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.பல மணித்தியாலங்கள்  மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டன.ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை  ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால்  தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவை கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும்.

மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை.

கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல,காலம் காலமாகவே அமுல்படுத்தப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு,கட்டணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்படும். அந்த காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/182884

இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி

1 week 2 days ago

இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
May 7, 2024
 
 

ravikaran இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது - ரவிகரன் துரைராஜா செவ்வி

 

போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்றது. இவை குறித்து அதனை நேரில் பாா்வையிட்ட வடமாகாண முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் வழங்கிய நோ்காணல்

கேள்வி – கொக்குத் தொடுவாய்ப் பகுதிக்கு கடந்த வாரம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தீா்கள். அங்கு என்ன நடைபெறுகின்றது?

பதில் – வடமாகாண சபையில் நான் உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தக் காணிகள் சுமாா் 25 ஏக்கா் படி 30 வழங்கப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மாகாண சபையிலும் இந்த விடயத்தை நான் கதைத்திருந்தேன். இது தமிழா்களுடைய பூர்வீக நிலம். இங்குள்ள பிரதேச செயலகமோ அல்லது மாவட்ட செயலகமோ சம்பந்தப்படாமல், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைதான் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமாா் 4,326 ஏக்கா் காணியை இந்தத் திட்டத்தின் மூலமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்தில் அமைச்சா் நிமால் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்குக் கூட 25 ஏக்கா் காணி வழங்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இவா்கள் சிங்கள ஆதிக்கத்தைக் கொண்டுவந்து தமிழா்களின் பூர்வீக காணிகளை பறிக்கும் நோக்கத்துடன்தான் இவா்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. 25 ஏக்கா் தமிழா்கள் வைத்திருக்க முடியாதாம். எங்களுக்கு 2 ஏக்கா் காணி மட்டும்தான் வைத்திருக்க முடியுமாம்.

இந்தப்பின்னணியில்தான் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தகவல் வந்ததால் அங்கு னெ்றேன். என்னுடன் சூழலியல், சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் வந்தாா்கள். ஆனால், அன்றைய தினம் காட்டை தள்ளிக்கொண்டிருந்த ஒருவரும் இருக்கவில்லை. ஆனால், பெருமளவிலான இடங்களை அவா்கள் தம்வசப்படுத்தியிருந்தாா்கள். கிணறுகள் வெட்டி, கொட்டில்கள் அமைத்து குடியிருப்பதற்கு ஏற்றவாறு தயாா்படுத்தியிருந்தாா்கள்.

முல்லைத்தீவு பறிபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருணாட்டுக்கேணி, மணலாறு என்ற எங்களது இதயபுமி என்று சொன்ன பகுதியில் இன்று 13 ஆயிரத்துக்கும் மேலான சிங்களவா்கள் உள்ளாா்கள். வசதியான மக்களுக்கு, கிணறுகள் அமைத்து, பாதுகாப்புக்காக யானை வேலிகள் அமைத்து கொடுக்கின்றாா்கள். இதனைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இங்குள்ள அரச அதிகாரிகள் இல்லை.

நாங்கள் பாா்த்த இடங்களில் 145 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டிருந்தமையை நாங்கள் பாா்த்தோம். அதாவது, அழிக்கப்பட்டு அவா்களுடைய இருப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இப்போது அழிக்கப்பட்ட பகுதிகளை 30 பேருக்கு 25 ஏக்கா் வீதம் மகாவலி அதிகார சபை வழங்கியிருக்கின்றது. இந்தக் காணிகளின் உறுதிகள் தமிழா்களிடம் இன்றைக்கும் உள்ளது. ஒரு காணிக்கு ஒரு ஆவணம் இருக்கும் போது, மற்றொரு ஆவணம் வழங்கப்படுமாக இருந்தால் முதலில் வழங்கப்பட்ட ஆவண்தான் செல்லுபடியாகும் என இலங்கைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி – நீங்கள் மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் குறித்தும் சொல்லியிருந்தீா்கள். முல்லைதீவு மாவட்டத்தில் அவா்கள் எவ்வாறான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றாா்கள்?

பதில் – அவா்கள் தங்களுக்கென்று ஒரு செயற்பாட்டை வைத்துள்ளாா்கள். அவா்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது. மாவட்ட செயலாளரோ, பிரதேச சபைகளின் செயலாளா்களோ அவா்களிடம் கேள்வி கேட்க முடியாது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் அவா்கள் வரமாட்டாா்கள். மாகாண சபை இருந்த காலத்தில் எப்போவாவது கூட்டத்துக்கு வருவாா்கள். இந்தக் காணிகள் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருப்பதாகக் காட்டப்படுகின்றது. ஆனால், மகாவலி – எல் திட்டத்துக்குட்பட்டதாக இந்தக் காணிகள் காட்டப்படுகின்றது. இதனைவிட மேலும் பல காணிகள் மகாவலி எல் திட்டத்துக்கு உட்பட்டதாகக் காட்டப்படுகின்றது. இதன்படி முல்லைத்தீவில் மேலும் பெருமளவு தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களவா்களுக்குக் கொடுக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. இந்த விடயத்தில் எம்மவா்களும் சரியான ஒரு திட்டத்தைப் போட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

மகாவலி அதிகார சபை எல் என்ற ஒரு திட்டத்தின் மூலமாக முல்லைத்தீவின் கிழக்குப் பக்கமாக ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு ஒரு திட்டத்தையும், மேற்குப் பக்கமாக மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பகுதிகளுக்கு மகாவலி ஜே என்ற ஒரு திட்டத்தையும் கொண்டுவந்திருக்கின்றாா்கள். இது இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த மகாவலி அதிகார சபை காலுான்றுகின்ற இடங்களில் தமிழ் மக்களுக்குக் காணி கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை. தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைதான் நடந்துகொண்டிருக்கின்றது. இதனால், பெருந்தொகையான சிங்களவா்கள் முல்லைத்தீவு பகுதியில் காலுான்றிவிட்டாா்கள். இதனால், சிங்களப் பிரதேச சபை ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், எமது அடுத்த சந்ததிகள் சிங்கள மயமாக்கப்பட்ட முல்லைத்தீவுக்குள்தான் வாழப்போகின்றாா்களா என்ற அச்சம் ஏற்படுகின்றது. மகாவலி அதிகார சபையை கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்க அதிபா் கூட இல்லை. அவா்களுடன் பேசும் போது அதனை அறிய முடிகின்றது.

கேள்வி – முல்லைத்தீவு இவ்வளவு பிரச்சினைகளையும் எதிா்கொண்டு சிங்கள மயமாகிக்கொண்டுள்ள நிலையிலும் தமிழ்க் கட்சிகள் அதில் போதிய கவனத்தைச் செலுத்துவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்கிறாா்கள். உண்மை நிலை என்ன?

பதில் – கிழக்கு மாகாண நிலைமைகள் அனைவருக்கும் தெரியும். அங்கு தமிழா்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதேநிலைதான் முல்லைத்தீவிலும் நடந்துகொண்டிருக்கின்றது.

குருந்துாா்மலை விடயத்திலும் பெரும்பாலானவா்கள் வந்தாா்கள். ஆனால், எவ்வளவு போா் அதில் கவனத்தை எடுத்துச் செயற்பட்டாா்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். கொக்குளாய் விவகாரை கட்டப்பட்ட இடத்தில் நாங்கள் பிரதிநிதிகளாகப் போய் ஒரு மாதமோ என்னவோ தொடா்ச்சியான ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் அது பெரிதாக வெடித்திருக்கும். அவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காமல், இடையில் ஒரு தடவை போய்ப் பாா்த்துவிட்டு வருவது. ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பன எந்தப் பயனையும் தரப்போவதில்லை. அவா்கள் குடியேற்றிக்கொ்டுதான் இருக்கின்றாா்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் 2 இலட்சத்து 22 ஆயிரம் ஏக்கா் அடா்ந்த காடுதான் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அதற்குப் பின்னா் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் காணியை வன இலாகா அபகரித்திருக்கின்றது. இவ்வாறு இந்த காணி அபகரிப்பு தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இவை அனைத்தும் தமிழ் மக்கள் பாவித்த காணி. சிறுதானிய பயிா்ச் செய்கைக்கு நெற்செய்கை என்பவற்றுக்காக மக்கள் பயன்படுத்திய காணிகள்.

வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகார சபையின் எல் திட்டம் மற்றும் படையினா் என ஒவ்வொரு தரப்பினரும் தமது பங்குக்கு காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றாா்கள்.

இதனைத் தடுக்க வேண்டுமானால், எம்மவா்கள் அங்கு களத்தில் இறங்கி தொடா்ச்சியாகப் போராட வேண்டும். கேப்பாப்புலவை நாங்கள் இவ்வாறான தொடா்ச்சியான போராட்டத்தினால்தான் மீட்டிருந்தோம்.

 

https://www.ilakku.org/இவா்களை-யாராலுமே-தட்டிக்/

வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு!

1 week 2 days ago

வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு!
1896595026.jpg

இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று திங்கட்கிழமை(06) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும்,  தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போகும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.   

விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். (ச)

 

https://newuthayan.com/article/வட_மாகாண_அபிவிருத்திக்கு_ஒத்துழைப்புகளை_வழங்குவதாக_இலங்கைக்கான_நோர்வே_தூதுவர்_தெரிவிப்பு! 

ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு

1 week 2 days ago

ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு
adminMay 7, 2024
1-1-1170x878.jpg

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பூராகவும் 359 சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலமே நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய பிரச்சனை தொடர்பில் பேசியிருந்த போது, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமையாகும். எவ்வாறு 60 மாணவர்களுக்கு மாத்திரம் இந்த அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் அது அரசாங்கத்தின் தவறு ஒழிய மாணவர்களுடைய தவறல்ல.

இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள். இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். தற்பொழுது 30 வயதினை எட்டி இருக்கின்ற போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை முடிக்காததனால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை.

உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும். எனவே நமது எதிர்காலத்தை கருத்தில் எடுத்து கற்கை நெறியை பூர்த்தி செய்ய ஏதுவாக உள்ளக பயற்சியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றார்.

https://globaltamilnews.net/2024/202518/

Checked
Thu, 05/16/2024 - 20:57
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr