ஊர்ப்புதினம்

போதைப்பொருள் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை வெளிப்படுத்தும் பிரசாரம் ஆரம்பம் - டிரான் அலஸ்

2 hours 51 minutes ago

Published By: VISHNU   29 APR, 2024 | 06:24 PM

image

(நா.தனுஜா)

'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (30) ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள், பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கொல்வது பாவம் அல்ல என கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தையடுத்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், அன்றேல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் டிரான் அலஸின் நிர்வாகக்குழு உயரதிகாரி ஒருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரும் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகி, பல மில்லியன் ரூபாயைப் பெற்றிருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தே இந்த முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகிளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182269

காஸா சிறுவர் நிதியம்: பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

4 hours 22 minutes ago
gaza-2.jpg காஸா சிறுவர் நிதியம்: பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது

நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளை அளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நாடளாவிய ரீதியில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, 2024 மே 31 வரை காலத்தை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது.

‘காசா சிறுவர் நிதியத்திற்கு’ பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாடளாவிய ரீதியில் உள்ள பொது மக்கள் இன, மத பேதமின்றி அதனுடன் கைகோர்த்தனர்.

இம்முறை நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்திற்கு வழங்கியதோடு இதன் முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அண்மையில் பலஸ்தீன அரசாங்கத்திடம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கையளித்திருந்தார்.

நன்கொடையாளர்களுக்கு 2024 மே 31 வரை தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்களாக இருந்தால், அந்த நன்கொடைகளை ‘இலங்கை வங்கி தப்ரபேன் கிளையில் (747) 7040016’ எனும் வங்கிக் கணக்கில் அன்பளிப்புத் தொகையை வைப்பு செய்ய முடியும். அதன்பின்னர் பற்றுச்சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு Whatsapp ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காஸா பகுதியில் வாழும் குழந்தைகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அண்மையில் வழங்கிய நிதியுதவிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பின் ஆணையாளர் நாயகம் பிலிபே லெஸரினிஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1380290

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

7 hours 56 minutes ago
kitni.jpg

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய் ஹெயன்துடுவ தெரிவித்துள்ளார்.

“நம் நாட்டில் சுமார் 10% பேருக்கு சிறுநீரக நோய் உள்ளது. உண்மையில் நோய் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நோய்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரக பாதிப்பை பாதிக்கும் முக்கிய காரணியாக நீரிழிவு நோய் உள்ளது. மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மற்றும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். குறிப்பாக
ஒரு நாளில் 3, 1/2 லீற்றர் தண்ணீர் பருகுதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடலாம்”.

https://thinakkural.lk/article/300492

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில், மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம் - சுவீடனில் அனுரகுமார

11 hours 42 minutes ago

Published By: RAJEEBAN    29 APR, 2024 | 10:23 AM

image
 

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா, ரணில், மகிந்த  உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ஒன்றிணையக்கூடும் அவர்கள் ஒரே தளத்தில் காணப்படலாம் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுகள் இதற்கு தடையாக காணப்படலாம் எனவும் சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க கொள்கைகள் அடிப்படையில் அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அவர்கள் ஒன்றுசேரலாம் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் நான்காம் திகதிக்குள் நடைபெறலாம் என சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களும் அதனை தடுக்கவேண்டியவர்களும் இணைந்து செயற்பட்டனரா என்ற கேள்வி காணப்படுகின்றது இது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு இட்டுசெல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தாஜ்சமுத்திரா ஹோட்டலில் குண்டை வெடிக்கவைக்க முயன்று தோல்வியடைந்த ஜமீல் தெகிவளைக்கு சென்றார் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அவர் மீண்டும் குண்டை வெடிக்க வைக்க முன்னர் புலனாய்வு பிரிவினர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் இது எப்படி சாத்தியம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொடி ஜஹ்ரான் என்ற நபர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182203

வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்

13 hours 39 minutes ago

வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை இந்த தரப்படுத்தல் வௌிக்காட்டுவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

 

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து பதிவாகி வருகின்றது.

 

2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது.

 

இலங்கையின் மலைநாடு, ஆயுர்வேத சிகிச்சை, ரயில் பயணங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் பயணிகளுக்கு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகள் நிறைந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆரோக்கியமான காலை உணவு என்பனவும் இலங்கையின் தனித்துவமான சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.jaffnamuslim.com/2024/04/5_28.html

ளது.

யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்

13 hours 48 minutes ago

யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
April 29, 2024
 

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர்.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

இக்குழுவில் நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு வருகை தருகின்றனர்.

 

https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வருகின்றார்/

ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்

14 hours 17 minutes ago

91 வயதில் முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் காலமாகிவிட்டார். ஆழ்ந்த இரங்கல்கள்

பட்டித்திடல் படுகொலையின் 37வது நினைவு!

14 hours 26 minutes ago

Published By: DIGITAL DESK 7

29 APR, 2024 | 10:01 AM
image

பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2024-04-29_at_09.00.36.jp

பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2024-04-29_at_09.00.35.jp

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள்.

WhatsApp_Image_2024-04-29_at_09.00.37.jp

குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த கொலைச்சம்பவத்தின்போது அவர்களது உறவினரான மேரி கணேசபிள்ளை என்ற 50 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஓடிச்சென்று மரங்களுக்குள் ஒழிந்து கொண்டு நடந்த சம்பவத்தை பார்த்ததாக அப்போதைய பத்திரிகைகளுக்கு அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார், 

இராணுவம் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவருடைய மகனும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் இராணுவத்தினர் உடனடியாக சரமாரியாக சுடத் தொடங்கி விட்டனர். பின்னர் பெண்களின் அவலச் சத்தம் கேட்டது. மறுபடியும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பெண்கள் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வெளியே வந்தனர். ஆனால் இராணுவத்தினர் அவர்கள்மீது பனை ஓலைகளை அடுக்கி எண்ணை ஊற்றி தீயை வைத்தனர். பின்னர் வீட்டுக்கும் தீயை வைத்துவிட்டு அவர்கள் வந்த லொறியில் ஏறிச் சென்றுவிட்டனர் என்று அப்பெண் கூறினார்.

WhatsApp_Image_2024-04-29_at_09.00.41.jp

WhatsApp_Image_2024-04-29_at_09.00.42.jp

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்

01. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது 06)

02. உலகநாதன் ஜெயரதி (வயது 01)

03. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26)

04. கோணன் பத்தினியன் (வயது 42)

05. பத்தினியன் சீதையம்மா (வயது 34)

06. பத்தினியன் நேசன் (வயது 17)

07. பத்தினியன் பிரகாஸ் (வயது13)

08. பத்தினியன் சோபனா (வயது  12)

09. பத்தினியன் கிருசாந்தி (வயது 10)

10. பத்தினியன் அற்புதராசா (வயது 😎

11. கோணன் பொன்னம்மா (வயது 60)

12. கோணன் மேரி (வயது 23)

13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29)

14. சிந்தாமணி பாலமுருகன் (வயது 11)

15. சிந்தாமணி யோகராசா (வயது 14)

16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15)

17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30)

https://www.virakesari.lk/article/182196

இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது - காமினி லொகுகே குற்றச்சாட்டு

14 hours 31 minutes ago

Published By: VISHNU

28 APR, 2024 | 11:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பி;ல் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.நட்டடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.இலாபமடையும் நிறுவனங்களினதும்,நட்டமடையும் நிறுவனங்களினதும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியறுத்தியுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் பதிலளித்துள்ளது.2014 ஆம் ஆண்டு எமக்கு துரோகமிழைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிமைத்து நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தார்.இறுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேற்றினார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார்.

https://www.virakesari.lk/article/182182

ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு

1 day 2 hours ago

Published By: DIGITAL DESK 7   28 APR, 2024 | 08:59 PM

image

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளின் 12ஆவது சர்வதேச கூட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன பங்குபற்றியுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான  12ஆவது சர்வதேச கூட்டத்திற்கு உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தற்போது நாடுகள் எதிர்கொள்ளும்  பாதுகாப்பு சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்ந கூட்டம் ஒரு தளமாக விளங்குகிறது.

இக்கூட்டத்தொடரின் ஓர்  அங்கமாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றமை விஷேட அம்சமாகும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்த  இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதன் போது கலந்துரையாடகள் நடைபெற்றன.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விடயங்களுக்குப் பொறுப்பான உயர்மட்ட அதிகாரிகளின் 12ஆவது சர்வதேசக் கூட்டம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில், நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், கூட்டு முயச்சிகளை உருவாக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்குமுகமாக அமைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/182163

சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு; யாழில் சோகம்

1 day 2 hours ago

Published By: VISHNU   28 APR, 2024 | 07:08 PM

image
 

காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி உடல் இயலாமை (காய்ச்சல் காரணமாக) காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று  வீடுதிரும்பியுள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது 

பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182176

இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா

1 day 3 hours ago
28 APR, 2024 | 05:26 PM
image

பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182161

கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது

1 day 6 hours ago

கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது
121546669.jpg

(யோகி)

கிளிநொச்சியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறிய மகிழுந்து ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட (27) நான்கு கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டதுடன் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதி வழியாக வவுனியாவுக்கு குறித்த மகிழுந்தில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சிறப்பு தகவல்களின் அடிப்படையில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு அண்மையில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த தங்கத்தை மீட்டதுடன்  சந்தேகத்தின் பெயரில் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரைக்  கைது செய்துள்ளனர் 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ஏ)

 

https://newuthayan.com/article/கிலோ_கணக்கில்_தங்கம்_மீட்பு;_மூவர்_கைது

தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா

1 day 6 hours ago

தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல்
902322522.jpg

(மாதவன்) 

தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் - சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவிப்பு

அரச தலைவர் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது  உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என  சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுதல் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்பாபு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனி வரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது நானும் அதை வரவேற்பேன்.

ஆனால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம்.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும்  தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின்  அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்

ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியலை முன்னெடுப்பதை நிறுத்தி தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின் தமிழ் மக்கள் சார்ந்து  பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (

https://newuthayan.com/article/தமிழ்_பொது_வேட்பாளர்_குறுகிய_அரசியல்; 

நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை

1 day 6 hours ago

நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை
adminApril 28, 2024

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற  மனிதக்கொலைச் சம்பவம் ஒன்றுடன்  தொடர்புபட்டிருந்த நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.   மனிதக்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த  காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கும்  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு திருகோணமலை பாரதிபுரத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த 4  காவல்துறை  உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை வழங்கப்க்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய  மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாக இருந்த 8 தமிழ் பொதுமக்கள் மீது ஒரு குழுவினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கொலை செய்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக இந்த நான்கு  காவல்துறை  உத்தியோகத்தர்களுக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4  காவல்துறை  அதிகாரிகளில், காவல்   நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை  இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் உள்ளடங்குகின்றனர்.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

https://globaltamilnews.net/2024/202118/

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம்!

1 day 6 hours ago

யாழ்ப்பாணத்தில் அரிசி விநியோகம்!
adminApril 28, 2024
Jaffna.png

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 131652 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் கடந்த 20ஆம் திகதி முதல் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும், கிராம அலுவலர் பிரிவு கொத்தணி ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது 62.66 வீதமான குடும்பங்கள் மேற்படி அரிசி விநியோகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் அரிசி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த, பதிவு செய்யப்பட்ட 17 அரிசி ஆலைகளூடாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், 110220 குடும்பங்களுக்கான அரிசி, குறித்த அரிசி ஆலைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 98175 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களால் கிராம மட்ட அலுவலர்களூடாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தொடர்ச்சியாக அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கின்ற நடவடிக்கையினை பிரதேசசெயலாளர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, நெடுந்தீவு, காரைநகர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/202122/

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள்!

1 day 10 hours ago

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 3,63,438 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/300420

பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் செல்லத் தேவையில்லை!

1 day 10 hours ago

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் இனிமேல் பொதுமக்கள் முதற்கட்ட புகார் கொடுக்க பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியதில்லை.

இந்த புகாரை “ஐஜிபியிடம் சொல்லுங்கள்” (tell IGP ) என்ற இணையதளம் மூலமாக பொலிஸ் நிலையம் நிலையம் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உதவி கண்காணிப்பாளர், சிரேஷ்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம். பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரில் ஒருவருக்கு இதன் நகலை அனுப்புவதற்கான அமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் முதலில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளது. 22 போலீஸ் நிலையங்களில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் முறைப்பாடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஸ்டேஷன் கமாண்டர் உத்தரவின் பேரில் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/300424

https://telligp.police.lk/

சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை காணவில்லை!

1 day 11 hours ago
28 APR, 2024 | 12:12 PM
image
 

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை (27) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். 

மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/182139

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

1 day 11 hours ago
28 APR, 2024 | 01:29 PM
image
 

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார். 

தொற்று காரணமாக உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 34) ஆவார். 

உடலில் கட்டி இருப்பதாக கடந்த புதன்கிழமை (24) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அதனையடுத்து, உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டார்.

இதன்போது வெளியான அறிக்கையில் அந்த நபர் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182145

Checked
Mon, 04/29/2024 - 19:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr