Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
அமெரிக்காவைச் சுற்றி சோவியத் யூனியனின் தளங்கள் இருந்திருக்கலாம், பையன் சார். அங்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நோக்கி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இதை உலகெங்கும் தளங்கள் அமைத்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ரஷ்யா மிகவும் பின்தங்கிவிட்டது. அமெரிக்கா நன்றாக முன்சென்றுவிட்டது. அன்றைய கியூபா, இன்றைய வெனிசுவேலா என்று மிகக் குறைந்த ஆதரவு நாடுகளே ரஷ்யாவிற்கு இந்தப் பக்கங்களில் உண்டு. இன்று வெனிசுவேலாவில் கூட ரஷ்யாவால் தளம் அமைக்க முடியாத நிலை. ஆனால் மிக வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தளங்களின் தேவையை ஓரளவு குறைக்கும். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்காவின் தளங்கள் பல இன்றும் இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் சில மாநிலங்கள் பெரியவை, பொருளாதாரத்திலும் மேம்பட்டவை. சில மாநிலங்கள் மிகச் சிறியவை, வசதி வாய்ப்புகளும் குறைந்தவை. பெரும் மாநிலங்கள் சிறிய மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதுவே சரியான நடைமுறையும் கூட. ஆனால் சில பெரிய மாநிலங்களில் சிலர் இது போன்ற காரணங்களால் பிரிந்து போகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
ஈரானில் பெண்கள் மீது மத ஆட்சியாளர்களினால் பல கொடூரங்கள் நடத்தபடுகின்றது தான் ஆனால் நான் அதை முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரி வீர பையன் இங்கே சொன்னதை வைத்து அது அவர்களின் கலாச்சாரம் என்று நினைத்துவிட்டேன் 😒

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
விளங்காத மாதிரி எழுதினாலும், அதற்குள்ளும் சில புரட்டுகளை உள்ளடக்கி விடுகிறீர்கள்😂. ஈரான் ஷாவிடம் இருந்து இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம் விழுவதற்கு முன்னர், Atom for Peace என்ற திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நுட்பங்களில் உதவியது அமெரிக்கா. அந்தக் காலத்தில் ஜேர்மன் நிறுவனமான சீமன்ஸ் கட்ட ஆரம்பித்த அணு சக்தி ஆலை 79 புரட்சியோடு இடையில் நின்று போக, பின்னர் ரஷ்யா தான் அந்த அணு சக்தி ஆலையைப் பூரணப் படுத்தி இயக்க உதவியது. இது தான் "சமாதான நோக்கங்களுக்காக யுரேனியம் செறிவாக்கும்😎" ஈரானின் ஒரேயொரு அணு சக்தி ஆலை. இன்று வரை, இந்த ஒரேயொரு அணு சக்தி ஆலைக்கான யுரேனியம் கூட ரஷ்யாவில் இருந்து தான் வருகிறது . ஈரான் "சமாதானத்திற்காக செறிவாக்கும் யுரேனியம்" இந்த அணு சக்தி ஆலையில் பயன்படுவதாக ஈரானே எங்கும் சொல்லவில்லை. அணு ஆயுதம் செய்வதற்காக மைய நீக்க சுழலிகளை ஈரானே தயாரிக்க உதவியது பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி காதிர் கான். இவரும் தானே சுயம்புவாக விஞ்ஞானியாகவில்லை, ஐரோப்பாவில் மேற்கு நாட்டு உதவித் தொகையில் அணு விஞ்ஞானம் படித்து பின் அதையே உலக அழிவு நாடும் வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு பணத்திற்காக தொழில் நுட்பத்தை விற்றார். எனவே, ஈரானின் அணுவாயுத தொழில் நுட்பம் அவர்களே கட்டியமைத்ததல்ல.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
பையன் சார், இங்கு நாங்கள் எழுதுவது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. உங்கள் மீது எனக்கிருக்கும் வாஞ்சையில் ஒரு துளியேனும் இந்தக் கருத்துகளால் குறைந்து விடப்போவதில்லை. ரஷ்யா மக்கள் மீதும், அந்தப் பெரும் தேசத்தின் மீதும், அது ஒரு காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோட்பாடுகளின் மீதும் மற்றும் அதன் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் மதிப்பும் விருப்பும் எனக்கு உள்ளது. ஊரில் வாழ்ந்த பதின்ம வயதுகளில் கூட ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் சோவியத் யூனியனே பதக்கப்பட்டியலில் முதலாவதாக வர வேண்டும் என்று உளமார விரும்பியும் இருக்கின்றேன். ஆனால் அந்த சோவியத் யூனியன் அல்ல இன்றிருக்கும் ரஷ்யா. அதிபர் புடின் அந்த தேசத்தையே அழித்துவிட்டார். மேலும் கோட்பாடுகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று கிடைத்த வாழ்க்கை மிக நல்லாகவே கற்றுக் கொடுத்தும் விட்டது. அன்றிருந்த சோவியத் யூனியனைப் பற்றியே இன்று சில கேள்விகள் உள்ளே இருக்கின்றன.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
இது நான் வ‌ர‌லாற்டில் ப‌டித்து தெரிந்து கொண்ட‌து Soviet Union அமெரிக்கா மீது அணுகுண்டு போட‌ , கியூபா நாட்டில் கொண்டு வ‌ந்து வைத்து இருந்த‌வையாம் பிற‌க்கு அமெரிக்கா க‌ண்டு பிடிக்க‌ Soviet Union அமெரிக்கா மீது போடாம‌ பின் வாங்கி விட்டின‌ம் , அன்று இவ‌ர்க‌ள் அமெரிக்கா மீது போட்டு இருந்தால் இப்ப‌ அமெரிக்கா என்ர‌ நாடு உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தில் இருந்து இருக்குமோ தெரியாது , அமெரிக்காவில் கூட‌ பிரிவினைவாத‌ம் இருக்கு த‌னி நாடு கோரிக்கைய‌ கூட‌ ஏதோ ஒரு மானில‌ம் கேட்ட‌தாக‌வும் அத‌ற்க்கு வ‌ஸ்சின்ட‌னில் இருப்ப‌வ‌ர்க‌ள் ச‌ம்ம‌திக்க‌ வில்லை என‌ வ‌ர‌லாற்றில் தெரிந்து கொண்டேன் , இந்த‌ பிரிவினை வாத‌ விடைய‌த்தில் எவ‌ள‌வு உண்மை பொய் இருக்கு என்று என‌க்கு தெரியாது அண்ணா...................2012க‌ளில் இதை ப‌ற்றி தெரிந்து கொண்டேன்.............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
பெரிய‌ப்பு நான் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு இழைக்க‌ப் ப‌டும் கொடுமைக‌ளை ப‌ற்றி தான் யாழில் அதிக‌ம் எழுதி இருக்கிறேன் , என‌க்கு ஹ‌மாஸ் வ‌ர‌லாறுக‌ள் ப‌டிக்க‌ ஆர்வ‌ம் இல்லை , நானும் சிறுவ‌ய‌தில் குண்டு ச‌த்த‌த்தை கேட்டு தான் வ‌ள‌ந்தேன்................போர் என்று வ‌ந்தால் அழிவுக‌ள் எப்ப‌டி இருக்கும் என‌ 2009ம் ஆண்டே பார்த்து விட்டோம்...................ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மாய் வாழ‌னும் அதுவே என‌து விருப்ப‌ம்👍...............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
பையன் சார், ஈரானின் நட்பு நாடுகள் இதுவரை ஈரானுக்கு ஏதாவது உதவி செய்திருக்கின்றார்களா என்று பார்த்தால், சீனா, ரஷ்யா உட்பட, எந்த உதவிகளும் செய்யவில்லை என்றே தெரிகின்றது. பாகிஸ்தானுக்கு சீனா செய்த உதவிகளைக் கூட சீனா ஈரானுக்கு செய்யவில்லை. இத்தனைக்கும் ஈரானிடமிருந்து எவ்வளவு எண்ணெயை மிக மலிவு விலையில் சீனா வாங்கிக் கொண்டிருக்கின்றது. கைமாறாக பிஎல் - 15 ரகம் போன்ற ஏவுகணைகளையும், அதை சுமந்து செல்லும் சில யுத்த விமானங்களையும் சீனா ஈரானுக்கு கொடுத்திருக்ககலாம் தானே. இவற்றை வைத்துத்தானே பாகிஸ்தான் இந்திய விமானங்களை தாக்கியது. இந்தியாவுக்கு அடிப்பது என்றால் கொடுப்பார்கள், ஆனால் அமெரிக்காவிற்கு அடிப்பது என்றால் கொடுக்காமல் பின்வாங்குகின்றார்களா? இஸ்ரேலும், அமெரிக்காவும் வேறு வேறல்ல. இரு நாடுகளும் ஒன்றே தான். இதில் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளி என்று என்றும் சொல்லப்போவதில்லை. அணு குண்டை அமெரிக்கா முதலில் செய்தது அமெரிக்காவினது மட்டும் இல்லை, உலகின் அதிர்ஷ்டமும் கூட. இதையே அன்று ஜேர்மன் அல்லது ஜப்பான் செய்திருந்தால், இன்று நாலு கண்டங்களின் பெரும் பகுதிகள் பூமியில் மனிதர்கள் இல்லாத பாலைநிலங்களாக இருந்திருக்கும். அதன் பின்னர் அணு ஆயுதங்கள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் பல் நாடுகளால் சுயமாக தயாரிக்கப்பட்டன. அமெரிக்காவால் எவரையும் அன்று தடைசெய்ய முடியாது. சில நாடுகளிடம் இருப்பதும் நன்மைக்கே. ஒற்றை ஏகாதிபத்தியம் என்ற நிலையை அது இல்லாமல் செய்கின்றது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
உக்கிரேன் ப‌டை வீர‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து நேட்டோ ப‌டைக‌ளும் ர‌ஸ்சியா கூட‌ போரிட்ட‌வை அந்த‌ காணொளிய‌ நான் பார்த்தேன் அவ‌ர்க‌ளின் முக‌ம் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து அந்த‌ காணொளியில் , ஏதும் சாதிக்க‌ முடிந்த‌தா இதுவ‌ரை , பைட‌ன் ஆட்சியில் அமெரிக்கா உக்கிரேனுக்கு அள்ளி கொடுத்த‌ ப‌ண‌ம் ஆயுத‌ங்க‌ள் எவ‌ள‌வு ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் உக்கிரேனுக்கு க‌ண்ண‌ மூடி கொண்டு உத‌வின‌வை , ஏதும் ப‌ல‌ன் கிடைச்சு இருக்கா இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில்................வ‌ட‌கொரியா ர‌ஸ்சியாவுக்கு உத‌வின‌தை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதுறீங்க‌ள் , அப்ப‌ அமெரிக்கா தொட‌ர்ந்து உக்கிரேனுக்கு உத‌வின‌தை ஆதார‌த்தோடு எழுதினால் உங்க‌ள் க‌ருத்துட‌ன் சிறு க‌ருத்து முர‌ன் வ‌ரும் குரு👍................... ஆயுத‌ம் சொந்த‌மாக‌ த‌யாரிக்கும் நாடு ர‌ஸ்சியா ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளிட‌ம் ஆயுத‌ பிச்சை கேட்க்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் அவைக்கு இல்லையென‌ நான் நான் ந‌ம்புகிறேன் .......................ர‌ஸ்சியா அன்மையில் க‌ண்டு பிடித்த‌ புது ஆயுத‌ம் ராட‌ரில் சிக்காம‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் நாட்டின் மீது விழும் என‌ புட்டின் அறிவித்தார் , அந்த‌ ஆயுத‌த்தின் பெய‌ர் வ‌டிவாய் தெரியாது......................... அந்த‌ ஆயுத‌த்தை உக்ரேன் மேல் தான் முத‌ல் முறை பாவிச்ச‌வை , ஒரு வ‌ட்டின‌ அம‌த்த‌ ச‌ரியான‌ இட‌த்தில் போய் வெடிக்கும் நீங்க‌ள் ர‌ஸ்சியாவை ப‌ற்றி கீழ் த‌ன‌மாக‌ எழுதுவ‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை , ர‌ஸ்சியா ஒரு நாட்டுட‌ன் போராட‌ வில்லை , ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து அவ‌ர்க‌ள் உக்கிரேனுக்கு கொடுக்கும் ஆயுத‌ங்க‌ள் தொழில்நுட்ப‌ க‌ருவிக‌ளை எதிர்த்து தான் போர் செய்யின‌ம் , உக்கிரேன‌ ர‌ஸ்சிய‌ அழிக்க‌ நினைச்சா அவ‌ங்க‌ளுக்கு நீண்ட‌ நேர‌ம் ஆகாது , சீக்கிர‌ம் முடித்து இருப்பாங்க‌ள் , அதுவ‌ல்ல‌ அவ‌ர்க‌ளின் நோக்க‌ம்...................புட்டின் த‌ன‌து இல‌க்கை அடையும் வ‌ரை ஓய‌ மாட்டார்.................... எங்க‌ள‌து க‌ருத்து மோத‌ல் யாழுட‌ன் முடிந்து விடும் , யாழுக்கு வெளியில் நீங்க‌ள் என‌க்கு ந‌ல்ல‌ ஒரு அண்ணா ம‌ற்றும் குரு , உங்க‌ளிட‌ம் இருந்து சில‌ ந‌ல்ல‌துக‌ளை க‌ற்று இருக்கிறேன் அத‌னால் தான் உங்க‌ளை குரு என‌ பாச‌த்தோடு அழைக்கிறேன் , உங்க‌ளுக்கு புரிந்து இருக்கும் என‌ ந‌ம்புகிறேன்🙏🥰👍..............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
இஸ்ரேலில் இரண்டு மில்லியன் ரஷ்யமொழி பேசும் யூதர்கள் இருப்பதால் ஈரானுக்கான உதவிகள் வெறும் வாய்வார்த்தைகளாகத்தான் புட்டினிடம் இருந்து வரும்.! ஈரானின் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுவது காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனியர்களும்தான்.. பையன் ஹமாஸுக்கு இஸ்ரேல் செப்பல் அடி கொடுப்பதை வரவேற்றமாதிரி நினைவு😃

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
இரானில் 1980களில், சாவொறுப்பிற்கு முன்னர் கன்னிப்பெண்கள் வன்புணரப்பட்டனராம்!! ஏனென்றால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி கன்னிப்பெண்கள் சுவர்க்கம் காணக்கூடாதாம்! என்ன கொடுமை சாமியிது!! The Jerusalem Post | JPost.com'I wed Iranian girls before execution' | The Jerusalem PostIranian militiaman tells 'Post' shocking story of ruthlessness, rape. https://iranwire.com/en/society/60172/

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
குரு👍................. உள்ள‌டி வேலைக‌ள் பேச்சுக்க‌ள் ந‌ம‌து காதுக்கு உட‌ன‌ வ‌ராது...............செய‌லில் நட‌க்கும் போது தான் தெரியும் எல்லாம் , நாம‌ யாழில் சும்மா விவாதிச்சுட்டு இருக்கிறோம் , ஈரானின் ந‌ட்ப்பு நாடுக‌ள் ஈரானுக்கு இதுவ‌ரை ர‌க‌சிய‌மாக‌ என்ன‌ சொன்னார்க‌ள் என்று கூட‌த் தெரியாது அமெரிக்காவை ப‌ல‌ முஸ்லிம் நாடுக‌ளுக்கு பிடிக்காது , ச‌வுதி , க‌ட்டார் போன்ற‌ நாடுக‌ள் ஏன் அமெரிக்கா கூட‌ ப‌கையை வ‌ள‌ப்பான் என அமெரிக்காவுக்கு அவ‌ர்க‌ள் முற்றிலுமாய் அடிமைக‌லாக‌ போய் விட்டின‌ம்........................ ஜ‌ நா ச‌பைய‌ அமெரிக்கா எப்ப‌வாவ‌து ம‌திச்சு இருக்கா குரு உங்க‌ளிட‌ம் ஒரே ஒரு கேள்வி , ப‌ல‌ நாடுக‌ள் சேர்ந்து நெத்த‌னியாகு போர் குற்ற‌வாளி என‌ சொன்ன‌ பின்பும் , அந்த‌ கொடுர‌னை அமெரிக்கா தொட‌ர்ந்து காப்பாற்றுவ‌து ஏன் ச‌தாமுக்கு தூக்கு நெத்த‌னியாவுக்கு புக‌ழ் ம‌ரியாதை , இதா அமெரிக்காவின் ந‌டு நிலை இத‌னால் தான் ப‌ல‌ர் அமெரிக்காவை வெறுக்க‌ கார‌ண‌ம் ஹிரின்லாந் பிர‌ச்ச‌னையின் போது டென்மார்க் இன‌த்த‌வ‌ர்க‌ள் அமெரிக்காவின் உண்மை முக‌த்தை தெரிந்து கொண்டு விட்டின‌ம் , அவ‌னை ப‌கைக்க‌ கூடாது என்று அர‌வ‌னைச்சு போகின‌ம் இப்ப‌..................பிரிடிஷ் கார‌னின் அராஜகத்தை விட‌ அமெரிக்க‌னின் அட்டூழிய‌ம் பொறுத்துக் கொள்ள‌ முடிய‌ வில்லை..................... அமெரிக்கா ந‌டுநிலையா செய‌ல் ப‌ட்டு இருந்தால் இந்த‌ உல‌க‌ம் ஒற்றுமையாக‌ இருந்து இருக்கும் ம‌த‌ம் இன‌ம் என‌ பிரிவு வேறு பாடுக‌ள் பெரிசா வ‌ந்து இருக்காது........................ ஜ‌ப்பான் மீது அணுகுண்டை போட்ட‌ போது அவ‌ள‌வு அழிவை த‌ரும் ஆயுத‌த்தை ஏன் ப‌ல‌ ஆயிர‌ க‌ண‌க்கில் அமெரிக்கா மீண்டும் செய்த‌து , ஒட்டு மொத்த‌ உல‌க‌த்தை கூட்டி இந்த‌ ஆயுத‌ம் நாங்க‌ள் தொட்டு யாரும் இதை செய்ய‌வும் கூடாது வைச்சு இருக்க‌வும் கூடாது என‌ முடிவு எடுத்து இருந்தால் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ந்து இருக்காது👍............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
ஈரானுக்கு அதன் ஆதரவு நாடுகளிலிருந்து ஒரு உதவி தன்னும் கிடைக்கப் போவதில்லை. ஏதோ எங்கள் வீட்டில் சுட்ட தோசையை தட்டில் மூடிக் கொண்டு போய் அடுத்த வீட்டிற்கு கொடுப்பது போல, ரஷ்யாவிலிருந்தும், வட கொரியாவிலிருந்தும் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கொடுப்போம் என்று கேலிக்கூத்தான வாய்மொழி ஆதரவு மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கும். ஒரு நாடு அணு ஆயுதத்தை தன் நாட்டில் வைத்திருப்பதற்கே அந்த நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு அணு ஆயுத திட்டமும், பராமரிப்பு சேவைகளும் இருக்கவேண்டும். ஈரானிடம் அப்படியான வசதிகள் எதுவும் இல்லை. மேலதிகமாக ரஷ்யாவே வட கொரியாவிடமிருந்து வட கொரிய வீரர்களையும், ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்றரை வருடங்களாக சேத்துக்குள் விட்ட காலை வெளியே எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் ரஷ்ய அதிபர் புடின். டாலர் கடைகளில் எண்ணெய் வாங்குவது போல ஈரானிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் மலிவு விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் சீனா கூட எந்த விதமான தளபாட உதவிகளும் செய்யப்போவதில்லை. அடுத்ததாக எண்ணெய்க்கு என்ன செய்யலாம் என்பதே அதன் ஒரே ஒரு யோசனை. ஈரான் அழிந்து போகாமல் தப்பிக்க, தற்காலிகமாகவேனும் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதே இன்றுள்ள நல்ல ஒரு தெரிவு. அழிந்து போன தேசங்கள் பல அப்படியே அழிந்த நிலையிலேயே இன்னும் இருக்கின்றன. இல்லாவிட்டால் ஈரானும் அந்த வகையில் இன்னொன்று ஆகிவிடும். அதன் வான்வெளியில் சுத்தமாகவே எந்தக் கட்டுப்பாடும் அற்ற ஈரான் மிகவும் ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அந்த நாட்டை பிடிக்கின்றேன், இந்த நாட்டை பிடிக்கின்றேன் என்று சொல்லியபடியே இருக்கின்றார். இது அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுக்கப் போகின்றது. அடுத்ததாக கிரீன்லாந்த் கதையை ஆரம்பிக்கப் போகின்றார்.................... பொதுவாகவே ட்ரம்ப் எதைச் செய்ய முயன்றாலும் இங்கு சில மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் காட்டப்படும். இதில் முன்னிலை வகிக்கும் மாநிலம் கலிஃபோனியா. ஆனால் ஈரான் மீதான தாக்குதலுக்கு வழமையான அளவிற்கு எதிப்புகள் இங்கு காட்டப்படவில்லை. ஒரு விதமான ஆதரவுப் போக்கே இருக்கின்றது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
இதே கருத்து தான் எனதும். ஈரான் அரசு பலவீனமாக்கப்பட்டு முல்லாக்களின் அதிகாரம் முற்று முழுதாக செயலிழக்க செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருக்கும் அணு சக்தி ஆற்றல் பூரணமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
qatar ம‌ட்டும் இல்லை அண்ணா bahrain அமெரிக்கா த‌ள‌ங்க‌ள் மீதும் தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ப் ப‌ட்டு இருக்கு..................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌த்தை பார்க்க‌ போன‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் ஈரான் முத‌ல் முறை இஸ்ரேல் மேல் தாக்கின‌ ரோன்க‌ள் மாதிரி தெரியுது , என‌து பார்வையில் அப்ப‌டி தான் தெரியுது , ச‌ரி பிழை தெரியாது அண்ணா👍..................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
கட்டாரில் அமைந்திருக்கும் அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் ஆனால் அதனை தாம் குறுக்கிட்டு முறியடித்துவிட்டதாகவும் கட்டார் அரசு கூறியிருக்கிறது. மேலும் இத்தளத்தில் பாதுகாப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் அனைத்தையும் ஆனி 19 ஆம் திகதியே அமெரிக்கா அப்புறப்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று கட்டாரிய அரசு கூறுகிறது. ஈரானின் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட செய்மதிப்படத்தில் விமானங்கள் ஏதுமற்ற வெற்று படைத்தளமும், ஓடுபாதையும் காணப்படுகின்றன. ஈரான் தாக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அமெரிக்கத் துருப்புக்கள் தற்காப்பு நிலையெடுத்திருந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியிருக்கிறது. தனது அணுவாயுத நிலைகள் மீது கொட்டப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமனான ஏவுகணைகளை தான் ஏவியதாக ஈரான் கூறியிருக்கிறது. ஆக, முல்லாக்கள் அடிவாங்கியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
மத்தியகிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஊக்குவித்து, ஆயுதமும் பயிற்சியும் வழங்கிவரும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் பிடியிலிருந்து ஈரான் மீட்கப்பட வேண்டும். அணுவாயுதம் இல்லாத நிலைமையிலேயே அப்பிராந்தியத்தின் ஸ்த்திரத் தன்மையினை ஈரான் குலைத்து வைத்திருக்கிறதென்றால், அணுவாயுதமும் கிடைத்துவிட்டால் இன்னொரு வடகொரியாவாக ஈரான் மாறிவிடும். தனது கையிருப்பில் இருக்கும் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சுற்றியிருக்கும் நாடுகளுக்கு மேலால் ஏவுகணைப் பரிசோதனை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு சண்டித்தனம் செய்யும். தேவைப்பட்டால் அணுவாயுதத்தை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும். ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும். அது நடப்பதற்கு முல்லாக்களும், அவர்களின் இராணுவ, தொழிநுட்ப வல்லுனர்களும் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் தனது சொந்த இருப்பிற்காகச் செய்யும் இந்த நடவடிக்கையினை அமெரிக்கா ஆதரிப்பதும், உதவுவதும் தேவையானதுதான். முல்லாக்களின் கைகளில் அணுவாயுதம் இருப்பது மனித குலத்திற்கே ஆபத்தானது. தன்னிடமிருக்கும் ஏவுகணைகள் பலவற்றை தனது முகவர்களுக்கு வழங்கி, இஸ்ரேல் மீதும் சர்வதேசக் கப்பற்போக்குவரத்து மீதும் தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தம்மிடம் அணுவாயுதம் கிடைத்துவிடும் பட்சத்தில் அதனையும் தனது முகவர்களுக்குக் கொடுத்து, தாக்குதலை நடத்திவிட்டு, கையை விரித்து விடலாம். ஈரானின் முல்லாக்கள் மீது நடத்தப்படும் இன்றைய தாக்குதல்கள் இனிமேல் அவர்கள் அணுவாயுதம் ஒன்றினைத் தயாரிப்பதை நினைத்துப் பார்ப்பதையே நிறுத்துவதாக அமைய வேண்டும். அமெரிக்காவின் பி 2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன போர்டோ அணுஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் இன்றும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் இன்னமும் தாம் அழிப்பதற்கு இலக்குகள் இருக்கின்றன என்று அது கூறுகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் முல்லாக்களை முற்றாகவே அடித்து விரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் முயல்வதாகவே படுகிறது. இது விரைவில் நடைபெறுமானால் ஈரானிய மக்கள் நிம்மதியாக தமது வாழ்வை மீளவும் ஆரம்பிக்க முடியும். பார்க்கலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 weeks ago
இது பொதுவான களம், தனிமடல் சேவையல்ல! குப்பை கொட்டினால் யாரும் "கொட்டாதீர்கள்" என்று சொல்லலாம். இன்னொருவருக்கு போலித் தகவலைப் பதிலாகக் கொடுத்தாலும், ஏனையோர் அதைச் சவாலுக்குட்படுத்தலாம். இவை தான் கருத்துக் களத்தை மோகன் இன்னும் இயக்கி வருவதற்கான மூலக் காரணம். இதில் நரித்தனமெல்லாம் கிடையாது, இது தான் நடை முறை. நான் சொன்னது போல, புலம்பலுக்கு பதில் எழுதப் போவதில்லை, ஆனால் தகவல் தவறாக இருந்தால் சவாலுக்குட்படுத்துவேன்! இது உங்களுக்காகச் செய்வதல்ல, ஏனையோருக்கு திருத்தமான தகவல்களை வழங்கும் நோக்கத்தில் செய்வது.