ஊர்ப்புதினம்

பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்ற சிறுமி - யாழில் சம்பவம்

5 days 15 hours ago

Published By: DIGITAL DESK 3

11 MAY, 2024 | 09:57 AM
image
 

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/183212

வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை வீராங்கனை : ஊக்கமருந்து சோதனையில் தோல்வி

5 days 21 hours ago

இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.

 

வலைப்பந்தாட்ட போட்டி

இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை வீராங்கனை : ஊக்கமருந்து சோதனையில் தோல்வி | Sri Lankan Player Failed Doping Test

செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார்.

2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார். 

வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை வீராங்கனை : ஊக்கமருந்து சோதனையில் தோல்வி | Sri Lankan Player Failed Doping Test

இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special

அதிகரித்து வரும் கடலரிப்பு : அபாயத்தில் கரையோரப் பிரதேசங்கள்

6 days 4 hours ago

 யாழ்ப்பாணம் (Jaffna)  மற்றும் மன்னார் (Mannar) ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களை கடலரிப்பானது மிகமோசமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மற்றும் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (10.05.2024) அமர்வின் போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடலரிப்பின் காரணமாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றது.

இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலை அண்மித்த கரையோர பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே இதற்கான ஓர் உடனடி தீர்வினை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்” என கூறியுள்ளனர்.

https://tamilwin.com/article/kadalarippu-today-parliament-speech-sritharan-1715350910

சிறந்த ஆட்சியியல் நிர்வாகம், வெளிப்படைத்தன்மையின் அவசியம் குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வலியுறுத்தல்

6 days 4 hours ago

Published By: DIGITAL DESK 3

10 MAY, 2024 | 03:45 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80 ஆம் பிரிவின்படி 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மற்றும் 99 ஆம் பிரிவின்படி கடந்த ஆண்டுக்கான மத்திய வங்கியின் நிதியியல் கூற்றுக்கள் என்பன அண்மையில் வெளியிடப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது இருதரப்புத் தொடர்புகள், கடன்மறுசீரமைப்பு மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அதில் இலங்கையில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் நிலையில், சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து தான் மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/183169

யாழில் வெளிநாட்டவரின் காணியை ஏமாற்றிய உறவினருக்கு நேர்ந்த கதி

6 days 4 hours ago

 யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் ஈடு வைத்து பணம் பெற்றவரே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக தனது உறவினர் ஒருவரிடம் கையளித்துள்ளனர்.

காணி உறுதி

குறித்த நபர் அக்காணி உறுதி பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார்.

 

யாழில் வெளிநாட்டவரின் காணியை ஏமாற்றிய உறவினருக்கு நேர்ந்த கதி | Land Scammer In Jaffna Police Arrests

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமையை கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

https://tamilwin.com/article/land-scammer-in-jaffna-police-arrests-1715302405

மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா

6 days 9 hours ago

Published By: DIGITAL DESK 3

10 MAY, 2024 | 04:46 PM
image
 

வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில்  மன்னாரில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக சிறப்பாக இடம்பெற்ற நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விசேட அம்சமாகும்.

நுங்கு திருவிழாவானது பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  இந்த நுங்கு திருவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp_Image_2024-05-10_at_3.18.47_PM.

WhatsApp_Image_2024-05-10_at_3.18.45_PM.

WhatsApp_Image_2024-05-10_at_1.01.44_PM.

WhatsApp_Image_2024-05-10_at_12.11.03_PM

WhatsApp_Image_2024-05-10_at_12.11.05_PM

https://www.virakesari.lk/article/183172

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றியின் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் - அமைச்சர் டக்ளஸ்

6 days 9 hours ago

Published By: DIGITAL DESK 3

10 MAY, 2024 | 04:38 PM
image
 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராக தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் வரவுள்ள தேர்தல் தொடர்பான முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இதன்போது, தேர்தலில் எமது கட்சியின் வாக்குப்பலத்தை அதிகரிப்பு செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  

"தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகிறார்கள்.

இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்படுத்தியிருந்தன.

எனினும், நடைமுறை சாத்தியமான சிந்தனையோ, சரியான வேலைத்திட்டத்தினை முன்வைத்து அதற்காக உழைக்கும் குணாம்சமோ இல்லாதவர்கள், எமது மக்களை உணர்ச்சியூட்டும் தோற்றுப்போன வழிமுறையையே மீண்டும் கையில் எடுத்து தம்மை அரசியலில் நிலைநிறுத்த முனைகிறார்கள்.

ஆனால், ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எமது மக்களுக்கு சரியான வழியை காட்டுகின்ற தனித்துவமான தரப்பு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதுடன் தேர்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம்.

மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள் முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான மூன்று 'அ' க்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க கூடிய ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி மட்டும் தான் இருக்கின்றது.

இதில் அனைவரும் தெளிவாக இருப்பதும் அவசியம்.

கடந்த 34 வருடங்களாக பல்வேறு விடயங்களில் அவை நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.

எனவே, அடுத்த வரவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களை வெற்றியின் கதானாயகர்களாக அடையாளப்படுத்தும் வகையில் எமது செயற்பாடுகளும் மக்களுக்கான தெளிவுபடுத்தல்களும் அமைய வேண்டும்.

அதன்மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கான வழியை பிரகாசமாக்க முடியும்" என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183167

மது பாவனையில் வீழ்ச்சி!

6 days 9 hours ago

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுசாரப் பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுசாரப் பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.

புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுசாரத்தின் விலை அதிகரிப்பே காரணம் என ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது சமூகத்தில் சிறந்த போக்கை எடுத்துக்காட்டுவதாகவும், சுகாதாரத்துறையின் அதிக செலவினத்தை தவிர்க்க முடியும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

https://thinakkural.lk/article/301303

24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி!

6 days 9 hours ago
rice.jpg

இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/301288

மூதாட்டியிடம் கைத்தொலைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை!

6 days 9 hours ago

Published By: DIGITAL DESK 7

10 MAY, 2024 | 12:24 PM
image
 

மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட  மூவருக்கு நீதிமன்றத்தினால்  ஆறு மாதகால சிறைத்தண்டனை விதித்ததோடு, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 

பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்க வாகனம் ஒன்றில் சென்ற மூவர், வீட்டில் தனித்திருந்த மூதாட்டியின் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், மூவரையும் மன்று குற்றவாளியாக கண்டு, மூவருக்கும் தலா 06 மாத கால சிறைத்தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 

அதேவேளை பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு குற்றவாளிகளான மூவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183140

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் அமெரிக்க அதிகாரி டொனால்ட் லூ

6 days 10 hours ago

Published By: PRIYATHARSHAN

10 MAY, 2024 | 11:05 AM
image
 

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்காவின் துணை செயலர் டொனால்ட் லூ,  இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை (10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேற்கொள்கிறார்.

டொனால்ட் லூவின் 3 நாடுகளுக்கான விஜயமானது ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதுடன் சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் அமையவுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் டொனால்ட் லூ, தென்னிந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையுடனான அமெரிக்காவின் பங்களிப்பை ஆழப்படுத்தும் நோக்கில் கொழும்புக்கு வருகைதரும், டொனால்ட் லூ, முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்காவின் ஆதரவையும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை வலுவான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார்.

இலங்கை வியஜத்தின் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்யும் துணை செயலர் டொனால்ட் லூ,  அங்கு அந்நாட்டின் அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வது மற்றும் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவது உட்பட, அமெரிக்க - பங்களாதேஷ் நாடுகளுக்கான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடவுள்ளார்.

https://www.virakesari.lk/article/183123

யாழ்ப்பாணம் வந்தாா் நளினி

6 days 15 hours ago

யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
May 10, 2024
 

8 யாழ்ப்பாணம் வந்தாா் நளினி

 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார்.

அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார்.

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வந்தாா்-நளின/

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து புதிய சுற்றறிக்கை

1 week ago

கொவிட் -19 தொற்றுநோயின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச அதிகாரிகளின் விடுமுறை தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்த சுற்றறிக்கை ஊடாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக உரிய திகதியில் அல்லது அதற்கு முன்னதாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமறை மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/301235

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஜனாதிபதி சபையை விட்டு சென்றதால் சபையில் சர்ச்சை

1 week ago

Published By: DIGITAL DESK 3   09 MAY, 2024 | 04:03 PM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)  

ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிலிருந்து  எழுந்து வெளியேறிச் சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆற்றிய விசேட உரை தொடர்பில்  தெளிவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்க முடியுமா என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் கேட்டதற்கு ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கினார். 

அதன் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரரேமதாச எழுந்து ஜனாதிபதி தெரிவித்த சில விடயங்களை சுட்டிக்காட்டி, அதனை விமர்சித்துக்கொண்டிருந்தார். அதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எழுந்து, உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ளவே முடியும். உரையாற்ற தற்போது இடமளிக்க முடியாது. அவர்களுக்கு ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் வேண்டுமென்றால் அதனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி நடத்தலாம் என்றார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தை தொடர்ந்து முன்வைக்க ஆரம்பிக்கையில், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் சபையில் விவாதம் நடத்தினால் நல்லது என்றே நினைக்கின்றேன். 

அத்துடன் இவை அனைத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக் கூற வேண்டும். ஏப்ரல் 10ஆம் திகதி பிரதமர் பதவியை அவர்  பொறுப்பேற்றிருந்தால்  இவை எதுவும் நடக்கப் போவதில்லை. நான் எனது பணியை செய்துள்ளேன் என்று கூறி சபையில் இருந்து வெளியேறிச சென்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ஏன் போகின்றீர்கள்? ஏன் பயமா? பதிலளிக்கை முடியாதா? நான் ஜனாதிபதி உரையாற்றும் போது அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது கேட்கத் தயாராகும் போது  அவரால் கேட்க முடியாது போயுள்ளது என்றார்.

இதனால் சபையில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த அமைச்சர்  மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி இன்றைய தினத்தில் நேரத்தை பெற்று உரையாற்றினார். ஆனால் அதற்கு பின்னர் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு நேரத்தை வீணடித்து சுற்றி வளைத்து கேள்விகளை கேட்காமல் நேரடியாக பேட்டிருந்தால் ஜனாதிபதி பதிலளித்திருப்பார் என்றார்.

இதன்போது கூறிய சபாநாயகர், நீங்கள் தெளிவுபடுத்தலை மாத்திரம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. எங்களுக்கு சபையின் தின நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்தார்.

https://www.virakesari.lk/article/183072

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் - தேர்தல்கள் ஆணைக்குழு

1 week ago
செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2024 | 03:17 PM
image
 

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/183061

கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

1 week ago
கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

Published By: DIGITAL DESK 3

09 MAY, 2024 | 11:51 AM
image
 

தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இலட்சத்தீவு கடல்  மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி.கே.அருளானந்தன் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கடலில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக அதிகரித்து இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது. நாட்டிலுள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பவளப்பாறைகள் நிறத்தை இழந்து அழிவடையும் என்பதை நிராகரிக்க முடியாது.

பவளபாறைகள் உருவாக கடலின் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் வரை ஏற்ற இறக்கமாக இருக்க வேண்டும். தற்போதைய அதிகரித்த வெப்பநிலை இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்தால் பவளபாறைகள் அழிவடைவதை  எதிர்பார்க்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும். பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள்உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் | Virakesari.lk

நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது

1 week ago
image
 

(நுவரெலியா நிருபர்)

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாடான நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவுகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் வீழ்ச்சிகள் வரண்ட நிலையில் உள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 52 அடி குறைந்து உள்ளது. அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 47 அடி குறைந்து உள்ளது.

IMG-20240509-WA0004.jpg

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பாலம், சண்முக நாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளியில் இருந்த தூபி, பௌத்த மத விகாரை, அதன் முற்றத்தில் இருந்த போதி மரம், கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பனவற்றை தற்போது மக்கள் அதிக அளவில் பார்க்க சென்று வருவதை காண கூடியதாக இருக்கின்றது.

IMG-20240509-WA0003.jpg

தற்போது இப்பகுதியில் கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் குறைந்துள்ளதால் காலை மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக இப் பகுதிக்கு படை எடுத்து செல்கின்றனர். மலையக பகுதிகளில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கின்றது.

அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் வரட்சியின் காரணமாக பல இடங்களிலுள்ள காடுகளை இனம் தெரியாத நாசக்காரர்கள் தீ வைக்கின்றனர். இதனால் வரட்சி மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறு காடுகளுக்கு தீ மூட்டுபவர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் ஒத்துழைபை வழங்கும்படி பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.

நுவரெலியாவில் வரட்சி ; மவுசாக்கலை நீர்த்தேக்கம் நீர்மட்டம் குறைந்தது | Virakesari.lk

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

1 week ago
09 MAY, 2024 | 04:24 PM
image
 

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் துபாயிலிருந்து இன்று (9) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது | Virakesari.lk

இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல்

1 week ago
09 MAY, 2024 | 04:03 PM
image
 

சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை போக்குவரத்து கலாச்சாரம் போன்ற விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவரும் டிரவல் இன்புளுன்சர் வில்டேவிஸ் இலங்கையின் விசா வழங்கும்; அமைப்புமுறையிலிருந்து தரவுகள் வெளியே கசிந்துள்ளமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலாமேற்கொள்ளவுள்ளவர்களிற்கான விசா விபரங்கள் பெயர் முகவரி கடவுச்சீட்டு இலக்கங்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகி;ன்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு பல மாதங்களிற்கு முன்னரே விசா கிடைத்துள்ள போதிலும் விஎஸ்எவ்விடம் விசாவிற்காக விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

trek.jpg

சில வாரங்களிற்கு இலங்கையில் விசா தொடர்பில் இடம்பெற்ற விடயங்களை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் எனக்கு எப்போதோ விசாகிடைத்துள்ள போதிலும் ஏனைய சுற்றுலாபயணிகளின் பெயர்கள் கடவுச்சீட்டு இலக்கங்கள் உட்பட தனிப்பட்ட  விபரங்களுடன் மின்னஞ்சல்கள் எனக்கு நாளாந்தம் வருகின்றன என வில்டேவிஸ் தெரிவித்துள்ளார்.

நான் இதனை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் ஆனால் பெருமளவானவர்களின் தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்வதற்காக விண்ணப்பித்த ஏனையவர்களின் விபரங்கள் எனது மின்னஞ்சலிற்கு நாளாந்தம் வருகின்றன - வெளிநாட்டு சமூக ஊடக பிரபலம் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk

Checked
Thu, 05/16/2024 - 20:57
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr