அரசியல் அலசல்

தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

2 months ago
diplomatis-750x375.jpg தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கடக்கமான தொகையினரை அவர் திண்ணை விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து வெளியே வரும் பொழுது சிவாஜிலிங்கம் என்னிடம் கேட்டார்…. “அடுத்த கிழமை இதுதான் கட்டுரையா?” என்று. நான் சொன்னேன் “இல்லை இது பகிரங்கச் சந்திப்பு அல்ல. மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பு. இங்கு நான் ஒரு ரிப்போர்ட்டராக வரவில்லை. ராஜதந்திரிகளுடனான சந்திப்பு மூடிய அறைக்குள் நடக்கின்றது என்றால் அதன் பொருள் எல்லாவற்றையும் வெளியே கதைப்பதற்கு அவர்கள் தயாரில்லை என்பதுதான்” என்று.

ஏற்கனவே விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலத்தில், கனேடியத் தூதுவரோடு நடந்த உரையாடலை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியதாக ஒரு விமர்சனம் வந்தது. தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் மூடிய அறைகளுக்குள் தாங்கள் கதைப்பவற்றை வெளியே கூறுகிறார்கள் என்ற ஒரு விமர்சனம் ஒருபகுதி ராஜதந்திரிகள் மத்தியில் உண்டு.

ஒரு சிறிய அரசற்ற இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விடையங்கள் தொடர்பில்,ரிப்போர்ட்டிங் செய்யும்போது அதிகம் நிதானம் வேண்டும். ஊடகத்தின் பார்வையாளர் தொகையை அதிகப்படுத்துவதற்காக;சுடச்சுடச் செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக;பரபரப்பிற்காக ச்செய்திகளை அறிக்கையிடுவது வேறு.ஒரு தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கான செய்தி அறிக்கையிடல் வேறு.

ஒரு கட்சியை அல்லது ஓர் அரசியல்வாதியை அல்லது ஒரு நிதி அனுசரணையாளரை மகிழ்விப்பதற்காக அல்லது பார்வையாளர்களை கவர்வதற்காக செய்தியை அறிக்கையிடுவது வேறு.தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அறிக்கையிடுவது வேறு.

அதிலும் குறிப்பாக இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல்.யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்?எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்?எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்?இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்?ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா?
தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம், பழைய பூங்கா வீதியில் காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார்.அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர்,பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார்.அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர்.ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா?

அது ஒரு தகவல் பிழை.ஆனால் மற்றொரு தொகுதி யுடியூப்பர்கள் அரசியல் விமர்சனம் என்று கூறி கற்பனைகளையும் ஊகங்களையும் பரப்புகிறார்கள். தான் கூற வரும் கருத்தைக் குறித்து ஆழமான வாசிப்போ கிரகிப்போ ஆய்வு ஒழுக்கமோ இல்லாத ஒரு யுடியூப் தலைமுறை உருவாகிவிட்டது. அவர்களில் அநேகரிடம் தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பொறுப்புணர்ச்சி கிடையாது.இவ்வாறு விளக்கம் குறைந்த அல்லது பொறுப்பு குறைந்த அல்லது விவகார ஞானம் இல்லாத யுடியூப்பர்களின் காலத்தில் ஒரு தேசமாகத் திரள்வது எப்படி?

அண்மையில் கொழும்புக்கான புதிய இந்தியத் தூதர் யாழ்ப்பாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு தொகையினரைச் சந்தித்தார்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழகப் பிரமுகர்கள் கருத்துருவாக்கிகள் போன்றவர்கள் அடங்குவர்.சந்திப்பின் போது அதில் அழைக்கப்பட்டவர்கள் ஐந்துக்கும் குறையாத மேசைகளை சுற்றி அமர்ந்திருந்தார்கள். தூதுவர் ஒவ்வொரு மேசையாகச் சென்று அவர்களோடு உரையாடினார்.அதில் ஒவ்வொரு மேசையிலும் என்ன உரையாடப்பட்டது என்பது அடுத்த மேசையில் இருந்த எல்லாருக்கும் தெரியாது. சந்திப்பு முடிந்ததும் ஊடகங்களுக்கு சில அரசியல்வாதிகள் தெரிவித்த தகவல்களை வைத்து ஊடகங்களும் ஊடகங்களும் யுடியூப்பர்களும் வியாக்கியானங்களை முன் வைத்தார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் பிரதிநிதிகளை அல்லது குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் தூதரக அதிகாரிகளும் ராஜதந்திரிகளும் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்புகளைத்தான் சந்திப்பார்கள்.

இவ்வாறான சந்திப்புகளில் கலந்து கொள்ளும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்லது மதத் தலைவர்கள் அல்லது சிவில் சமூகப் பிரதிநிதிகள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுவாக மூன்று விதமான போக்குகளைப் பிரதிபலிப்பார்கள். முதலாவது போக்கு முறையிடுவது.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை முன் வைப்பது. இரண்டாவது,உதவி கேட்பது. அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்று கூறி உதவி கேட்பது.மூன்றாவது வெளித் தரப்புகள் அரசாங்கத்தோடு நிற்கின்றன அல்லது தமிழ் மக்களுக்குப் பொருத்தமான விதங்களில் உதவவில்லை என்று கூறி வெளிநாடுகளின் மீது விமர்சனங்களை முன் வைப்பது.

இதில் முதல் இரண்டு போக்குகளும்தான் தூக்கலாக இருக்கும். குறிப்பாக அபிவிருத்தி மைய அரசியலை ஏற்றுக் கொள்பவர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றவர்கள் அநேகமாக உதவிகளைக் கேட்பார்கள். என்னென்ன விடயங்களில் குறிப்பிட்ட நாடு தமிழ் மக்களுக்கு உதவலாம் என்று கோரிக்கைகள் அடங்கிய பட்டியலோடும் வருவார்கள். அவர்கள் பெரும்பாலும் உரிமை மைய அரசியலை முன்வைக்கும் குடிமக்கள் சமூகங்கள் தங்களுடைய உரையாடலை திசை திருப்புகிறார்கள் என்று எரிச்சல் அடைவதுண்டு.

இதில் மூன்றாவது வகை அதாவது வெளிநாடுகளை விமர்சிக்கும் தரப்பு மிகவும் குறைவு.குறிப்பிட்ட வெளிநாடு அரசாங்கத்தோடு நிற்கின்றது அல்லது தமிழ் மக்களுக்கு உதவவில்லை போன்ற கருத்துக்களை முன்வைத்து அந்த நாட்டின் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் அநேகமாகக் குறைவு.ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவது.ராஜதந்திரிகளுடன் முரண்பட்டால் சில சமயம் அடுத்தமுறை சந்திக்கமாட்டார்கள்.அதாவது தொடர்ந்து என்கேஜ் பண்ண முடியாது.எனினும்,சில அரசியல்வாதிகளும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கும்பொழுது நாசுக்காகவும் சில சமயங்களில் நேரடியாகவும் அப்படிப்பட்ட விமர்சனங்களை வைப்பதுண்டு.

எனினும் பொதுப் போக்கு முறையிடுவதும் உதவி கேட்பதுந்தான்.அதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் வெளியாருக்காகக் காத்திருப்பவர்கள்தான் அதிகம் என்ற ஓர் உணர்வே வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஏற்படும்.

இவ்வாறு தீர்வுக்காக அல்லது உதவிகளுக்காக அல்லது மீட்சிக்காக வெளியாருக்காகக் காத்திருக்கும் ஓர் அரசியல் போக்கை அரசியல்வாதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பிரதிபலிக்கும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு சந்திப்பில்,புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதுவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியது.

இந்தியா ஈழத் தமிழர்களைக் கைவிட்டு விட்டது என்ற பொருள்பட செய்திகள் வெளிவந்தன.ஏனெனில் இந்திய தூதுவர் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகிப்பதில் தங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்தும் விதத்தில் சந்திப்பின்போது பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.இந்தியா ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.அதனால், ஈழத் தமிழர்கள் இந்தியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று அண்மையில் மனோ கணேசன் மின்னல் நிகழ்ச்சியின்போது தெரிவித்திருந்தார்.

இந்திய தூதர் அப்படிச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை.எந்த ஒரு வெளிநாடும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துத் தராது. தமிழ் மக்கள் அதற்காகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் பேரபலத்தை அதிகப்படுத்தும் போது வெளிநாடுகள் தமிழ் மக்களை நோக்கி வரும். ஜேவிபிக்கு பேரபலம் அதிகரித்திருக்கிறது. என்பதனால் தான் இந்தியா ஜேவிபியை புதுடெல்லிக்கு அழைத்தது.

ரணில் விக்கிரமசிங்க, எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.எனவே அவரைக் கையாள்வதில் உள்ள நெருக்கடிகளை இந்தியா உணர்ந்திருக்கிறது. அதனால் கையாள இலகுவான ஒரு கூட்டை உருவாக்க இந்தியா விரும்பலாம். அவ்வாறு ரணிலுக்கு எதிராக ஏற்படக்கூடிய ஒரு கூட்டுக்குள் எதிர்காலத்தில் இணையக்கூடிய ஜேவிபியை இந்தியா அங்கீகரித்துப் பேச அழைத்திருக்கலாம்.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவோ,சீனாவோ எந்த ஒரு பேரரசாக இருந்தாலும், ஏன் சிற்றரசாக இருந்தாலும், அரசியலரங்கில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகளைத்தான் ஆர்வத்தோடு பார்ப்பார்கள். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன.துணிந்து புகுந்து விளையாடும் போது தான் பேரமும் அதிகரிக்கும். எனவே தமிழ் மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடுத்து வெளியார் தங்களை நோக்கி வரக்கூடிய விதத்தில் போராட வேண்டும். காய்களை நகர்த்த வேண்டும். பிராந்திய மற்றும் பூகோள சூழலை வெற்றிகரமாகக் கையாள வேண்டும். தமிழ் மக்களுக்காகக் கொழும்பைப் பகைக்கலாம் என்ற நம்பிக்கையை வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு வெளிநாடும் எந்த ஒரு சிறிய அரசற்ற மக்கள் கூட்டத்திற்கும் தீர்வைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுப்பதில்லை. இந்த பூமியிலே போராட்டத்துக்கு உதவினாலும் சரி சமாதானத்துக்கு உதவினாலும் சரி தீர்வுகளுக்காக உழைத்தாலும் சரி எல்லாவற்றிற்கும் பின்னால் அரசியல் உள்நோக்கங்கள் இருக்கும்.ராணுவ பொருளாதார நலன்கள் இருக்கும்.

எனவே தமிழ் மக்கள் தங்களுடைய பேரபலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இந்தியா எங்களை கைவிட்டு விட்டது; அமெரிக்கா கைவிட்டு விட்டது; ஐநா கைவிட்டுவிட்டது;சீனா தொடர்பான இந்தியாவின் சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகப்படுத்துவதன்மூலம் இந்தியாவை நெருங்கி செல்லலாம்…..என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருப்பதற்குப் பதிலாக அரசியல் களத்தில் செயல்படும் ஒரு தரப்பாக தமிழ் மக்கள் தங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அப்படிக் கட்டியெழுப்பும் போது தங்களைச் சந்திக்க வரும் ராஜ தந்திரிகளிடம் முறைப்பாடுகளையும் வேண்டுகோள்களையும் முன்வைப்பதற்குப் பதிலாக நிபந்தனைகளை முன் வைக்கலாம்; பேரம் பேசலாம்.

https://athavannews.com/2024/1371208

CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு

2 months ago
CTC அதனது செயற்பாடுகளை சீர் செய்தால் இப்புதிய கூட்டின் தேவையிருக்காது….கனேடியத் தமிழர் கூட்டு

 

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!

2 months ago

தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன.

 

 

 

இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 ஆவது தேசிய மகாநாடு புதிய நிர்வாக தெரிவுகளில் போட்டி பொறாமை சண்டை எதிர்ப்பு விட்டுக்கொடுப்பின்மை என பல தடைகளை்தாண்டி புதிய 9 ஆவது தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முதல்தடவையாக ஒரு தேர்தல் வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

கட்சித் தலைவர்கள்

இதுவரை கட்சித் தலைவர்களாக,

1. சாமுவேல் ஜேம்ஷ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) யாழ்ப்பாணம்

2. குமாரசாமி வன்னியசிங்கம், யாழ்ப்பாணம்.

3. அராலிங்கம் இராஜவோதயம்,-திருகோணமலை.

4. சின்னமுத்து மூத்ததம்பி இராசமாணிக்கம், மட்டக்களப்பு.

5. டாக்டர் இலங்கை முருகேசு விஜயரெத்தினம் நாகநாதன்,யாழ்ப்பாணம்.

6. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். யாழ்ப்பாணம்.,

7. இராஜவரோதயம் சம்பந்தன். திருகோணமலை.

8. மாவை சோமசுந்தரம் சேனாதிராசா. யாழ்ப்பாணம் ஆகியோர் இருந்தனர், தற்போது 9.சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் தெரிவாகினார்.

சரித்திரத்தில் கடந்த 74 வருடமும் இடம்பெறாத நிலையில் தலைவர் தெரிவுக்காக பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த மருத்துவர் சத்தியலிங்கம் வேட்பு மனுக்களை கோரியதன் நிமிர்த்தம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் பொதுச்சபையின் ஆறு இயங்கு நிலை உறுப்பினர்களின் முன்மொழிவுடன் விண்ணப்பங்களை பதில் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டு அவர்களை வடகிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் சென்று பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

ஏறக்குறைய 375, பொதுச்சபை உறுப்பினர்கள் மட்டும் தலைவரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் ஏன் மாவட்டங்களில் எல்லாம் சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்தது.

ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு

அதற்கு ஜனநாயகம் உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஜனநாயகமுறையில் வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வது ஏனைய கட்சிகளுக்கு முன்மாதிரியான செயல்பாடு என வியாக்கியானம் தலைவர் தெரிவில் போட்டியிட்ட வேட்பாளர்களால் கூறப்பட்டன.

அதேவேளை இவ்வாறான போட்டித்தன்மை பின்னர் பொறாமையாக மாறி இரண்டு அணிகளாக கட்சிக்குள் குழப்பங்களை தோற்றுவிக்கலாம் என்ற கருத்துகளை பல ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சந்தேகங்களுக்கெல்லாம் வேட்பாளராக போட்டியிட்ட சுமந்திரன் அப்படி எதுவும் இடம்பெறாது தேர்தல் முடிவுற்றதும் இருவரும் சேர்ந்து பயனிப்போம் என்பதை வெளிப்படையாக கூறினார். ஆனால் அவரே பின்னர் பொதுச்செயலாளர் பதவி தமக்கு தரப்படவேண்டும் இல்லையேல் தமது அணிக்கு தரவேண்டும் என்று அடம்பிடித்து இரண்டு அணிகளாக தமிழ்சுக்கட்சி உள்ளதை நிருபித்தார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

ஏற்கனவே வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தமது பிரசாரத்தை ஆரம்பித்தவர் சுமந்திரன், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முழுமையாக செயல்பட்டார் அவரின் பிரசாரம் ஆரம்பித்து ஒரு வாரங்களுக்கு பின்னரே இரண்டாவதாக சிறிதரன் மூன்றாவதாக யோகேஷ்வரன் சிறிதரனுடன் இணைந்து பிரசாரத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர். 

சிறிதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், யோகேஷ்வரன். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் முழுமையாக பிரசாரங்களை மேற்கொண்டனர். 

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

யோகேஷ்வரன் சிறிதரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் கடந்த ஜனவரி 21இல் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வாக்குச்சீட்டில் யோகேஷ்வரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது இதில் ஆச்சரியம் என்னவெனில் யோகேஷ்வனுக்கு எவருமே வாக்களிக்கவில்லை தப்பித்தவறி்யாராவது ஒவருவர் யோகேஷ்வரனன் பெயருக்கு நேரே புள்ளடி இட்டு இருந்தால் அவர் மீது வீண் சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் தாம் சிறிதரனை ஆதரிப்பதாக கூறிவிட்டு தானே தமது வாக்கை அவருக்கே போட்டிருப்பதாக அவர் மீது யாரும் குற்றம் கூறியிருப்பார்கள் நல்லவேளை்அப்படி நடக்கவவில்லை. இதில் இருந்து யோகேஷ்வரன் சிறிதரனை தாம் ஆதரிப்பதாக கூறிய கருத்து முழுமை பெற்றிருந்தது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.

வாக்கெடுப்பில் பொதுச்சபையில் கலந்துகொண்ட 321, உறுப்பினர்களில் சிறிதரன் 184, வாக்குகளையும், சுமந்திரன் 137, வாக்குகளையும் பெற்று சுமந்திரனை விட 47, மேலதிக வாக்குகளால் சிறிதரன் தெரிவானார். சிறிதரன் தமது பிரசாரங்களில் தாம் கூறிய தமிழ்த்தேசிய வாதி என்பதை நிருபித்தார் பொதுச்சபை உறுப்பினர்களில் 184, பேர் தமிழ்தேசிய கொள்கையை ஆதரித்தனர் எனபதும் 137 பேர் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் இந்த வாக்கெடுப்பு தெரிவு மூலம் நிருபணமானது.

ஒருகட்சி தலைவர் தெரிவை மாவட்டங்கள் தோறும் சென்று பிரசாரம் செய்யாமல் தலைவர் தெரிவு இடம்பெற்ற ஜனவரி 21இல் குறிப்பிட்ட மூவரையும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கருத்துக்களை கூறவிட்டு பின்னர் வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இரண்டு அணிகள் என்ற கருத்துக்கே இடம்வந்திராது என்பது எனது கருத்து இதை நான் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

தலைவர் தெரிவு

அதைவிட தலைவர் தெரிவு இடம்பெற்ற அன்றே பொதுச்செயலாளர் தெரிவும் இடம்பெற்றிருந்தால் இரண்டு அணிகள் என்ற கதையே எழுந்திராது.

வழமையாக கடந்த 16 ஆம் திகதி , தேசிய மகாநாடுகளிலும் தெரிவு ஒருநாளில் தான் இடம்பெற்றது வழமை ஆனால் இந்த முறை ஜனவரி 21 இல் தலைவர் தெரிவும் சரியாக ஒருவாரம் கழித்து ஜனவரி 27இல் பொதுச்செயலாளர் ஏனைய தெரிவுகளுக்கு பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் திகதி ஒதுக்கியதும் ஒரு தவறான அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

இதுவும் சுமந்திரன் பதில் பொதுச்செயலாளரிடமும், நிர்வாகச்செயலாளரிடமும் கூறியதால் அப்படி செய்ததாக பலரின் மத்தியில் கருத்தும் உண்டு ஒரே நாளில் இடம்பெறாமல் ஒருவாரம் பிற்போடப்பட்டு பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்றதும் குழப்பநிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. அந்த குழப்பம் போட்டி குரோதம் இன்று வெட்கம் இல்லாமல் நீதிமன்றத்தடைக்கு சென்றுள்ளது.

மத்தியகுழு கூட்டம்

கடந்த ஜனவரி 27இல் பொதுச்சபை கூடுவதற்கு முன்னர் மத்தியகுழு கூட்டப்பட்டது மத்திய குழுக்கூட்டம் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தால் அறிவிப்பு(கூட்ட அழைப்பு) விடுக்கப்படவில்லை மகாநாட்டு விழாக்குழு தலைவர் குகதாசனே மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.

உண்மையில் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் சுகவீன காரணமாக அவர் தலைவர் தெரிவிலும் அதன்பின்னர் நடந்த மத்தியகுழு பொதுச்சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை இதுவும் சில முரண்பாடுகளுகளை தோற்றுவித்தது மகாநாடு நடத்தி முடியும்வரை அதற்கான முழும்பொறும் பொதுச்செயலாளரே கையாளவேண்டும் ஆனால் இது யார் கூட்டத்தை நடத்தினார் என்பதே புரியாத புதிராகவே இருந்தது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

இறுதியாக கடந்த ஜனவரி 27 இல் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்திம் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றபோது அவர் மத்தியகுழுவில் பொதுச்செயலாளர் தொடர்பான ஆலோசனைகளை கூறலாம் என கேட்டதற்கு இணங்க நான்(பா.அரியநேத்திரன்) மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசனின் பெயரை முன்மொழிந்திருந்தேன்.

அதன்பின்னர் ஏற்கனவே நிருவாக செயலாளராக இருந்த குலநாயகம் தான் 1965, தொடக்கம் தமிழரசுகட்சியில் முக்கிய உறுப்பினராக இருப்பதாகவும் கடந்த 2019, மகாநாட்டிலும் தாம் பொதுச்செயலாளர் பதவி கேட்டு தரப்படவில்லை இந்தமுறை தமக்கு தரவேண்டும் என குறிப்பிட்டார்.

அதன்பின்னர் சுமந்திரன் தம்மை தலைவர் சிறிதரன் சிரேஷ்ட தலைவராக செயல்படுமாறு கேட்டதாகவும் தாம் அந்த பதவியை ஏற்கவில்லை ஆனால் தற்போது இரண்டு அணிகள் உள்ளன சிறிதரன் அணி , சுமந்திரன் அணி என உள்ளது தலைவராக சிறிதரன் உள்ளதால் அவருக்கு எதிராக போட்டியிட்ட தமக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கினால் இரண்டு அணிகளையும் சமாளித்து ஒற்றுமையாக கட்சியை முன்னகர்த்தலாம் என்ற கருத்தை தெரிவித்தார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

அடுத்ததாக கொழும்பு கிளை உறுப்பினர் இரத்தினவேல் தமது கருத்தில் வடக்கை சேர்ந்த ஒருவர் தலைவராக இருந்தால் கிழக்கை சேர்ந்தவர் பொதுச்செயலாளராக இருப்பது நல்லது அதனால் குலநாயகமும், சுமந்திரனும் வடக்கை சேர்ந்தவர்கள் விட்டுக்கொடுத்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பொதுச்செயலாளராக தெரிவது நல்லது என்ற கருத்தை கூறினார்.

இதன் பின்னர் மீண்டும் சுமந்திரன் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளன அதில் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன். அல்லது மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், அல்லது அம்பாறை மாவட்ட தலைவர் கலையரசன் இந்த மூவரில் ஒருவரை நியமித்தால் இரண்டு அணிகள் என்ற பிரச்சனை எழாது என்ற கருத்தை கூறினார்.

இதன்பின்னரே புதியதலைவர் சிறிதரன் ஶ்ரீநேசனிடம் அவருடைய இருக்கைக்கு சென்று குகதாசனுக்கு ஒருவருடம் விட்டுக்கொடுக்குமாறு கேட்டார் அதை பெரும் தன்மையாக ஶ்ரீநேசனும் சம்மதித்தார் ஆனால் ஒருவருடம் வரையறை செய்த விடயத்தை பொதுச்சபையில் சிறிதரன் கூறவில்லை.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

 

பொதுச்சபையில் பெரும்பாலானவர்கள் குகதாசனை பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை இதனால் சண்டை தகராறு குழு குழப்பம் அடைந்து பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கேட்டபோது ஒரு கட்டத்தில் பழைய தலைவர் மாவை சேனாதிராசா வாக்கெடுப்பு மறுநாள்  28ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்தார். அதனால் சில பொதுச்சபை உறுப்பினர்கள் வெளியேறினர் எஞ்சிய பல உறுப்பினர்கள் இன்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அடம்பிடித்தனர்.

இதனை ஏற்ற தலைவர் மாவை சேனாதிராசா இப்போது பொதுச்செயலாளருக்கான இரகசிய வாக்கெடுப்பை பதில் செயலாளர் இல்லாத காரணத்தால் உப செயலாளரான சுமந்திரன் நடத்துவார் என கூறினார்.

சுமந்திரன் பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பை தவிர்த்து மத்தியகுழுவில் எடுத்த தீர்மானத்தை ஏற்பவர், எதிர்பவர்கள் என கூறி கையை உயர்த்தும் வாக்கைடுப்பை நடத்தி மேடையில் நின்று அவரே கணக்கெடுத்தார் அந்த எண்ணிக்கை 112, பேர் ஏற்பதாகவும்,104, பேர் எதிர்கதாகவும் முடிவை அறிவித்துவிட்டு சென்றார் அதன் பின்னர் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட தலைவர் மாவைசேனாதிராசா மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறினார்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

இந்த சிக்கல் நிலை கடந்த ஜனவரி 27 தொடக்கம் கடந்த பெப்ரவரி 11, வரை தொடர்தன மீண்டும் பொதுச்செயலளர் பதவி இரகசிய வாக்கெடுப்பில் நடத்தவேண்டும் என சிறிதரன் அணியை சேர்ந்தவர்களும், நடத்த கூடாது என சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களும் வாதப்பிரதிவாதங்களும் சமூகவலைத்தளங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகளும் தொடர்ந்தன.

புதியதலைவராக தெரிவான சிறிதரன் தமது தலைவர் பதவியை முறைப்படி மகாநாட்டில் பதவி ஏற்று கட்சியை இயங்கு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாலும் பழைமையான தமிழரசுக்கட்சியை தொடர்ந்தும் ஒற்றுமையாக முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் கடந்த 11ஆம் திகதி வவுனியாவில் பதில் பொதுச்செயலாளராக பதவியில் இருந்த சத்தியலிங்த்தின் வீட்டில் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன், திருகோணமலை மாவட்ட தலைவர் ச.குகதாசன், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாளஷ் நிர்மலநாதன், வவுனியா மாவட்ட தலைரும் பதில் பொதுச்செயலாளருமான சத்தியலிங்கம், புதிய தலைவர் சி.சிறிதரன் ஆகிய ஏழுபேரும் பல மணிநேரம் கலந்துரையாடி வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஒரு இணக்கபபாடு எட்டப்பட்டது. இந்த இணக்கப்பாட்டு அடிப்படையிலேயே 19ஆம் திகதி மாநாடு நடைபெற இருந்தது.

அந்த இணக்கப்பாடானது முதல் ஒருவருடம் திருகோணமலை ச.குகதாசனும், மறு வருடம் மட்டக்களப்பு ஞா.ஶ்ரீநேசனும் பொதுச்செயலாளராக பணிபுரியவது என இணக்கம் காணப்பட்டது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

 

இந்த இணக்கத்தின் அடிப்படையில்தான் கடந்த ஜனவரி 27ஆம் திகதிஒத்திவைக்கப்பட்ட 17ஆவது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மகாநாடு 19 ஆம் திகதி மீண்டும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறிதரனுக்கு எதிரான அணியை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றமை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் அதற்கு துணைபோனவர்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறுவதை காணலாம்.

தந்தை செல்வா 1949 இல் தமிழரசுகட்சியை ஆரம்பித்து அவருடைய வழியை தொடர்ந்து பின்னர் தலைவராக செய்பட்ட ஏனைய தலைவர்களான கு.வன்னியசிங்கம், அ.இராஜவோதயம் சி.மூ.இராசமாணிக்கம், இ. வ நாகநாதன், அ.அமிர்தலிங்கம். இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா. ஆகியோரும் கட்சி உபவிதிகளுக்கு அப்பால் சில விடயங்களை கட்சி நலன் கருதி சம்பிரதாயம், விட்டுக்கொடுப்பு, சமூகநலன், பிரதேசநலன் என்பவற்றை அனுசரித்து தமிழரசுக்கட்சியை பாகுபாடின்றி ஒற்றுமையாக கடந்த 74, வருடங்கள் ஒரு தமிழ்தேசிய விடுதலை அரசியல் கட்சியாக தமிழ் மக்கள்மத்தியில் பிழவு படாமல் கட்டிக்காத்தனர். அவர்கள் தலைவர்களாக இருந்த வேளையில் நீதிமன்றம் தடை சட்டம் என எவருமே கட்சியை மீறி செல்லவில்லை.

தமிழர் விடுதலைக்கூட்டணி

ஆனால் கடந்த ஜனவரி மாதம்  21ஆம் திகதி வாக்கெடுப்பு மூலமாக புதிதாக தற்போது தெரிவான தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவாகி அடுத்த கட்ட நடவடிக்கையை ஒற்றுமையாக முன்எடுக்கும் ஆயத்தங்களை இணக்கப்பாடுடன் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளாத சக்திகள் பொறாமையினால் தடை உத்தரவை பெற்றனர்.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனமானது கடந்த 1976, மே,14 இல் வட்டுக்கோட்டை தீர்மானம் எடுக்கும்போது அவர் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை கலைத்துவிட்டு அல்லது செயல் இழக்க வைத்துவிட்டு தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பிக்கவில்லை தமிழரசுக்கட்சியை அப்படியே வைத்துவிட்டே தனியாக அடுத்த கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை உதயசூரியன் சின்னத்துடன் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 1977, பொதுத்தேர்தலை சந்தித்து பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை அந்த கட்சி தனித்துவமாக்செயல்பட்டது மட்டுமின்றி பல தேர்தலகளை சந்தித்தது.

அதனால் தான் 2001இல் தமிழ்ததேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது தமிழர் விடுதலை கூட்டணிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கட்சியாக இருந்தது.2001 தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டது.

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

ஆனால் அதன்பின்னர் ஆனந்தசங்கரியின் துரோகத்தால் 2004 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் தேர்தல் கேட்க முடியாமல் ஆனந்த சங்கரியார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றதனால் 2004, பொதுத்தேர்தலில் மீண்டும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் தேர்தலை சந்திக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைவர் கட்டளை இட்டு இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழினத்தின் தாய்க்கட்சியாக செயல்படுகிறது.

2004 இல் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தை இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சியில் உள்ள கறுப்பாடு ஒன்றின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ளது. அந்த கறுப்பாடு யார் என்பது கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் அதை நான் குறிப்பிடவில்லை தயாரிப்பு, இயக்கம், நெறியாழ்கை, கதாநாயன், வில்லன் என ஒரங்க நாடகமாக இது தயாரிக்கப்பட்டு அரங்கேறியுள்ளது.

பவள விழா 

தந்தை செல்வா 1976 இல் எடுத்த தீர்க்கதரிசன்முடிவு தமிழர் விடுதலை கூட்டணி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியபோது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி இருந்ததமையால்த்தான் 2004ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி கைகொடுத்தது. 

அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்: இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! | Ilangai Tamil Arasu Party Article

கடந்த 1949, டிசம்பர்,18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி எதிர்வரும் 2024, டிசம்பர்,18இல் 75 ஆவது பவள விழா நாளாகும். இந்த பவளவிழா ஆண்டில் 17ஆவது தேசிய மகாநாட்டில் ஒன்பதாவது புதிய தலைவராக பதவி ஏற்று தலைமை பேருரையாற்றும் 55, வயதுடைய சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது அது இப்போது தடை பட்டாலும் விரைவில் தர்மம் வெல்லும்.

https://tamilwin.com/article/ilangai-tamil-arasu-party-article-1708512862

சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

2 months ago
சதுரங்க ஆட்டமாடும் இலங்கை தமிழரசுக் கட்சி

முருகாநந்தன் தவம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால், கட்சியின் செயற்பாடுகளை வழக்குகள் மூலம் ஒரு சில வருடங்களேனும் முற்றாக முடக்கி அதன் மூலம் தனது தோல்விக்கு பழிவாங்க கட்சிக்குள் ‘தோற்றுப்போன’ தரப்பு ஒன்று மேற்கொள்ளும் சதுரங்க ஆட்டமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான நீதிமன்ற வழக்குத் தாக்கல்கள் அமைந்துள்ளன.

கடந்த ஜனவரி 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, செல்லுபடியற்றது. எனவே, குறித்த இரண்டு பொதுச்சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதுமென தெரிவித்து திருகோணமலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு எதிராக யாழ்.

மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரினால் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கல்களின் பின்னணியில்தான் ‘தோற்றுப்போன தரப்பின்’ சட்ட விளையாட்டுகள் இருப்பதாக உள் ‘வீட்டு’த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த ஜனவரி 21ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு, அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராகப் பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தலைவர் பதவிக் கனவுடனும் அனைத்து தகுதிகளையும் கொண்டவன் என்ற தலைக் கனத்துடனும் களமிறங்கியவர் அடைந்த எதிர்பாராத தோல்வி மற்றும் கடந்த ஜனவரி 27ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின்போது, தலைவர் பதவி நனவாகாத நிலையில், பொதுச் செயலாளர் பதவியையாவது அடைந்து விட வேண்டுமெனத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் மீண்டும் ஆசைப்பட்டு அதுவும் கிடைக்காத நிலையில், தனது விசுவாசியான திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டுமென மேற்கொண்ட சதிகள், குழிபறிப்புக்கள் கட்சியைப் பிளவு படுத்தும் காய் நகர்த்தல்கள் மத்தியில் குகதாசன் தெரிவு செய்யப்பட்டபபோதும், அதற்குக் கிளம்பிய கடும் எதிர்ப்புக்களினால் இன்று வரை அவர் அந்த பதவியை ஏற்க முடியாத நிலை ஆகிய இரு காரணங்களின் பின்னணியிலேயே தற்போது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது ஒன்றும் ரகசியமானதல்ல.

‘தோற்றுப்போன’ தரப்பின் விசுவாசிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள் ‘வீட்டு’தரப்புக்களினால் கூறப்படும் இவ்வழக்கைத் தாக்கல் செய்தவர்கள், ‘இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனவரி 27இல் தெரிவான குகதாசனையே நியமிக்க வேண்டும். பொதுச் செயலாளர் பதவிக்கு மீள் தெரிவு இடம்பெறக்கூடாது. அத்துடன், பொதுச் செயலாளர் பதவி பங்கிடவும் படக்கூடாது. இதற்கு கட்சியின் புதிய தலைமை இணங்கினால் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

இல்லையேல் இன்னும் இன்னும் வழக்குகள் தாக்கல் செய்வோம்’ என்ற முடிவில் இருப்பதாக தெரியவருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்று, கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச் சபையில் பலர் இடம் பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கைத் தாக்கல் செய்தவரும் அதனைத் தெரிந்து கொண்டே வாக்களித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்போது தனது விருப்பத்துக்குரிய தலைவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்.

ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்ததாலேயே இப்போது வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். தான் விரும்பிய தலைவர் வெற்றி பெற்றிருந்தால் கட்சியின் யாப்புக்கு முரணாக பொதுச்சபையில் பலர் இடம்பெற்றிருந்தனர் என்ற குற்றச்சாட்டை இவர் முன்வைத்திருக்க மாட்டார்.

இதனால்தான் இந்த வழக்குத் தாக்கல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ‘தோற்றுப்போனவர்’ இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் தரப்பு பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றது. அதாவது இலங்கை தமிழரசுக் கட்சியை உடைக்கும், புதிய தலைமையைச் செயற்படவிடாது தடுக்கும், கட்சியின் பொதுச் செயலாளராகத் தனது விசுவாசியையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாக நிற்கும் தோற்றுப்போனவரின் நடிப்பில் உருவாக்கப்பட்டதே இந்த வழக்குகள் என்பதே தமிழ்த் தேசிய விசுவாசிகளின் குற்றச்சாட்டு.

வழக்கு தாக்கல் செய்தவர்களின் இந்த நோக்கம் அல்லது நிபந்தனை இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைக்குக் காற்றுவாக்கில் தெரிவிக்கப்பட்ட போதும், ‘தமிழரசுக் கட்சிக்கு எதிரான ‘உள் வீட்டு’ சூழ்ச்சிகளை முறியடிப்போம். வழக்குகளைச் சந்திக்கத் தயார்’ என கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனும் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனும் உறுதியாக இருப்பதனால். தமது நிபந்தனைகளை ஏற்காது விட்டால் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவும் நீதிமன்ற சவாலுக்குட்படுத்தப்படும் என்ற மறைமுக மிரட்டல்களிலும் ‘தோற்றுப்போன’ தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் ‘உள் வீட்டு’ தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றிப் புரிதல்களும் எமக்குத் தெளிவாக உள்ளன. 75 வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாகக் கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேநேரம், கட்சியின் நிர்வாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில், எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். விசேடமாகக் கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்மானத்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன். விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, அனைத்து தடைகளையும் முறையாகக் கையாண்டு அவற்றைக் கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் எடுத்த வரலாற்றுத் தவறான முடிவினால் அவர் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் பற்ற வைத்த தீ இன்று தான் பற்றி எரிய அண்மையில் இரா.சம்பந்தன் எம். பி. பதவியிலிருந்து விலக வேண்டுமெனக் கோரியது. தற்போது சம்பந்தன் விதைத்த வினையின் விளைவாக அவரின் கட்சியையே அறுக்கத் தொடங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

இதேவேளை, கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது ‘தமிழ் கட்சிகளின் பிளவு ஆபத்தானது.

பிளவுகள் சரி செய்யப்பட்டு அரசியல் பயணங்கள் தொடர வேண்டும். தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். தமிழ் கட்சிகள் பிளவடைந்து முடிந்து தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுத்தப்படுவதை அவர் அறியவில்லை போலும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முச்சந்தியில் நிற்கும் நிலையில், இவ்வாறானதொரு நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கும் வறட்டு கௌரவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டிருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று ஸ்ரீதரன் தலைமையில் தலை நிமிர்ந்து நின்றிருக்கும். இந்தப் பிரச்சினையைச் சுமுக தீர்வு காணாது கௌரவப் பிரச்சினையாக, இரு அணிகளின் பிரச்சினையாக மாற்றினால் தந்தை செல்வா சொன்னதைச் சற்று மாற்றி, ‘இலங்கை தமிழரசுக் கட்சியை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறவே நேரிடும். 

22.02.2024
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சதுரங்க-ஆட்டமாடும்-இலங்கை-தமிழரசுக்-கட்சி/91-333668

 

 

இலங்கை மனிதப் புதைகுழி போர் நடைபெற்ற காலத்தை சேர்ந்தது – அறிக்கை கூறும் அதிர்ச்சித் தகவல்

2 months ago
இலங்கை மனித புதைகுழி விவகாரம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 பிப்ரவரி 2024, 10:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக, இருபதுக்கும் அதிகமான மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது.

இலங்கையில் 56 மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இதுவரை 21 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த பின்னணியில், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இந்த மனிதப் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பான அறிக்கையொன்றை தொல்பொருள் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த அறிக்கை இப்புதைகுழியின் காலப்பகுதி இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியுடன் ஒத்துப் போகின்றதாகச் சொல்கிறது.

 
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி
இலங்கை மனித புதைகுழி விவகாரம்
குடிநீர் குழாய் பதிக்கும்போது வெளிவந்த புதைகுழி

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜுன் மாதம் 29-ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

கொக்குத்தொடுவாய் - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக வீதியோரத்தில் அகழ்ந்த சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் சில அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை நிலையில், குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதையடுத்து, நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஜுலை மாதம் 6-ஆம் தேதி நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 
இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பட மூலாதாரம்,JDS,FOD, CHRD, ITJP

40 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

குறித்த பகுதியில் மனித புதைகுழி காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, புதைகுழி இருப்பதை நீதவான் உறுதிப்படுத்தினார்.

அதையடுத்து, இந்த சம்பவம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு, அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், முதல் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடாத்தப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் ஊடாக 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கை
இலங்கை மனித புதைகுழி விவகாரம்
படக்குறிப்பு,

மன்னார் மனித புதைக்குழி தொடர்பாக அமெரிக்காவில் கார்பன் ஆய்வு செய்யப்பட்ட போது

புதைகுழியின் காலகட்டம் என்ன?

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான இடைகால அறிக்கையை, தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சமர்ப்பித்திருந்தார்.

இந்த இடைகால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனித புதைக்குழி 1994-ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996-ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி வழக்கு மீதான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (வியாழன், பிப்ரவரி 22) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

''ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்தும், பிறிதான எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இன்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில், நீதவான் பிரதீபனினால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கமைவாக எடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, இது 1994-ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996-ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாம் என்று பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,” என்கிறார் அவர்.

 
இலங்கை மனித புதைகுழி விவகாரம்
படக்குறிப்பு,

கே.வி.நிறஞ்சன்

புதைகுழியில் கிடைத்த பொருட்கள் என்ன?

மேலும் பேசிய அவர், “அதனடிப்படையில், இது இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது. அத்துடன், எஞ்சிய மனித எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்கான அநேகமாக மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. அதற்கான பண உதவிகள் அமைச்சகத்தினால் வழங்கப்படும் பட்சத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது," என வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார்.

இந்த மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் வயது, அதன் பால் மற்றும் இறப்புக்கான காரணம் போன்ற அறிக்கைகள் இன்னும் வெளிவராது நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் மேலும் குறிப்பிடுகின்றார்.

''மனித எலும்புகள் தொடர்பாக இந்த அறிக்கை வெளிவரவில்லை. புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட வேறு பொருட்கள் தொடர்பாகவே அறிக்கை வெளிவந்துள்ளது. இனிப்பு பண்டங்களின் கடதாசிகள், துப்பாக்கி தோட்டாக்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் அடிப்படையிலேயே இந்த காலப்பகுதிக்குள் இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவ இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

"முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் இது மாத்திரமே சொல்லப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்றுக்கொள்ள நாம் அனுமதித்துள்ளோம். ஓரிரு தினங்களில் முழமையான அறிக்கை கிடைக்கவாய்ப்புள்ளது," என வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் பிபிசி தமிழுக்கு கூறினார்.

 
இலங்கை மனித புதைகுழி விவகாரம்
‘யுத்தகாலத்து புதைகுழியாக இருக்கலாம்’

பிபிசி தமிழிடம் பேசிய முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, "இந்த மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. அப்போது அகழ்வாய்வு பணிகளில் ஈடுபட்ட தொல்பொருளியியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களின் இடைகால அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

"இடைக்கால அறிக்கையின் படி தொல்பொருளியியல் குழுவினரால் 40 சடலங்கள் ஆராயப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகளின் பிரகாரம், இந்த சடலங்கள் சமய ஆச்சார முறைப்படி அல்லாமல் மிக விரைவாக இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

"அத்துடன், இந்த சடலங்கள் 94-ஆம் ஆண்டுக்கும், 96-ஆம் ஆண்டு காலப்பகுதிக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தினால் இறந்தபோது புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது," என கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கின்றார்.

 
இலங்கை மனித புதைகுழி விவகாரம்
படக்குறிப்பு,

கனகசபாபதி வாசுதேவ

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிடுகின்றார்.

எனினும், இந்த மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இதுவரை நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர், நீதி அமைச்சகத்தின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில், கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிடுகின்றார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
1800-களைச் சேர்ந்த புதைகுழி என்பது சரியா?
இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பிபிசி தமிழிடம் பேசிய ‘காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றிய’த்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ, "நாம் அகழ்ந்த அனைத்து மனித புதைகுழிகளிலும், உதாரணமாக மாத்தளை, மன்னார் உள்ளிட்ட மனித புதைக்குழிகள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற அறிக்கையின் பிரகாரம், இந்த மனித புதைகுழிகள் 1800-களில் இடம்பெற்ற கிளர்ச்சிகள் என்றே இறுதி பெறுபேறாக அமைந்தது," என்றார்.

"ஆனால், அதனை நாம் நம்ப போவதில்லை. எனினும், சட்டத்திற்கு முன்பாக அதனை சவாலுக்கு உட்படுத்தும் போது, அது தொடர்பான விஞ்ஞான ரீதியான சாட்சியங்கள் எப்படி வெளிவரும் என கூற முடியாது. எனினும், நீதிமன்றங்கள் விஞ்ஞான ரீதியான அறிக்கைகளையே ஏற்றுக்கொள்கின்றன," என்றார்.

"குறிப்பாக, மாத்தளை மனித புதைகுழி தொடர்பாக கிடைக்கப் பெற்ற கார்பன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஒன்று. இலங்கை நிபுணர்கள் கூறியது வேறொன்று. அதேபோன்றே, கொக்குத்தொடுவாய் தொடர்பாக உள்ளுர் நிபுணர்கள் என்ன கூறினாலும், சர்வதேச ரீதியில் வேறொரு கருத்து வரக்கூடும்," என்றார்.

மேலும், "ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கு நியாயமான அரசியல் தேவை இல்லையென்றால், இந்த சம்பவங்கள் தொடர்பான உண்மைளை வெளிக்கொணர்வதற்கு எந்தவொரு உடலையும் பழைய உடலாக மாற்ற முடியும்," என்றார்.

 
இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பட மூலாதாரம்,BRITO FERNANDO

படக்குறிப்பு,

பிரிட்டோ பெர்ணான்டோ

மேலும் பேசிய பிரிட்டோ பெர்ணான்டோ, "இந்த விடயத்திற்கு இன்றும் நாங்கள் நிர்கதி நிலையில் உள்ளோம். மக்கள் கருத்துக் கணிப்பொன்றை ஏற்படுத்தி, அதனை சரியான முறையில் செய்வதற்கு நாங்கள் இன்றும் நிர்கதியாகியுள்ளோம். இவ்வாறு கூறப்படுகின்ற கருத்தை எம்மால் நம்ப முடியாதுள்ளது. ஏனென்றால், பழைய அனுபவங்களின் ஊடாக கூறுகின்றேன். இந்த கருத்தை நம்ப முடியாது," என்று பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

போர் நடைபெற்ற பகுதியொன்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழி, போர் இடம்பெற்ற காலப் பகுதிக்கு உரித்துடையது என்ற நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான உள்நாட்டு நிபுணர்களினால் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையாக இது அமைந்துள்ளது என அவர் கூறுகின்றார்.

''காணாமல் போன மக்களின் அறிக்கையொன்றை வழங்குமாறு வவுனியா நீதிமன்றம் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. ஆனால், ராணுவம் இன்றும் அதனை வழங்கவில்லை. குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு காணாமல் போனோர் அலுவலகம் பல கடிதங்களை அனுப்புகின்றது. அதனை கருத்தில் கொள்ளவில்லை.

"அவ்வாறான நாடொன்றிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். எந்த அறிக்கைகளை வழங்கினாலும், அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்கு இதனை கீழ்படிய வைக்க முடியும். அதனால், இது போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு சொந்தமானது என ராஜ் சோமதேவ அவர்கள் கூறுகின்றார்கள் என்றால், அந்த காலப் பகுதியில் அந்த பகுதியை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றால், இனி வேறு என்ன சாட்சி தேவைப்படுகின்றது.

"எனினும், நீதிமன்றத்தில் அதனை உறுதிப்படுத்த முயற்சித்தால், அதனை எம்மால் உறுதிப்படுத்த முடியாது போகும்," என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

 
பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்
இலங்கை மனித புதைகுழி விவகாரம்

பட மூலாதாரம்,MOD, SRI LANKA

படக்குறிப்பு,

நலின் ஹேரத்

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியானது, குறித்த மனித புதைக்குழி காணப்பட்ட கொக்குத்தொடுவாய் நிலப்பரப்பு முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அந்த பிரதேச மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து பிபிசி தமிழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது.

''இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து, பதிலை பின்னர் கூறுகின்றேன்," என, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce9572p748go

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா

2 months ago

Courtesy: Nada. Jathu

 

இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது.

இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும்.

சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார்.

தமிழ் தேசிய அரசியல்

 

அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடையாளப்படுத்தப்பட்டு ஒரு புலமை வளமாக தமிழ் தேசிய அரசியலில் காண்பிக்கப்பட்டார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தான் நேரடியாக அரசியல் ஈடுபட்டு வெற்றியீட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேர்தல் வியாபாரத்தில் உள்நுழைகின்றார்.

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா | Can Sumanthran Save The Tamil Rashid Party

 

இது ஒரு முரண்நிலை அணுகுமுறை என்பதை அன்றைய கால காட்டத்தில் பெருந்தலைவர் என விளிக்கப்படும் சம்பந்தரோ கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கட்டுப்படுத்தும் தேவை அற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

காரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் வீட்டு சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிச்சைக் கோப்பைக்குள் தான் அனைத்து வேட்பாளர்களும் வாக்குக்களை உண்டுகொண்டிருந்தார்கள்.

வெற்றி என்பது உறுதி என்பதைவிட தமிழ் அரசுக்கட்சிக்காரருக்கு தோல்வி மீதான பயமோ அழுத்தமோ உள்ளூர இருக்கவில்லை.

இத்தோல்வி மற்றும் அழுத்தம் என்னவோ அக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருக்கே இருந்தது. அந்த காலகட்டத்தில் இவ்இருவரைத் தவிரவும் வேறுயாரும் சுமந்திரனது செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை.

காரணம் இவர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக தெரியும் வெளியேறவேண்டியவாக்கு நிலை ஒன்று உருவாகுமிடத்து நாடாளுமன்ற உறுப்புரிமையில் தங்களுக்குரிய இடம் அங்கே கிடைக்காது.

சுமந்திரன் அரசியல் வியாபாரம்

 

இவ்வாறானதொரு சூத்திரமே அன்றைய களச்சூழல் ஆகும். அதற்காகவே கஜேந்திரகுமாரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூவினார்களே அன்றி தமிழ் மக்களுக்காக கூவவில்லை என்பதை இன்றுவரைக்குமாக அனுபவச் சூழல் புடம்போட்டு நிற்கின்றது.

புலமையாளன் என்ற கதவில் உள்வந்து போட்டியாளன் ஆக மாறிய சுமந்திரன் அரசியல் வியாபாரத்தில் நுழைந்ததில் இருந்து இந்த கட்சியின் தலைமைப் பதவி என்பதற்கு மிகத் தெளிவாக அண்ணளவாக 10 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டுவிட்டார்.

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா | Can Sumanthran Save The Tamil Rashid Party

 

அதற்கு உகந்தவகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருந்த காலத்திலும் பிற்காலத்திலும் தனக்கு இடையூறுகள் எனக் கருதியவற்றை மிகவும் சாமர்த்தியமாக சம்மந்தர் என்ற நிழலையும் மாவை சேனாதிராஜா என்ற கழன்ற கத்திப்பிடி போன்ற தலைவரையும் அவ்வப்போது தட்டி தட்டி வெட்டுவதுபோல் பாவித்து தெளிவாக முன்னகர்த்தியிருந்தார்.

ஒரு கட்டத்தில் சுமந்திரனது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு பாதிப்பு, கட்சிக்கு பாதிப்பு என்பவற்றைக் கடந்து சுமந்திரனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியாகவே அமைந்திருந்தது.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் ஒரு உட்கட்சி ஜனநாயகமும், தமிழ் தேசிய உணர்வு ரத்தங்களும் கொதிக்காது அப்பா திரைப்படத்தில் வரும் தம்பிராமையா கதாபாத்திரம் போல என்ன நடந்தாலும் நமக்கு என்ன என கடந்து சென்றவர்களுள்தான் இன்றைய அனைவரும் அடங்குகின்றார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் பிரிவு வேட்பாளர்களின் நிலை முதலியவற்றைக் கருத்திற்கொண்டும் தேர்தல் வியாபாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் ஆகவேண்டும் என்ற தனது தீர்மானத்திற்கு சுருதி சேர்க்க வேண்டும் என்றால் சுமந்திரன் நேரடியாக அதிகூடிய வாக்குக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த முடிவானது என்ன தேவைக்காக தேசியப்பட்டியல் ஆசனத்தில் உள்வாங்கப்பட்டாரோ அப்போது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட நிபுணத்துவப் புனிதத்தினை இழந்துவிட்டார்.

அச்சிந்தனையில்தான் கடந்த இரு தேர்தல்களிலும் வேட்பாளர்களும் வடிவகைப்படுகின்றார்கள். வெற்றி வேட்பாளர்களைவிட தோல்வி வேட்பாளர்கள் மிகத் தெளிவாக உள்ளடக்கப்படுகின்றார்கள்.

சித்தாந்த அரசியல்

 

மிகவும் கவலைக்கும் வெட்கத்திற்கும் உரியதொரு விடயம் சமபந்தி,போசனம் என சாதியத்தை ஒறுத்த தமிழ் கட்சிகளும் இயக்கங்களுக்கும் இணைந்து தேர்தலை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்குள் இன்றைய நிலையில் மகாசபைக்கு இத்தனை ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என சாதிய ஒறுப்பால் கௌரவம் பெற்ற சமூகங்களோ மீளவும் இந்த ஒதுக்கத்தினை கோரிப்பெற்றுக்கொள்கின்றார்கள்.

இந்த இடத்தினையும் கடந்த தேர்தலில் மிகச் சிறப்பாக வடிவமைத்து வேட்பாளர்களையும் இட்டு நியாயப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இருவேறு சித்தாந்த அரசியல் தளங்களை அடிப்படையாக கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தான் சுமந்திரனும் சிறீதரனும் செயற்பட்டிருந்தனர்.

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா | Can Sumanthran Save The Tamil Rashid Party

 

இந்த அடிப்படை வேறுபாட்டுக்கு மூலகாரணம் கட்சியின் யாப்பு, நிலைப்பாடு, செயற்பாட்டு ஒழுக்கம் முதலிய விடயங்கள் எவையும் கிஞ்சித்தேனும் இன்றைய கால ஓட்டத்திற்கு பொருத்தமான வகையில் தமிழரசுக் கட்சியிடம் இல்லை.

குறைந்த பட்சம் மரபு ரீதியான செயற்பாடுகளை மதிக்கத் தயாராகவும் இருக்கவில்லை.

அடுத்த தலைவருக்கான தகுதி என தமக்குள் தகுதியேற்றம் செய்யவேண்டிய சூழலில் தான் இரு சித்தாந்த தளங்களும் சுமந்திரனும் சிறீதரனும் ஒன்றாக வாக்கு சேகரிக்கின்றார்கள்.

இருவரும் நேரடியாக வெல்லவைக்கப்படுகின்றார்கள். சுமந்திரன் வென்றாலும் அவரது இறுதி இலக்கு (அல்ரிமேட் கோல்) அடையப்படவில்லை.

இந்த சூழ்நிலையிலேயே உட்கட்சி ஜனநாயகம் என்ற விடய வாதப்பொருள் மிகவும் கலவீனமான யாப்பு உடைய தமிழ் அரசுக் கட்சிக்குள் கருத்தரிக்கின்றது. அது நாளடைவில் வெளிவந்து இயன்றவரை கணிசமான பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

தனியே கிளிநொச்சி மண் என்ற பௌதீக பிரிப்பை முழுக்கட்டுப்பாட்டில் அதாவது தமிழரசுக் கட்சிக்குள் மாற்று அணிகள் இன்றி தனக்குரிய தனி அணியாகவே மாத்திரம் சிறீதரன் பேணிவந்திருந்தார்.

இத் தேர்தல் உத்தியில் ஏற்கனவே கடந்த இரு தேர்தல்களிலும் தக்கவைத்திருந்த தங்களுக்கான பாரம்பரிய வாக்காளர்கள் பலரை மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் இழந்திருந்தார்கள்.

இவற்றில் கணிசமான ஊடுருவல்களும் உடைப்புக்களும் சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவர் வென்றிருந்தார். அவர் உட்கட்சி தேர்தலில் வாக்கு விகிதாசாரத்தில் ஏனையவர்களை விடவும் முன்னேறியிருந்தார்.

இதற்காக பல பதவி அமர்த்துகைகள் மற்றும் கட்சிக்குள் முக்கியத்துவங்கள் முதலியன வழங்கப்பட்டிருந்தன.

உட்கட்சி ஜனநாயகம்

 

இச்சந்தர்ப்பத்தில் நேரடியாக அரசியல் வியாபாரத்தில் தோற்ற அம்பாறை கலையரசன் தேசியப்பட்டியலால் உள்வாங்கப்படுகின்றார். மக்களால் வெல்ல வைக்கப்பட முடியாத ஒருவர் உட்கட்சி ஜனநாயகத்தால் வெல்லவைக்கபடுகின்றார்.

இவ்வாறான தீர்மானம் மிக்க முடிவுகள் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்திய குழுவோ பொதுச் சபையின் நியாயமோ அறியப்பட்ட வரலாறு எட்டவில்லை.

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா | Can Sumanthran Save The Tamil Rashid Party

 

இதனை சவாலுக்கு உட்படுத்த எந்தவொரு கட்சியின் நியாயத்தினை காக்கும் இன்றைய காவலர்களுக்கும் திராணி இருக்கவில்லை, முக்கியமாக அவர்களுக்கு அவ்வாறான தேவையும் அந்தச் சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை.

மிகச் சிறப்பான நிலை தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு உருவாகின்றது. இதனால் தான் இவரை கழன்ற கத்திப்பிடி என விளிக்கவேண்டியதாயிற்று. தனது இறுதி இலக்கினை சுமந்திரன் அடையமுடியாது விட்டதால் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றம் வந்துவிட்டால் தொடர்ந்தும் வாழ்நாள் தலைவராக தமிழரசுக் கட்சிக்கு அமர்ந்துவிடுவாரோ என்றதொரு முன்னேற்பாடுதான் அன்றைய செயலாளருடன் சேர்ந்து சம்பந்தரின் நிழலில் சுமந்திரன் கலையரசனுக்கு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பிச்சை.

அதுவரை தமிழ் தேசிய இரத்தம் கொதித்துக்கொண்டிருந்த கலையரசன் மென்வலு மிதவாத அரசியல் மாத்திரைகளை விழுங்கியதும் தமிழ்த் தேசிய அழுத்தத்தினை சீர்செய்துகொண்டார்.

இறுதி இலக்கில் சுமந்திரன் தெளிவாக பயணித்து அனைத்தினையும் தனக்கு சாதகமாக வடிவமைத்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் புதிய தலைவர் தேர்வு 2024 வருகின்றது. இச் சம்பவங்கள் அனைவரும் அறிந்த விடயங்கள், இதன் தொடர்சியில் தலைவர் பதவி என்பதைத் தாண்டி காத்திரமான நிர்வாக பணிகள் செயலாளருக்கு உரியவை.

அந்த பதவியில் இருப்பவர் சுயாதீனமாக செயற்படுவாராயின் அவர் தான் ஏனையவர்களின் குறிப்பாக தலைவரதும் தலையெழுத்தை தீர்மானிக்கவல்லவராவார். இந்த சூழ்நிலையிலேயே குகதாசன் என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது.

கனேடிய மண்ணில் மிகவும் உன்னத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த குகதாசன் கனேடிய காங்கிரசின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தார். கனேடிய காங்கிரஸ் ஆனது விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2000ம் ஆண்டளவில் கனடாவில் ஒரு இலாகநோக்கற்ற அறக்கட்டளை அமைப்பாக உருவாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் அங்கே ஏற்பட்ட விரிசல்கள் விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாட்டிற்கு இடைவெளியுடையதாக பேணப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகள் காலத்தில் கனேடிய காங்கிரஸ் கனடா மண்ணை மாத்திரமே கவனம்கொண்டது. விடுதலைப்புலிகளின் நீக்கத்திற்கு பின்னராக இலங்கைத் தமிழ் அரசியலில் வடக்கு கிழக்கை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக கனடா காங்கிரஸ் உருவெடுக்க ஆரம்பிக்கின்றது.

மன்னரதும் மந்திரியினதும் முடிவு

 

இதன் வளர்சியை கடந்த மூன்று பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் விளைந்த விளைவுகளை வைத்துக்கொண்டு எடைபோட்டிட முடியும்.

ஒரு வாக்காளரது குழப்பத்திற்கும் துப்பாக்கி சுடுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஜனநாயகத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு எவ்வித ஜனநாயகமும் அற்ற முறையில் பல வியாக்கியானங்கள் கற்பிக்கபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெல்வைக்கப்படுவார்கள்.

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா | Can Sumanthran Save The Tamil Rashid Party

 

ஜனநாயகமான தேர்தல் முறமை, எதேச்சாதிகாரமான வேட்பாளர் தெரிவு இதுதான் கடந்தகால வரலாறு. இது ஒரு செயற்கையான அரசியல் சூழல் உருவாக்கம் ஆகும். அதனை பின்னின்று பணம் என்றதொரு விடயத்தினால் சாதிப்பதில் முன்னிலை வகிப்பது கனடா காங்கிரஸே ஆகும்.

இப்பணத்தில் கையளைந்த வேட்பாளர்கள் தோற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் வாய்திறக்க மாட்டார்கள். இது கட்சித் தலைவரான கழன்ற கத்திப்பிடி மாவை சேனாதிராஜாவுக்கும் பொருத்தமானதாகும். இவ்வாறு கிடக்கும் நிதிகள் எவையும் சட்டரீதியாக கட்சிக்கு கிடைக்கப்பெறுவதில்லை.

அங்கத்துவ கட்டணக் கணக்கினை சீர்செய்வது மாத்திரமே கட்சிப் பொருளாளரது கடமையாக இன்னும் தொடர்கின்றது.

மறுபுறத்தில் இச் செயற்பாடுகளுக்காக இதுவரை கிடைத்த நிதியை எவ்வகையில் செலவு செய்வது எவ்வகையில் அறிக்கைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு நியமமோ நிபந்தனைகளோ கட்சியிடம் இல்லை.

இது மன்னர் காலத்து மன்னரதும் மந்திரியினதும் முடிவே ஆகும். இறுதியில் ஐந்து தானத்திற்கு உட்பட்ட நிலுலையை இன்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கணக்கறிக்கைகளாக சமர்ப்பித்து வருகின்றது 72வருட பாரம்பரிய வரலாற்றை தனக்காக கொண்ட தேசிய தமிழ் கட்சி.

செயலாளருக்கான முதன்மைத் தெரிவுகளாக முன்னின்ற குகதாசன், சிறீநேசன் இருவரும் நேரடியாக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தோற்ற வேட்பாளர்கள்.

குறிப்பாக இச் சந்தர்ப்பத்தில் கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவுபடுத்திக்கொண்டு செல்லது பொருத்தமாக இருக்கும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பதவியை விட்டு நீங்க வேண்டும் என்ற சுமந்திரனது பகிரங்க கோரிக்கை சம்பந்தர் பால் இருந்த தேகாரோக்கிய அனுதாபத்தில் இல்லை, அவ்வாறு இருப்பின் அதனை நேரடியாக சம்பந்தரிடமே சொல்லியிருக்கலாம்.

மாறாக அடுத்த நிலையில் இருக்கும் குகதாசன் பால் இருந்த கரிசனை தான் என்பதை இந்த செயலாளர் முன்மொழிவு மீண்டும் ஒருமுறை இறுதிசெய்துவிட்டது.

இவர்கள் இருவருக்கும் தங்களை வெல்லவைக்கவேண்டிய செயற்பாடுகளுக்காக கட்சிக்குள் காத்திரமான பதவிகள் வேண்டும் என்ற கள யதார்த்தம் மாத்திரமே நம்புகின்றார்கள்.

பின்னர் இவை சமரசம் செய்யப்பட்டு புதிய தலைவரது அறிவித்தலில் தேசிய மாநாட்டிற்கான திகதிகள் வெளிவந்த பின்னர் கட்சியின் இரு அங்கத்தவர்கள் வழக்குகளை தாக்கல் செய்கின்றார்கள். தடையுத்தரவை பெற்றுக்கொள்கின்றார்கள்.

குகதாசனது தெரிவை முன்னகர்த்துவதில் சுமந்திரனால் அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திற்கு மேலதிகமாக குகதாசனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக காத்திரமாக வெளிப்படையாக எதனையும் செய்ய முடியவில்லை.

இணக்கப்பாட்டினை நோக்கிய நகர்வு

திட்டம் 02 உடன் சுமந்திரன் முன்னேறியிருக்கலாம், அது குகதாசனுக்கு தெரிந்தும் இருக்கவில்லை, நம்பிக்கையையும் வளர்க்கவில்லை. காரணம் நேரடிப் போட்டியாளராக இருந்த சிறீநேசனை சுமந்திரனால் அணுக முடியவில்லை.

தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா | Can Sumanthran Save The Tamil Rashid Party

 

சாணக்கியனுக்கும் சிறீநேசனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி காரணமாகவும், சுமந்திரன் கடந்த காலங்களில் சிறீநேசனை சிறந்த உறவுமுறைக்குள் பேணாத காரணத்தினாலும் இதனைச் செய்ய முடியவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவராக செயற்பட்ட சிறீதரன் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டினை நோக்கி நகர்த்தியிருந்தார். இச்சூழலில் குகதாசன் தங்களது கையை மீறி சிறீதரன் பக்கம் சாய்ந்து விட்டாரா? என்பதே இங்கே சுமந்திரன் தரப்பிற்கு இருந்த அழுத்தமாயிற்று.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயக் காலவர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக கட்சியின் கட்டமைப்பு ரீதியாக பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி சார்பாக சுமந்திரனும் முன்னிலையாவதாக அறிவித்திருக்கின்றார். வாதியின் தரப்பில் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியிருக்கின்றார். இரண்டு சட்டவாதிகளினதும் நேரடியாக முன்னிலையாகிய வழக்கு வெற்றி விகிதாசாரத்தில் குருபரனே முன்னிலை வகிக்கின்றார்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு சட்ட நிபுணத்துவ புலமையாளனாக தேசியப்பட்டியல் ஊடாக அரசியலில் நுழைக்கப்பட்ட சுமந்திரன் தமிழ் மக்களது தேசிய பிரச்சினையை கையாளுவதில் தவறு விட்டிருந்தாலும், குறைந்தபட்சம் தான் சார்ந்த தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களில் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் உட்கட்சி ஜனநாயகக் காவலர்களிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவாரா? குறைந்த பட்சம் அதற்கான புலமையேனும் அவரிடம் இருக்கின்றதா? என்பதை எதிர்வரும் நீதிமன்ற நாட்கள்தான் முடிவுசெய்யப்போகின்றன.   

https://tamilwin.com/article/can-sumanthran-save-the-tamil-rashid-party-1708405107

இலங்கை மன்னாரில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை

2 months 1 week ago
இலங்கையில் அதானி நிறுவன திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர முயற்சியா? புதிய சர்ச்சை
இலங்கையில் அதானி நிறுவனம் சர்ச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஷெர்லி உபுல் குமார்
  • பதவி, பிபிசி சிங்கள சேவை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரசு அமைப்புகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகள் அனைத்தும் அதானி நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இலங்கையில் அதானி நிறுவனத்தின் திட்டம் என்ன? ராமர் பாலம் உள்பட பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ள அந்த இடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்? இந்த திட்டத்திற்கு அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

மன்னார் பகுதியின் அமைவிட சிறப்புகள்

உலகிலேயே பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும் முக்கிய எட்டு இடங்களில், தெற்கு ஆசிய மார்க்கத்தின் சொர்க்கமாக இலங்கை விளங்குகின்றது. பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து, சுமார் 30 நாடுகளில் இடம்பெயர்ந்து இந்த பறவைகள் இலங்கைக்கு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பறவைகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான மார்க்கமாக மன்னார் உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தின் ஒரு அங்கமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் கடல் தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். அதற்கேற்ற விசேஷமான ஒரு சூழல் கட்டமைப்பை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. இலங்கை வரலாற்றில் இணைந்ததான பூகோள ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த இடம் காணப்படுகின்றது. அதனால், மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் ஊடாக எழுகின்ற பிரச்னை, பறவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையாது.

ஆனால், அந்த மதிப்பீடுகளை பொருட்படுத்தாமல், புலம்பெயர் பறவைகள் இலங்கைக்குள் வராத காலப் பகுதியில், அரச நிறுவனங்கள் அறிவியல்பூர்வமற்ற சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து, அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு, உத்தேச மன்னார் கற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை வழங்குவதற்கு தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

''மன்னாரில் 10 லட்சம் பறவைகள் தங்குகின்றன"
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம்,GETTY IMAGES

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான அனுமதியை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக மக்கள் கருத்துக் கேட்பு மார்ச் மாதம் 6-ம் தேதி வரை இடம்பெறுகின்றது. எனினும், இவ்வாறு எழுகின்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த நிபுணர் குழு ஆகியன நிராகரித்துள்ளன.

''இலங்கைக்கு வருகைத் தரும் புலம்பெயர் பறவைகளில் 10 லட்சம் வரை பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் மன்னாரில் தங்கிவிடும். எனினும், புலம்பெயர் பறவைகள் இல்லாத காலப் பகுதியில் ஆய்வுகளை நடாத்தி, அதில் புலம்பெயர் பறவைகளுக்கு பிரச்னை கிடையாது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் தொழில்நுட்ப தவறாகும். இரண்டாவது விஷயம் என்னவென்றால், இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான பகல் பொழுதில் நடந்து சென்று தயாரித்துள்ளனர். எனினும், ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் இரவு நேரத்திலேயே பறப்பதாக செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இவ்வாறு பறந்து வரும் பறவை கூட்டத்தில், சில வேளைகளில் இரண்டரை முதல் நான்கு லட்சம் வரையான பறவைகள் காணப்படுகின்றன. அப்படியென்றால், பகல் பொழுதில் வனப் பகுதிகளில் தங்கியிருந்து, இரவு வேளைகளில் பறக்கும் பறவைகள் தொடர்பில் எவ்வாறு கூற முடியும்? என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் சம்பத் சேனவிரத்ன, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

 
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம்,ENVIRONMENTAL IMPACT ASSESSMENT REPORT / CEA

படக்குறிப்பு,

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: பறவைகளுக்கான தாழ்வாரங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

''பறவைகளுக்கு செல்ல பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நகைச்சுவையொன்று இதில் கூறப்பட்டுள்ளது. அதனூடாக செல்ல வேண்டும் என்றால், திருப்புமுனைகளில் பெயர் பலகைகள் இருக்க வேண்டும். அதானியின் வரைபடத்தையும், சுற்றாடல் அதிகார சபையின் வரைபடத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அந்த பாதைக்கு இடையிலும் காற்றாலைகள் காணப்படுகின்றன.

அதானியின் பாதையில் செல்வதற்கு பறவைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எப்படியாவது காற்றாலை திட்டத்தைக் கொண்டு வரும் வகையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது" என அவர் மேலும் கூறுகின்றார்.

பறவைகளின் சொர்க்கமாக காணப்படுகின்ற மன்னார் தீவும், அதனை அண்மித்துள்ள பகுதிகளும் விஞ்ஞான ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்றது. ராமர் பாலம் (ஆதாம் பாலம்) தேசிய பூங்காவாகவும், விடத்தல் தீவு இயற்கை வனப் பகுதியாகவும், வங்காலை புனித பூமியாகவும் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், ராமர் பாலத்தை (ஆதாம் பாலம்) தேசிய பூங்கா பட்டியலிலிருந்து நீக்குவதற்கும், விடத்தல் தீவை இயற்கை வனப் பகுதியிலிருந்து விடுவிப்பதற்கும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்த காற்றாலை திட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது.

 
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம்,ORNITHOLOGY STUDY CIRCLE / UNIVERSITY OF COLOMBO

படக்குறிப்பு,

செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மன்னாரில் பறவைகளின் இடம்பெயர்வு பாதையை அவதானிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதானியின் இந்த திட்டம் என்ன?

உத்தேச மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், புதிதாக 52 காற்று விசையாழிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தம்பவாணி காற்றாலை திட்டத்திற்கு இணையாக மன்னார் தீவில் பெரும்பாலான பகுதிகளில் புதிய காற்றாலை விசையாழிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அறிக்கையினூடாக அறிய முடிகின்றது.

ஆண்டொன்றில் 1048 மணித்தியாலங்களுக்கான ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக ஆண்டொன்றில் 8 லட்சம் டன் கரியமில வாயு உமிழ்வை குறைக்கும் என கூறப்படுகின்றது. இதற்காக ஆண்டொன்றிற்கு 1.8 கோடி ரூபாய் எரிபொருளுக்காக செலவிடப்படவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி வெளியிடப்பட்ட 1852/2 என இலக்கமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிக்கையின் பிரகாரம், மின்உற்பத்தி அபிவிருத்தி பிரதேசத்திற்குள் 202 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மன்னார் மற்றும் புனரீனில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை தொடங்க இலங்கை அரசுடன் அதானி ஒப்பந்தம் செய்துள்ளது.

அரசு ஒழுங்குபடுத்தல் நிறுவனம் திட்ட ஆதரவாளரானது எப்படி?

"இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்த திட்டத்தின் திட்ட முன்மொழிவாளராக செயற்பட்டு வருகின்றது. இது சட்டவிரோதமானது" என கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

''இதில் மூன்று விதமான தவறுகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையை சுற்றாடல் அதிகார சபை தயார் செய்து, அதற்கேற்ற சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும். ஆனால் மாற்று இடத்தை தேர்வு செய்வதனை தவிர்த்து, சுற்றாடல் அதிகார சபை முதலில் தெரிவு செய்ய மன்னாரையே பொய்யான முறையில் பெயரிடுகின்றது.

சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், மாற்று இடம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இரண்டாவது, அதானி நிறுவனத்திற்காக இந்த திட்டத்தை அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தல் நிறுவனமான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையே நிர்வகித்து வருகின்றது. எப்படி அது நடக்க முடியும்.

மூன்றாவது, இந்த இடத்தை முன்மொழிந்தவராக எடுத்துக்கொண்டு, மூன்றாவது நபருக்கு வழங்கினால், அதற்கான முறை என்ன? அப்படியொன்றால், விலை மனு கோரப்பட்டு, தகுதியானவர் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், அதானி முன்னராகவே தெரிவு செய்யப்பட்டு, அதனை அவருக்கு வழங்க முயற்சிப்பார்களாயினும், அது பாரிய முறைகேடாகும்" என கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவிக்கின்றார்.

''சட்டத்தை எப்படி விளக்குவது என தெரியவில்லை"

ஒழுங்குப்படுத்தல் நிறுவனமாக செயற்படுகின்ற அரச நிறுவனமொன்று, திட்டத்தின் முன்மொழிவாளராக செயற்படுகின்றமையின் சட்ட பின்னணி என்னவென்றது தொடர்பில் நாம், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் ரஞ்ஜித் சேபாலவிடம் வினவினோம்.

எனினும், அவர் சட்டத்தின் பின்னணி குறித்து தெளிவூட்டுவதற்கு பதிலாக, முதலீட்டாளருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்தும் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

''சட்டத்தை எப்படி விளக்குவது என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. நாங்கள் திட்ட முன்மொழிவாளர்கள் என விண்ணப்பமொன்றை முன்வைத்தோம். இந்த திட்டம் எங்களுடைய அதிகாரத்தினால் செயற்படுத்தப்படுகின்றது என இதனூடாக குறிப்பிடப்படவில்லை. இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து அங்கீகாரங்களையும் பெற்றுக்கொடுப்பதையே நாம் செய்கின்றோம்.

முதலீட்டாளர்கள் வந்து இதனை செய்வதற்கு இரண்டு மூன்று வருடங்கள் சென்றுவிடும். அப்படியென்றால், முதலீட்டாளர்கள் வருகை தர மாட்டார்கள். முதலீடு செய்ய தயார் என்ற அடிப்படையிலேயே நாம் இதனை செய்கின்றோம். அதில் எமக்கு ஏதேனும் செலவீனங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை நாம் அறவிட்டுக் கொள்வோம். இதுவே எமது கொள்கையாகும்" என அவர் பதிலளித்தார்.

 
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“அந்தச் சூழலை தேவையில்லாமல் மாற்றினால் மன்னாரில் வசிக்கும் சுமார் 70,000 மக்கள் தண்ணீரை இழக்க நேரிடும்"

''காற்றாலைகளில் பறவைகள் மோதுகின்றன"

இந்த திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கையை ரமணி எல்லேபொல தலைமையிலான புத்திஜீவிகள் குழு தயாரித்துள்ளது. பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தேவக்க வீரகோன், மூலிகைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக கலாநிதி ஹிமேஷ் ஜயசிங்க, நீர்நிலைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து டி.ஏ.ஜே.ரண்வல ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்காக பேரை கொண்ட குழுவொன்று ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.

இந்த ஆய்வு குழுவின் பிரதானியாக செயற்பட்ட ரமணி எல்லேபொல, பிபிசி சிங்கள சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

''அதானிக்கு தேவையான திட்டத்திற்கு நாம் அனுமதி வழங்கியதாக கூற முடியாது. சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆராய்ந்து சில காற்றாலை விசையாழிகளை அகற்றியுள்ளோம். சில விசையாழிகள் நிர்மாணிக்கப்பட்ட இடங்களை மாற்றியுள்ளோம்."

இதேவேளை, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை புலம்பெயர் பறவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடாத்தினோம். எனினும், இரவு வேளைகளில் பறவைகள் தொடர்பாக ஆராயவில்லை என, கலாநிதி தேவக்க வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

''இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளமையினால், பறவைகள் வருவது குறைவாக இருக்கும். நாங்கள் பெரியளவிலான தாக்கத்தை இதற்கு செலுத்தவில்லை. நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலும், மாதிரி அறிக்கையின் அடிப்படையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காற்றாலை விசையாழிகளில் பறவைகள் மோதுகின்றன. அதனை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர முடியாது. பறவைகள் மோதுவதை குறைக்கும் வகையிலேயே நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" என கலாநிதி தேவக்க வீரகோன் தெரிவிக்கின்றார்.

 
இலங்கை காற்றாலை திட்டம் - ''அதானியின் பாதையில் செல்ல பறவைகளுக்கு பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும்"

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஏற்கனவே மன்னாரில் இயங்கி வரும் தம்பவானி மின் உற்பத்தி நிலையத்தினால் பறவைகள் இறப்பது முந்தைய மதிப்பீடுகளை விட அதிகமாகும்.

''மன்னாரில் நீர் பிரச்னையை போன்றே, வெள்ள அபாயம் அதிகரிப்பு"

தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை நிர்மாணிக்கும் போது, சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகளின் ஊடாக மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக காணப்படுகின்றது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் விசையாழிகள், கரையோர பகுதியொன்றை அண்மித்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், அதானி நிறுவனத்தின் திட்டத்தினால் மன்னார் தீவு பகுதியில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விசையாழிகள் இயங்கவுள்ளன. அதனால், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது" என சுற்றாடல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

உத்தேச காற்றாலை திட்டத்தின் ஒரு விசையாழியை ஸ்தாபிப்பதற்காக 27 மீட்டர் விட்டத்தை கொண்ட நிலப் பரப்பு தேவைப்படுகின்றது. அத்துடன், ஒவ்வொரு காற்றாலை விசையாழியை சூழவும் 17 மீட்டர் நீளமான பிரவேச மார்க்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வீதிகள் நிர்மாணிக்கப்படுவதால், இயற்கை நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மன்னார் பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலைமை ஏற்படக் கூடும் என, சுற்றாடல் நீதிக்காக நிலையத்தின் மூத்த ஆலோசகர் ஹேமந்த விதானகே தெரிவிக்கின்றார்.

''நாங்கள் முன்னர் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிக்கும் போது, மன்னாரில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அறிந்திருக்கவில்லை. எனினும், வீதிகள் அமைக்கப்பட்டதன் பின்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய 7 அல்லது 8 இடங்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடையாளம் கண்டுள்ளது. மன்னாரின் பல பகுதிகளில் வறட்சியான இடங்கள் காணப்படுகின்றன.

நீர் இருக்கும் இடத்திலிருந்தே மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்கின்றார்கள். எமக்கு தேவையான விதத்தில் சூழலை மாற்றியமைக்க முயற்சித்தால், மன்னாரில் வாழ்கின்ற சுமார் 70,000 பேருக்கு நீர் இல்லாது போகும். அதற்கு மேலதிகமாக காற்று காணப்படுகின்ற இடங்களில் நிழல் காணப்படுவதை உணர முடியும்" என அவர் கூறுகின்றார்.

சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பீடு செய்த அறிக்கையின் ஊடாக அடையாளம் கண்டுள்ள பிரச்னைகளை குறைத்துக்கொள்வதற்கு, அவர்கள் தயாரித்த அறிக்கையிலேயே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவற்றை பதிவிறக்க முடியும்.

இதுதொடர்பான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றால், மார்ச் மாதம் 06ம் தேதிக்கு முன்னர் dg@cea.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக கருத்து களை பகிர்ந்து கொள்ள முடியும்.

https://www.bbc.com/tamil/articles/cl5l0eqw91qo

மறைக்கப்பட்ட சந்திப்பு

2 months 1 week ago

Published By: VISHNU   19 FEB, 2024 | 01:12 AM

image

ஹரிகரன்

அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவர், கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். இது தொடர்பாக உடனடியாகவே யு.எஸ்.எய்ட் இனால் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம், (யு.எஸ்.எய்ட்), இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு அமைப்பு.

1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 பில்லியன் டொலர்களை  இலங்கைக்கு வழங்கியிருப்பதாக 2022 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் யு.எஸ்.எய்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

யு.எஸ்.எய்ட் நிர்வாகியான சமந்தா பவர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், தேசிய பாதுகாப்பு சபையில் அவரது ஆலோசகராக பணியாற்றியவர். மனித உரிமை விவகாரங்களில் அக்கறையும் இறுக்கமான போக்கையும் கொண்டவர்.  ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவராகவும், சமந்தா பவர் பணியாற்றியிருந்தார்.

ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரை யு.எஸ்.எய்ட் நிர்வாகியாக நியமித்திருக்கிறார்.

இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களுக்குப் பின்னால், முக்கிய பங்காற்றியவர் இவர்.

பல முறை இலங்கைக்கும் வந்து சென்றிருக்கிறார். மக்கள் போராட்டங்களினால், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், கடந்த செம்டெம்பர் நடுப்பகுதியில் சமந்தா பவர் இலங்கைக்கு வந்திருந்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருந்த இலங்கைக்கு அவர் வருவதற்கு முன்னரே 60 மில்லியன் டொலர்கள் உதவித் திட்டத்தை அறிவித்திருந்தார்.

இலங்கைக்கு வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பேச்சுக்களை நடத்திய பின்னர் - அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 65 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கும் அவர் முன் வந்தார்.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் அமெரிக்கா அதிக அக்கறையுடன் செயற்படுகிறது.

அவ்வாறான நோக்கத்தை அடைவதற்கான ஒரு கருவியாக, சமந்தா பவர் செயற்பட்டு வருகிறார். அவருக்கும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் நெருங்கிய நட்புறவு காணப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட அவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். இவ்வாறான ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், அதுகுறித்து அவரது அலுவலகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து, இதுவரையில் அந்த உரையாடல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு நாளும் பலருடன் பேசுவார், தொடர்பு கொள்வார். எல்லா உரையாடல்களும் செய்திக் குறிப்புகளாக வெளியிடப்படுவதில்லை. சமந்தா பவருடனான உரையாடலும் அவ்வாறு உதறித் தள்ளக் கூடிய ஒன்றா? 

நிச்சயமாக இல்லை. சமந்தா பவர் உலகின் மிக வலிமையான நாட்டின், சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்துபவர்.

இலங்கைத் தலைவர்கள் பலரை தனிப்பட்ட முறையில் நன்றாக அறிந்தவர் தொடர்புகளை பேணி வருபவர். அவ்வாறான ஒருவருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய மெய்நிகர் சந்திப்பை புறக்கணித்து ஒதுக்க முடியாது.

ஆனால், ஜனாதிபதி செயலகம் இது பற்றி மூச்சு கூட விடவில்லை. அதற்குக் காரணம், இல்லாமல் இல்லை.

ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவிடம், சுக நலம் விசாரிப்பதற்காக சமந்தா பவர் அந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை போன்றவற்றின் மீதான, அமெரிக்க அரசாங்கத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் தான், இந்த மெய் நிகர்  சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்த சந்திப்பின் போது சமந்தா பவர் வெளிப்படுத்திய கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு உவப்பானவை. அதனால்தான் இவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெற்றதாகவே ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

யு.எஸ்.எய்ட் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்று (13) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், நிர்வாகி சமந்தா பவர் உரையாடினார்.

அவர்கள் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடினர். மேலும் கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு யு.எஸ்.எய்ட்  அர்ப்பணிப்புடன் இருப்பதாக சமந்தா பவர் வெளிப்படுத்தினார்.

சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும்  சட்டமியற்றும் செயல்முறை குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது, கருத்து மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்துக்கு  அமெரிக்காவின்  வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் துடிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு போன்றவற்றில், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் சாத்தியமான தாக்கம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார்.”  என்று கூறப்பட்டிருந்தது.

மேன்போக்காக பார்த்தால், இந்த அறிக்கையில் பெரிதாக எந்த விடயமும் இருப்பதாக கண்டறிய முடியாது.

ஆனால் இது முக்கியமானது. இதற்குள் இரண்டு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

ஒன்று - வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கின்ற, நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான அமெரிக்காவின் கரிசனை.

இன்னொன்று -  ஜனநாயக ஆட்சி முறை மற்றும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பான அமெரிக்காவின் கவலை.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்னரே, அதிலுள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதுவரும் பகிரங்கமாக பதிவுகளை இட்டிருந்தார். அரசாங்க தரப்பினருடனான சந்திப்புகளின் போதும், கூறியிருந்தார்.

ஆனாலும் அரசாங்கம் அந்தச் சட்டத்தை விடாப்பிடியாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது.

பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இது,  கருத்து சுதந்திரத்தை பாதிக்க கூடிய விடயங்களை உள்ளடக்கி இருப்பதாகவும், வளர்ந்து வரும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.

அப்போது, அரசாங்கம் அது பற்றி கண்டு கொள்ளவில்லை.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தினால், பெரும்பாலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களின் முதலீடுகளை தவிர்க்கின்ற நிலை உருவாகும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.

சமந்தா பவரும் கூட இந்த எச்சரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வெளியிட்டு இருக்கிறார். அறிக்கையில் இந்த விடயம் மிக நாசூக்காக கையாளப்பட்டிருக்கிறது. அதுதான் இராஜதந்திர அணுகுமுறை.

இறுக்கமான விடயங்களை கூட, இராஜதந்திர மொழிநடையில்,  இலகுவானதாக, நாசுக்காக எடுத்துக் கூறலாம். அதனை சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

சமந்தா பவரின் பணியகம் வெளியிட்ட அறிக்கையும் அவ்வாறான ஒன்று தான். உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 

அவ்வாறான ஒரு பொருளாதார முதலீட்டு வாய்ப்பை இலங்கை இழக்கின்ற நிலைக்கு இந்த சட்டம் காரணமாகப் போகிறது என்பதே அமெரிக்காவின் எச்சரிக்கை.

அடுத்து, இந்த சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிய முறையையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக உயர்நீதிமன்றத்தினால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கையாளப்பட வேண்டிய  மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பலவும், இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை.

இது ஒரு சட்டத்தை உருவாக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு ஆலோசனை கூறுகின்ற உயர்நீதிமன்றத்தின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இதனை முன்னிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையில் குழப்பத்தை உருவாக்கும் - தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஒரு விடயம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு கையாண்ட வழிமுறை போல, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணிப்பதற்கும் இவ்வாறான ஒரு உத்தியை கையாளுகிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் தான், ஜனநாயக ஆட்சி முறை தொடர்பாகவும் சட்டம் இயற்றும் செயல்முறை தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டிய சூழல் சமந்தா பவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று, சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை  பிற்போடுவதற்கு முயற்சிக்கிறார் என்றும், அதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கின்ற முயற்சியில் இறங்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலைப் போன்று. ஜனாதிபதி தேர்தலையும் தடுப்பதற்கு அவர் எந்த வழிமுறைகளையும் கையாளக் கூடும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

என்னதான், ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சார்பாளராக இருந்தாலும், குறுக்கு வழியில் அவர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டு, பதவியில் நீடித்திருப்பதை அமெரிக்கா விரும்பாது.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்றவற்றை அமெரிக்கா வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே, அவற்றின் சமநிலையில் ஏற்படும் தாக்கம் - இலங்கையினதும், பிராந்தியத்தினதும் பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் என்பதற்காகத் தான்.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா முயற்சிக்கிறது. அந்த வேலையே அனுபவசாலியான சமந்தா பவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பு தொடர்பாக அரச தரப்பு காட்டுகின்ற மௌனம், கொடுக்கப்பட்ட அந்த வேலையை சமந்தா பவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதைத் தான் உணர்த்துகிறது.

https://www.virakesari.lk/article/176710

ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்

2 months 1 week ago
ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்

IMG-20230226-WA0011-1024x576.jpg

பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்.

போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இருக்கும். ஆனால் தனது முதலீட்டை விளம்பரப்படுத்துவதற்காக சினிமாத் துறைப் பிரபல்யங்களை கொண்டு வரும்போதுதான் சர்ச்சை எழுகிறது.

கடந்த இரு நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு பிரதேசம்தான் யாழ்ப்பாணம். நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது அவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு போக்கின் தேறிய விளைவு.

அமெரிக்காவில் தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பள்ளிக்கூடங்களைக் கட்டிய மிஷன் தொண்டர்கள்; ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங்கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு.

இம்மாதம் ஆறாந் திகதி உடுவில் மகளிர் கல்லூரியில், அக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 200ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடக்கின.

Harriet_L._Winslow-1-c.jpg

சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் திருமதி.ஹரியற் வின்சிலோ  என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண், தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி அது. யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள். அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார். தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொறுங்கிப்போன போன ஹரியற் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள். தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில்  வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள்போல வாழ்ந்து, தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள்.

மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார். அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு, அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரியும் உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் கட்டினர்.

உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் ராமநாதனின் கல்லூரி கட்டப்பட்டது. அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா ராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில்  அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள்.

IMG-20240214-WA0018-c-1.jpg          உடுவில் மகளிர் கல்லூரியின் முதலாவது பட்டதாரி

இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும், உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள். கல்விப் பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு, போற்றப்பட்ட காலகட்டம் அது.

இப்படிப்பட்ட கல்விச்சாலைகளைக் கட்டும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து நோர்தென்  யூனியையைப் பார்க்க வேண்டும். அந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டிருக்கும் கந்தர் மடம் சந்தியில் இருந்து அரசடிச் சந்தியை நோக்கி வரும் கந்தர் மடம் வீதியில், முன்பு ஒரு சைவப் பிரகாசா வித்தியாசாலை இருந்தது. அங்கே மாணவர்களின் வரவு குறைந்தபடியால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு; பின்னர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது ஏதோ ஒரு அரச கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அச்சிறிய பள்ளிக்கூடத்துக்கு ஈழப்போரில் ஒரு முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு தொடக்கத்தில், உள்ளூராட்சி  சபைத் தேர்தல் நடந்தபொழுது சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு வாக்களிப்புச் சாவடியாக இருந்தது. அத்தேர்தலைப் பகிஷ்கரித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தச் சாவடியில் காவலுக்கு நின்ற படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்பொழுது மாணவர்கள் இல்லை என்பதால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. அது அமைந்திருக்கும் வீதி பலாலி வீதியில் வந்து ஏறும் சந்தியில் நோர்தேன் யூனி கட்டப்பட்டிருக்கிறது.

கனடாவில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர் அதைக் கட்டியிருக்கிறார். தனது தாயகத்தில் அவர் முதலீடு செய்ய விரும்புகிறார். குறிப்பாக அதனைக் கல்வித் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டும். தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய துறைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தில் தங்கியிராத அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் அந்த முதலீட்டை வரவேற்க வேண்டும்.

IMG-20240214-WA0016-c.jpg                                                                                                              இராமநாதன் இணையர்

அந்த முதலீட்டாளரின் மனைவி இந்தியாவின் சினிமாப் பிரபல்யங்களில் ஒருவரான ரம்பா. அதனால் அப்பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த முயன்ற முதலீட்டாளர் தன்னுடைய மனைவியின் துறைசார்ந்து சிந்தித்து விட்டார். தன் மனைவியின் துறை சார்ந்த பிரபல்யங்களை கொண்டு வந்து பெருமெடுப்பில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதன்மூலம் தனது பல்கலைக்கழகத்திற்குப் பொருத்தமான விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதியிருக்கலாம்.

தமிழ் வெகுசனைப் பண்பாட்டில் சினிமாவின் தாக்கம் வலியது. பெருந்தமிழ் பரப்பில், குறிப்பாக தமிழகத்தில், அரசியல் எனப்படுவது ஏதோ ஒரு விகிதமளவுக்கு சினிமாவின் நீட்சியும் அகட்சியும்தான். ஊடகமாகட்டும் பொழுதுபோக்கு ஆகட்டும், எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு. கேபிள் தொலைக்காட்சி எனப்படுவது சுந்தர ராமசாமி கூறுவதுபோல வீட்டுக்கு வந்த திரைப்படம்தான். அது வீட்டில் வரவேற்பறையில் எப்பொழுதும் இருப்பது. எனவே தமிழ்ப் பொது உளவியலின் மீது தமிழ்ச் சினிமாவின் செல்வாக்குப் பெரியது.

தென்னிந்திய வணிக சினிமாவானது மேலோட்டமானது; தமிழ்ப் பொதுப் புத்தியைச் சுரண்டுவது அல்லது அவமதிப்பது; பெண்ணுடலைப் போகப்பொருளாகப் பார்ப்பது. தமிழில் ஜனரஞ்சகமானவற்றுள் பெரும்பாலானவை மேலோட்டமானவை; ஆழமற்றவை; அறிவுக்கு விரோதமானவை. இந்த அடிப்படையில் பார்த்தால் அறிவைக் கட்டியெழுப்பும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துக்கு ஜனரஞ்சகமான விளம்பரஉத்தி ஒன்றைத் தெரிந்தெடுத்த விடயத்தில் அந்த முதலீட்டாளர் தவறிழைத்து விட்டார்.

நிகழ்வில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் மேடையில் பேசுகிறார். தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து போன நாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் கூட்டம் அவருக்கு அடங்கவில்லை. அவருடைய மனைவி ரம்பா பேசுகிறார். கூட்டம் அடங்கவில்லை. போலீஸ் அதிகாரி பேசுகிறார் கூட்டம் அடங்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததன் விளைவு அது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்துக்குள்ள வரையறைகளை உணர்த்திய ஒரு நிகழ்வும் அது.

424779313_810912224385950_21170100510080
426934938_1424740895141467_1094763175333

ஆனால் அந்தக் குழப்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கு விரோதமானது அல்ல. முதலீட்டை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வியாபார உத்தியின் விளைவு அது. மேலும்,ஹரிஹரனின் இசையை பார்வையாளர்கள் அவமதித்ததாகவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தமிழ் முதலீட்டாளர் தமிழ் பொதுப்புத்தியை கையாள்வதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு என்பதனை உணர்த்திய ஒரு குழப்பம் அது. தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களும் தாயகத்தில் உள்ள அரசியல் சமூகமும் இணைந்து ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதை உணர்த்திய ஒரு நிகழ்வு அது.

தாயகத்துக்கு முதலீடுகள் அவசியம். தாயகத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை; அல்லது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இல்லை; அல்லது முன்னேறுவது கடினம் என்று கருதும் ஒரு தொகுதி மக்கள் தாயகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும்  ஒரு காலகட்டம் இது. “இந்த மண் எங்களின் சொந்த மண்”என்று பாடிய ஒரு மக்கள் கூட்டம், அந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தாயகத்தைத் தொழிற் கவர்ச்சி மிக்கதாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகள் அவசியம். ஆனால் அந்த முதலீடுகளை எந்த நோக்கு நிலையில் இருந்து முன்னெடுப்பது என்பதுதான் இங்குள்ள சவால்.

“நாங்கள் தானம் செய்கின்றோம் அல்லது தொண்டு செய்கிறோம்”என்ற நிதி அதிகார மனோநிலையில் இருந்து அல்ல, மாறாக, தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது; அதற்கு வேண்டிய துறைசார் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது தேச நிர்மானத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எப்படி தேச நிர்மானத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்று தாயகத்தில் உள்ள அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும்.

முதலாளிகள், அவர்கள் தமிழர்களோ, சிங்களவர்களோ,வெள்ளைக்காரர்களோ யாராக இருந்தாலும், முதலாளிகள்தான். அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும். முதலாளிகள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை கொழும்புமைய நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுவார். அவர் அப்படித்தான் சிந்திப்பார். ஆனால்,முதலீடுகளை தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டியது தாயகத்தில் உள்ள அரசியல் சமூகத்தின் பொறுப்பு, கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தல்ல; அல்லது தனிய லாப நோக்கு நிலையில் இருந்தல்ல;தேசத்தைக் கடியெப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து முதலீடு செய்யுமாறு,தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களைத் தேச  நிர்மாணத்தின் பங்காளிகளாக்க வேண்டும். பாரதி பாடியது போல “ஆலைகள் செய்வோம்;கல்விச் சாலைகள் செய்வோம்”

https://www.nillanthan.com/6549/

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!

2 months 1 week ago

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை

இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

13ஆவது திருத்தச்சட்டம்

அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

நரேந்திரமோடி வலியுறுத்தல்

இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,

தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு

இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

விசேடமாக, வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

https://ibctamil.com/article/pm-modi-urged-to-formalize-the-india-sl-agreement-1708223045

 தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும்  -பா.உதயன்   

2 months 1 week ago

தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் 
-பா.உதயன்  

ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே  உங்கள் பொக்கற்றை  மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership and planning என்பது தெரிந்து தான் இருக்கவேண்டும் இல்லாவிடில் ஆலோசனைகளை அந்த மக்களிடமோ சிவில் அமைப்புகளிடனோ கூடி கதைத்திருக்க வேண்டும். A vision without a strategy remains an illusion. சரியான திட்டமிடலும் மூலோபாயத் திட்டமும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான பாதையாகும்.

வன்னியிலும் மலையகத்திலும் மனிதர் படும் துன்பம் கண்டும் ஒருவேளை உணவுக்காய் பல சனம் படும் பாடு கண்டும் பள்ளி சென்று படிக்க கூட வழியில்லாமல் பலர் இருக்க யுத்த வடுக்களும் துன்பமும் துயரமும் இன்னும் எம் இனத்தை விட்டு அகலாத போதும் இத்தனை லட்ஷம் பணத்தை இப்படியா தமிழர் கொட்டுவது. நாங்கள் அறிவு சிந்தனை நாகரீகத்தோடு வாழ்ந்த மக்கள் ஆதலால் நாம் இன்று தொலைந்து போன எம் அமைதி வாழ்வையும் சுதந்திரத்தையும் தான் முதலில் தேட வேண்டும். பொருளாதார அவிவிருத்தி மட்டுமே போதும் அரசில் தீர்வும் தேவை இல்லை என்பது தான் இலங்கை அரசின் நிலைப்பாடு. நிரந்தர ஒரு சமாதான தீர்வு இல்லாத எமக்கான பாதுகாப்பு இல்லாத திட்டமிடப்படாத பொருளாதார அபிவிருத்திகள் இப்படியான குழப்பங்கள் பிரச்சினைகளில் தான் முடியும். 

எது எப்படி இருப்பினும் 2009 க்கு பின் ஈழத் தமிழர் மத்தியிலே பல மாற்றங்கள் நடந்திருப்பது அவதானிக்க முடிகிறது. ஒன்றாக கூடி ஒரே தலைமையின் கீழ் இணைந்திருந்த மக்கள் இன்று அந்தத் தலைமை எதுவும் இல்லாமல் சிதறிப் போய் இருக்கிறார்கள். கல்வி கலை ஒழுக்கம் என்று அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் அதேபோலவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கலாச்சார சீரழிவுகளும் போதைப் பொருட்களின் உபயோகமும் என இளைஞர்கள் மத்தியிலே கூடி அங்கு வன்முறைகளாக குழு மோதல்களாக இருந்து வருவதைப் பார்க்கிறீர்கள். ஒரு காலம் கல்வியிலே முன்னேறி இருந்த யாழ்ப்பாணம் இன்று இந்த கலாச்சார சீரழிவுகளினால் மெல்ல சிதைந்து வருவது உண்மைதான். மேய்ப்பவன் இல்லா மந்தைகள் போல சரியான தலைமைகள் இல்லாமல் நாம் எங்கு போவதென்று தெரியாமல் நிற்கிறோம்.

இருந்த போதிலும் இந்த இளையர்களை குறை கூறி என்ன வருவது. இவர்களை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை சரியான வழிகாட்டல் இன்றி இந்த இளைஞர்கள் பிழையான பாதைகளை தெரிவு செய்கின்றனர். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவே நல்லவை கெட்டவை என்ற பக்கங்கள் இருக்கும். குழப்பங்களும் பிரச்சனைகளும் எல்லா உலக சமூகத்திலும் தான் இருக்கின்றன தனியவே தமிழர் சமூகத்தில் மட்டும் இல்லை. நாகரீகமான சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இங்கும் எத்தனையோ குழப்பங்களை கண்டிருக்கிறோம். ஒரு உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறும் பொழுது அங்கு கூடி பல குழப்பங்களை விளைவித்து அடிதடியில் முடிவடைவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அரசியல் பொருளாதார பிரச்சினைகள் என்று இருக்கும் தேசங்களில் இது இன்னும் பிரச்சினையானதாகவே இருக்கும். நாமும் நம் மூதாதையினர் விட்டுச்சென்ற நாகரிகமான பாதையில் சென்று அறமும் தர்மமும் ஒழுக்கமும் தொலையாமல் எங்கள் ஒற்றுமையோடு கூடிய தேசிய உணர்வும் அடையாளமும் தொலையாமல் இருப்போம்.

பா.உதயன்✍️
 

சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

2 months 1 week ago
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

— கருணாகரன் —

நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திருக்கிறார் சிறிதரன். அவர்களும் புதிய தலைவருக்கான வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைப்போல தமிழக முதல்வருக்கும் புதிய தலைவர் என்ற அடிப்படையில் சிறிதரன், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருந்து விடுதலையாகி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உதவும்படி கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இப்படி கட்சிக்கு வெளியே தலைவராகச் செயற்படும் சிறிதரனால், கட்சிக்குள்ளே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் (யாப்பின் பிரகாரமும் நடைமுறையிலும்) கொண்டுவர முடியவில்லை. 

இதற்குப் பிரதான காரணம், செயலாளர் குறித்த பிரச்சினையே. இந்தப் பிரச்சினையை (பிணக்கினை) கையாள்வதில் சிறிதரனுக்குள்ள தடுமாற்றமேயாகும். இதுவே செயலாளர் பிரச்சினை மேலும் நீடித்துச் செல்லக் காரணமாகியுள்ளது. 

தெரிவின் அடிப்படையில் செயலாளராகக் குகதாசனை ஏற்றுத் தன்னுடைய தலைமையில் தேசிய மாநாட்டைக் கூட்ட முற்பட்டிருந்தால் இந்தளவு சிக்கலுக்குள் சிறிதரன் சிக்கியிருக்க மாட்டார். தமிழரசுக் கட்சியும் சீரழிவு நிலைக்குள்ளாகியிருக்காது.

இதனால்தான் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படாமலும் பதவியேற்பு நிகழ்வு நடைபெறாமலும் தள்ளிப்போகின்றன. இவற்றைத் தீர்மானிப்பதில் இன்னும் பழைய தலைவரான மாவை சேனாதிராஜாவின் கரங்களே வலுவானதாக உள்ளன. அதாவது இப்படி இவை தள்ளிப் போவதால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்னும் மாவை சேனாதிராஜாதான் உள்ளார் என்ற ஒரு தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது. அவ்வாறே சத்தியலிங்கமே இன்னும் பதில் செயலாளர் என்றமாதிரியும் தோன்றுகிறது. புதிய செயலாளர் விவகாரம் பற்றிய விடயத்தை சத்தியலிங்கத்தின் வீட்டில் வைத்துப் பேசியது இதற்கொரு உதாரணம். 

சட்டப்படி (யாப்பின்படி) பொதுச்சபையின் வாக்கெடுப்பில் திருகோணமலையைச் சேர்ந்த திரு. குகதாசன் (27.01.2024) தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் கட்சிக்குள் ஒருபிரிவினர் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்தும் வருகின்றனர். செயலாளர் பதவியைக் குறிவைத்திருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனைச் சமாளிப்பதற்கு சிறிதரன் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக வவுனியாவில் கடந்த வாரம் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான சந்திப்பொன்று நடந்தது. அதில் முதலாண்டு குகதாசனும் அடுத்த ஆண்டு ஸ்ரீநேசனும் பதவி வகிப்பது என்று உடன்பாடு காணப்பட்டது. 

 அதற்குப் பின்பும் தமிழரசுக் கட்சிக்கான செயலாளர் யார் என்பது இன்னும் மங்கலான – குழப்பமான நிலையிலேயே உள்ளது. இந்தப் பத்தி எழுதப்படும் 15.02.2024 மாலைவரையில் இந்த நிலைமையே நீடிக்கிறது. மட்டுமல்ல, இப்போது தேசிய மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதி மன்றத்தில் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை குகதாசனை ஏற்றுக் கொள்ள முடியாது. பதிலாக ஸ்ரீநேசனையே செயலாளராக அமர்த்துங்கள் என்று சிறிதரனுக்கு ஸ்ரீநேசனின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக யாப்பை முன்னிறுத்திச் சிறிதரனால் பதிலளித்திருக்க முடியும். அதுதான் சரியானதும் கூட. அப்படிச் செய்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்காது.

இதை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம். ஏ. சுமந்திரன் தெளிவாகக் கூறியிருக்கிறார். 

யாப்பின்படியும் பொதுச்சபை உடன்பாட்டுடனும் பகிரங்க வெளியில் நடந்த விடயங்களை மறுத்துச் செயற்படுவதும் யாப்பை மீற முயற்சிப்பதும் பாரதூரமான விடயங்களை உருவாக்கும் என்று சுமந்திரன் எச்சரித்திருக்கிறார். 

ஆனாலும் சிறிதரனோ இதற்குத் தீர்வு காண முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். மாவை சேனாதிராஜா, சம்மந்தன் என மூத்த தலைவர்களை முன்னிறுத்தி இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்று முயற்சிக்கிறார் போலுள்ளது. இதனால் கட்சிக்குள் குழப்பங்கள் தொடர்கின்றன. சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. 

இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும். 

இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன். 

இப்பொழுதுதான் அவருக்குப் பொறுப்புக் கிடைத்துள்ளது. அதுவும் தலைமைப்பொறுப்பு. அதை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிதரன் தன்னைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். 

சிறிதரன் தலைமைப் பதவிக்குத் தெரிவாகும்போதே பிரச்சினை உருவாகி விட்டது. வழமைக்கு மாறாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, இந்தத் தடவை போட்டியின் மத்தியில் நடைபெற்றது. மட்டுமல்ல, தொடர்ந்து செயலாளர் தெரிவும் போட்டியில்தான் நிகழ்ந்தது. அப்படி நிகழ்ந்த பிறகும் அது தீராப் பிரச்சினையாகத் தொடருகிறது என்றால் சிக்கலின் மத்தியில்தான் சிறிதரனின் தலைமைப் பொறுப்பு உள்ளது. இதற்கு சிறிதரன் கடுமையாக உழைக்க வேண்டும். மிக நிதானமாகச் செயற்பட வேண்டும். தன்னுடைய அணியை மட்டுமல்ல, எதிரணியினரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்வது அவசியம். அவை நீதியான, நேர்மையான முறையில் அமைய வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுவது முக்கியமானது.

ஆனால், சிறிதரனின் குணவியல்பும் அணுகுமுறையும் (Character and attitude) எப்போதும் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஏற்றதல்ல. அவர் எப்போதும் எதையும் தடாலடியாகப் பேசுகின்றவர். அப்படியே செயற்படுகின்றவர். முன் யோசனைகளின்றி வார்த்தைகளை விடுகின்றவர். பின்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அப்படித் தான் சொல்லவே இல்லை என்று மறுப்பவர். பொய்ச் சத்தியம் செய்கின்றாரே என்று சிலரைச் சொல்வார்களே, அப்படியான ஒருவராகவே சிறிதரன் இருந்திருக்கிறார். 

இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, படித்து, பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியபோதும் அவருடன் கூடப்படித்த, இணைந்து பணியாற்றியவர்களில் பாதிக்கு மேற்பட்டோரைக் கையாள முடியாமல் எதிர்நிலைக்குத் தள்ளியிருக்கிறார். ஒட்டுமொத்தமான கிளிநொச்சிச் சமூகத்தை இரண்டாகப் பிளவுறச் செய்தே தன்னுடைய அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறார். அரசியலுக்கு அப்பால் இணைந்து செயற்பட முடியாத ஒரு நிலையை கிளிநொச்சியில் சிறிதரன் உருவாக்கியிருப்பது பகிரங்கமான உண்மை. விவசாய அமைப்புகள், கலை, இலக்கியத் தரப்புகள், கூட்டுறவாளர்கள், கல்விச் சமூகத்தினர் என அனைத்திலும் இந்தப் பிளவைக் காணலாம். 

கிளிநொச்சியில் உள்ள அளவுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள பிற மாவட்டங்களில் இந்த மாதிரிப் பிளவுகளும் மோதல்களும் இல்லை. பலரும் இந்த நிலையைக் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.  

தேர்தல் மேடைகள் தொடக்கம் இலக்கியக் கூட்டங்கள் உட்பட பொது இடங்கள் வரையிலும் பிறரை அவமதித்தும் தூற்றியும் வந்திருக்கிறார் சிறிதரன். அவரை அடியொற்றி அவருடைய அடுத்த நிலையில் உள்ளவர்களும் இதைத் தொடருகின்றனர். இந்தளவுக்கு (இப்படியான ஒரு அரசியலை) வேறு எந்தத் தமிழ் அரசியற் தரப்பினரும் இப்போது செயற்படுவதில்லை. துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் வெளியைப் பிளவுறுத்தி வைத்திருப்பவர்கள் இருவர். ஒருவர் உதயன் பத்திரிகையின் பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சரவணபவன். மற்றவர் சிறிதரன். சரவணபவன் கட்சியிலிலும் அரசியலிலும் மிகப் பின்னடைந்து விட்டார். சிறிதரன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். 

தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தன்னுடைய கட்சிக்குள்ளேயே ஆட்களை நோக்க முடியாது. அப்படிக் கையாளவும் முடியாது. ஆனால் அவருடைய உளம் தியாகி – துரோகி என்ற வகையில்தான் சிந்திக்கிறது. அவருடைய ஆதரவாளர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். இதனால்தான் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகிய பின், 2009 க்கு முன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டதைப்போன்ற ஒரு நிலையை உருவாக்கப் போகிறேன் என்றபோது பலரும் சிரித்தனர். மட்டுமல்ல, இதை மறுதலிப்பதாக, அப்படி ஒற்றுமை வேண்டுமென்றால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் மறுத்துரைத்தனர். இதற்குக் காரணம், கடந்த காலத்தில் இந்தத் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் (துரோகிகள்) என்ற வகையில் சிறிதரன் நோக்கி வேலை செய்ததாகும். 

ஆகவே அவர் வைத்த எல்லா முட்களும் இப்பொழுது காலில் குத்தத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இருந்ததைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொன்னவருக்கு தன்னுடைய கட்சியையே ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை வந்திருக்கிறது. இப்பொழுது கட்சி நீதிமன்றப் படிக்கட்டில்  நிற்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற த்ரில்லர் படத்தைப்போல அடுத்தடுத்த காட்சிகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். அதாவது தமிழரசுக் கட்சி இன்றொரு வேடிக்கைப் பொருளாகி விட்டது. ஆம், புதிய தலைமையின் கீழ் கட்சி இரண்டாகப் பிளவுண்ட நிலையில் சந்திக்கு வந்துள்ளது.

 

 

https://arangamnews.com/?p=10474

சிவில் பரப்பை மூடுவதற்கான திட்டம் துரிதமாகத் தொடர்கிறது

2 months 1 week ago
14 FEB, 2024 | 05:30 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இவ்வருடம் நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டிவருகிறார். கடந்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அதை அவர் வெளிக்காட்டியதாக செய்திகள் கூறின.

மக்களின் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய தேர்தல்களுக்காக காத்திருப்பவர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை நேர்மறையாக நோக்குவார்கள். ஜனாதிபதி பதவி நாட்டின் மிகவும் பலம்பொருந்திய பதவி. சர்வதேச வங்குரோத்து நிலைக்குள் நாடு மூழ்கிக்கிடக்கும் மிகவும் தீர்க்கமான இந்த காலப்பகுதியில்  ஜனாதிபதி நாட்டுக்கு தலைமைதாங்குகின்ற போதிலும், அவருக்கு மக்களின் ஆணை கிடையாது.

அரசாங்கத்தின் அடுத்த இரு மட்டங்களான  மாகாணசபைகளும் உள்ளூராட்சி சபைகளும்  மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதவையாக இருக்கின்றன.    மக்களின் ஆணையின்றி ஆட்சிசெய்வது தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாக இருக்கலாம். ஆனால், அதனால், பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள்  நாளடைவில் கிளர்ச்சியில் இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்து உட்கிடையான ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் பல தசாப்தகாலமாக நீடித்த மூன்று அரசாங்கங்களில்   உறுப்பினராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி.

ஆறு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு 1982  ஆம் ஆண்டில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியபோது ஜனாதிபதி கல்வியமைச்சராக பதவி வகித்தார். 1917 ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதில் இறங்கிய அரசாங்கத்தில் அவர் பிரதமராக இருந்தார். அந்த சீர்திருத்த முயற்சி மாகாணசபைகளை தொடர்ந்து முடக்கநிலையில் வைத்திருக்கிறது.

மீண்டும், 2022 ஆம் ஆண்டில் பணம் இல்லை என்று காரணம் கூறி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக விங்கிரமசிங்க இருக்கிறார்.

சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன "ஒரு நிதியாண்டில் வருவாயையும் செலவினத்தையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. நீண்டகால பட்ஜெட் பற்றாக்குறைகளை கையாளுவதற்கு பொறிமுறைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. அதற்கு மத்தியிலும்   இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

1,000 கோடி என்பது 2022 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அன்று கேட்ட தொகையாகும். இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருந்த நிலையில் அதே தொகை   இரு தேசிய தேர்தல்களையும் நடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் மீட்சி பெற்றவரும் நிலையில் 2022 ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாவை தேடுவதை விடவும் இன்று 2,000 கோடி ரூபாவை தேடுவது சுலபமானதாக இருக்கவேண்டும்.

சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துதல்

தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நீண்டகாலமாக மக்களுக்கு நிராகரிக்கப்பட்டுவந்த பொருளாதாரப் பயன்களை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு பல தசாப்தங்களாக இருபது இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவந்த நிலங்களை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் பல தசாப்தங்களாக கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு ( இதுகாலவரையில் இவர்கள் நிலமற்றவர்களாக இருந்துவருகிறார்கள் )  வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கும் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்கும்  சொந்தமாக நிலங்கள் வழங்கப்படும்.

மக்களுக்கு சொந்தமாக நிலங்கள் வழங்கப்படுவதால் அதில் அவர்கள் முதலீடுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லது பெரியளவில் விவசாயத் தொழில்துறையை முன்னெடுப்பதில் நாட்டம் கொண்டிருக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கு நிலங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், தற்போதைய வறுமைக்கு மத்தியில் அந்த நிலங்களை அவர்கள் மலிவான விலைக்கு விற்றுவிடக்கூடாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நிலங்களை விற்பனை செய்வதற்கு கட்டுபாடுகளை விதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம்.

பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது என்று பெரும்பாக பொருளாதாரத் தரவுகள் காண்பிக்கும் நிலையில்,  வரிகளைக் குறைப்பதற்கான  சாத்தியம் குறித்தும் ஜனாதிபதி பேசிவருகிறார். சனத்தொகையில் வறிய மக்களுக்கு இந்த வரிகள் தாங்கமுடியாத சுமையாக இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரங்களில்  மேம்பாட்டை ஏற்படுத்துவது  தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய நிச்சயமான வழியாகும்.

கடந்த வாரம்   பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ( வரைபடத்தின் பிரகாரம் ) V வடிவிலான பொருளாதார மீட்சி பற்றி குறிப்பிட்டார். வறுமை அதிகரிப்பு, மந்தபோசாக்கு, பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுதல் பற்றி செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்ற எதிர்மறையான தகவல்களை பெற இது உதவும்.

"முன்னென்றும் இல்லாத வேகத்தில் கீழ் நோக்கிச் சென்ற பொருளாதாரம் ரொக்கட் வேகத்தில் மீட்சிபெற்றுவருகிறது.V வடிவிலான இந்த மீட்சி நம்பிக்கையைத் தருகிறது" என்று ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு புறம்பாக அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை குறிப்பாக எதிரணிக் கட்சிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதன் அல்லது ஒடுக்குவதன் மூலமாக பொது விவாதத்தில் தனது கருத்துக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் நாட்டம் காட்டுகிறது. எதிர்க்கருத்துக்களை சட்டவிரோதமாக்குவதற்கும் குற்றமாக்குவதற்கும் புதிய சட்டங்களை அரசாங்கம்  கொண்டுவருகிறது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்  விமர்சனக் குரல்களை மௌனமாக்குவதன் மூலமாக பொது விவாதத்தை அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் மாற்றுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இணையவெளி பாதுகாப்பு சட்டம் அமைந்திருக்கிறது. இந்த சட்டம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இரு கொடூரமான சட்டமூலங்களையும் அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது.  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் பிரதான ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமுலமுமே அவையாகும்.நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த அதே அரசியல் தலைவர்கள் பொதுவெளியில்  விமர்சனங்களை முன்வைப்பதும், மாற்று யோசனைகளை கூறுகின்றதுமான குரல்களை நசுக்க உறுதி பூண்டிருக்கிறார்கள்.

ஏற்றுக்கொள்ளமுடியாத  சட்டம்

1980 ஆண்டின் தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புக்கள் சட்டத்தை சிவில் சமூக அமைப்புக்கள் அவை  செய்கின்ற பணிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தைப் பெறுவதற்கு  பயன்படுத்திவருகின்றன. அந்த சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு  அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது.  அதன் வரைவு இப்போது வெளிவந்து இருக்கிறது. அது சிவில் பரப்புக்கு (Civil Space ) பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்துவரும் பொதுச்சட்ட பாரம்பரியத்தின் பிரகாரம் அமைப்புக்கள் தங்களைப் பதிவுசெய்வதற்கு பலவகையான தெரிவுகள் இருந்தன. சட்ட அந்தஸ்தைப் பெறவேண்டுமானால் அமைப்புக்கள் கம்பனிச் சட்டத்தின் கீழும் தங்களைப் பதிவுசெய்துகொள்ளமுடியும் அல்லது உள்ளூர் மட்டத்தில் அரசாங்கத்தின் மாவட்ட செயலகங்களில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம்.

தற்போது கூட அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு வரும் நிதி மத்திய வங்கியின் உகந்த கவனிப்புடன் கூடிய வங்கிகளின் ஊடாகவே வருகிறது. வழங்குநர்களின்  கணக்காய்வுக்கும் அந்த நிதி உட்படுத்தப்படுகிறது. தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் பதவுசெய்துகொள்ளாத அமைப்புக்கள் ஏனைய அரச நிறுவனங்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

உத்தேச புதிய சட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களை (அவை பெரும்பாக நிதி அமைப்புக்களாக இருந்தாலென்ன நம்பிக்கை நிதியங்களாக இருப்பதாலென்ன அல்லது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டவையாக இருந்தாலென்ன) ஒரே இடத்தில் பதிவுசெய்ய அது நிர்ப்பந்திக்கிறது.

புதிய சட்டத்தின் பிரகாரம் சிவில் அமைப்புக்கள் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் தங்களைப் பதிவுசெய்யவேண்டும். இந்த செயலகம் தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பதிவு மற்றும் மேற்பார்வைச் செயன்முறை ஊடாக சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கிறது.

சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பொலிஸ் முற்றுகைகளுக்கும் கைதுகளுக்கும் வழிவகுத்திருக்கும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தற்போது தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்துக்குள்ளாகியிருக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழேயே பொலிஸ் இருக்கிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகம் அமைந்திருக்கும் இடம் சிவில் அமைப்புக்களை சட்டம் ஒழுங்கு கட்டமைப்புக்குள் வைத்து அரசாங்கம் நோக்குகிறது என்ற  எதிர்மறையான செய்தியையே கொடுக்கிறது. கொடூரமான புதிய சடடம் சிவில் அமைப்புக்கள் குற்றவியல் வழக்கு தொடுப்புக்களுக்கும் தண்டனைக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கும்." அடிப்படை கலாசார விழுமியங்களுக்கு " எதிராகச் செயற்படுவதாகக் கூறி சிவில் அமைப்புக்களை இடைநிறுத்தவும் மூடிவிடவும் முடியும்.

இந்த கட்டுபாட்டின் பிரகாரம் மதசார்பற்ற அரசுக்கு கோரிக்கை விடுவதையோ, தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையோ அல்லது கருக்கலைப்புக்கான உரிமைக்காக வாதிடுவதையோ அடிப்படைக் கலாசார விழுமியங்களுக்கு எதிரான செயல்கள் என கருதமுடியும். தங்களை எதிர்ப்பவர்களுக்கு அல்லது தங்களது வழிக்கு வராதவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு அரசாங்கங்கள் சட்டங்களைப் பயன்படுத்திவந்திருக்கின்ற பாணியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது உத்தேச சட்டம் மிகவும் ஆபத்தானதாகும்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்து முன்னைய அரசாங்கம் இதே போன்ற சட்டம் ஒன்றை 2018 ஆம் ஆண்டில்  கொண்டுவந்தது. அந்த நேரத்தில் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுனங்கள் செயலகம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் இருந்தது. அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட சிவில் சமூகத் தலைவர்கள் குழுவொன்று அன்றைய பிரதமர் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தங்களது வேண்டுகோளை முன்வைத்தனர்.

சில நாட்களுக்குள்ளாகவே அந்த சட்டவரைவு வாபஸ்பெறப்பட்டது. சிவில் சமூகத்துக்கான கட்டமைப்பு ஒன்று தொடர்பில் சொந்த யோசனைகளின் அடிப்படையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தன்னைச் சந்தித்த சிவில் சமூகத் தலைவர்களிடமே விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

பரந்தளவில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளுடன் இரு வருட கலந்தாலோசனைகளுக்கு பிறகு தன்னார்வத் துறையினருக்கான சட்டக் கட்டமைப்புை ஒன்று தொடர்பில் வழிகாட்டல்கள்  வகுக்கப்பட்டன. அவை ஒரு வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டன.  ஆனால் அவற்றின் உள்ளடக்கமோ அல்லது உணர்வோ தற்போதைய சட்டவரைவில் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது சந்தித்துப் பேசக்கூடியதாக இருந்ததைப் போன்று தற்போதும் ஜனாதிபதியாக அவரைச் சந்தித்து அதே விடயத்தை பேசுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளிப்படுத்திய நல்லெண்ண அணுகுமுறையையே அவர் தற்போதும் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாட்டுக்காக கடைப்பிடிக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/176379

அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றுவோம் - ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர்

2 months 1 week ago
11 FEB, 2024 | 07:22 PM
image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி  

க்கிய நூற்றாண்டு முன்னணி  அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம்.  எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை  பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே   நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர்  பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். 

பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை  பலப்படுத்த வேண்டும்.  13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம்.  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை.  அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.  எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு  செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.  

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.   செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது  என்ற அமைப்பின் ஊடாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? 

பதில் நான் உயர்தரம் கற்றதன் பின்னர்  புலமை பரிசில் பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்றேன்.  அங்கு சர்வதேச தொடர்புகள் தொடர்பாக  கற்றேன்.  அதன் பின்னர்  இலங்கைக்கு திரும்பி இலங்கை  ஐக்கியமடைகிறது என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

கேள்வி : இந்த அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்?  அதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 

பதில் 2006 ஆம் ஆண்டு இதனை நாங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம்.  2008 இல் இதனை இலாப  நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்தோம்.   சகலரும் ஒன்றிணைந்த இலங்கை அடையாளம் என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும்.  அனைத்து இலங்கையர்களும் பிரதான பிரஜைகள்,  அனைவருக்கும் நீதி,    சமத்துவம்,  மற்றும் செழிப்பான நாடு என்பனவே எமது  பிரதான நோக்கங்களாக இருக்கின்றன.  எமது முன்னைய சந்ததியினருக்கு இதனை செய்ய முடியவில்லை.  நாம் அதனை செய்ய முயற்சிக்கிறோம்.  நீதி கிடைக்கின்ற,  சகலரும் வாழ முடியுமான ஒரு நாட்டை உருவாக்குவது எமது நோக்கமாகும்.  எமது தாத்தா பாட்டியை எம்மால் மாற்ற முடியாது.  ஆனால் எமது பிள்ளைகளை மாற்ற முடியும்.  நாம் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இலங்கையில் இளைஞர் யுவதிகளில்  70 வீதமானோர்க்கு தமது இனம் தமது மதங்களுக்கு அப்பால் நண்பர்கள் இல்லை என்பதாகும்.  நண்பர்கள் இல்லாவிடின்  வெறுப்பு ஏற்படுவது இலகுவாகும்.  பிரச்சினைகள் இலகுவாகவே ஏற்படும்.  புரிந்துணர்வு இருக்காது.  தொடர்பாடலே அனைத்தையும் தீர்மானிக்கிறது.    இலங்கையில் 10,400 பாடசாலைகள் இருக்கின்றன.  அவற்றில் 112 பாடசாலைகள் மட்டுமே இரண்டு மொழிகளையும் மூலமாக கொண்டவையாக இருக்கின்றன.  மறுபுறம் அரசியல்வாதிகள் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி ஊழல்களை செய்து மக்களை அச்சுறுத்தி தலைவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர்.  உங்களுக்கு யாரும் இல்லை,  நாங்கள் மட்டுமே இருக்கின்றோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர்.  

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.    ஆனால் இன்று இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிகிறது. 

கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்?  அவர்கள் என்ன செய்கின்றார்கள்? 

பதில் எமது அமைப்பில் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.  இலங்கை முழுவதும் 9 மாகாணங்களில்  9 அலுவலகங்கள் இருக்கின்றன.  இதில் முக்கியமாக எதிர்கால தலைவர்கள் மாநாடு என்ற கருப்பொருளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கிறோம்.   இதற்காக ஐந்துநாட்கள் முகாம் நடத்தி நாட்டின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுகிறோம்.  அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்துகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 500 பாடசாலைகளில் இவ்வாறு வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில்  தகவல் தொழில்நுட்பம்  தொடர்பாக பாடநெறிகள் காணப்படுகின்றன.  திறமை விருத்தி,  தொழில் முயற்சியாண்மை,  உள்ளிட்ட பல பாடத்திட்டங்கள் அங்கே காணப்படுகின்றன.  இளைஞர்கள்,  யுவதிகள் அங்கு சென்று தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.  இளைஞர்கள் யுவதிகளால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.  இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்,  இந்த நாட்டுக்காக ஏதாவது  செய்யும் முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறோம்.  ஆனால் இதற்கு சகலரும் ஒற்றுமைப்பட வேண்டும்.  ஏனையவர்களின் துயரத்தை புரிந்து கொள்வது அவசியம்.  எமக்கு மட்டுமே துயரம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மற்றவர்களின் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.  எமது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல்,  நீதியை நோக்கி பயணித்தல்,  என்பனவாகும். 

அதாவது கொரோனா வராமல் இருப்பதற்கு தடுப்பூசி  ஏற்றுவதைப் போன்று இனவாதம் வராமல் இருப்பதற்கான தத்துவங்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறோம்.  நாங்கள் சகல பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம்.  அதேபோன்று ஐந்தாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரையான மாணவர்களுக்காக சிறுவர் நிகழ்ச்சித்திட்டங்களையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 

கேள்வி : நீங்கள் சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்பு பட்டிருக்கின்றீர்கள். இதனை எவ்வாறு முன்னெடுக்கின்றீர்கள் ? 

பதில் எமது இந்த முயற்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் எமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பொதுநலவாய நாடுகள் அமைப்பில்  உலகில் செயற்படுகின்ற  25 கீழ்மட்ட நிறுவனங்களில் ஒன்றாக நாம் அங்கீகரிக்கப்பட்டோம்.  உலகில் இருக்கின்ற சிறந்த இளைஞர்களை  கொண்டியங்கும் எட்டு நிறுவனங்களில் ஒன்ற ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.   இதனைப் பார்த்த பல சர்வதேச நிறுவனங்கள் எமது இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன.   இளைஞர்களை ஒருமுகப்படுத்திய,  நீதியை நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற,   நாட்டை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்பாட்டை ஏனைய பல நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.  அதனடிப்படையில் கொங்கோ நாட்டில் இருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து எமது இந்த செயற்பாடு தொடர்பாக கற்றறிந்து  அங்கு இதனை ஆரம்பித்து செயல்படுத்துகின்றனர்.  நானும் யாழ்ப்பாணம் மாத்தறை மாவட்டங்களில் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கொங்கோ நாட்டுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கற்றறிந்தோம்.   கென்யா உகண்டா போன்ற நாடுகளிலும் எமது அமைப்பை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  13 நாடுகளில் எமது இந்த செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகிறது.  

கேள்வி : சரி இந்த பின்னணியில் ஏன் அரசியல் கட்சி ஒன்றை அதாவது நூற்றாண்டு ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள் ?  

பதில் நாம் இந்த எமது இலங்கை ஐக்கியப்படுகிறது என்ற செயற்பாட்டை  முன்னெடுத்து செல்லும்போது   பல அரசியல் கட்சிகள் இனவாதத்தைக் கொண்டு அரசியல் செய்வதை நாம் அவதானித்தோம்.  நாம் இனவாதத்தை போக்கி நல்லிணக்கத்தை மேற்கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு மாறாக செயல்படும் போது இதனை மாற்றுவது கடினமானதாக எமக்கு தெரிந்தது.  எனவே நாம் எமது அரசியல் கல்வியகம்  ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து முதலில் நூற்றாண்டு கல்வியாகத்தை ஆரம்பித்தோம். 

அதாவது இலங்கை சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளாகும் போது 2048  இல் நாம் எவ்வாறான இலக்குகளை அடைய வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம்.  பத்து இலக்குகளை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.  அதில் ஆறு கொள்கை திட்டங்களை நாங்கள் இளைஞர்  யுவதிகளுக்கு கற்பிக்கின்றோம்.  அரசியல்,சுகாதாரம்,  கல்வி,  விவசாயம் மற்றும்   நல்லாட்சி மற்றும் சகலரும் இணைந்த முன்னெடுப்பு  ஆகிய விடயங்களை கற்பிக்கின்றோம்.  மூன்று மாதங்கள்  அவர்களுக்கு திறமைகளை நாம் கற்பிப்போம்.   பின்னர் ஏனைய பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படும்.  அப்போது அந்த பாடத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட இலங்கை முழுவதும் இருந்து 1000 இளைஞர்கள்  விண்ணப்பித்தனர்.  இதனூடாக இளைஞர்கள் மிகவும்  ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.  ஆனால் அவ்வாறு எமது கல்வியகத்தில் கல்விகற்ற எதிர்கால தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளில் இடம் கிடைக்கவில்லை.  எனவே தான் நாம் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது.  நாம் அதனை ஆரம்பித்தோம். 

அதனூடாக  எதிர்கால தலைவர்கள் என்ற பாடத்திட்டத்தை கற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும் நாடாமல் எமது கட்சியிலே சேர்ந்து போட்டியிட முடியும். 

கேள்வி : அப்படியானால் அடுத்துவரும்  அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவீர்களா?

பதில் அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம்.  நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம்.  எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை  பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே   நாங்கள் வேட்புமனு கொடுப்போம்.   ஒவ்வொரு வருடமும் பிரகடனம் செய்ய வேண்டும்.  இப்போது பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 15 பேர் அளவிலேயே   சொத்துப்பிரகடனம் செய்துள்ளனர்.  

35 வீதமான வேட்பாளர்கள் 35 வயதுக்கு கீழ் பட்டவர்கள்.   தற்போது பாராளுமன்றத்தில் 35 வயதுக்குட்பட்ட 11 பேர் மட்டுமே இருக்கின்றனர்.  அதில் 10 பேர் அரசியல் ரீதியான குடும்பங்களை பின்னணியாக கொண்டவர்கள்.  இலங்கையில் 1931 ஆம் ஆண்டு  ஐந்து வீத பெண் பிரதிநிதித்துவம்  இருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் பாராளுமன்றத்தில் ஐந்து வீத  பெண்களே இருக்கின்றனர்.  எனவே எமது கட்சியில் வேட்பாளர்களில் 50 வீதமானோர்  பெண்கள்.

கேள்வி : உங்கள் கட்சியின் கட்டமைப்பு என்ன?

பதில் எமது கட்சிக்கு ஒரு நிறைவேற்று குழு  உள்ளது. அதன் ஊடாக தலைவர் நியமிக்கப்படுவார்.  தற்போது இந்த வருடத்துக்கு  நானே எமது கட்சியின் தலைவராக இருக்கின்றேன்.  அதேபோன்று சிரேஷ்ட பிரஜைகள் எமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.  சகல மாகாணங்களில் இருந்தும்  நிறைவேற்று குழுவில் உறுப்பினர்கள்  உள்ளனர். 

கேள்வி : உங்கள் கட்சியின்  இலக்கு என்ன? 

பதில் சுதந்திரம் பெற்ற நூறு வருடங்கள் நிறைவடையும்போது இலங்கையின்   அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம். நிச்சயமாக எதிர்கால சந்ததியினருடன் இணைந்து அதனை செய்ய முடியும்.  ஊழலற்ற பொருளாதார சுபிட்சமான நாட்டை உருவாக்க வேண்டும்.  மக்கள் வறுமையாக இருப்பதே அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைகிறது.  எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற கல்விமான்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.  

கேள்வி : இலங்கையில் நீங்கள் அடையாளம் காண்கின்ற இளைஞர் யுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன? 

பதில் முக்கியமான சில பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். முதலாவதாக எமது கல்வி திட்டத்தை குறிப்பிட வேண்டும். எமது கல்வி திட்டத்தில் மேலே பயணிப்பதற்கு ஏணி இருக்கின்றது. ஆனால் ஏனியை பிடித்து எங்கே செல்வது என்பது இங்கு தெளிவாக இல்லை.  அடுத்ததாக வேலையின்மை காணப்படுகிறது.  தமது திறமைக்கேற்ற தொழிலை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது இலங்கையில் இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும்.  அதனால் திறமையானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.  சிறுபான்மை இளைஞர்களுக்கு  தமது அடையாளம் தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகிறது.  அவர்களுக்கு   நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இல்லை.  தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பவில்லை.  வடக்கில் உள்ள எனது சகோதர சகோதரிகளின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.  அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டி இருக்கிறது.  அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  அங்கே ஆற்றுப்படுத்தல் இல்லை. இறந்தவர்களை  நினைவு கூருவதற்கு  உரிமை இருக்க வேண்டும்.

கேள்வி : தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கு உங்கள் திட்டங்கள் என்ன? 

பதில் இலங்கையில் இருந்த சென்ற 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.  அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பமாக இருக்கின்றனர்.  ஆனால் இங்குள்ள நிலைமை அவர்களை தடுக்கிறது.  அந்த மூன்று மில்லியன் மக்கள் தமது நாடுகளின் பொருளாதாரத்துக்காக கிட்டத்தட்ட 200 பில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்கின்றனர்.  இலங்கையின் பொருளாதாரம் வெறுமனே 80 பில்லியன் டொலர்களாகும்.  இங்கு தொழில்சார் தன்மை வெளிப்படைத்தன்மை ஊழலற்ற தன்மை இருந்தால் நிச்சயமாக அந்த முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.  தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இளைஞர்கள் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர்.  அதனை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எம்மால் முடியும். அடுத்ததாக வர்த்தகங்களை செய்வதற்கான இலகு தன்மை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.  அந்தநிலையை உறுதிப்படுத்தினால் இங்கு அதிகளவு வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்ய வருவார்கள்.  சகல விடயங்களும் டிஜிட்டல் மையமாக வேண்டும்.  அனைத்து முதலீடுகளும் கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மையத்தில் இடம் பெற வேண்டும்.  இவர்களுக்கு எரிபொருள் க்யூ ஆர் கோட்டா முறையை    செய்வதற்கே மூன்று மாதங்கள்  சென்றன.  இந்தியா இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக சந்தர்ப்பங்களை நாங்கள் பெற வேண்டும்.   சுற்றுலாத்துறை ஊடாக  வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களே உச்சபட்சமாக இலங்கை பெற்றிருக்கின்றது.    நான்கு வருடங்களில் அதனை 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும்.  சிறுவர்களை இலக்கு வைத்த சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  இலங்கையை சர்வதேச மாநாட்டு தலமாக உருவாக்க முடியும்.  அதுமட்டுமின்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை நேசிக்கின்ற நாடுகள் இருக்கின்றன.   எம்மால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

கேள்வி : இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் நீண்ட காலமாக தமக்கான அரசியல் தீர்வை கோரி வருகின்றனர்.  அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை  பலப்படுத்த வேண்டும்.  13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம்.  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை.  அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.  எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு  செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  மத்திய அரசாங்கம் தலைமைத்துவம் வழங்க முடியும்.  ஆனால் அதிகாரங்களை பரவலாக்கும் போது அங்கு வெளிப்படை தன்மையும் போட்டித் தன்மையும் உருவாகின்றன.  ஆனால் இங்கு சகலதையும் மத்திய அரசாங்கம் வழங்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  ஒரு மாகாணம்  தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கான உரிமையை வழங்க வேண்டும்.  பொருளாதாரம்  சட்டம் ஒழுங்கு காணி உரிமை போன்ற விடயங்கள் வழங்கப்படுவது  அவசியமாகும்.    கொழும்பில் இருக்கின்ற மாணவிக்கும் மொனராகலையில் வளர்கின்ற மாணவிக்கும் இடையிலான திறமைகளில் வித்தியாசம் இருக்கும்.  

மேலும்  இங்கு சகலர் மத்தியிலும் அவநம்பிக்கை காணப்படுகிறது.  முதலில் மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.  

கேள்வி : இந்த நாட்டில் ஒரு   அரசியல்  கலாசார மாற்றத்தை செய்ய முடியும் என்று எப்படி நீங்கள் இவ்வளவு திடமாக நம்புகிறீர்கள் 

பதில் உலகில் இதற்கு முன்னர் பல நாடுகள் மாறி இருக்கின்றன.  எம்மைவிட யுத்தம் இருந்த எம்மைவிட வறுமையாக இருந்த நாடுகள் இன்று முன்னேறி இருக்கின்றன.  சிங்கப்பூர் வியட்நாம் இந்தோனேசியா மலேசியா    ருவாண்டா கானா போன்றவற்றை குறிப்பிடலாம்.  நாம் இன்றும் எமது இனம் எமது மதம் தொடர்பாகவே சிந்திக்கின்றோம். அந்த செயற்பாடு மாறவேண்டும்  திருடர்கள் எமது வீட்டை உடைத்து திருடிவிட்டு செல்லலாம்.   அதனை நாம் தடுக்க வேண்டும்.   மாறாக நாம் வீட்டை விட்டு ஓடிவிட முடியாது.  தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள்  பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.    அதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கின்றது.   ஆற்றுப்படுத்தல் இல்லை.     1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடந்ததை  இன்னும் தமிழ் மக்கள் மறக்காமல் இருக்கலாம்.  நான் அண்மையில் கனடாவுக்கு சென்றபோது அங்கு ஒருவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் தற்போது நடைபெற்றது போன்று என்னுடன் பேசினார்.    அந்த வேதனையை யாரும் ஆற்றுப்படுத்த இன்னும் முயற்சிக்கவில்லை என்பதே இங்கே குறைபாடாக இருக்கிறது.  குறைந்தபட்சம்  அரசாங்கம் இதுவரை மன்னிப்பு கேட்டிருக்கின்றதா ? 

கேள்வி : உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில்... 

பதில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.  காணாமல் போனோர்  தொடர்பான அலுவலகம் செயற்படுவது அவசியம்.  உலகத்திற்காக அல்ல,  எமக்காக  அதனை செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/176128

என்று தணியும் வெளிநாட்டு மோகம்

2 months 2 weeks ago

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை -இனவழிப்புக் காரணமாக உயிர்பிழைக்கும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு தமிழர்கள் ஓடித் தப்பினர். காலாட்டத்தில் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது ஒரு கட்டாயக் கடமையாகவே மாறி விட்டது. போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவுடனேயே இளைஞர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் துரதிர்ஷ்டமான சூழலே இங்கு அதிகம் நிலவுகின்றது.

2011 -2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகளவானோர் சட்டவிரோதமான வழியில், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என நம்ப வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் கடலில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர். வெகு சிலரே அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த தீவுகளை சென்றடைந்தனர். அவர்களில் மிகச் சிலருக்கே அவுஸ்திரேலியாவுக்கு நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. பல இலட்சங்களைச் செலவு செய்து ஏமாந்தவர்களே அதிகம். அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோதமாக தனது நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதை பரப்புரைப்படுத்தினாலும் எம்மவர்களின் வெளிநாட்டு ஆசை முன்பாக அவை ஏறவில்லை. 2016-2020 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்குச் சென்ற எம்மவர்கள் பலர் அங்கு உயிரிழந்த சோகங்கள் அரங்கேறியிருந்தன. எல் லைப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல நாள் நடைபயணம், ஆபத்தான வகைகளில் கனரக வாகனங்களில் அடைத்துச் செல்லப்படுதல் என ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு முயன்று உயிர் பிரிந்த சோகங்கள் தான் நடந்தன. இப்போது கனடாவுக்குச் செல்லுதல் என்ற அடிப்படையில் பலரும் தங்கள் புலம்பெயர்தலை ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகச் செல்கின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும், வெளிநாட்டுக் கலாசாரம் எங்கள் மனதில் இன்னமும் ஆழமாக வேரூன்றியிருப்பதுவும் தற்போதைய புலம்பெயர்தலுக்குக் காரணமாக இருக்கின்றது.

இதை வைத்து பணம் உழைக்கும் கூட்டமும் இருந்து கொண்டிருக்கின்றது. எத்தனை தடவைகள் ஏமாந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கிலுள்ள காவல் நிலையங்களில், அண்மைக்காலமாகப் பதிவாகும் முறைப்பாடுகளில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சம்பவமாக, வெளிநாட்டுக்குச் செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தைச் செலுத்தி ஏமாறுவதே இருக்கின்றது. இது தொடர்பில் காவல்துறையினர் மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் திரும்பத் திரும்ப ஏமாந்து கொண்டேயிருக்கின்றனர். எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது வெளிநாட்டு மோகத்துக்காக பல இலட்சங்களை இழக்கத் தயாராக இருக்கும் மக்கள் அதை இங்கேயே முதலீடாக்கி வருமானமீட்டத் தயாரில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதில்லை. வெறுமனே அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது மாத்திரம் அவர்களது பொறுப்பு அல்ல. எந்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்றனரோ, அவர்கள் வழி தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவர்களது கடமையே.

 

https://newuthayan.com/article/என்று_தணியும்_வெளிநாட்டு_மோகம்

இன்னுமொரு வாய்ப்பந்தல்

2 months 2 weeks ago

அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது.

பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொடங்கும் போது நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டதுடன், ஆட்சியாளர்கள் கடன்களை வாங்கி வாங்கியே குவித்து இந்த நாட்டு மக்களையும் அதற்குப் பழக்கப்படுத்தி விட்டனர் என்றெல்லாம் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக சில திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி ஊடாக அந்தியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடுகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டி உற்பத்தி என்று சில விடயங்களைப் பட்டியலிட்டிருந்தார். இவையெல்லாவற்றையும் முன்னெடுப்பதற்கு இருக்கும் தடங்கல்களை மேலோட்டமாகவே கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார். அதை ஆழ அகலமாக அலசி ஆராய்வதற்கு அவர் விரும்பவில்லை. அதை வேண்டுமென்றே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்திருந்தார்.

இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில், அப்படியொன்று இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பில் அரச தலைவர் ரணில் மூச்சே விடவில்லை. அதற்குத் தீர்வை எட்டாமல் இந்த நாடு பொருளாதாரத்தில் மீட்சியடைவது என்பது சாத்தியமேயில்லாத விடயம். அரச தலைவர் ரணில் தனது கொள்கை விளக்கவுரையில், மாகாணங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் மேலும் சில அதிகாரங்கள் வழங்குவதன் பொருளாதார ரீதியில் உறுதிப்பாடுடையவை அவற்றை மாற்ற முடியும் என்று கூறுகிறார்.

ஆனால் இப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வுக்கான யோசனை எதையும் முன்வைக்கவில்லை. கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான காணப்படும் என்று கூறி எதுவுமே நடக்காததால் இம்முறை அது தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் விட்டிருக்க கூடும் ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணாமல் பொருளாதார மேம்பாடு என்பதை எட்டவே முடியாது என்பதை மிக நீண்ட பழுத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க உணர்ந்திருந்தும், அதை வெளிக்காட்டாமல் வெறுமனே பூசி மெழுகுவது பொருந்தப்பாடானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற உளரீதியான விருப்பு இருக்குமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை - தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த அரசாங்கம், அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு இந்த நாடு பாதுகாப்பில்லை 'என்பதை உணருவதையும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம், அதற்கான காரணங்களைத் தீர்ப்பதற்கு மாத்திரம் தயங்குகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் வழங்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கின்றமை தெளிவாகவே தெரிகின்றது. அரச தலைவர் ரணிலும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதைத் தான் அவரது உரை பறைசாற்றியிருக்கின்றது.

https://newuthayan.com/article/இன்னுமொரு_வாய்ப்பந்தல்

சுமந்திரனின்  சுயபரிசோதனை

2 months 2 weeks ago
சுமந்திரனின்  சுயபரிசோதனை
சுமந்திரனின்  சுயபரிசோதனை 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

    மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு  முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

  தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில்  தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார்.

  கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு  எதிர்ப்பு  என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; 

  ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. 

 ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில்  சந்திப்புக்களையும்  நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு  முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது.

  ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.  ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம்.

  “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன்.

  “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து  கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப்  பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள்,  பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது  வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த  தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

  “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும்  இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும்  அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை  நாங்கள் தொடர்ந்து செய்வோம். 

  “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு  குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.”

  இறுதியாக கட்சியின்  பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார்.

   தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர்  உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு  கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார்.

  அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம்  தமிழ்த் தேசிய அரசியலுக்கு  அவர் வழங்கிய முக்கியமான  பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது.

  அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. 

   அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது  காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது.

  இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும்.

  தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும்  சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார்.

  ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன்  வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப்  பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. 

  கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை.

  இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

  திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும்  விளக்கிக்கூறுவார்  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது.

  அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

  ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை  என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார்.

  தமிழர்களின் நிலம், மொழி மற்றும்  கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

  மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை  ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

  எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட  கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை  உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார்.

 நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

  உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய  பொறுப்பு இருக்கிறது.

  தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்.

  கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும்.

  வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். 

  ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல்  கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும்.

  மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன்  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ  நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது)  நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய  சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட  வேண்டும். 

  ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது.
 

https://arangamnews.com/?p=10465

Checked
Sun, 04/28/2024 - 19:13
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed