ஊர்ப்புதினம்

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

3 days 5 hours ago
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்! விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு : நாடாளுமன்றில் தெரிவித்த பிள்ளையான்!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் விழித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் தன்மீது சுமத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நேற்று சபையில் சாணக்கியன் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய வேண்டுமானால் பிள்ளையானை கைது செய்து விசாரணை செய்யவேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது உடலை எரித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று சபையில் சாணக்கியனின் கருத்தினை மறுத்துக் கருத்து வெளியிட்டிருந்ததுடன், தானும் ஏற்கனவே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்ததாகவும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜே.வி.பி உள்ளிட்ட அமைப்புக்களும் பல பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தான் யார் என்பதை தனது மக்கள் நன்கு அறிவார்கள் எனவும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பட்டார்.

https://athavannews.com/2024/1379985

ஜஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் சுரேஸ் சாலே - நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா

3 days 8 hours ago
26 APR, 2024 | 03:25 PM
image
 

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182029

கல்லாறு பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய மிளகாய் தோட்டத்தை அழித்த சட்டவிரோத கும்பல்

3 days 8 hours ago
26 APR, 2024 | 01:25 PM
image
 

கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.  

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது.

sdf.gif

குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

fghfdg.gif

இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182011

மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய, ரஸ்ய நிறுவனங்களிடம்!

3 days 9 hours ago
26 APR, 2024 | 03:16 PM
image
 

மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

https://www.virakesari.lk/article/182025

நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச!

3 days 9 hours ago
vimal-747x375.png நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச!

‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

அங்கு அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

“தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும்.

அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை.. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1379920

நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி மே மாதம் முதல்வாரத்தில் ஆரம்பம்

3 days 10 hours ago

பதிவிற்காக +94773112692 வட்சப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பவும்

(இனியபாரதி)

நாடகமும் அரங்கியலுக்குமான சான்றிதழ் கற்கைநெறி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் திகதி ஆரம்பமாகிறது.

பயிற்சி நெறியின் இயக்குனராக கலாநிதி தே.தேவானந்த் அவர்கள் பணியாற்றுவார்.

அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மாணவர்களின்  வேண்டுகோளுக்கமைவாக மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பயிற்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மூன்று மாத காலம் 60 மணித்தியாலங்கள்  சனி ஞாயிறு 6.00  - 8.30 வரை பயிற்சி நடைபெறும்.   

பயிற்சி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள முற்றம் அலுவலகத்தில் நடைபெறும். பயிற்சியில் பங்கு கொள்பவர்களுக்கான  வயதெல்லை 20 - 45 ஆகும். பாலர்பாடசாலை ஆசிரியர்கள், ஆரம்பப்பாடசாலை  ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சியில் பங்கு கொள்ளலாம்.

பயற்சி செயல்முறை சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் நல்லூர் நாடகத் திருவிழாவில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

பயிற்சி இலவசமாக நடைபெறும். பதிவு செய்வதற்காக ரூபா 2000 கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்வதற்கான வட்சப் இலக்கம்: +94773112692 சுயமாக தயாரிக்கப்பட்ட சுயவிபரக்கோவையை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சியில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 

பயிற்சி உள்ளடக்கம்

நாடகக் கோட்பாடுகள்

நடிப்பு பயிற்சி 

நாடகம் எழுதுதல்

 நாடக நெறியாள்கை 

 நாடகப்படைப்பாக்கம்

சிறுவர் நாடகத் தயாரிப்பு

பயிற்சியை செயல் திறன் அரங்க இயக்கம் மற்றும் முற்றம் நிறுவனம் ஒழுங்கு செய்து நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(ஏ)

 

https://newuthayan.com/article/நாடகமும்_அரங்கியலுக்குமான_சான்றிதழ்_கற்கைநெறி_மே_மாதம்_முதல்வாரத்தில்_ஆரம்பம்

வட்டுக்கோட்டை படுகொலை; மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

3 days 10 hours ago

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு உந்துருளியில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி மனைவியை வீதியில் இறக்கி விட்டு, கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ஏ) 

 

https://newuthayan.com/article/வட்டுக்கோட்டை_படுகொலை;_மேலும்_ஒரு_சந்தேகநபர்_கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்களில் 10 பேர் பலி !

3 days 10 hours ago

accident-1-300x200.jpg

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 8 விபத்துகளில் 5 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனக் குறைவினாலேயே இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புத்தாண்டு தினத்தில் மாத்திரம் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மாத்திரம் 136 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் 1,189 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 130 விபத்துகளில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் மோட்டர் சைக்கிள்களால் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் 22,804 வீதி விபத்துகள் பதிவாகிய நிலையில் அவற்றில் 2,280 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என்றும் வீதி விபத்துகளை குறைத்துக் கொள்வதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், 2030ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக வீதி விபத்துகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இருப்பினும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/300287

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது

3 days 10 hours ago

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 695,120 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,520 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 196,200 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம்  22,480 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம்  179,850 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,460 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,650 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/182006

வட மாகாண கோவில்களில் நடக்கும் சம்பவங்கள்: வியப்பில் சிங்களவர்கள்

3 days 10 hours ago

வட மாகாணத்திலுள்ள ஆலயங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் தொடர்பில் தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் புங்குடுதீவு அம்மன் ஆலயத்தில் கடவுளுக்கு சாத்திய சேலை ஒன்று 16 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து சிங்களவர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் யாழில் ஆலயம் ஒன்றின் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

ஏலத்தில் தேங்காய்

சங்கானை ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏலத்தில் தேங்காய் ஒன்று 4000 ரூபாவிற்கு ஏலம் போனது.

 

வட மாகாண கோவில்களில் நடக்கும் சம்பவங்கள்: வியப்பில் சிங்களவர்கள் | Coconut Price In Jaffna Today Temple Festival

14 தேங்காய்கள் இவ்வாறு பக்தர்கள் மத்தியில் ஏலம் விடப்பட்டது. இதன்போது, தேங்காய்கள் அதிக விலைக்கு விற்பனையானது. ஒரு தேங்காய் மட்டும் 4000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

 

கடந்த 23ஆம் திகதி 13 தேங்காய்கள் ஒவ்வொன்றும் 2000 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான ஏலத்தின் போது உள்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் பலரும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் கண்ணகி அம்மன் ஆலயலத்தில் 16 இலட்சம் ரூபாவுக்கு சேலையை ஏலத்தில் எடுத்தவர்கள், கனடாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/coconut-price-in-jaffna-today-temple-festival-1714098020

கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்

3 days 12 hours ago

கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான் 26 Apr, 2024 | 11:08 AM
image

கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு கடற்றொழில்துறையை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஜப்பானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கியுள்ளது.

3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சமூகத்தால் இயக்கப்படும் நான்கு சிறு குஞ்சு பொரிப்பகங்களை நிறுவி, ஐந்து NAQDA மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தி, இனவிருத்தி மற்றும் வளர்ப்புத் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்வளர்ப்புகளை அதிகரிக்கவும் நீர்த்தேக்கங்கள், இனப்பெருக்க அலகுகளுக்கு அடைகாக்கும் வளர்ப்பு மற்றும் மீனவ சமூகங்களிடையே முட்டை வளர்ப்பிற்கான கூண்டு வளர்ப்பு முறையை ஊக்குவித்தல்.

ஓராண்டுத் திட்டமானது NAQDA விற்கு மீன்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து உள்நாட்டு மீன்பிடித்தலுக்கும்ரூபவ் அதிகாரிகள் மற்றும் மீனவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும் உற்பத்தி, முகாமைத்துவம், பதப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் பெறுமதி சேர்த்தல் ஆகியவற்றிற்குமாக 3 நேரடி மீன் போக்குவரத்து லொறிகளை வழங்கும்.

ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி தனது உரையில், “ஜப்பானும் இலங்கையும் இரண்டு தீவு நாடுகளும் நமது பொருளாதாரங்கள் மற்றும் கலாசாரங்களில் மீன்வளத்தின் முக்கியத்துவத்திற்கான ஆழமான வேரூன்றிய பாராட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகிரப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்து, ஜப்பான் 2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் மீன்பிடி அபிவிருத்திக்கு, குறிப்பாக கடல்சார் துறையில் ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது.

எமது தொடர்ச்சியான முயற்சிகளுடன் இந்த புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம், இலங்கையின் மீன்பிடித் துறையை வலுப்படுத்த ஜப்பான் உறுதிபூண்டுள்ளது. அதன் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படும்ரூஙரழவ் என்று குறிப்பிட்டார்.

“இலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் துறையானது வரலாற்று ரீதியாக அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது” என கடற்றொழில் அமைச்சராகிய டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். “இருப்பினும் சமீபத்திய நிதி சவால்கள் துறையில் தேவையான வளங்களை இழந்து, உள்நாட்டு மீனவ சமூகங்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே கஷ்டங்களை அதிகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் இத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான நன்மைகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய படிமுறையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுமார் 3,000 உள்நாட்டு மீனவர்கள், சிறு குஞ்சு பொரிக்க வைத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 40 விவசாயிகள் மற்றும் மீன் தீவனம் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 20 விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மேலும், குடும்ப உறுப்பினர்கள், நுகர்வோர், கருவாடு உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் பங்குதாரர்கள் உட்பட மறைமுக பயனாளிகள் மீது இது நேர்மறையான தொடர் விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற கூட்டாண்மைகள் நிலையான அபிவிருத்தியை உந்துவதில் கூட்டு நடவடிக்கையின் தாக்கத்தை நிரூபிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில், சமூகங்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் உள்நாட்டு மீன்பிடி போன்ற முக்கியமான துறைகளை வலுப்படுத்தும் ஒத்துழைப்புகளை வளர்ப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

இந்த திட்டத்தின் மூலம், நாங்கள் உணவு பாதுகாப்பை மட்டும் மேம்படுத்தவில்லை. கிராமப்புற வாழ்வாதாரங்கள், இலங்கையின் கிராமப்புற சமூகங்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம் என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் கூறினார்.

உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதன் மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது என்று இலங்கைக்கான குயுழு பிரதிநிதி விம்லேந்திர ஷரன் தெரிவித்தார். 

இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாது கிராமப்புற சமூகங்களின், குறிப்பாக உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, மீளெழுச்சியை வலுப்படுத்துவதும் ஆகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் தன்னிறைவான வளர்ப்புமுறை சார்ந்த மீன்வளத்தை மேம்படுத்துவது வெறுமனே தேவையானது மட்டுமன்றிரூபவ் இச்சமூகங்களின் மேம்பாட்டிற்கு இது இன்றியமையாததாகும்.

இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் மீளெழுச்சி ஆகியவற்றில் நீடித்த நேர்மறையான தாக்கங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டில் குயுழு உறுதியாக உள்ளது.

 

https://www.virakesari.lk/article/181996

ஏ9 வீதியில் விபத்து – இராணுவ சிப்பாய் பலி ! 9 பேர் காயம் !

3 days 13 hours ago

ஏ9 வீதியில் விபத்து – இராணுவ சிப்பாய் பலி ! 9 பேர் காயம்!

accnews-101.jpg

முல்லைத்தீவு – முறிகண்டி ஏ9 வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் முறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்ற கெப் ரக வாகனமும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த 39 வயதுடைய இராணுவ சிப்பாயின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

12-12.jpg

11.jpg

13.jpg

 

https://thinakkural.lk/article/300269

 

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்

3 days 13 hours ago

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்
adminApril 26, 2024
2-1-3-1170x870.jpg

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2-2-1-800x595.jpg2-3-800x595.jpg2-5-800x595.jpg2-6-1-800x595.jpg

 

 

https://globaltamilnews.net/2024/202016/

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில்

3 days 13 hours ago

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில்
adminApril 26, 2024
 

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.

அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை  நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் , மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/202012/

 

காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்!

3 days 13 hours ago

 

காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்!

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும்.

இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது.

ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள்.

நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

 

http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/

 

”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” - இரா. சாணக்கியன்

3 days 13 hours ago

”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்”

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;.

இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன்.

2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை.

2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.

அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர்.

டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர்.

இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது.

2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.

இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர்.

2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள்.
-(
 

 

http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/

இலங்கையில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய கருவி

3 days 14 hours ago

Published By: DIGITAL DESK 3

26 APR, 2024 | 10:28 AM
image
 

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது.

கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.

சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார்.

பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார். 

பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.

இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181987

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை அதிகரித்தால் அரசாங்கம் மேலும் 40 பில்லியன் ரூபாவை செலுத்த நேரிடும் - நிதி இராஜாங்க அமைச்சர்

3 days 14 hours ago
25 APR, 2024 | 07:33 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை.

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது. 

நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது. 

நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது.

அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/181967

புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

3 days 16 hours ago

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழ் வர்த்தகர்

மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.

sumandran-public-request-diaspora-tamil-traders

என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார்.

இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர்.

கொள்கை அரசியல்

 

அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.

 

அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.

sumandran-public-request-diaspora-tamil-traders

 

அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும். 

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள்.

தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907

ஈ - விசா தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

3 days 18 hours ago

ஈ - விசா பெற்றுக் கொள்வோருக்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இணைய வழியில் ஈ - விசா பெற்றுக் கொள்வோர் www.immigration.gov.lk என்ற முகவரியை மட்டும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

ஈ - விசா தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Use Only Immigration Depts Webpage For E Visa

மக்களை ஏமாற்றும் மோசடி

போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈ - விசா பெற்றுக்கொள்வோர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள இணைய தளத்தின் ஊடாக மட்டும் பிரவேசித்து விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://tamilwin.com/article/use-only-immigration-depts-webpage-for-e-visa-1714088994

Checked
Mon, 04/29/2024 - 16:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr