ஊர்ப்புதினம்

இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது - காமினி லொகுகே குற்றச்சாட்டு

2 weeks 3 days ago

Published By: VISHNU

28 APR, 2024 | 11:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பி;ல் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.நட்டடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.இலாபமடையும் நிறுவனங்களினதும்,நட்டமடையும் நிறுவனங்களினதும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியறுத்தியுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் பதிலளித்துள்ளது.2014 ஆம் ஆண்டு எமக்கு துரோகமிழைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிமைத்து நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தார்.இறுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேற்றினார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார்.

https://www.virakesari.lk/article/182182

ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு

2 weeks 3 days ago

Published By: DIGITAL DESK 7   28 APR, 2024 | 08:59 PM

image

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான  12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தற்போது நாடுகள் எதிர்கொள்ளும்  பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்ந கூட்டம் ஒரு தளமாக விளங்குகிறது.

இக்கூட்டத்தொடரின் ஓர்  அங்கமாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றமை விஷேட அம்சமாகும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்த  இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதன் போது கலந்துரையாடகள் நடைபெற்றன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12ஆவது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டு முயச்சிகளை உருவாக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமுகமாக அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/182163

சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு; யாழில் சோகம்

2 weeks 3 days ago

Published By: VISHNU   28 APR, 2024 | 07:08 PM

image
 

காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று  வீடுதிரும்பியுள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது 

பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182176

இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா

2 weeks 3 days ago
28 APR, 2024 | 05:26 PM
image

பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182161

கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது

2 weeks 3 days ago

கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது
121546669.jpg

(யோகி)

கிளிநொச்சியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறிய மகிழுந்து ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட (27) நான்கு கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டதுடன் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதி வழியாக வவுனியாவுக்கு குறித்த மகிழுந்தில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சிறப்பு தகவல்களின் அடிப்படையில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு அண்மையில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த தங்கத்தை மீட்டதுடன்  சந்தேகத்தின் பெயரில் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரைக்  கைது செய்துள்ளனர் 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ஏ)

 

https://newuthayan.com/article/கிலோ_கணக்கில்_தங்கம்_மீட்பு;_மூவர்_கைது

தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா

2 weeks 3 days ago

தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல்
902322522.jpg

(மாதவன்) 

தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் - சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவிப்பு

அரச தலைவர் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது  உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என  சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுதல் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்பாபு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனி வரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது நானும் அதை வரவேற்பேன்.

ஆனால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம்.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும்  தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின்  அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்

ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியலை முன்னெடுப்பதை நிறுத்தி தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின் தமிழ் மக்கள் சார்ந்து  பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (

https://newuthayan.com/article/தமிழ்_பொது_வேட்பாளர்_குறுகிய_அரசியல்; 

நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை

2 weeks 3 days ago

நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை
adminApril 28, 2024

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற  மனிதக்கொலைச் சம்பவம் ஒன்றுடன்  தொடர்புபட்டிருந்த நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   மனிதக்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த  காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கும்  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு திருகோணமலை பாரதிபுரத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த 4  காவல்துறை  உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை வழங்கப்க்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய  மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாக இருந்த 8 தமிழ் பொதுமக்கள் மீது ஒரு குழுவினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கொலை செய்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக இந்த நான்கு  காவல்துறை  உத்தியோகத்தர்களுக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4  காவல்துறை  அதிகாரிகளில், காவல்   நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை  இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் உள்ளடங்குகின்றனர்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

https://globaltamilnews.net/2024/202118/

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம்!

2 weeks 3 days ago

யாழ்ப்பாணத்தில் அரிசி விநியோகம்!
adminApril 28, 2024
Jaffna.png

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 131652 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் கடந்த 20ஆம் திகதி முதல் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும், கிராம அலுவலர் பிரிவு கொத்தணி ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது 62.66 வீதமான குடும்பங்கள் மேற்படி அரிசி விநியோகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் அரிசி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த, பதிவு செய்யப்பட்ட 17 அரிசி ஆலைகளூடாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 110220 குடும்பங்களுக்கான அரிசி, குறித்த அரிசி ஆலைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 98175 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களால் கிராம மட்ட அலுவலர்களூடாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தொடர்ச்சியாக அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கின்ற நடவடிக்கையினை பிரதேசசெயலாளர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, நெடுந்தீவு, காரைநகர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/202122/

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள்!

2 weeks 3 days ago

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,63,438 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/300420

பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் செல்லத் தேவையில்லை!

2 weeks 3 days ago

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் இனிமேல் பொதுமக்கள் முதற்கட்ட புகார் கொடுக்க பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியதில்லை.

இந்த புகாரை “ஐஜிபியிடம் சொல்லுங்கள்” (tell IGP ) என்ற இணையதளம் மூலமாக பொலிஸ் நிலையம் நிலையம் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உதவி கண்காணிப்பாளர், சிரேஷ்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம். பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரில் ஒருவருக்கு இதன் நகலை அனுப்புவதற்கான அமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் முதலில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளது. 22 போலீஸ் நிலையங்களில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் முறைப்பாடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஸ்டேஷன் கமாண்டர் உத்தரவின் பேரில் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/300424

https://telligp.police.lk/

சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை காணவில்லை!

2 weeks 3 days ago
28 APR, 2024 | 12:12 PM
image
 

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். 

மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/182139

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

2 weeks 4 days ago
28 APR, 2024 | 01:29 PM
image
 

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார். 

தொற்று காரணமாக உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 34) ஆவார். 

உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டார்.

இதன்போது வெளியான அறிக்கையில் அந்த நபர் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182145

தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !

2 weeks 4 days ago
03-8-593x375.jpg தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன்

அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது.

இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380126

ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா!

2 weeks 4 days ago
01-13.jpg ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா!

ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது.

சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380118

மனிதர்கள் மட்டுமல்ல.... மிருகமும் சாப்பிட முடியாத அரிசி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது தொடர்பில் விசாரணை

2 weeks 4 days ago
1000211802.jpg
நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் இன்று (26.04.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
 
சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
 
“ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
 
 
ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
 
 
ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை” என கூறியுள்ளார்..
 
தகவல் விபரம்....
நேற்று (25) ஹாலிஎல பிரதேசத்தில் ஜய maga திட்டத்தில் வழங்கிய இலவச அரிசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர், கெட்டுப்போன, உண்பதற்குத் தகுதியற்ற அரிசி பொதியை பெற்றுக்கொண்டதாகக் கூறி ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
 
 
ஹாலிஎல, மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த எச்.பண்டார என்பவர், அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட அரிசி பாவனைக்குத் தகுதியற்றது எனக் கூறி, தனக்குக் கிடைத்த அரிசியில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று, இதனைத் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் ஹாலியால பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.தனுஜய பிரதீப் தெரிவிக்கையில், ஹாலியால மெதபிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாலியால சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வந்து 10 கிலோ அரிசி அடங்கிய பையில் அரிசி இருந்ததாக முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கம் கெட்டுப்போனது மற்றும் நுகர்வுக்கு தகுதியற்றது என்பது தொடர்பான விசாரணைகள் செய்யப்படுகின்றன.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி

2 weeks 4 days ago

இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.

 

வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில்

வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி | Tension Over Lands In Sl Question In Uk Parliament

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api

தமிழ் தேசியத்துக்கு எதிராக பேரினவாதத்தின் அட்டூழியம்: துணை போகும் தமிழ் தலைவர்கள்

2 weeks 4 days ago

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பல்வேறு வழிகளிலும் ஆக்கிரமிப்பு நடைபெற்று வரும் நிலையில் கிழக்கை மீட்பவர்கள் என்று கூறுபவர்கள் வாயளவில் பேசி அரசியலை செய்து தங்களுடைய பைகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (26.04.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

பேரினவாதம் 

மேலும் தெரிவிக்கையில், “75 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது (ITAK) அசைக்க முடியாத சக்தியாக நிற்கின்றது. தமிழரசு கட்சியை அழிப்பதற்காக கடந்த காலத்தில் பேரினவாதமானது பல்வேறுபட்ட செயல்களை செய்துள்ளது.

தமிழ் தேசியத்துக்கு எதிராக பேரினவாதத்தின் அட்டூழியம்: துணை போகும் தமிழ் தலைவர்கள் | They Save East Province Politics

மட்டக்களப்பில் வைத்து யோசப்பரராஜ சிங்கத்தை இந்த ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொண்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக இருந்த சந்திர நேரு அவர்களை சுட்டுக் கொண்டார்கள். கொழும்பில் வைத்து இளம் இரத்தமான ரவிராஜ் அவர்களை சுட்டுக்கொன்றார்கள்.

 

தமிழ்த் தேசிய உணர்வோடு பயணிக்கின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அத்தோடு அருட்தந்தையர்கள் ஆக இருக்கலாம். இவ்வாறான அனைவரையும் அழிப்பதன் மூலமாக தமிழ் தேசியத்தை வடக்கு, கிழக்கிலிருந்து கழுவி விட வேண்டும் என்கின்ற அடிப்படையில் பேரினவாதம் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது.

இந்த வேளையில் எங்களுடைய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற குலத்தை கெடுக்கின்ற கோடரி கம்புகள் என்று சொல்லக்கூடியவர்கள் அவர்களோடு இணைந்து கூலிக்கு மாரடைத்து கொண்டு இருந்துள்ளார்கள்.

தமிழ் தேசிய அரசியல்

இன்று கிழக்கு இருப்பைப் பற்றி பேசுகிறார்கள் அதைவிட கிழக்கை மீட்டு தருவதாக கூறுகின்றார்கள். உங்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்திற்குள் நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய கிழக்கு மீட்பர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள்.

தமிழ் தேசியத்துக்கு எதிராக பேரினவாதத்தின் அட்டூழியம்: துணை போகும் தமிழ் தலைவர்கள் | They Save East Province Politics

இப்போது மயிலத்தமடு மாதவனை பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குசலான மலையில் கலாசார ஆக்கிரமிப்பு நடைபெற இருந்தது. குருந்தூர் மலையில் கலாசார ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. வடமுனையின் நெடியகல்மலை என்ற பகுதியிலும் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தந்தை செல்வா பிழையான அரசியலுக்குள் அகப்படவில்லை. நேர்மையான அரசியலை செய்தவர். அவ்வாறான தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரையில்தான் தமிழ் தேசியம் இருக்கும். தமிழர்களின் அடையாளமும் இருக்கும்.

மேலும், அம்பாறையை ஆக்கிரமித்தவர்கள், திருகோணமலையை ஆக்கிரமித்தவர்கள் இன்று மயிலத்தமடுவினையும் கலாசார பூமி எனவும் ஆக்கிரமிக்கின்றார்கள். அதற்கு கிழக்கு மீட்பர்கள் ஒத்துழைத்து வந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/they-save-east-province-politics-1714125050

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா

2 weeks 4 days ago
visa-free-sri-lanka-e1714215746267-750x3 ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக,

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1380064

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூனில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு!

2 weeks 4 days ago
shehan-semasinghe-300x200.jpg

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளது. அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகும். சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாகக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வௌிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/300389

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

2 weeks 4 days ago

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

காணி மோசடி

குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் | Jaffna Land Scammer Court Order Police Arrests

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள்

அதற்கமைய காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் | Jaffna Land Scammer Court Order Police Arrests

புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/jaffna-land-scammer-court-order-police-arrests-1714181334

Checked
Thu, 05/16/2024 - 05:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr